ad

Monday, October 26, 2009

"அது " போல வருமா?...

நவீன உலகத்தில் இருந்து கொண்டு இப்பவும் இதை பற்றி பேசினால் "சும்மா போங்க சார் " உங்களுக்கு வேற வேலை இல்ல , இப்ப இருக்கிற பிசிக்கு அதையெல்லாமா தேடிக்கிட்டிருக்க..."எங்களுக்கு எங்க நேரமிருக்கு? என்று என்னை நம்ம தாய்க்குலங்கள் கொஞ்சம் காட்டமாமாக கேட்கலாம்,,,,,

என்ன பண்றது மனசு கேட்குதில்லையே...! மன்னிக்கவும் "நா" கேட்குதில்லையே...!
எத பற்றி பேச வாறம் என்று ஓரளவுக்கு புரிந்திருக்கும்.....
ஆமாங்க இக்காலத்து "நவீன சமையல்" பற்றித்தான் எங்க கவலையெல்லாம்.

இந்த அவசர உலகத்தில் பாஸ்ட் பூட் கலாச்சாரத்தில் இதெல்லாம் நினைக்க எங்க நேரம்.... ஏதோகிடக்கும் நேரத்தில் சட்டு புட்டுன்னு ஏதாவது தயாரித்து விட்டு அதற்கு வாயினுள் நுழையாத மாதிரி ஒரு பேரு வைத்து தந்தால் , அதன் பெயர் போலவே உணவுகளும் வாயினுள் நுழைய மறுக்கிறது....இதனால்தான் இப்பொழுதெல்லாம் சிலர் உண்டும் உண்ணாவிரதம் இருக்கிறார்கள் போல.....
ஆனால் அந்த காலத்தில் இருந்த கைப்பக்குவம் இப்போதைக்கு இல்ல என்றுதான் நிறைய பெரிசுகள் பேச கேட்டிருக்கிறேன்,,,,, இதற்கு காரணம் அந்த காலத்து சமையல் நிபுணர்களான நம்ம வீட்டுதலைவிகள் பாவித்த உபகரணங்களாகவும் இருக்கலாம்,,,,,,,
உரல் உலக்கையால் குற்றிய நெல்லரிசி சோறு ......
அம்மியில் அரைத்தெடுத்த மலிகைச்சரக்குகள்
மணக்க மணக்க.....சமைக்கும் பக்குவம் இன்னும் நாவுகளில் நயகராவை வரவழைக்கிறது.


அந்த காலத்து இந்த சமையல் உபகரணங்களை இப்பொழுது காண கூட கிடைப்பதில்லை.....
இருந்தாலும் உரலும் உலக்கையும்,,,
அம்மியும் குழவியும்,
சுளகு
போன்ற பொருட்கள் இன்னும் பாதுகாக்கப்பட வேண்டியவைகளே.....
ஏதோ ஒரு ஆதங்கத்தில் சொல்லி புட்டன் மன்னிச்சுடுங்க தாய்க்குலங்களே.....உங்கள் சமையல்கள் பிரமாதம்........பிரமாதம்....பிரமாதம்.....( மதிய உணவை உறுதிப்படுத்த எடுத்த முன்னெடுப்பு என்று யாரு நினைக்க கூடாது) ....

Saturday, October 17, 2009

கொண்டாட்டமும் , "கொல்லும்"வாட்டமும்.

அக்டோபர் 17 ,
தீமைகள் நீங்கி வாழ்வில் விளக்கேற்றும் இனிய தீபத்திருநாள்,,,,,,
அனைவருக்கும் இனிய வாழ்த்துக்கள்.
அதே போல இன்று இன்னுமொரு முக்கியமான நாள் .....
ஆம், "சர்வதேச வறுமை ஒழிப்பு நாள்".
வசந்தங்களை வரவேற்ற வண்ணம் சந்தோசத்தில் மக்கள் ஒரு பக்கம், "வசந்தம்" என்ற சொல்லை மட்டுமே கேட்டிருக்கும், வறுமையில் வாடும் மக்கள் இன்னுமொரு பக்கம். என்ன செய்வது எல்லா விடயங்களுக்கும் இரு பக்கங்கள் இருக்கும் என்பது உண்மை போலதான் இருக்கிறது...

உலகளாவிய ரீதியில் வறுமை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி, பசிப்பிணியில் இருந்து மக்களை விடுவிக்கும் நோக்குடன், ஐக்கிய நாடுகள் சபையானது 1992 ம் ஆண்டு முதல் அக்டோபர் 17 சர்வதேச வறுமைஒழிப்பு தினமாக உத்தியோக பூர்வமாக அறிவித்தது.
ஆனால் பரிதாப கரமாக இன்னும் எம்மால் இந்த அகோர வறுமையை வெல்ல முடியவில்லை....
பொருளாதார மந்தம், குறைந்த உற்பத்தி திறன் போன்றவையே இந்த "வறுமை " குழந்தையை பெற்றேடுக்கின்ற பெற்றோர் ....

இந்த கொடிய வறுமை காரணமாக உலகில், ஒவ்வொரு 3 1/2 நிமிடங்களுக்கு ஒருமுறை , ஒருவர் வறுமை சம்பந்தமான காரணிகளால் உயிரிழக்கிறார்.
அதே நேரம் உலக உணவு திட்டத்தின் (WFP) இன் தரவின் படி , ஒவ்வொரு நாளும் 25,000 பேர் பட்டணி மற்றும் அதனோடு தொடர்பான காரணிகளால் மரணிக்கிறார்கள். என்பது எத்தனை பேருக்கு ஆச்சர்யமான செய்தியாக இருக்குமோ தெரியாது ஆனால், 'காதுக்குள் கோடி நாகங்கள் கொத்துவதுபோல் ' வலிதருகின்ற உண்மையாகும்.

இது தவிர , அண்மைக்கால தரவுகளின் படி , உலக சனத்திஒகையில் 3 பில்லியன் மக்கள் நாளொன்றுக்கு 2.50 அமெரிக்க டாலருக்கும் குறைவான வருமானத்தை பெறுவதோடு 80% க்கும் அதிகமான மக்கள் வருமானம் குறைந்த நாடுகளிலே வாழ்கிறார்கள்.

இதை விட கொடுமை எதிர்கால உலகத்தை கட்டி எழுப்ப வேண்டிய 'சிறுவர்கள்' ஒவ்வொரு வருடமும் இந்த கொடிய வறுமை காரணமாக 25,000 பேர் வரையில் இறக்கிறார்கள்.

இந்த உண்மைகள் எல்லாமே கேட்பதற்கு கூட கஷ்டமாயிருக்கிறது, ஆனால் இதை அனுபவித்தல் எவ்வளவு கொடுமை.

"தங்களை உதைத்து தள்ளும் வாழ்க்கையோடு ஒட்டி கொள்ள இவர்களுக்கு என்ன வழி,?"

வாழ்க்கை இவர்களை முறிக்கப்பார்க்கிறது, வாழ்கையை வளைத்து கொள்ள ஏதாவது வழி இருக்கிறதா? .

முட்களை நிரந்தரமாகவும், ரோஜாக்களை எப்போதாவதும் வெளியிடுகின்ற ரோஜா செடி போலவே , இவர்களுக்கும் உணவு கிடைக்கிறது,

முட்களை எப்போதாவதும், ரோஜாக்களை நிரந்தரமாகவும் பெற்று கொள்ளும் காலம் எப்போது மலரும்,,,..?

உலக பட்டறையில் இவர்களுக்கெதிரான "பட்டினி" அம்புகள் மட்டுமே தயாரிக்கப்படுகிறது, இவர்களுக்கான " உணவு " கவசங்களை தயாரிக்க எத்தனை பேர் தயார்?????

"இவர்களை கட்டுப்பாட்டுக்குள்

வைத்திருக்கும் ,வறுமையால் ,

இவர்கள் தொட்டு பார்க்காத உணவுகள் ஏராளம்.

எனவே, கெட்டுப்போகும் வரை

விட்டு வைக்காமல்,

தட்டுப்பாடோடு இருக்கும் இவர்கள்

தட்டில் இடுவோமா..?"

Tuesday, October 13, 2009

"நடந்த நாடகங்கள்..."


சொர்கத்தின்
விலாசத்தை போய்
விசாரித்தேன் ,
அவள்தான் சொர்க்கம்
என்பதை
அறிந்துகொள்ளாமல்.!உன்னுடைய உதடுகள்
உச்சரிக்கும் வரை
நான்
உணர்ந்ததில்லை ...
என்னுடைய பெயர்
இத்தனை அழகாய்
இருக்கிறதென்று!

வீணாக ஏன்
திறந்து வைத்திருக்கிறாய்....
உன் விழி வாசலை...
இதய வீட்டை
பூட்டி
சாவியை
இடுப்பில்
முடிந்து கொண்ட பிறகு.


ஒரு ஜோடி
சிறகுகள்
வேண்டும் என்றேன்
உல்லாசமாக
உன்னோடு
பறப்பதற்கு அல்ல-
தொலைதூரம் போய்
உன்னை
மறப்பதற்கு....


தேச வரலாற்றில்

இடம்பெறாமல் போன

தியாகிகளைபோல...
ஆயிரக்கணக்கான
இளைஞர்களின் பெயர்கள்
விடுபட்டு விட்டன
உன்- திருமண அழைப்பிதழில்.


நன்றி- கவிவேந்தர்

Monday, October 5, 2009

அபிரகாம் லிங்கனும் நானும்.....


அபிரகாம் லங்கன் அமெரிக்க ஜனாதிபதியாக பதவி வகித்த போது, போர் நடந்துகொண்டிருந்த சமயம்.எட்வின் ஸ்டாண்டட் என்ற அவரது காரியதரிசிக்கு, தனக்கு கீழே ஜெனெரலாக பதவி வகிக்கும் ஒருவர் மீது மிகவும் கோபம். அவர் எடுக்கும் முடிவு ஒன்று கூட சரியாக இருக்காது!.

லிங்கனிடம் சென்று புகார் சொன்னார்,

//"நீங்கள் சொல்வது சரிதான்,அவரை நன்றாக திட்டி ஒரு கடிதம் எழுதிக்கொண்டு வாருங்கள்" என்று லிங்கன் சொன்னார்.
அதன் படி தனது கோபத்தையெல்லாம் கொட்டி ஒருகடிதம் எழுதிக்கொண்டுவந்து லிங்கனிடம் கொடுத்தார் ஸ்டாண்ட்.
படித்து பார்த்த லிங்கன் ,
“நல்லது மிக நன்றாக கடிதம் எழுதியிருக்கிறீர்கள் ” என்று கடிதத்தை கொடுத்தவுடன் ஸ்டாண்ட் திரும்பி செல்ல முனைந்தார் , அந்த வேளையில் லிங்கன்
“ இருங்கள் அந்த கடிதத்தை என்ன செய்ய போகிறீர்கள் ?” என்று கேட்டார் , ‘இன்றே தபாலில் சேர்த்து விடுகிறேன் ,என்று பதில் வந்தது ,
“முட்டாள்தனம் ! என்று லிங்கன் சொல்ல ,.”என்ன தபாலில் சேர்க்க வேண்டாம் என்கிறீர்களா ”!? என்ற ஸ்டாண்ட் இடம் ,
“நான் கூட கோபமாக இருக்கும் பொது இது போலதான் கடிதம் எழுதுவேன் , நம் கோபத்தையெல்லாம் கொட்டியாகி விட்டது .ஆனால் அதை அனுப்ப மாட்டேன் .
அதை தனியாக ஒரு கோப்பில் வைத்து விட்டு ,மறுபடியும் வேறு கடிதம் எழுதுவேன் நீங்களும் அதே போல செய்யுங்கள் ” என்று லிங்கன் சொன்னாராம் .//
இதே போலதான் நானும் இப்பொழுது கோபத்தை கொட்டி தீர்க்கும் வழி முறையாக இதே முறையைத்தான் கையாளுகிறேன் …..

எனவே "லிங்கனும் நானும் " ஒகே தானே ..!
எனவே கோபமானது ஒரு மனிதனை மிக மோசவனாக காட்டும் மிக பெரிய எதிரி ..
இந்த எதிரியை பற்றி அறிஞர்கள் சிலர் ,,,,,
*“ஒரு மனிதன் தவறும் செய்து விட்டு அதை ஒப்புக்கொள்ள தேவையில்லை endru முடிவும் செய்து விட்டால் உடனே கோப பட தொடக்கி விடுகிறான .”
* “ கோபத்துடன் இருக்கும் பொது பேசுங்கள் , அப்போது தான் நீங்கள் வாழ் நாள் முழுவதும் வருத்தப்படும் படியாக ஒரு பேச்சை பேசியிருப்பீர்கள் .”
*“கோபத்தை வெற்றி கொள்வதற்கு ஒரே வழி , அதை தாமதப்படுத்துவதுதான் ”.
யார் வேண்டுமானாலும் கோபக்காரனாக மாறலாம் , அது மிக மிக சுலபம் , ஆனால் சரியான நபரிடம் , சரியான முறையில் சரியான அளவுக்கு ,சரியான நேரத்தில் , சரியான காரணத்துக்காக கோபத்தை வெளிப்படுத்த முடிகிறதா ? என்பதை யோசித்த பின்னர் கோப படுங்கள் , அது சுலபமான காரியமல்ல ……………

Sunday, October 4, 2009

கறுப்பு மஞ்சள் போர்.........

மீண்டும் ஒரு கள போர் ....


ஆம் இது கிரிக்கெட்டில்.

உலகின் தலைசிறந்த முதல் 8 அணிகள் மோதிய (ஐ.சி.சி.,) மினி உலக கிண்ணத்தை கைப்பற்றும் நம்பிக்கையுடனும் கனவுடனும் களமிறங்குகிறது இரண்டு கிரிகெட் சிங்கங்கள் .


ஆனால் இதன் முடிவு 1988 ஜனவரி 22 இல்

M.C.G. இல் கிடைத்தது போல் முடிவுகள் தான் இம் முறையும் கிடைக்குமா என்பதில் சந்தேகமே..... ஆஸ்திரேலியா இறுதியாக இந்த மைதானத்தில் விளையாடிய 10 போட்டிகளில் 6(ஆறு) போட்டிகளில் வெற்றி பெற்றிருப்பது அணிக்கு இன்னும் வலு சேர்க்கும் என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை. அதே நேரம் நியூஸிலாந்து அணியானது கடைசியாக விளையாடிய 5 ஒருநாள் போட்டிகளில் எந்தவொரு போட்டியிலும் வெற்றி ஈட்ட வில்லை என்பது நியூஸிலாந்து ரசிகர்களுக்கு கொஞ்சம் கஷ்டமாக இருக்கின்ற விடயமாக இருக்கும், இந்த சுற்று போட்டியில் கூட நியூஸிலாந்து அணி இதே மைதானத்தில் வைத்து தென்னாபிரிக்க அணியிடம் தோல்வி கண்டதும் குறிப்பிட தக்கது.


இது தவிர போட்டியின் முடிவுகளை தீர்மானிக்கின்ற மிகப்பெரிய சக்தியாக மாறி வருகின்ற "மழை" இந்த போட்டியில் எந்தளவுக்கு தாக்கம் செலுத்த போகிறதோ தெரியவில்லை.

இவை ஒரு புறமிருக்க இரண்டு அணிகளினதும் பலம்களையும் ஒரு முறை நாங்கள் கட்டாயம் உற்று நோக்க வேண்டி இருக்கிறது.....


அவுஸ்திரேலியா அணி.....


RT Ponting*, DE Bollinger, CJ Ferguson, NM Hauritz, BW Hilfenhaus, JR Hopes, DJ Hussey, MEK Hussey, MG Johnson, B Lee, TD Paine†, PM Siddle, AC Voges, SR Watson, CL White


இதில் சில வீரர்களை எதிரணி எவ்வாறு குறி வைக்கிறதோ இல்லையோ ரசிகர்கள் குறி வைத்திருப்பார்கள் என்பது வெளிப்படை உண்மை ...அதில் இருவர் கடந்த அறை இறுதி போட்டியில் இங்கிலாந்து அணியை துவம்சம் செய்த இருவர் ... ரிக்கி பாண்டிங் மற்றும் ஷேன் வாட்சன் .

இவர்களோடு , தென் ஆப்ரிக்காவின் ஜோகனஸ்பர்க்கில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) விருதுகள் வழங்கும் விழாவில் கடந்த ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருதை அள்ளி சென்ற வேகப்பந்து வீச்சாளர் மிச்சல் ஜான்சன். ( மனுஷன் பயங்கர குசியாக இருக்கிறார்).


இனி நியூஸிலாந்து ....


D Vettori*, S Bond, N Broom, I Butler, B Diamanti, G Elliott, J Franklin, M Guptill, G Hopkins†, B McCullum†, K Mills, I O'Brien, JPatel, AJ Redmond, R Taylor


இந்த அணியில் யார் எந்த நேரத்தில் என்ன செய்வாங்க என்று சொல்லவே முடியாது.... அந்தளவுக்கு எல்லா வீரர்களும் தங்கள் அணிக்கு ஏதாவது பங்களிப்பை செய்ய துடிப்பவர்கள். அதிலும் குறிப்பாக அணித்தலைவர் டேனியல் வெட்டோரி, ஷேன் பாண்டு, ரோஸ் டேய்லோர்...... போன்றோரை குறிப்பிட்டு சொல்லலாம் ...


எனவே சிறந்த இறுதி போட்டி ஒன்றை கிரிக்கெட் ரசிகர்கள் திங்கட்கிழமை மாலை 6 மணிக்கும், GMT 12.30 க்கும் கண்டு ரசிக்ககூடியதாக இருக்கும்....


இருந்தாலும் வெற்றி வாய்ப்புக்கள் ஆஸ்திரேலியாவுக்கே அதிகம் இருப்பது போல தெரிந்தாலும்... "தெரிந்த கிரிக்கெட்டில் தெரியாதது எதுவும் நடக்கலாம்..". பொறுத்திருந்து பாப்போம்.