ad

Wednesday, September 29, 2010

ஈழமா அல்லது இலங்கையா?

காலையில் ஒரு இணையதளத்தில் செய்தி ஒன்றை வாசித்தேன் ., 
இதுதான் செய்தியின் தலைப்பு .
'' தா'' திரைப்படம் மூலம் அறிமுகமாகும் ஈழத்து இசையமைப்பாளர்.'
கிளிக் பண்ணி வாசித்து பாருங்கள் .


இவர்தான் இசையமைப்பாளர் ஸ்ரீ விஜய், 'தா ' திரைப்படத்தின் 
மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவிப்பதில் மகிழ்ச்சி ., அதே நேரம் இவரின் திறமைக்கு தொடர்ந்தும் களம் அமைத்துக்க் கொடுக்காமல் போயிடுவாங்களோ என்று பயமா இருக்கு. 


காரணம் அண்மையிலே 'தா'  திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் இரண்டு பெரிய மனுசங்க ஒண்ணுமில்லாத விஷயத்தை பெரிசு படுத்தி விழாவையே குழப்பியிருக்கிறார்கள். அதாவது , 
 விழாவில் முதலில் பேச வந்த ஆர்.கே.செல்வமணி ஸ்ரீ லங்காவிலிருந்து இங்கு வந்திருக்கும் ஸ்ரீவிஜயின் குரல் உலகமெங்மும் உள்ளவர்களை ஒருங்கினைக்கும் ஒரு குரலாக இருக்கும் என்பது மட்டும் சத்தியம்” என்றார்.


பின்னர் பேசிய  அவரைத் தொடர்ந்து பேசிய பெப்சி தலைவர் வி.சி.குநாதன், “ஆர்.கே.செல்வமணி சொன்னதில் ஒரு சிறு பிழை. ஸ்ரீவிஜய் ஸ்ரீ லங்காவிலிருந்து வரவில்லை. ஈழத்திலிருந்து வந்திருக்கிறார். 


இந்த வாக்குவாதம் தேவையா /? இல்லை தேவையா என்று கேட்கிறேன் .
இவர்கள் இருவருக்கும் அடிப்படை பிரச்சனை என்ன என்று தெரியவில்லை என்று நினைக்கிறேன் என்று இந்த செய்தியை பார்த்த பெரியவர் ஒருவர் பேசியது எனது காதுகளிலும் விழுந்தது. 
அதாவது இந்த இலங்கை, ஈழம் என்பது எல்லாமே இந்த நாட்டின் பெயர்கள் தான் , ஆனால் பிரச்சனை நடந்தது 'தனி தமிழீழத்துக்கு '' தான். ,என்று அந்த மனுஷன் புலம்பிக்கொண்டே போனார். இது தெரியாமல் ஏதோ தங்கள் அக்கறையுள்ளவர்கள் போல் காட்டி நடிக்க இப்போது என்ன அவசியம் வந்தது ? 


அந்த இரண்டு பெயர்கள் மட்டுமல்ல இன்னும் எத்தனையோ பெயர்கள் இலங்கைக்கு இருக்குறது உதாரணமாக ,  இலங்கை, இலங்காபுரி, லங்கா, நாகதீபம், தர்மதீபம், லங்காதுவீபம் (வழங்கிய வடமொழியில்), சின்மோன்டு, சேலான், தப்ரபேன் (கிரேக்கர்களால்), செரெண்டிப் (அராபியர்களால்) உட்பட மற்றும் பல பெயர்களால் அழைக்கப்பட்ட இத்தீவு, பின்னர் குடியேற்றவாத காலம் தொடக்கம் 1972 ஆம் ஆண்டில் இலங்கை ஒரு குடியரசாக அறிவிக்கப்படும் வரை சிலோன் என்று அழைக்கப்பட்டது. (தற்காலத்திலும் சிலசமயங்களில் சிலோன் என்பது பயன்படுத்த படுகிறது).
என்பவற்றைச் சொல்லலாம்.


ஆகவே வெறும் வாய் வீச்சு வல்லவர்களே உண்மையான பிரச்னையை புரிந்து கொண்டு பேசுங்கையா....பேசி பேசியே காலத்தை போக்காமல் பொழப்ப போய் பாருங்க என்று அந்த பெரியவர் சொல்ல சொன்னார். 


ஒரு திறமை படைத்தவர் எந்த நாட்டில் இருந்து வந்தால் என்ன? உங்களுக்கு அவரின் திறமை மீது நம்பிக்கை இருந்தால் சந்தர்ப்பம் வழங்கலாம் இல்லாவிட்டால் உங்க பாட்டுல இருந்துட்டு போங்க... 
 நீங்கள் இப்போது ஆரம்பித்திருக்கின்ற இந்த பிரச்சனையானது இந்த நேரத்தில் தேவை இல்லாத ஒன்று என்றே அநேகமானவர்கள் நம்புவார்கள். 
  உங்கள் ஒன்றுக்கும் உதவாத வாய்த்தர்கத்தினால் அந்த கலைஞனின் திறமைகள் மழுங்கடிக்கப்பட கூடாது. 


எதுவாக இருந்தாலும் புரிஞ்சுகிட்டு போராடுங்கப்பா.. போராடுங்க..!
  நன்றி :-tamilnewscinema.com