என்ன பண்றது மனசு கேட்குதில்லையே...! மன்னிக்கவும் "நா" கேட்குதில்லையே...!
எத பற்றி பேச வாறம் என்று ஓரளவுக்கு புரிந்திருக்கும்.....
ஆமாங்க இக்காலத்து "நவீன சமையல்" பற்றித்தான் எங்க கவலையெல்லாம்.
இந்த அவசர உலகத்தில் பாஸ்ட் பூட் கலாச்சாரத்தில் இதெல்லாம் நினைக்க எங்க நேரம்.... ஏதோகிடக்கும் நேரத்தில் சட்டு புட்டுன்னு ஏதாவது தயாரித்து விட்டு அதற்கு வாயினுள் நுழையாத மாதிரி ஒரு பேரு வைத்து தந்தால் , அதன் பெயர் போலவே உணவுகளும் வாயினுள் நுழைய மறுக்கிறது....இதனால்தான் இப்பொழுதெல்லாம் சிலர் உண்டும் உண்ணாவிரதம் இருக்கிறார்கள் போல.....
ஆனால் அந்த காலத்தில் இருந்த கைப்பக்குவம் இப்போதைக்கு இல்ல என்றுதான் நிறைய பெரிசுகள் பேச கேட்டிருக்கிறேன்,,,,, இதற்கு காரணம் அந்த காலத்து சமையல் நிபுணர்களான நம்ம வீட்டுதலைவிகள் பாவித்த உபகரணங்களாகவும் இருக்கலாம்,,,,,,,
உரல் உலக்கையால் குற்றிய நெல்லரிசி சோறு ......
அம்மியில் அரைத்தெடுத்த மலிகைச்சரக்குகள்
மணக்க மணக்க.....சமைக்கும் பக்குவம் இன்னும் நாவுகளில் நயகராவை வரவழைக்கிறது.
அந்த காலத்து இந்த சமையல் உபகரணங்களை இப்பொழுது காண கூட கிடைப்பதில்லை.....
இருந்தாலும் உரலும் உலக்கையும்,,,
இருந்தாலும் உரலும் உலக்கையும்,,,
அம்மியும் குழவியும்,
சுளகு
போன்ற பொருட்கள் இன்னும் பாதுகாக்கப்பட வேண்டியவைகளே.....
ஏதோ ஒரு ஆதங்கத்தில் சொல்லி புட்டன் மன்னிச்சுடுங்க தாய்க்குலங்களே.....உங்கள் சமையல்கள் பிரமாதம்........பிரமாதம்....பிரமாதம்.....( மதிய உணவை உறுதிப்படுத்த எடுத்த முன்னெடுப்பு என்று யாரு நினைக்க கூடாது) ....
ஏதோ ஒரு ஆதங்கத்தில் சொல்லி புட்டன் மன்னிச்சுடுங்க தாய்க்குலங்களே.....உங்கள் சமையல்கள் பிரமாதம்........பிரமாதம்....பிரமாதம்.....( மதிய உணவை உறுதிப்படுத்த எடுத்த முன்னெடுப்பு என்று யாரு நினைக்க கூடாது) ....
33 comments:
இதனால்தான் இப்பொழுதெல்லாம் சிலர் உண்டும் உண்ணாவிரதம் இருக்கிறார்கள் போல.....
:)
//இதனால்தான் இப்பொழுதெல்லாம் சிலர் உண்டும் உண்ணாவிரதம் இருக்கிறார்கள் போல.....//
உண்மைதான் நண்பா...இதுபோல ஆட்டுக்கல்லும், அம்மிக்கல்லும் மீண்டும் வருமா?
நல்ல இடுகை...
//இது நம்ம ஆளு said...
இதனால்தான் இப்பொழுதெல்லாம் சிலர் உண்டும் உண்ணாவிரதம் இருக்கிறார்கள் போல.....
:)//
என்னா பண்றது....
// க.பாலாசி said...
//இதனால்தான் இப்பொழுதெல்லாம் சிலர் உண்டும் உண்ணாவிரதம் இருக்கிறார்கள் போல.....//
உண்மைதான் நண்பா...இதுபோல ஆட்டுக்கல்லும், அம்மிக்கல்லும் மீண்டும் வருமா?
நல்ல இடுகை...//
வரும்,,, ஆனால் சமையலில் இல்ல ,நம்ம தலைக்கு
தொடர்ந்தும் அவங்களுகிட்ட ருசியாக சமைக்க சொன்னால்.....
அவசர யுகத்தில் எல்லாமே அவசரம் தான்!
// வால்பையன் said...
அவசர யுகத்தில் எல்லாமே அவசரம் தான்!//
அதுக்கு கொஞ்சம் ஆற அமர சாப்பிடுற மாதிரி ஏதாவது தரக்கூடாதா ..?
ஹா...நல்லாத்தான் சொல்லியிருக்கீங்க :)
இதெல்லாம் இல்லாம,obesity,over weight ஆளுங்க அதிகமாயிட்டாங்கன்னு சொல்லுங்க...சரிங்கலாம்.
ஆனா, இதெல்லாம் தாய்க்குலங்கள் மட்டும்தான் உபயோகிச்சாங்கன்னு சொல்றதுதான் சரியில்ல...சின்ன அளவில வீட்டுப்பெண்கள் உபயோகிச்சாங்கன்னா, பெரிய அளவில் ஆண்கள்தான் உபயோகிச்சிருக்காங்க.
உதாரணமா கல்யாண சமையலையே எடுத்துக்கோங்க.(வீட்லகூட இதையெல்லாம் நிறைய அம்மணிகள் ஆண்களைக்கொண்டு செய்ய வைத்ததாகக் கேள்வி...ஆக, நவீன வசதிகள் உங்க வர்க்கத்துக்கும் உதவுது)
இதில ஒரு லாபம் என்னன்னா, இப்பல்லாம் ஹோட்டல்ல காசில்லாம சாப்பிட்டா, மாவாட்டவைக்கிற தண்டனை இல்லாமப்போயிடுச்சுன்னு நினைக்கிறேன். (தட்டு, தம்ளர் கழுவச்சொல்றாங்களாம்...லேட்டஸ்ட் நியூஸ்)
//இப்பொழுதெல்லாம் சிலர் உண்டும் உண்ணாவிரதம் இருக்கிறார்கள் போல..... //
:)
Haha....
//இதில ஒரு லாபம் என்னன்னா, இப்பல்லாம் ஹோட்டல்ல காசில்லாம சாப்பிட்டா, மாவாட்டவைக்கிற தண்டனை இல்லாமப்போயிடுச்சுன்னு நினைக்கிறேன். (தட்டு, தம்ளர் கழுவச்சொல்றாங்களாம்...லேட்டஸ்ட் நியூஸ்)//
ஹா...ஹா...
அப்பிடியா சங்கதி...
வருகைக்கும் கருத்துக்களுக்கும் ரொம்ப நன்றி....
அடிக்கடி வாங்க.
// கனககோபி said...
//இப்பொழுதெல்லாம் சிலர் உண்டும் உண்ணாவிரதம் இருக்கிறார்கள் போல..... //
:)
Haha....//
என்ன செய்றது கோபி....?
சத்தமாக சொல்ல முடியல...
old is gold என்று சும்மாவா சொன்னாங்க.
//
sanjeevan said...
old is gold என்று சும்மாவா சொன்னாங்க.//
உண்மைதான் சஞ்சீ,,,
ஆனால் நவீன நாகரீக நங்கைகள் நம்ப மறுக்கிறார்களே....
ஆட்டுக்கல்லில் அரைக்கப்பட்ட சட்னியின் சுவை என்ன தான் சூப்பர் மிக்ஸியில் அரைத்தாலும், அந்த அரைபடாத பருப்பும், திப்பி திப்பியான தேங்காயும் தோசையோடோ, இட்லியோடு உள்ளே போகும் போது கிடைக்கும் சுவை.. டிவைன்.
ஆட்டுக்கல்லு உணவை ஞாபகப்படுத்திய உங்களுக்கு என் மென்மையான கண்டனங்கள்.
பாலோயிங். இனி பின்னூட்டம் மிஸ்சாகாது ;))
பழசை நியாபகபடித்தியற்க்கு நன்றி..இன்னும் இது எல்லாம் பல வீடுகளில் புழக்கத்தில் தான் உள்ளன..
அம்மியிலும் உரலிலும் இடித்து அரைத்து தயாரிக்கப்படும் உணவிற்க்கு சுவையே தனிதான்...
பிரபா, தமிழ்மணத்தில உங்க இடுகையோட தலைப்பு மட்டும்தான் வருது. உங்க பேர் வரலை. அதனாலேயே நிறைய பேர் படிக்காம போயிடுவாங்க. என்னான்னு பாருங்க
//Cable Sankar said...
ஆட்டுக்கல்லில் அரைக்கப்பட்ட சட்னியின் சுவை என்ன தான் சூப்பர் மிக்ஸியில் அரைத்தாலும், அந்த அரைபடாத பருப்பும், திப்பி திப்பியான தேங்காயும் தோசையோடோ, இட்லியோடு உள்ளே போகும் போது கிடைக்கும் சுவை.. டிவைன்.
///
ஐயோ ஐயோ.... detailaa சொல்லி இன்னும் ..... நயாகராவின் நீளத்தை ..................
needdureengale...
இதில ஒரு லாபம் என்னன்னா, இப்பல்லாம் ஹோட்டல்ல காசில்லாம சாப்பிட்டா, மாவாட்டவைக்கிற தண்டனை இல்லாமப்போயிடுச்சுன்னு நினைக்கிறேன். (தட்டு, தம்ளர் கழுவச்சொல்றாங்களாம்...லேட்டஸ்ட் நியூஸ்)//
neengale itha anupavicha mathiri iruku
// Subankan said...
ஆட்டுக்கல்லு உணவை ஞாபகப்படுத்திய உங்களுக்கு என் மென்மையான கண்டனங்கள்.
பாலோயிங். இனி பின்னூட்டம் மிஸ்சாகாது ;))//
ரொம்ப நன்றி சுபாங்கன், உங்கள் வருகைக்காக காத்திருந்தேன்...
//வினோத்கெளதம் said...
பழசை நியாபகபடித்தியற்க்கு நன்றி..இன்னும் இது எல்லாம் பல வீடுகளில் புழக்கத்தில் தான் உள்ளன..//
இருக்கு கௌதம் ஆனால் விரல் விட்டு எண்ணலாம், எண்ணும் பொது எங்க வீட்டையும் சேர்த்துக்கலாம்...
// பிரியமுடன்...வசந்த் said...
அம்மியிலும் உரலிலும் இடித்து அரைத்து தயாரிக்கப்படும் உணவிற்க்கு சுவையே தனிதான்...//
சமையலின் மனம் அதில் தான் தெரியும்,,,, இல்லையா?
// gayathri said...
இதில ஒரு லாபம் என்னன்னா, இப்பல்லாம் ஹோட்டல்ல காசில்லாம சாப்பிட்டா, மாவாட்டவைக்கிற தண்டனை இல்லாமப்போயிடுச்சுன்னு நினைக்கிறேன். (தட்டு, தம்ளர் கழுவச்சொல்றாங்களாம்...லேட்டஸ்ட் நியூஸ்)//
neengale itha anupavicha mathiri iruku//
ஹையோ...ஹையோ... இந்த பிள்ளைக்கு ஒரே நகைச்சுவைதான் போங்கள்...( ஹா,,,ஹா..),
வருகைக்கு நன்றி காயு....
// சின்ன அம்மிணி said...
பிரபா, தமிழ்மணத்தில உங்க இடுகையோட தலைப்பு மட்டும்தான் வருது. உங்க பேர் வரலை. அதனாலேயே நிறைய பேர் படிக்காம போயிடுவாங்க. என்னான்னு பாருங்க//
ரொம்ப நன்றி அம்மிணி,,, தகவலுக்கு ...என்னான்னு ஒரு கை பாத்துடுவோம்..
நல்ல பதிவு பிராபா. ஆட்டுக்கல்லைப் பார்க்கும் போது நான் குழவியை சுத்த மாவைத் தள்ளிவிட்டுக் கொண்டு கதை சொல்லும் இளையஅக்காவும், அம்மியைப் பார்க்கும் போது அம்மாவின் ஞாபகம் வருகின்றது. இப்ப எங்க அம்மா டேய் இந்த மிக்ஸி மூடி கொஞ்சம் திறந்து கொடு என்றுதான் சொல்லுகின்றார்கள். நாளை மிக்ஸியும் கிரைன்டரும் இது போல் ஆகி பிஸ்ஸாவும் பர்கரும் வந்துடுமான்னு பயமா இருக்கு.
பிரபா! உங்க திருமணத்துக்கு என்னோட
பரிசு என்ன தெரியுமா?
உரல்உலக்கை,அம்மிகுளவி,ஆட்டுக்கல்
சுளகு இப்பவே “ அம்மணிய” தயார்படுத்துங்க
போனமாதம் ஊருக்கு வந்தாபோல..
காலையில் ஒரு கப் கீழ்வரக்கு கூழ்
{குரக்கன் கஞ்சி}ஒரு மாதமாய் சாப்பிட்டேன்
சுவை அபாரம் {அனைத்தும் கை வேலைகள்}
அந்த ருசியில் இங்கு வந்து கடையில் மாவு
வாங்கிச் செய்தேன் ஒரு தரத்துடன் ஆசையே
போய்விட்டது .
பிரபா இப்பவே சமையலில் ஆராட்சி
தொடங்கி விட்டார் “கொடுத்து வைத்தவ”
வாயினுள் நுழையாத மாதிரி ஒரு பேரு வைத்து தந்தால் , அதன் பெயர் போலவே உணவுகளும் வாயினுள் நுழைய மறுக்கிறது...
உண்மைதான்...
http://ponvandu.blogspot.com/2009/11/blog-post.html
படித்துப் பாருங்க
இன்னும் எங்கள் ஊரில் அம்மி போன்ற பழைய உபகரணங்களைதான் அதிகமாக பயன் படுத்துகிறார்கள்
http://voipadi.blogspot.com/2009/11/blog-post_11.html
உங்கள் ஆயுதங்களை பாவித்து அந்த நாள் உண்டஉணவுகள் நினைவு வந்து ...........நினைக்கும் போதே ஆகா..........வாயூறுதே. .
அனைத்து நண்பர்களுக்கும் இனிய ஆங்கில புதுவருட வாழ்த்துக்கள்...
அன்பின் பிரபா
காலம் மாற மாற - தலை முறை மாற மாற- பழக்க வழக்கங்களூம் மாறுகிறது - அறிவியல் முன்னேற்றங்கள் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். வாழ்க்கை முறையே முழுவதுமாக மாறி விட்டது. நன்மை தீமைகளை ஆராயாமல் காலத்துக்குத் தகுந்த மாதிரி வாழ வேண்டும்.
நல்வாழ்த்துகள் பிரபா
நட்புடன் சீனா
Post a Comment