ad

Friday, December 10, 2010

WikiLeaks ஸும், உங்கள் 'வீட்டு'லீக்ஸ் ஸும்.

இது ஒரு சீரியஸ் பதிவு .
ரகசியமாக அல்லது மறைமுகமாக இருக்கின்ற சில விஷயங்கள்  கசிந்தால்,அவற்றை அறிந்துகொள்ள ஆவலாகத்தான் இருக்கிறது. ஆனால், உரியவர்களுக்குத்தான் அது தூக்கத்தைக்கெடுக்கிறது , அது விக்கி லீக்ஸ்சாக  இருந்தாலும் சரி எங்கள் வீட்டு லீக்ஸ்சாக இருந்தாலும் சரி. ( கூரையில் இருக்கும் லீக்ஸ்(ஒழுக்கு)  யையும் சேர்த்துத்தான் சொல்கிறேன் ஹீ ஹீ. ) .
சரி அது ஒரு புறமிருக்க ,
விக்கி லீக்ஸ் தொடர்ச்சியாக வெளியிட்டு வரும் தகவல்கள் அனைத்தும்  எல்லோரது புருவங்களையும் பல சென்டி மீட்டர்கள் வரை  உயர்த்துகின்றன என்பது மட்டும் உண்மையான விடயமாகத்தான் இருக்கிறது.
இதன் அடிப்படையில் தான் 'விக்கிலீக்ஸ்' ஹீரோவாகிய அதே வேளை  அகப்பட்ட நாடுகள் ' சீரோ(zero)'' வாகி போயுள்ளன .

விக்கி லீக்ஸ் செய்து கொண்டிருப்பது சரியா? தவறா? என்ற வாக்கெடுப்பு ஒருபக்கம் இருக்க , ஊடக சுதந்திரத்துக்கும்  கருத்து வெளியிடும் உரிமைக்கும்    மதிப்பளிக்கும் எந்தவொரு நாடும் அல்லது தனி மனிதனும் விக்கி லீக்ஸ் இன் அணுகுமுறையானது பிழை என்று வாதிடுவதற்கு தயாராக இருக்க மாட்டார்கள் என்றே நினைக்கிறேன்.

ஆனால் விக்கி லீக்ஸ் இன் இந்த நடவடிக்கைகளால் எதிர் காலத்தில் உலக சாமாதானத்து ஏதும் ஆபத்துக்கள் நேருமா என்ற கேள்வியும் இந்த இடத்தில் எழுகிறது , அந்த விடயத்தை இன்னுமொரு சந்தர்ப்பத்தில்  தனியாக ஆராயலாம்.

அதேவேளை விக்கி லீக்ஸ் இன் இந்த அதிரடி நடவடிக்கைக்கு பின்னணியில் இருக்கும் காரணம் தான் எண்ண என்று ஒரு முறை நாங்கள் சிந்தித்தால்,...
பல்வேறு விடைகள் எங்களுக்கு கிடைக்கலாம்.
 இன்னுமொரு முக்கியமான விடயம் விக்கி லீக்ஸ் இன் மூலமாக கசிந்த  இந்த விடயங்கள் பொய்யானவை அல்லது திருத்தி கூறப்பட்டவை என்று பெரிதாக எந்த ஒரு நாடும் எதிர்கருத்துக்களை வெளியிட்டதாக அறியவில்லை ( நான் அறிந்த வரைக்கும்) .மாறாக இவ்வாறான கருத்துக்கள் அல்லது ரகசிய ஆவணங்கள் தொடர்ந்தும் வெளியிட பட்டால் எதிர்காலத்தில்  பல்வேறு சிக்கல்கள் தோன்றும் என்றே அச்ச பட்டார்கள். இதிலிருந்து புலப்படுவது என்னவென்றால் ஆவணங்கள் அனைத்தும் உண்மையானவை என்பதை உலக நடப்புக்களை அறிந்து வைத்திருக்கின்ற அனைவரும் ஊகித்துக்கொள்ள கூடியதாக இருக்கும் .
அதேவேளை அமெரிக்காவின் ராஜாங்க தகவல்கள் கசிந்ததற்கு  முக்கிய காரணம் விக்கி லீக்ஸ் இன் நிறுவனர் ஜூலியன் அசாங்கே தான் காரணம் என்று குற்றம் சாட்டப்படுகின்ற அதேவேளை அந்த முக்கியமான ஆவணங்கள் அமெரிக்காவின் முக்கிய அதிகாரிகளின் ஒத்துழைப்பு இல்லாமல் வெளியே வருவது என்பது அவ்வளவு சாத்தியமில்லாத ஒரு விடயம் என்பது உலக நாடுகளுக்கும் தெரியும். ( இதையே இப்பொழுது அவுஸ்திரேலிய  அரசாங்கமும் வலியுறுத்தி நிற்கிறது) .

ஜூலியன் அசாங்கே
 சரி , ஏன் ஜூலியன் அசாங்கே இந்த தகவல்களை பகிரங்கமாக வெளிப்படுத்தினார் ?
அமெரிக்காவுக்கும் இவருக்கும் என்ன பிரச்சனை ?
இந்த தகவல்களை இவருக்கு வழங்கியது யார் ?
இந்த நடவடிக்கைகளால் இவர் சாதிக்க நினைப்பது என்ன? 

என்ற வெளிப்படையான கேள்விகளும் எங்கள் மனதில் எழுகின்ற கேள்விகள் .

ஒருவேளை அமெரிக்க அரசாங்கத்தில் உயர் பதவியில் இருந்த ஒருவர் அல்லது பலர் அமெரிக்காவின் நடவடிக்கலைகள் பிடிக்காமல் இந்த தகவல்களை வெளியில் கசிய விட்டிருக்கலாம் அல்லது பணத்துக்காக தகவல்களை வெளியிட்டிருக்கலாம் .!!!!!!! அவர்கள் யார் என்பதை அமெரிக்கவே கண்டு பிடிக்க வேண்டும்.

இந்த ரகசிய ஆவணகளை கசிய விட்டதன் மூலம் ஜூலியன் அசாங்கே தனக்கான பிரபலத்தை தேட முற்பட்டாரா  !! , இல்லை இந்த தகவல்கள் அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும் என்று செயட்பட்டாரா??  என்பதும் விடைகாணப்பட வேண்டிய கேள்விகளே..
அது ஒரு புறமிருக்க ,
இப்பொழுது விக்கி லீக்ஸ் நிறுவனர், பெண்களை பாலியல் வன்புணர்ச்சிக்கு உட்படுத்தினார் என்ற குற்ற சாட்டின் பேரில் இப்பொழுது கைது செய்யப்பட்டிருக்கிறார்.
இவரின் கைது தொடர்பாகவும் சில விடயங்கள் புதினமாகவே இருக்கிறது.
2008 இல் இவர் இந்த குற்றங்களை புரிந்தார் என்று சொல்லபட்டாலும் இவர் ஏன் இதுவரைக்கும் கைது செய்யப்படாமல் இருந்தார் ?? அல்லது சர்வதேச பிடியாணை பிறப்பிக்கபட்ட ஒருவராக இருந்தாரா ? அப்படியானால் சர்வதேச ரீதியாக தேடப்படும் ஒருவர் ஏன் வலிந்து கட்டிக்கொண்டு தனது இருப்பை வெளிக்காட்டப்போகிறார் ? சத்தம் போடாமலே இருந்திருப்பாரே !!!!
ஆகவே இந்த இடத்தில் நிதானமாக சிந்தித்தால் ...இந்த ஆவணங்கள்  கசிய விட்டதன் பின்னர் இவரை கைது செய்வதற்காகவே பொய்யான குற்ற  சாட்டுகள் இவர் மீது சுமத்தப்பட்டுள்ளதா    என்றும் எண்ண தோன்றுகிறது. அதேவேளை ரகசியமாக இருக்கும் சில வங்கிகளின் கணக்கு விபரங்கள் வெளிப்படையாக சொல்லபட்டு அவையும் தடை செய்யப்படுவதாக பகிரங்கமாக அறிவித்தமையானது அசாங்கே யையை எப்படியாவது கைது செய்வது என்ற நோக்கத்தின் பின்னணியே என்று அவருக்கு ஆதரவானவர்கள் சொல்லலாம்.
எது எவ்வாறாக இருந்தாலும் இப்பொழுது  ஜூலியன் அசாங்கே கைது செய்யப்பட்டுள்ளார் . இதற்கு பிறகு விக்கி லீக்ஸ் இன் நடவடிக்கைகள் தொடராது என்று நினைத்த அனைவருக்கும் ஏமாற்றமே கிடைத்தது , காரணம் இப்பொழுதும் கசிவுகள் இருக்கின்றன அதேவேளை இணையத்தினூடான மோதல்களும் இப்பொழுது வலுப்பெற்றிருக்கிறது .அதாவது விக்கி லீக்ஸ் க்கு ஆதரவானவர்களால் இப்பொழுது சில முக்கியமான இணையத்தளங்கள் முடக்கப்பட்டு வருவதாகவும் தகவல் கள் வெளியாகிக்கொண்டே இருக்கிறது.
இந்த நடவடிக்கைகள் எதிர்காலத்தில் எவ்வாறான பாதிப்புக்களை ஏற்படுத்த போகின்றன என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

( பதிவிடும் வரைக்கும் நான் அறிந்த கசிந்த விடையங்களை வைத்துகொண்டு கருத்துக்களை சொல்லி இருக்கிறேன், மாற்று கருத்துக்கள் அல்லது புதிய தகவல்கள் கிடைத்தாலும் உங்கள் பின்னூட்டங்களில் சொல்லுங்கள்.

''விக்கி கசிவுகள் கசிய கசிய , எனது கருத்துக்களும் பெருக்கெடுக்கும்'
மீண்டும் சிந்திப்போம்.