ad

Friday, August 6, 2010

வெற்றி பயணத்தில் 80 ஆண்டுகள் .

இலங்கையிலிருந்து வெளியாகி வாசகர்கள் மனதில் அழியாத இடத்தை பிடித்திருகின்ற வீரகேசரி நாளிதழுக்கு இன்று 80 வயது..................(.வெற்றி பயணத்துக்கு எனது வாழ்த்துக்கள். )

இலங்கை நாவல் பிரசுரத்தில் ஒரு திருப்புமுனையை உருவாக்கியது. எழுபதுகளில் நிகழ்ந்த அரசியல் மாற்றத்தினையடுத்து, தேசிய இலக்கிய உணர்வு வலுப்பெற்றபோது ஈழத்துத் தமிழிலக்கியத்திலே ‘சுய தேவைப் பூர்த்தி’ ஒரு முக்கிய பிரச்சினையாயிற்று இத்தகையதொரு சூழ்நிலையிலேதான் வீரகேசரி நிறுவனம் புத்தகப் பிரசுர முயற்சியில் கவனம் செலுத்தியது.

 வீரகேசரி நாளிதழ்  , இலக்கம் 196, கொழும்பு செட்டி வீதியிலிருந்த வீரகேசரி அச்சகத்திலிருந்து  ஜூன் 6, 1930 புதன்கிழமை  அன்று 8 பக்கங்களுடன் முதலில் பிரசுரமாகியது. அன்றிலிருந்து இன்றுவரைக்கும் எந்த இடத்திலும் சளைக்காமல்  வெற்றி நடை போட்டுகொண்டிருக்கிறது. 80 வருடமென்பது அவ்வளவு சாதாரணமான விடயமல்ல ஊடக துறைக்கு  இருக்கின்ற சவால்களுக்கு மத்தியில் இத்தனை காத்திரமான பணியை முன்னெடுத்து சென்ற  அனைவரும்இந்த நேரத்தில் எங்கள் கண்முன்னே வந்து நிற்கிறார்கள்

இங்கேயும் பாருங்கள்.............
இணையத்தில் வீரகேசரி 
தமிழ் பேசும் மக்கள் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்திருக்கின்ற வீரகேசரியானது தமிழுக்கு இன்னும் அதிகமாக பணி செய்யும் என்ற நம்பிக்கையுடன் வாழ்த்துக்களை மீண்டும் மீண்டும் தெரிவித்துகொள்கிறோம்.
.

Friday, July 30, 2010

இலங்கையில், ஊடகங்கள் மீது தொடரும் அட்டூழியங்கள் !!!!!

இன்று அதிகாலை கிடைத்த செய்தி ஊடகத்துறையினரையும் ஊடகங்களை நேசிக்கின்ற இதயங்களை ஒரு கணம்  உறைய வைத்திருக்கும்.



இலங்கையின் முன்னணி இலத்திரனியில் ஊடகங்களில் ஒன்றான வாய்ஸ் ஒப் ஏசியா குழுமத்தின்  வெற்றி எப்.எம். சியத எப்.எம்   ரியல் ரேடியோ ஆகிய அலைவரிசையின் செய்திப்பிரிவு இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை இனந்தெரியாத ஆயுததாரிகளினால் தீயிட்டு கொழுத்தப்பட்டுள்ளது.









இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 1.30மணியளவில் , கொம்பனித்தெருவில் அதியுயர் பாதுகாப்புக்கு மத்தியில் உள்ள  வாய்ஸ் ஒப் ஏசியா குழுமத்தின்  வெற்றி எப்.எம். சியத ரியல் ரேடியோ ஆகிய அலைவரிசையின் செய்திப்பிரிவுஅலைவரிசையின் செய்திப்பிரிவு மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதற்கு முதலும் இலங்கை ஊடங்கள் மீது பல்வேறு தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது குறிப்பாக கடந்த வருடம் ஜனவரி மாதம் ,இலங்கையின் மிகப் பெரிய தனியார் இலத்திரனியல் ஊடக நிறுவனமான மகாராஜா குழுமத்தின் எம்.ரி.வி./ எம்.பி.சி.யின் பிரதான கலையகம் அமைந்திருக்கும் கட்டிடத் தொகுதி மீது அதிகாலை ஆயுதக் கும்பல் கண்மூடித்தனமான தாக்குதலையும் நடத்தியிருந்தது.

இவ்வாறான தாக்குதல்கல் மூலம் இந்த தாக்குதலாளிகள் ஊடகங்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் சொல்ல வருகின்ற விடயம் தான் என்ன??? எதனை எதிர்பார்த்து இவ்வாறான சின்ன தனமான வேலைகளை செய்து வருகின்றார்கள் என்று புரியவே இல்லை , உலகளாவிய ரீதியில் ஊடகவியலாளர்கள் ஏராளமான தாக்குதல் சம்பவங்களுக்கு உட்பட்டாலும் அவர்களது ஊடக பயணத்தில் இது வரைக்கும் எந்த விதமான தடங்கல்களும் வந்ததில்லை , மாறாக ஊடகவியலார்களின் துணிச்சலும் தன்னம்பிக்கையும் இன்னும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

எனவே கருத்து சுதந்திரத்துக்கு இருக்கின்ற உரிமைகளுக்கு வழிவிடுவதற்கு தடங்கல்கள் புரியும் அன்பான உள்ளங்களே உங்கள் நோக்கங்கள் நீண்ட காலத்துக்கு ஒருபோதும் உங்களுடன் துணைவர போவதில்லை.............
எனவே ஒருகணம் சிந்தித்து செயற்பட முயற்சி செய்யுங்கள், கருத்துக்களை கருத்துக்களால் வெல்ல முயற்சி செய்யுங்கள்.

இச் சந்தர்ப்பத்தில் ஐக்கிய நாடுகளின் முன்னாள் செயலாளர் நாயகம் கொபி அனான் ஒரு தடவை தெரிவித்த கூற்று ஒன்றைநினைவுபடுத்துவது மிகவும் பொருத்தமானதாகும்.
"மனித குலம் அபிவிருத்தி இன்றி பாதுகாப்பை ஒருபோதும் அனுபவிக்கப் போவதில்லை. பாதுகாப்பு இன்றி மனித குலத்தினால் அபிவிருத்தியையும் அனுபவிக்க முடியாது. மனித உரிமைகளை மதிக்காவிட்டால் மனிதகுலம் அபிவிருத்தியையோ, பாதுகாப்பையோ அனுபவிக்கப் போவதில்லை'.

Tuesday, June 8, 2010

ஊடகங்களில் 'விலங்குகள்'.

//'ஜூன் 5  உலக சூழல்  தினம் '.மனித நடவடிக்கைகளால் சூழலில் ஏற்பட்டுவரும் விரும்பத் தகாத மாற்றங்களும், அதனால் ஏற்படுகின்ற பாதகமான விளைவுகளும், இது தொடர்பாக நடவடிக்கைகளை எடுக்கவேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியுள்ளன.// 

சூழலை பாது காப்போம் என்று வாய் கிழிய பேசும் சில நாடுகள் தான் எந்த வித கரிசனையும் இல்லாமல் அதிக கழிவுகளை சூழலிலே சேர்கிறார்கள் , பாதகம் எல்லாம் பாவபட்ட ஏழை மக்களுக்கு... என்ன கொடுமை சார் இது.
இவை எல்லாம் ஒரு பக்கம் இருக்க , சூழலையும் அதன் உறுப்பினர்களையும் தற்கால ஊடகங்கள் எவ்வாறு கையாளுகிறது  என்பதும் இந்த இடத்தில் மிக முக்கியமான விடயமாக இருக்கிறது.
அண்மையில் படித்த கட்டுரை ஒன்றுதான் இந்த விடயத்தை சிந்திக்க தூண்டியது,,,
அந்த கட்டுரையில் இருந்த   சில  விடயங்களோடு  எனது கருத்துக்களையும்  இங்கே முன் வைக்கின்றேன். 


குறிப்பாக இக்கால அச்சு, இலத்திரனியல் ஊடகங்கள் சூழலின் உறுப்பினர்களான மனிதர்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தின் அளவுக்கு , இன்னுமொரு உறுப்பினர்களான காட்டு விலங்குகளுக்கும் தாவரங்களுக்கும் முக்கியத்துவம் வழங்குகிறதா என்பது ,சிந்திக்க வேண்டிய விடயமாகவே இருக்கிறது.!

விலங்குகள் பற்றிய செய்திகளை வெளியிடும் போது  சில ஊடகங்கள் பயன்படுத்தும் ஊடக மொழி அல்லது ஊடக பதமானது தான் இந்த விடயத்தில் அதிக கவனத்தை ஈர்க்கிறது, காரணம்,

விலங்குகளை பற்றிய செய்திகளை வெளியிடும் பொது அவற்றை மிக கடுமையான தொனியிலையே விழிப்பது வழக்கமாகி விட்டது...



சிலவேளைகளில் நாங்கள் செய்திகளை பார்த்திருக்கிறோம்.,
'கொடிய வனவிலங்குகள் விவசாயிகளை தாக்கியது'
'காட்டு யானைகளின் அட்டகாசம்'
'எருமைகளின் அடாவடி'


இப்படியான செய்திகள் , விலங்குகளை மட்டுமே குற்றவாளிகளாக காட்டும் என்பதில் சந்தேகம் இல்லை.

மாறாக இந்த யானைகள் ஏன் ஊருக்குள் புகுந்தது என்று ஆராய்ந்தால் அதன் உண்மையான காரணம் புரியும்,
மனிதர்கள் மட்டும் காட்டுக்குள் அத்து மீறி நுழைந்து வன விலங்குளின் இருப்பிடங்களான காட்டு மரங்களை வெட்டி வீழ்த்தாமல் இருந்திருந்தால்  அவை ஏன்  இருப்பிடம் தேடி மனித வசிப்பிடங்களுக்கு வர போகிறது, மரங்களை வெட்டும் போது அவற்றுக்கான உணவுகள் இல்லாமல் போகிறது அதனால் தான் அவை உங்கள் இருப்பிடங்களுக்கு படை எடுக்கின்றன.


காட்டு விலங்குளை குறை கூறி செய்திகளை வெளியிடும் வழமையான வழக்கை கொஞ்சம் மாற்றி ஒரு சஞ்சிகை மட்டும் ஊருக்குள் யானைகள் வந்தபோது, 'வீடிழந்த யானைகள் ' என்ற தலையங்கத்தின்    மூலம்  விலங்குகள்   மீதான்  தனது  அக்கறையை  வெளிக்காட்டியது,  .

இது போன்ற அக்கறைகள் உருவாகும் போது , சூழலுக்கும் மனிதனுக்கும் இடையிலான பாசம் அதிகரிக்கும் ,மனிதன் சூழலை நேசிக்க தொடங்குவான்,
இது போன்ற காத்திரமான  மன    மாற்றங்கள் இக்காலத்துக்கு.  அத்தியாவசியமாகிறது.

                                          "ஊடக மொழி வடிகட்டப்பட வேண்டும் "                                     
                                                                                                
                                                                                                      ஆதங்கம் தொடரும்...............

Friday, June 4, 2010

நான் அவனே தான்...

நீண்ட நாட்களுக்கு பிறகு வரும்போது இப்படிதான் சொல்லிக்கொண்டு வரவேணும் ......


எதை பற்றி பதிவிடுறது எண்டு ஒண்ணுமே புரியல,,, அதே நேரம் நம்ம Rank  பிச்சுக்கிட்டு பின்னுக்கு போறத நினைச்சா பயமா வேற இருக்கு! இதற்கிடையில் ஒவ்வொரு நாளும் பதிவிடுற பதிவர்கள நினைச்சா பொறாமையா இருக்கு.....சாமிகளா எப்பிடி ஐயா உங்களால மட்டும் வெளுத்து கட்ட முடியுது? எங்களுக்கும் ஏதாவது ஐடியா தரலாமே!!!

சரி சொல்ல வந்தத சொல்ல போறான்,,, அது ஒன்னுமில்லங்க நம்ம சகோதரர் லோஷனுக்கு நாளைக்கு பிறந்த நாள் அவருக்கு நீங்க எல்லோருமே வாழ்த்து சொல்லுவீங்க அது எனக்கு தெரியும். இனி என்ன அவர் தர போற பிறந்த நாள் விருந்துலையும் கலந்துட்டு போறதுதானே ,,,
வாங்க வெக்கப்படாமல் ,,,வாங்க.
 நம்ம லோஷன் தானே, அவரு நம்ம வீட்டு பிள்ள வாங்க......
இப்பவே உங்களுக்கு என்ன என்ன பிடிக்கும் எண்டு கேட்டு வர சொன்னார் அதுதான் அவசரமா இந்த பதிவு, உங்களுக்கு என்ன பிடிக்கும் எண்டு சொல்லிட்டு போங்க, நீங்க எங்க இருந்தாலும் வந்து சேரும், இல்லையா லோஷன் அண்ணா??????

Monday, May 3, 2010

வாழ்க தமிழ்..!!!!!!!

T-Shirt வாசகங்கள் பலது மனசை அள்ளும், ஆனால் எந்த T-shirt லயும்  தமிழ்ல எழுதுறதில்லையே...........



ஒரு தமிழனா வெந்து நொந்து யோசிச்சதுல இதோ சில தமிழ்  T-Shirt வாசகங்கள் .

1- சாரி எனக்கு கல்யாணமாயிடுச்சு ...!
2- பெண்களை தாயாக மதிப்பவன், உன்னைத்தவிர...!
3-நானும் தமிழன் தான் தெலுங்கு பிகரை பார்க்கும் வரை...!
4-இந்த பூனையும் பீர் குடிக்கும், நீ வாங்கித்தந்தால்...!
5- இங்க என்ன பார்வை..?
6- அவனா நீ..?
7-ஐய , ஜொள்ளு வடியுது, துடைச்சுக்கோ..!
8-மனித வெடிகுண்டு எண் 666....!

இது போன்ற நல்ல வாசகங்கள் பாராட்டத்தக்கவை  , நீங்களும் முயற்சித்து  இந்த 'மொக்கை' பணியில் கலந்து கொள்ளுங்கள்.
(சிரம பட்டு சிந்தித்த நண்பருக்கு நன்றி).

Wednesday, March 17, 2010

குழந்தைகளின் கை கால்களை முறிப்பாங்களா...? கடவுளே!



நாங்கெல்லாம் அடுத்தவங்களை நக்கல் , நையாண்டி பண்ணி பேசியே பழக்கப்பட்டவங்க அதில்தான் எங்களுக்கு ஆத்மா திருப்பதி.....

ஆனால் சிலவேளைகளில் எங்களைவிட அத்துறையில் பாண்டித்தியம் பெற்றவங்க கிட்ட போய் பேசி எங்கட மூக்குகளை பல நூறு துண்டுகளாக உடைத்தும் இருக்கிறோம் , அதில் எங்களுக்கெல்லாம் பெரிய கவலையே வாறதில்ல... எல்லாம் பழகி போனதுதானே, பிறகு எதுக்கு வெட்கப்படுவான்.
 
இப்பிடித்தான் இந்த கதைய ஆரம்பிக்க வேணும்......................

பெர்னாட்சவ் வீட்டுக்கு ஒருநாள் ஒரு நகைகள் நையாண்டி கலைகளை சிறப்பாக பயின்ற பெண்மணி வந்திருக்கிறார், வந்தவர் பெர்னட்ஸ்வவின் அறையை பார்த்துவிட்டு ,


" செடி கொடிகள் மீதும் மிருகங்கள் மீதும் நீங்கள் கருணை கொண்டவர் எண்டு பேசுறாங்களே ஆனால் உங்கள் வீட்டில் ஒரு செடி கொடியையோ வளர்ப்பு மிருகங்களையோ காண வில்லையே.... "

என்று நக்கலாக கேட்டிருக்கிறார்.

அதற்கு பெர்னட்சவ் சிரித்துக்கொண்டே ...........

"எனக்கு குழந்தைகளை மிகவும் பிடிக்கும் அதற்காக குழந்தைகளின் கை கால்களை முறித்து தொட்டிகளில் வைக்க முடியுமா? "

என்று கேட்டாராம்.

அதற்கு பிறகு அந்த பெண்மணி தனது மூக்கின் துண்டுகளை நிலத்தில் தேடியதை உங்களுக்கு நான் சொல்ல தேவையில்லை.

Wednesday, February 24, 2010

இதுவல்லவோ தீர்ப்பு................


மந்திரியான பிறகு -

சொந்த ஊருக்கு வந்தேன்;
பழைய தமிழாசிரியரைப்
பார்க்க நேர்ந்தது.
 
  'ஐயா ! என்னை

உருப்படாதவன்;
உதவாக்கரை;
ஊர்சுத்தி-
என்றெல்லாம்
அப்போது சொன்னீர்களே!
இப்போது
என்ன சொல்கிறீர்கள்
என்றேன்.
 
 
  தமிழாசிரியர்

தயங்காமல் பேசினார்;


'இப்போதும்
அதையேதான் சொல்கிறேன்'
என்று.
  நன்றி '(நிஜகோவிந்தம்)- கவிஞர் வாலி .

Monday, February 22, 2010

வெற்றி பெற்றேன்

கடந்த சனிக்கிழமை நாள் முழுவதும் அடியேனுக்கு ஒரு பயனுள்ள பொழுதாகவே அமைந்திருந்தது ,


பொழுது போக்கு சாதனங்கள் சிலவேளைகளில் வெறுமனே பொழுதை 'போக்கும்' சாதனங்களாக  அமைந்துவிடுவதுமுண்டு அனால் சில சாதனங்கள்  அரிதாக நல்ல பல நிகழ்சிகளை நேயர்களுக்கு தருவதுண்டு அந்த வகையில் அன்றைய தினம் நான் ரசித்த இரண்டு நிகழ்ச்சிகள் பற்றி இந்த பதிவில் மனம்விட்டு பேச போகிறேன்......
 
முதலாவது ......


காலைவேளையில் தேசிய தொலைக்காட்சி (நேத்ரா T.V.) இல் ஒளிபரப்பான "புன்னகை" நிகழ்ச்சி................

இடையிடையே இந்த நிகழ்ச்சியை ரசிக்க சந்தர்ப்பம் கிடைப்பதுண்டு அந்தவகையில் அன்றைய தினம் நிகழ்ச்சியில் பேசப்பட்ட 'சொல் புதிது பொருள் புதிது ' என்ற அம்சத்தினூடாக தாய்மொழி பற்றியும் மொழிகளின் பயன்பாடு பற்றியும் துறைசார்ந்தவர்கள் கலந்து கொண்டு அறிய கிடைக்காத பல அறிய வேண்டிய விடயங்களை பகிர்ந்திருந்தார்கள் அவர்களுக்கு நன்றி கலந்த பாராட்டுக்கள்  ,அதேவேளை திருகோண மலையிலிருந்து  தொலைபேசி மூலமாக தனது கருத்துக்களை தெரிவித்த பெரியவர் ஒருவர் தொட்டு சென்ற விடயங்களில் என்ன மிகவும் சிந்திக்க வைத்த விடயம், இப்பொழுது ஊடகங்களில் பயன்படுத்தப்படும் மொழி! குறிப்பாக உச்சரிப்பு.

நிச்சயமாக அவர் சொன்ன விடயங்கள் அனைத்தும் மறுக்காமல் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டிய உண்மைகள்.
 
இப்பொழுது ஒலி , ஒளி ஊடகங்களில் பணி  புரிபவர்கள் ஒரு சிலரது உச்சரிப்பை பற்றி நாட்டில் சச்சரவுகள் உண்டு..... ஆனால் இதை பற்றி கவலைப்படுவதற்கு சிலருக்கு நேரம் இருப்பதில்லையோ தெரியவில்லை . திருத்துவதை சிலர் தங்களை வருத்துவதாக நினைக்கிறார்கள் என்று மூத்த ஊடகவியலார்கள் சொல்ல கேட்டிருக்கிறோம். அவ்வாறு இல்லாமல் சரியான உச்சரிப்புக்களை கற்றுக்கொள்ள முயற்சிக்கலாம் , "பயிற்சியும் முயற்சியும் இருந்தால் இந்த வானத்தின் கீழ் எதுவும் சாத்தியம்"...................................
 

அடுத்த நிகழ்ச்சி சனிக்கிழமை இரவு நேரத்தை இதமாக்கிய

வெற்றி வானொலியின் "வெற்றி பெற்றவர்கள் ".
ஊடகத்துறையில் சாதித்த சாதனையாளர்களை அழைத்து வந்து அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் ஒரு அருமையான நிகழ்ச்சி .


உண்மையில் தனது இரண்டு ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவேற்றி தனது மூன்றாவது ஆண்டிலும் வெற்றி நடைபோட ஆரம்பித்திருக்கும் வெற்றி வானொலிக்கு மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.

வெற்றி FM வானொலியை ஆரம்பம் முதலே நான் தூரத்திலிருந்து துப்பறிந்து வருகிறேன்,,,,,, அதன் ஒவ்வொரு நகர்வுகளும் சிறப்பானதாக இருக்கிறது அதுமட்டுமல்லாது
" எதை சொல்வது என்பது அறிவு ,
எப்படி சொல்வது என்பது உத்தி"

அந்த உத்தியை நன்றாகவே கற்று வைத்திருக்கிறார் வானொலியின் முகாமையாளர் சகோதரர் லோஷன். அவருக்கும் இந்த இடத்தில் உளங்கனிந்த வாழ்த்துக்கள்.
 
இனி நிகழ்ச்சியின் ஒரு சில பக்கங்கள்...

ஆரம்ப நிகழ்ச்சியே அபாரமாக அருமையாக அமைந்திருந்தது ...

காரணம் அன்றைய தினம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மூத்த              ஒலி
ஒளி பரப்பாளர் செல்வி சற்சொரூபவதி நாதன் (மிஸ் நாதன்).

செய்தி சொல்வதை  இவரிடம் நிறைய பேர் கற்றுக்கொள்ள வேண்டும் சற்சொரூபவதிக்கு பதிலாக இவருக்கு "சொற்"சொரூபவதி என்று வைத்திருக்க வேண்டும் .அந்த அளவுக்கு அழுத்தம் திருத்தமாக செய்திகளை சொல்வார்.(இவரிடமும் அடியேன் பயிற்சி பெற்றது அடியேனின் பாக்கியம்).



செல்வி சற்சொரூபவதி நாதன் (மிஸ் நாதன்). தனது ஏராளமான அனுபவங்களை பகிர்ந்திருந்தார்... ஒரு சில கசப்பான அனுபவங்களையும் இனிப்பாக சொல்லி முடித்தார். அதுமட்டுமல்லாமல் நிறைய தடைகளை தாண்டி அவர் பல சாதனைகளை புரிந்து விருதுகள் பலவற்றையும் பெற்றிருக்கிறார் ,அதுமட்டுமல்லாமல் ஏராளமான சவால்களுக்கு மத்தியில்
1989 தொடக்கம் 1991 வரை ஆங்கில சேவையின் பதில் இயல்நாடக கட்டுப்பாட்டாளராகவும்,பின்னர் செய்தி ஆசிரியராக 1991தொடக்கம் 1993 வரை முறைசாரா கல்விப்பிரிவின் வான் பல்கலைக்கழக பொறுப்பாளராகவும் கடமையாற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இறந்த கால பக்கங்களின் ஈரத்திலிருந்துதான் நிகழ்காலத்துக்கு நீர் கிடைக்கிறது.


எனவே புகழின் உச்சிக்கு போன ஒவ்வொருவரும் நிஜங்களின் நிர்வாண ஊர்வலத்தில் கைகளால் மறைத்து கொள்ளாமல் கலந்து கொள்ள வேண்டும் என்பதே எல்லோரது எதிர்பார்ப்புமாகும்.

எனவே இது போன்ற நிகழ்ச்சிகள் எதிர்காலத்திலும் வரவேற்கப்படும் ,மட்டுமல்லாமல் இந்த நிகழ்ச்சிகளின் உருவாக்கத்தில் பங்கு பற்றிய அனைவரது உழைப்பும் வெற்றி பெற்றுள்ளது என்பது உண்மை. .



   " தன்னம்பிக்கை உள்ளவனே உண்மை சொல்வான்"

                                                                                                                                               கே.பிரபா
இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம்

Wednesday, January 13, 2010

"தலைவருக்கான " என் பகிரங்க மடல்....



தலைவரே நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் ? உங்களை நான் உடனடியாக சந்திக்க வேண்டும் ...
சந்தர்ப்பம் கிடைக்குமா?
என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை தலைவரே...!
எவ்வளவு காலத்துக்குத்தான் நான் பொறுத்துக்கொள்வது என்மீது மேட்கொள்ள படும் இந்த கண்மூடித்தனமான தாக்குதல்களை ..
இவ்வாறான தொல்லைகள் தொடர்ந்தால் ஒரு ஊடகவியலாளன் என்ற வகையில்  எவ்வாறு என் பணியை செவ்வனே செய்ய முடியும் சொல்லுங்கள்...? இதற்கு நீங்கள் தான் முடிவெடுக்க வேண்டும்.
குறிப்பாக இந்த தாக்குதல்கள் அதிகமாக இரவு நேரங்களில் தீவிரப்படுத்தப்படுவதனால் என்னால் நிம்மதியான தூக்கத்தை கூட எதிர்பார்க்க முடியவில்லை... இதனை தொடர்ந்தும் என்னால் அனுமதிக்க முடியாது, எனவே உங்களை உடனடியாக சந்திக்க வேண்டும்.... உங்களால் எனக்கு எதுவுமே செய்ய முடியாதா?

இருந்தாலும் பரவாயில்லை....
நான் துணிந்துவிட்டேன்,
எத்தனை பேர் வந்து தாக்கினாலும் பரவாயில்லை ... தனியாக நின்று எதிர்ப்பது என்று முடிவு செய்து விட்டேன் ....

எச்சரிக்கை விடுக்கிறேன் ......

இனி நீங்கள் என்மீது தாக்குதல் மேட்கொள்ள வரும் சந்தர்ப்பங்களில் கவனமாக இருங்கள் எந்த வேளையிலும் உங்கள்
மீது நச்சு திரவங்கள் விசிறப்படலாம்...
உங்களது நரம்பு மண்டலங்களை தாக்க புகை மண்டலங்கள் உருவாக்கப்படலாம்
இதனை தொடர்ந்து உங்கள் மீது , மின்சார வலைகள் மூலம் தாக்குதல்கள் ஏற்படுத்தப்படலாம் ....

இந்த தாக்குதல்களில் இருந்து முடிந்தால் தப்பித்து கொள்ளுங்கள் ...( இவ்வகையான தாக்குதல்கள்தான் இடம்பெறும் என்று சொல்லிவிட்டு தாக்குதல்கள் நடத்துவது துணிகரமான விடயமாகவே சர்வதேச சமூகம் நோக்கும் என்பதில் எனக்கு எந்த விதமான சந்தேகமும் இல்லை ).

எனவே தலைவரே நீங்கள் என்மீது கோபம் கொள்ள கூடாது இவ்வாறான ஆயுதங்களை கையில் எடுத்தமைக்காக....
நான் பலமுறை விலகி விலகி போயிருக்கிறேன் , குறிப்பாக வலைகளுக்குள் என்னை மறைத்துக்கொண்டு பதுங்கி இருக்கிறேன் , அவ்வாறான சன்தரப்பங்களிலுள் என்மீது கண் மூடித்தனமான தாக்குதல்கள் மேட்கொள்ள பட்டதுதான் எனது இந்த முடிவுக்கான காரணம் மன்னித்து விடுங்கள் ...

இவர்களின் தாக்குதல்கள் மூலமாக எனது பெறுமதி வாய்ந்த ஒரு சில குருதி துளிகள் வீணாக்கப்படுவது பற்றி எனக்கு கவலை இல்லை , இவர்களினால் பரப்பப்படும் மிக கொடிய நோய்களான "டெங்கு , மலேரியா .." போன்ற நோய்களுக்குதான் எனக்கு பயமாக இருக்கிறது....


எனவே அன்பின் நுளம்பு ( கொசு) கூட்டத்தின் தலைவரே...!

உங்கள் நுளம்பு சகாக்களிடம் சமாதானமாக பேசி என் மீது கண்மூடித்தனமாக மேட்கொள்ள படும் தாக்குதல்களை நிறுத்த சொல்லுங்கள் .( முடிந்தால் என்னோடு பேச சொல்லுங்கள் , சமாதனம் பேச வருபவர்கள் மீது ஒரு போதும் தாக்குதல்கள் மேட்கொள்ள படமாட்டாது ..)


இல்லை எனின் மேட்சொன்ன அனைத்து தாக்குதல்களும் 'நுளம்பு(௦ கொசு)தீவிரவாதிகள் மீது மேட்கொள்ள படுவதை யாராலும் தடுக்க முடியாது... அது மட்டுமல்ல இந்த நடவடிக்கைகளை எடுக்க தவறும் பட்சத்தில் உங்கள் அத்தனை இருப்பிடங்களையும் தேடிப்பிடித்து அழிக்க நாங்கள் தயாராகவும் உள்ளோம் ,( இதற்கு அமெரிக்க பிரிட்டன் போன்ற நாடுகள் கட்டாயம் நிதி உதவி செய்யும் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை).

நுளம்பு (கொசு) கூட்ட தலைவருக்கான என் மடலை தலைவரின் முகவரி தெரிந்தால் யாராவது தபாலில் சேர்த்து விடுங்கள் ப்ளீஸ்.... ( எவ்வளவு காலத்துக்குத்தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது...)

Monday, October 26, 2009

"அது " போல வருமா?...

நவீன உலகத்தில் இருந்து கொண்டு இப்பவும் இதை பற்றி பேசினால் "சும்மா போங்க சார் " உங்களுக்கு வேற வேலை இல்ல , இப்ப இருக்கிற பிசிக்கு அதையெல்லாமா தேடிக்கிட்டிருக்க..."எங்களுக்கு எங்க நேரமிருக்கு? என்று என்னை நம்ம தாய்க்குலங்கள் கொஞ்சம் காட்டமாமாக கேட்கலாம்,,,,,

என்ன பண்றது மனசு கேட்குதில்லையே...! மன்னிக்கவும் "நா" கேட்குதில்லையே...!
எத பற்றி பேச வாறம் என்று ஓரளவுக்கு புரிந்திருக்கும்.....
ஆமாங்க இக்காலத்து "நவீன சமையல்" பற்றித்தான் எங்க கவலையெல்லாம்.

இந்த அவசர உலகத்தில் பாஸ்ட் பூட் கலாச்சாரத்தில் இதெல்லாம் நினைக்க எங்க நேரம்.... ஏதோகிடக்கும் நேரத்தில் சட்டு புட்டுன்னு ஏதாவது தயாரித்து விட்டு அதற்கு வாயினுள் நுழையாத மாதிரி ஒரு பேரு வைத்து தந்தால் , அதன் பெயர் போலவே உணவுகளும் வாயினுள் நுழைய மறுக்கிறது....இதனால்தான் இப்பொழுதெல்லாம் சிலர் உண்டும் உண்ணாவிரதம் இருக்கிறார்கள் போல.....
ஆனால் அந்த காலத்தில் இருந்த கைப்பக்குவம் இப்போதைக்கு இல்ல என்றுதான் நிறைய பெரிசுகள் பேச கேட்டிருக்கிறேன்,,,,, இதற்கு காரணம் அந்த காலத்து சமையல் நிபுணர்களான நம்ம வீட்டுதலைவிகள் பாவித்த உபகரணங்களாகவும் இருக்கலாம்,,,,,,,
உரல் உலக்கையால் குற்றிய நெல்லரிசி சோறு ......
அம்மியில் அரைத்தெடுத்த மலிகைச்சரக்குகள்
மணக்க மணக்க.....சமைக்கும் பக்குவம் இன்னும் நாவுகளில் நயகராவை வரவழைக்கிறது.






அந்த காலத்து இந்த சமையல் உபகரணங்களை இப்பொழுது காண கூட கிடைப்பதில்லை.....
இருந்தாலும் உரலும் உலக்கையும்,,,
அம்மியும் குழவியும்,
சுளகு
போன்ற பொருட்கள் இன்னும் பாதுகாக்கப்பட வேண்டியவைகளே.....
ஏதோ ஒரு ஆதங்கத்தில் சொல்லி புட்டன் மன்னிச்சுடுங்க தாய்க்குலங்களே.....உங்கள் சமையல்கள் பிரமாதம்........பிரமாதம்....பிரமாதம்.....( மதிய உணவை உறுதிப்படுத்த எடுத்த முன்னெடுப்பு என்று யாரு நினைக்க கூடாது) ....