ad

Monday, February 13, 2017

பேஸ்புக்கில் உதிர்த்தவை ....

01. 'சொர்க்கம்' எப்பிடி இருக்குமென்று எனக்கு தெரியாது. 
ஆனால் காலைசாப்பாட்டிற்கு சுடு சோறும் சம்பலும் கிடைக்கலன்னா நிச்சயம் அது சொர்க்கமில்லை என்பதை கண்டுபிடித்துவிடுவேன். :)




02. ;)காலை 5 மணிக்கு எழும்பி நடைப்பயிற்சி செய்யவேணும் என்ற எனது கனவு 1348வது நாளான இன்றும் சாத்தியமாகவில்லை என்ற கவலையில் ...



 03. உணர்ச்சி'வசப்படுபவனால் 'உணர்வு'களை சரியாக வெளிப்படுத்த முடியாது. !


04. வானம், இரண்டு நாளாய் சிணுங்கிக்கொண்டேயிருக்குறது, 
அனேகமாக மாலைவேளையில் கதறி அழ ஆரம்பிக்கலாம். !

05.மண் நனைந்ததால் மனசு குளிர்கிறது.


06.இலங்கைக்கு தொடர்ச்சியாக மழை கிடைக்க வேணுமெண்டால் , கிரிக்கட் மெட்சுக்கு வெளிநாட்டு ரீம் ஒண்ட கூட்டிட்டு வந்தால் சரி. ;)


'வீண் முயற்சியா' அல்லது 'விடாமுயற்சியா' என்பதை கிடைக்கும் 'முடிவே'தீர்மானிக்கும். ;)

Monday, December 23, 2013

சின்னதாய் ஒரு பதிவு

அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.
நீண்ட நாட்களுக்கு பிறகு வலைப்பதிவு பக்கம் எட்டி பார்க்கிறேன் 
பாவம் என் பக்கம் அண்மைக்காலமாக  எந்தவொரு புதிய பதிவுமின்றி வாடிக்கிடந்தது , இதற்கு ஒரு பிரதான காரணமும் இருக்குறது அதாவது  முன்பெல்லாம் மனசுல தோன்றுவதையெல்லாம் சேமித்து   வைத்து ஆறுதலாக நேரம் கிடைக்கும் போது  ஒரு பிரதான பதிவாக இடுவேன்.... இப்பொழுதெல்லாம் சேமித்து வைக்கும் வேலை இல்லை காரணம் கணப்பொழுதில் சின்ன சின்ன பதிவுகளாக Facebook இலும் Twitter இலும் பதிவேற்றுவதே .அந்த காரணம் , இருந்தாலும் இன்று மனசு கேட்கவில்லை எனவே தான் அண்மையில் Facebook இல் நான் இட்ட பதிவுகளை இங்கும்  என்று நினைக்கிறேன் .  அதுதான் '' சின்னதாய் ஒரு பதிவு ''.

டிசம்பர் 23 /2013

தன்னை முழுமையாக நிரப்பிக்கொள்ளாத அல்லது நிரம்பியது போல் காட்டிக்கொள்ளும்/காட்சி தரும் எந்த ஒரு குடமும் என்றோ ஒரு நாள் தளம்பியே தீரும்.


டிசம்பர் 21 /2013

// அதிக வேகம் மரணத்தை தரும் .// - வீதியோர அறிவித்தல் பலகை .

// ''குறைந்த வேகம் கடுப்பை தரும்'' // 
மேலே உள்ள அறிவித்தலை வாசித்துவிட்டு பயந்து போய் பஸ்ஸை ஆமை வேகத்தில் நகர்த்திய சாரதியை பார்த்து நாங்க சொன்னது !! முடியலடா சாமி கொஞ்ச தூரத்தை கடக்க நாள் முழுவதுமாடா பஸ்ஸை ஓட்டுவீங்க.

டிசம்பர் 16 /2013

இவன் @Mark Zuckerberg ஒரு நன்றி கெட்டவன்டா...இரவு பகலாக#Facebook இல் இருந்து கஸ்டபட்டு உழைச்சு அவனுக்கு சோறு போட்டுகிட்டு இருக்குற நமக்கு.. வருச கடைசியிலாவது ஒரு நன்றிய சொன்னானா பாருங்க #நன்றி கெட்ட உலகமடா இது? 

டிசம்பர் 12 /2013 

// கிடைக்குற படங்களில் எல்லாம் நடிக்க மாட்டேன்-அண்ட்றியா அதிரடி // 

"நீங்க நடிக்குற படங்களை எல்லாம் பார்க்க மாட்டோம்".- நாங்க அதிரடி!!!

யாருகிட்ட??  

இப்போ சொல்லுங்க இது '' சின்னதாய் ஒரு பதிவு '' தானே ??? :P 




Thursday, January 26, 2012

எல்லாம் அவன் செயல் ( எல்லாம் அவுஸ்திரேலியாவின் செயல் )



நான் சுத்தி வளச்சு பேச விரும்பல நேரா அவுஸ்திரேலியா டீம பார்த்து கேட்குறன், மேட்ச் நடத்துறியா இல்ல அராஜகம் நடத்துறியா? 

என்ன பண்ணினான் என் டீம் காரன் , 
என்னய்யா பண்ணினான் ? எதோ மேட்ச் விளையாடுவம் என்று வந்திருக்கான் , அதுக்கு , வின் பண்ற அளவுக்கு ரன் எடுத்துட்டு விட வேண்டியது தானே -அதுதானே உலக வழக்கம் ; அத விட்டுட்டு ஆள் ஆளுக்கு டபுள் சென்சரி அடிச்சுட்டு இருந்தா ??..."!!!!!

என் டீம தொவை தொவை என்னு தொவைச்சுட்டு இருக்குறீங்க நீங்க ....  
அட கிளார்க் , பாண்டிங் இவங்க அடிச்சாலும் பரவால்ல, 
ஹாரிஸ் , ஹட்டின் போன்றவங்களையும் கூப்பிட்டு இவங்கட போலுக்கு அடிச்சு பலகிக்க்கங்கடா  .....எண்டு வேற சொல்லி அசிங்கப்படுத்திட்டீங்க.. 
ஏதோ பல மேட்ச் ல அடி வாங்கி பழகினதால வலிக்கல... 
இப்பிடியே போனால் இந்த டீம யார் காப்பாத்துறது, 
ஐ. பீ. எல் ல யார் தான் விளையாடுறது ? 

இவ்வளவு ஏன் ?, அன்மையில தென்னாபிரிக்கவுளையும் இப்பிடி ஒரு மேட்ச் நடந்துது, அந்த பிள்ளைகள் எதோ ஒரு மேட்ச்,  நாங்க வின் பண்ணட்டும் என்னு  விடல... 
அந்த நாகரீகம் கூட தெரியாத உனக்கு ??? 

என்னா அடி ?/ 
ஒரு மேட்ச் கூட வின் பண்ண விடாமல் அடிக்குறது ? 
இரக்கம் இல்லையா உனக்கு ? வேணாம் இத்தோட நிறுத்திக்க. (அவ்வவ் ) 

Monday, July 18, 2011

நவீன அரசியல்வாதி !!!!

காஸ்மீர் பகுதியில்  பொது மக்களின் நடமாட்டத்துக்கு திறந்துவிடப்படாத  ஒரு பகுதியில் ஒரு நாள்  அதி காலையில் நடைப்பயிற்சியில் ஈடு பட்ட ஒருவரை கைது செய்த பாதுகாப்பு படை வீரனுக்கும் பயிற்சியில் ஈடுபட்டவருக்கும் இடையில் நடந்தத ஒரு சம்பாசனை .

படை வீரர் :- (பயிற்சியில் ஈடு பட்டவரிடம் ) உங்களை நான் கைது     செய்கிறேன் .

பயிற்சியில் ஈடுபடுபவர் :- ஏன் ?


படை வீரர் :- நீங்கள் நட மாட கூடாத, வர கூடாத இடத்துக்குள் பிரவேசித்துள்ளீர்கள் .!!


பயிற்சியில் ஈடுபடுபவர் ஐயோ!!  இல்லை இது பற்றி நான்  அறிந்திருக்கவில்லை , என்னை மன்னித்து, விட்டு விடுங்கள்.


படை வீரர் :-முடியாது நீங்கள் இந்த நாட்டிற்கு பாதகம் விளைவிக்க கூடிய பயங்கர ஆயுதங்களை வைத்திருக்கலாம் எனவும் சந்தேகிக்கிறேன், -



பயிற்சியில் ஈடுபடுபவர்;-ஐயோ !!!அப்பிடி ஒண்ணுமே இல்லை சார்'''!

படை வீரர் :-சரி உங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்த ஏதாவது ஆவணங்கள் வைத்திருக்குறீர்களா  ? 


பயிற்சியில் ஈடுபடுபவர்:-இல்லை சார் இந்த நடை பயிற்சிக்கு வரும் போது  அதெல்லாம் எடுத்து வருவாங்களா ?


படை வீரர் :-இல்லை,, ஆகவே உங்களை கைது செய்கிறேன்

பயிற்சியில் ஈடுபடுபவர்:-ஐயோ சார் நான் இந்த நாட்டின் 'பாராளுமன்ற உறுப்பினர் ''.


படை வீரர் :-அப்பிடியா அப்பிடியென்றால் உங்கள பாராளும்ற உறுப்பினர் அடையாளத்தை உறுதிப்படுத்தும் அடையாள அட்டையை காண்பியுங்கள் , நான் நம்புகிறேன்.


பயிற்சியில் ஈடுபடுபவர்:-இல்லை சார் அதனையும் நான் கொண்டு  வரவில்லை..


படை வீரர் :-  உங்களை நான் நம்புவதற்கு எந்த விதமான அடையாளத்தையும் நீங்கள் வைத்திருக்க வில்லை ம்ம் என்ன செய்வது ......???......................சரி , நமது தேசிய கீதத்தை பாடுங்கள்.


பயிற்சியில் ஈடுபடுபவர்:-!!!?????? இல்லை சார் அது வும்  தெரியாது ..


படை வீரர் :-  ம்ம் இப்பொழுது நம்புகிறேன் நீங்கள் இந்த நாட்டின் பாராளு மன்ற உறுப்பினர் தான். நீங்கள் போகலாம். !!! 


                                                  ******* ?????? !!!!!!! ?????? ******


ஹி ஹி ஹி ஹி.... என்ன கொடுமை சார் இது ???




Wednesday, May 18, 2011

எங்களுக்கு பிடிச்ச லோஷன் அண்ணா, மனம் திறக்கிறார் தம்பி பிரபா .

தலைப்பினை பார்த்துவிட்டு பெரிய மனுஷன் என்னாத்த பற்றி மனம் திறக்க போறான் என்று அறிந்து கொள்ள ஆவலாக வந்திருக்கும் அனைவருக்கும் அன்பான வணக்கம்....
 நீண்ட நாட்களுக்கு பிறகு இந்த பக்கம் வந்திருக்கிறேன்,(காலையில் பதிவெழுத இந்த பக்கத்தை திறக்கும் போது தான் எனக்கு விளங்கியது பதிவுலகத்தை விட்டு நான் எவ்வளவு விலகியிருந்தேன் என்று காரணம்  கடவுச்சொல்லை  கூட மறந்துட்டேன் என்றால் பார்த்து கொள்ளுங்களேன்.:)

இடைபட்ட காலத்தில் ஏராளமான மாற்றங்கள் , குறிப்பாக  பதிவுலகத்தில் ஏராளமான புது முகங்களை காணக்கூடியதாக இருக்குறது ,சில பதிவர்கள் முன்னை விட வேகமாக வளர்ச்சி கண்டு பிரமிக்க வைக்கிறார்கள், சில மூத்த பதிவர்கள் , வழக்கம் போல தங்களது இளைய நண்பர்களை ஊக்கப்படுத்தி ஆக்கப்படுத்தும்  முயற்சியில் முன்முரமாக செயட்பட்டிருக்கிறார்கள், எல்லாவற்றையும் பார்க்கும் போது சந்தோசமாக இருக்குறது. 
சரி விசயத்துக்கு வருவோம்.....
இந்த காலத்தில் ஊடகத்துறையில் நீண்ட காலத்துக்கு  நின்று நிலைப்பது எனபது அவ்வளவு இலகுவான காரியமா?? நிச்சயமாக இல்லை மிகச்சவாலான விஷயம், ஆனால் இங்க ஒருவர் அந்த சவாலை  இலகுவாக சமாளித்துகொண்டிருக்குறார் அவர் தான் அன்புக்குரிய  ரகுபதி பால ஸ்ரீதரன் வாமலோஷனன்(வெற்றி வானொலியின் பணிப்பாளர் ); சிம்பிளாக லோஷன்  என்றால் எல்லோருக்கும் கண் முன்னே வந்து அழகாக் சிரித்துகொண்டு காட்சி தருவார்,
ஒரு துடிப்பான இளைஞன்,
இலங்கை திருநாட்டிற்கு கிடைத்த திறமையான அறிவிப்பாளர்,
பக்குவப்பட்ட பதிவர் ,
அவரை பற்றிதான் இன்று எனது பதிவு அமைய போகிறது, .

தனி மனிதன் லோஷனை பற்றி அதிகம் வீணாக்க புகழ் பாடுவதாக தயவு செய்து என்ன வேண்டாம் , அண்மையில் நான் அவதானித்த ஒரு சில விஷயங்கள் என் மனதை தொட்டது அதுதான் அத்தனையையும் இங்கே கொட்ட வந்திருக்கிறேன்,


லோஷன் அண்ணாவை பொறுத்த மட்டில் கிட்டதட்ட வானொலியோடு நீண்ட கால தொடர்பினை கொண்டவர் (அவரது தாத்தா,அம்மா போன்றவர்களும்  வானொலி கலைஞர்கள்  )அனைவருக்கும் இது தெரிந்த  விடயம் தான் சிறு வயது கலைஞாக வளம் வந்தது மட்டுமல்லாமல்   ஒரு அறிவிப்பாளராக அவர் காலடி எடுத்து வைத்து கிட்டதட்ட 13 வருடங்கள் இருக்கும் என்று நினைக்கிறேன் ( சரியாய் சொன்னேனா அண்ணா? கால அளவு மாறுபட்டால் திருத்தி கொள்வோம்). லோஷன் அண்ணாவை விட நான் வானொலி துறைக்கு  6 வயது சின்னவன் .
இருந்தாலும் வானொலியையும் ஊடகத்தையும் ஓரளவுக்கு அறிந்துகொண்ட வரையில் இங்கு நிலைத்து நிற்பது என்பது மிகவும் கடுமையான விடயம் குறிப்பாக சாதாரணமான தமிழிலே சொன்னால் இங்கே  'வெட்டு குத்துக்கள் அதிகம்' எல்லா இடங்களில் இருப்பது போலவும் ஊடகத்துறையிலும் 'பனிப்போர்' மூழ்வது சகஜமான  விடயம் . ஆகவே இந்த ஊடகத்துறையில் இருப்பவர்கள் சம்பந்தமாக அடிக்கடி பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்படுவது சாதரணமான விடயம் ( வேண்டும் என்றே கட்டு கதைகளை கிளப்பி விடுவது உண்டு) .
அண்மையிலே இலங்கையில் இருக்கின்ற பிரபலமான ஒரு தொலைக்காட்சி ஊடகத்தில் தான் சந்தித்த பிரச்சனைகள் சம்பந்தமாக ஒரு தொலைக்காட்சி தொகுப்பாளினி ஒரு பத்திரிக்கைக்கு நொந்து போய் மனம் திறந்திருந்தார், இத்தனைக்கும் அவர் அங்கே நீண்ட காலமா பணியாற்றியவர் என்பது குறிப்பிட தக்கது .( பின்னர் அந்த பத்திரிகை பேட்டிக்கும அந்த பேட்டி வெளியான பக்கத்துக்கும் என்ன நடந்தது என்று உங்களுக்கும் தெரியும்) .


இப்படிபட்ட ஊடகத்துறைக்குள் அத்தனை சவால்களையும் சந்தித்து ''திறமையானவர்களை தட்டி கொடுக்கும் லோஷனின் பண்பு மிகவும் பிடித்திருக்கிறது, குறிப்பாக நிறைய இளைவர்கள் இவரால் அறிமுகபடுத்த பட்டிருக்கிறார்கள் ) இதில் சிலர் முதுகில் குத்தி விட்டு சென்ற  கதைகளையும் அறிந்தேன்.(நன்றியை பற்றி அறியாதவர்கள் ).

இது தவிர இப்பொழுது இருக்கின்ற இளம் தலை முறை வானொலி தொகுப்பாளர்கள் பலரிடம் இல்லாத தனித்திறமைகள் பல லோஷனிடம் உண்டு,அதை நான் பட்டியலிட்டுத்தான் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்ற தேவை இருக்காது என்று நினைக்கிறன் . ( நான் வேறு ஊடகத்தில் தான் இருக்குறேன் ஆனால் உண்மைகளை சொல்ல தயங்க மாட்டேன்) . , தமிழை ''தமிலாக'' வாசிக்கும் இந்த காலத்தில் தமிழை தமிழாகவே சுவாசிக்கும் அதை நேசிக்கும் லோஷனின் திறமை பலரை இந்த துறைக்குள் ஈர்த்திருக்கிறது.

உதரணத்துக்கு  என்னையே எடுத்துகொள்கிறேன் ( இப்பதான் மனம் திறக்கிறேன் என்று சிரிக்காதீங்க..)
அடிக்கடி நான் நிகழ்சிகளை செய்கின்ற போது ' லோஷனின் சாயல்' லேசாக உங்களிடம் வருகிறதே என்று சிலர் சொல்லுவார்கள், உண்மைதான்,  அறிவிப்பாளராக வரும் அனைவரும் யாரையாவது பின் பற்றிதான் வருவார்கள் அதனை தவிர்க்க முடியாது,( யாரையாவது நேசித்தால் கட்டாயம் வரும்).
ஆனால் அடியேன் கொஞ்சம் வித்தியாசமானவனா எனக்கு பட்டது காரணம்( இந்த துறைக்குள் காலடி எடுத்து வைக்கும் பொழுது நான் பெரிதாக வானொலிகளை கேட்பதில்லை ,ஆனால வந்த பிறகு கொஞ்சம் கூட கேட்க தயங்குவதில்லை  அது எந்த மொழி வானொலியாக இருந்தாலும் பரவாயில்லை ,கேட்பேன், ஏனென்றால் நல்ல நேயரினால் தான் ஒரு நல்ல அறிவிப்பாளரா இருக்க முடியும் என்ற கருத்தில் மாற்று கருத்துகளுக்கு இடம் கொடுக்காதவர்களில் அடியேனும் ஒருவன்.)
வானொலி துறைக்குள் வந்த பிறகு லோஷன் எனக்குள் பல மாற்றங்களை ஏற்படுத்தினார், காரணம் அவரது அறிவிப்பு பாணி எனக்கு பிடித்திருந்தது அதனால் அவரின் அனுமதி இல்லமே அவரின் சில அறிவிப்பு பாணியின்   பகுதிகளை களவாடிருக்கிறேன், அது எனக்கே தெரியாமல் நடந்த ஒருவிடயம் . ஆனால் எங்களுக்கு என்று ஒரு சுயம் இருக்க வேண்டும் இல்லையென்றால் எங்களால் இந்த துறைக்குள் பிரகாசிக்க முடியாது என்பதற்காக எனக்கு ஒரு புதிய பாணியை உருவாக்க முயற்சித்து கொஞ்சம் வெற்றியும் கண்டிருக்கிறேன், ....( என்ன லோஷன் அண்ணா இவ்வளவு நடந்திருக்க என்று யோசிக்கிறீங்களா? ஹி ஹி ))). 

  நாங்கள் இருவரும் நீண்ட நாட்களாக நல்ல நண்பர்கள் காரணம் அவர் இளையவர்கள் தானே என்று தள்ளி நிற்பதில்லை ( இப்பொழுது இருக்கின்ற இலங்கை அபதிவர்கள் அனைவரும் சாட்சி கூறுவார்கள் கேட்டு பாருங்கள் ) நெருங்கி வந்து பேசுவார். இத்தனைக்கும் ithuvraikkum நாங்கள் இருவரும் சந்தித்ததே இல்லை,அது  மட்டுமல்ல தொலைபேசியில் கூட ஒரு தடவையேனும் பேசியதில்லை ,எங்கள் தொடர்பு எல்லாமே ஈ மெயில் ,எஸ் .எம்.எஸ்.,டுவிட்டேர்,முக புத்தகம் .இந்த அளவோடு நிற்கிறது. ஆனாலும் லோஷனை நான் ''தூரத்தில் இருந்து துப்பறிந்திருக்கிறேன்'' .

இது தவிர பதிவுலகத்தில் மிக பிரபலமான முன்னணி இலங்கை பதிவர்களில் அவரும் ஒருவர் ( இலங்கை பதிவர் என்ற வகையில் அடியேனும் பெருமை படுகிறேன்) . தனது வானொலி நிகழ்ச்சிகளில் தைரியமாக கருத்துக்களை சொல்வது போல தனது பதிவுகளிலும் காத்திரமான கருத்துக்களை சொல்லி வருகிறார் , அடியேன் பதிவுகல்துக்கு வர காரணமாக இருந்ததும் அண்ணாவே.... பின்னர நிறைய விடையங்களை கற்றுக்கொண்டேன்.

இடையிடையே கிரிக்கெட் போட்டிகளின் போது நாங்கள் கருத்துக்களால் மோதிகொள்வதும் உண்டு .அவ்வேளையில் உண்மையான கருத்துக்களை முன் வைப்பார், ரசித்துகொண்டே ஏற்றுகொள்வேன்.  

அத்தோடு வானொலியில் அனைத்து நண்பர்களையும் வாழ்த்தி தட்டி கொடுத்து அவர்கள் அனைவரையும் அணைத்து செல்லும் பக்குவம் தெரிந்த லோஷன் அண்ணாவை பற்றி கொஞ்சம் சொல்லி இருக்கிறேன்...... இன்னும் இருக்கு அதனை அவரின் பிறந்த தினத்தில் (ஜூன் 5 ) பதிவிடலாம் என நினைக்கிறன்.

என்னாங்க நான் சொல்றது , சரிதானே ????? 
 



Friday, December 10, 2010

WikiLeaks ஸும், உங்கள் 'வீட்டு'லீக்ஸ் ஸும்.

இது ஒரு சீரியஸ் பதிவு .
ரகசியமாக அல்லது மறைமுகமாக இருக்கின்ற சில விஷயங்கள்  கசிந்தால்,அவற்றை அறிந்துகொள்ள ஆவலாகத்தான் இருக்கிறது. ஆனால், உரியவர்களுக்குத்தான் அது தூக்கத்தைக்கெடுக்கிறது , அது விக்கி லீக்ஸ்சாக  இருந்தாலும் சரி எங்கள் வீட்டு லீக்ஸ்சாக இருந்தாலும் சரி. ( கூரையில் இருக்கும் லீக்ஸ்(ஒழுக்கு)  யையும் சேர்த்துத்தான் சொல்கிறேன் ஹீ ஹீ. ) .
சரி அது ஒரு புறமிருக்க ,
விக்கி லீக்ஸ் தொடர்ச்சியாக வெளியிட்டு வரும் தகவல்கள் அனைத்தும்  எல்லோரது புருவங்களையும் பல சென்டி மீட்டர்கள் வரை  உயர்த்துகின்றன என்பது மட்டும் உண்மையான விடயமாகத்தான் இருக்கிறது.
இதன் அடிப்படையில் தான் 'விக்கிலீக்ஸ்' ஹீரோவாகிய அதே வேளை  அகப்பட்ட நாடுகள் ' சீரோ(zero)'' வாகி போயுள்ளன .

விக்கி லீக்ஸ் செய்து கொண்டிருப்பது சரியா? தவறா? என்ற வாக்கெடுப்பு ஒருபக்கம் இருக்க , ஊடக சுதந்திரத்துக்கும்  கருத்து வெளியிடும் உரிமைக்கும்    மதிப்பளிக்கும் எந்தவொரு நாடும் அல்லது தனி மனிதனும் விக்கி லீக்ஸ் இன் அணுகுமுறையானது பிழை என்று வாதிடுவதற்கு தயாராக இருக்க மாட்டார்கள் என்றே நினைக்கிறேன்.

ஆனால் விக்கி லீக்ஸ் இன் இந்த நடவடிக்கைகளால் எதிர் காலத்தில் உலக சாமாதானத்து ஏதும் ஆபத்துக்கள் நேருமா என்ற கேள்வியும் இந்த இடத்தில் எழுகிறது , அந்த விடயத்தை இன்னுமொரு சந்தர்ப்பத்தில்  தனியாக ஆராயலாம்.

அதேவேளை விக்கி லீக்ஸ் இன் இந்த அதிரடி நடவடிக்கைக்கு பின்னணியில் இருக்கும் காரணம் தான் எண்ண என்று ஒரு முறை நாங்கள் சிந்தித்தால்,...
பல்வேறு விடைகள் எங்களுக்கு கிடைக்கலாம்.
 இன்னுமொரு முக்கியமான விடயம் விக்கி லீக்ஸ் இன் மூலமாக கசிந்த  இந்த விடயங்கள் பொய்யானவை அல்லது திருத்தி கூறப்பட்டவை என்று பெரிதாக எந்த ஒரு நாடும் எதிர்கருத்துக்களை வெளியிட்டதாக அறியவில்லை ( நான் அறிந்த வரைக்கும்) .மாறாக இவ்வாறான கருத்துக்கள் அல்லது ரகசிய ஆவணங்கள் தொடர்ந்தும் வெளியிட பட்டால் எதிர்காலத்தில்  பல்வேறு சிக்கல்கள் தோன்றும் என்றே அச்ச பட்டார்கள். இதிலிருந்து புலப்படுவது என்னவென்றால் ஆவணங்கள் அனைத்தும் உண்மையானவை என்பதை உலக நடப்புக்களை அறிந்து வைத்திருக்கின்ற அனைவரும் ஊகித்துக்கொள்ள கூடியதாக இருக்கும் .
அதேவேளை அமெரிக்காவின் ராஜாங்க தகவல்கள் கசிந்ததற்கு  முக்கிய காரணம் விக்கி லீக்ஸ் இன் நிறுவனர் ஜூலியன் அசாங்கே தான் காரணம் என்று குற்றம் சாட்டப்படுகின்ற அதேவேளை அந்த முக்கியமான ஆவணங்கள் அமெரிக்காவின் முக்கிய அதிகாரிகளின் ஒத்துழைப்பு இல்லாமல் வெளியே வருவது என்பது அவ்வளவு சாத்தியமில்லாத ஒரு விடயம் என்பது உலக நாடுகளுக்கும் தெரியும். ( இதையே இப்பொழுது அவுஸ்திரேலிய  அரசாங்கமும் வலியுறுத்தி நிற்கிறது) .

ஜூலியன் அசாங்கே
 சரி , ஏன் ஜூலியன் அசாங்கே இந்த தகவல்களை பகிரங்கமாக வெளிப்படுத்தினார் ?
அமெரிக்காவுக்கும் இவருக்கும் என்ன பிரச்சனை ?
இந்த தகவல்களை இவருக்கு வழங்கியது யார் ?
இந்த நடவடிக்கைகளால் இவர் சாதிக்க நினைப்பது என்ன? 

என்ற வெளிப்படையான கேள்விகளும் எங்கள் மனதில் எழுகின்ற கேள்விகள் .

ஒருவேளை அமெரிக்க அரசாங்கத்தில் உயர் பதவியில் இருந்த ஒருவர் அல்லது பலர் அமெரிக்காவின் நடவடிக்கலைகள் பிடிக்காமல் இந்த தகவல்களை வெளியில் கசிய விட்டிருக்கலாம் அல்லது பணத்துக்காக தகவல்களை வெளியிட்டிருக்கலாம் .!!!!!!! அவர்கள் யார் என்பதை அமெரிக்கவே கண்டு பிடிக்க வேண்டும்.

இந்த ரகசிய ஆவணகளை கசிய விட்டதன் மூலம் ஜூலியன் அசாங்கே தனக்கான பிரபலத்தை தேட முற்பட்டாரா  !! , இல்லை இந்த தகவல்கள் அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும் என்று செயட்பட்டாரா??  என்பதும் விடைகாணப்பட வேண்டிய கேள்விகளே..
அது ஒரு புறமிருக்க ,
இப்பொழுது விக்கி லீக்ஸ் நிறுவனர், பெண்களை பாலியல் வன்புணர்ச்சிக்கு உட்படுத்தினார் என்ற குற்ற சாட்டின் பேரில் இப்பொழுது கைது செய்யப்பட்டிருக்கிறார்.
இவரின் கைது தொடர்பாகவும் சில விடயங்கள் புதினமாகவே இருக்கிறது.
2008 இல் இவர் இந்த குற்றங்களை புரிந்தார் என்று சொல்லபட்டாலும் இவர் ஏன் இதுவரைக்கும் கைது செய்யப்படாமல் இருந்தார் ?? அல்லது சர்வதேச பிடியாணை பிறப்பிக்கபட்ட ஒருவராக இருந்தாரா ? அப்படியானால் சர்வதேச ரீதியாக தேடப்படும் ஒருவர் ஏன் வலிந்து கட்டிக்கொண்டு தனது இருப்பை வெளிக்காட்டப்போகிறார் ? சத்தம் போடாமலே இருந்திருப்பாரே !!!!
ஆகவே இந்த இடத்தில் நிதானமாக சிந்தித்தால் ...இந்த ஆவணங்கள்  கசிய விட்டதன் பின்னர் இவரை கைது செய்வதற்காகவே பொய்யான குற்ற  சாட்டுகள் இவர் மீது சுமத்தப்பட்டுள்ளதா    என்றும் எண்ண தோன்றுகிறது. அதேவேளை ரகசியமாக இருக்கும் சில வங்கிகளின் கணக்கு விபரங்கள் வெளிப்படையாக சொல்லபட்டு அவையும் தடை செய்யப்படுவதாக பகிரங்கமாக அறிவித்தமையானது அசாங்கே யையை எப்படியாவது கைது செய்வது என்ற நோக்கத்தின் பின்னணியே என்று அவருக்கு ஆதரவானவர்கள் சொல்லலாம்.
எது எவ்வாறாக இருந்தாலும் இப்பொழுது  ஜூலியன் அசாங்கே கைது செய்யப்பட்டுள்ளார் . இதற்கு பிறகு விக்கி லீக்ஸ் இன் நடவடிக்கைகள் தொடராது என்று நினைத்த அனைவருக்கும் ஏமாற்றமே கிடைத்தது , காரணம் இப்பொழுதும் கசிவுகள் இருக்கின்றன அதேவேளை இணையத்தினூடான மோதல்களும் இப்பொழுது வலுப்பெற்றிருக்கிறது .அதாவது விக்கி லீக்ஸ் க்கு ஆதரவானவர்களால் இப்பொழுது சில முக்கியமான இணையத்தளங்கள் முடக்கப்பட்டு வருவதாகவும் தகவல் கள் வெளியாகிக்கொண்டே இருக்கிறது.
இந்த நடவடிக்கைகள் எதிர்காலத்தில் எவ்வாறான பாதிப்புக்களை ஏற்படுத்த போகின்றன என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

( பதிவிடும் வரைக்கும் நான் அறிந்த கசிந்த விடையங்களை வைத்துகொண்டு கருத்துக்களை சொல்லி இருக்கிறேன், மாற்று கருத்துக்கள் அல்லது புதிய தகவல்கள் கிடைத்தாலும் உங்கள் பின்னூட்டங்களில் சொல்லுங்கள்.

''விக்கி கசிவுகள் கசிய கசிய , எனது கருத்துக்களும் பெருக்கெடுக்கும்'
மீண்டும் சிந்திப்போம்.

Monday, November 22, 2010

ஜெயிலுக்கு போகாமல் தப்பித்தோம்......

என் வாழ்நாளில் இடம்பெற்ற  ஒரு சுவாரஸ்யமான விடயம் இன்றைய தினம் பதிவாகிறது...
2005 ம் ஆண்டு தமிழ் சிங்கள புதுவருடம் எனக்கு சிரிப்போடுதான் ஆரம்பித்தது.
இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தில் ( தென்றல்)  அறிவிப்பாளராக இணைந்து கொண்டதன் பின்னர்  வந்த முதலாவது தமிழ் சிங்கள புதுவருடத்தை சிறப்பாக வரவேற்க சிறப்பு நிகழ்ச்சி ஒன்றை செய்திருந்தோம், ( அந்த வேளையில் தென்றலின் ஒலிபரப்பு 24 மணி நேர சேவையாக இருந்தது) .
இரவு 10 மணியிலிருந்து அதிகாலை  5 மணிவரைக்கும்  நிகழ்ச்சியை படைத்திருந்தோம் . புதுவருடத்திற்கு குடும்பத்தோடு இல்லையென்றாலும் தென்றல் வானொலியில் இணைந்து கொண்ட ஆரம்ப காலத்தில் தொடர்சியாக நிகழ்ச்சிகளை படைப் பதற்கு  கிடைத்த சந்தர்பங்களை சிறப்பாக பயன்படுத்த வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாக இருந்த காரணத்தால் சந்தோசம் அதிகமாகவே இருந்திருந்தது.

அன்று நிகழ்சிகளோடு இணைந்திருந்த அறிவிப்பாளர்கள் அனுசுஜா ஆனந்தரூபன் ( இப்போது வெளிநாட்டில் வசித்து வருகிறார்) ,வைதேகி சர்வானந்தா ( வெற்றி வானொலியில் கடமையாற்றி இப்போது வைதேகி ஸ்ரீபவன் கனடாவில் கால் பதித்திருக்கிறார், இதுக்கு பிறகு கனடா சந்தோசமா இருக்குமா என்னு நீங்க யோசிக்கப்படாது ஹீ ஹீ ), அடுத்தவர் ஷைலானி  மயில்வாகனம் ( தென்றல்) .
அனைவரும் ரொம்ப சிரமபட்டு நிறை விடயங்களை தேடி எடுத்து அன்றைய நாளுக்கு பொருத்தமாக நிகழ்ச்சியை படைத்திருந்தோம்.
திருப்தியோடு காலையில் கலையகத்தை பிரியா ( பிரியதர்ஷினி அம்பிகைபாலன் - இப்போது வசந்தம் தொலைகாட்சியில் கடமையாற்றுகிறார்) மற்றும் கவிதா ( கவிதயாழினி அமலதாஸ்) இருவரிடமும் ஒப்படைத்து விட்டு வெளியேறினோம் .காலை 7 மணி இருக்கும் வீட்டுக்கு செல்வதற்கு  தயாராக இருந்த போது நான் வேற ஒரு வேலை காரணமாக மீண்டும் கலையகத்து செல்ல வேண்டி  இருந்தது...அப்போதுதான் நமக்கு ஆப்பு ஆயத்த மாகியிருக்கிறது...
பொதுவாக எங்களுக்காக அதிகாலை வேளையில் கடமைக்கு வரும்போதும் இரவு நேரங்களில் வீட்டுக்கு செல்லும்போதும்  மட்டுமே கூட்டுத்தபனத்தால் போக்குவரத்து வசதிகள் வழங்கப்படும், மற்ற நேரங்களில் அந்த வசதி இல்லை.   அது மட்டுமல்லாமல் புது வருட தினத்தில் கொழும்பில் ஒரு போக்குவரத்து வாகனத்தை  கண்டு கொள்வதே குதிரைக்கொம்பு.
பாதைக்கு வந்து நீண்ட நேர காத்திருப்புக்கு மத்தியில் ஒரு முச்சக்கர வண்டி வந்து சேர்ந்தது அந்த வண்டியில் நான் ஏறவில்லை என்றால் மற்ற மூன்று பேரும் வீடு போய் சேரலாம்... ( அந்த அளவுக்குத்தான் இட வசதி இருந்தது) அகவே அந்த இடத்தி ஹீரோவாக மாறி அவர்களை வழி அனுப்பி வைத்தேன்....  இன்னுமொரு வாகனம் வாராதா வாராதா என்ற
ஆவலோடு  நீண்ட நேரமாக காத்திருந்தேன் ,
ஹ்ம்ம் பயனில்லை.. அந்த நேரம் நண்பர் மரூஸ் தனது கடமையை முடித்து விட்டு வந்து என்னுடன் சேர்ந்தார் ,, இப்போது கொஞ்சம் நிம்மதி தனியாக இல்லாமல் பேச்சு துணைக்கு இன்னுமொரு நண்பர். இப்பொழுது இருவரும் சேர்ந்து காத்திருக்கிறோம்..சொன்னால் நம்ப மாட்டீர்கள் அந்த நேரத்தில் அந்த வீதியில்
ஒரு வாகனத்தை பார்பதற்கு  எவ்வளவு ஆசையா இருந்தது தெரியுமா?
இரவு முழுவது கண் விழித்ததன் காரணமாக தூக்கம் வேற கண்ணை கட்டியது ,

நாங்கள மருதானைக்கு  செல்ல வேண்டும்  ஆகவே அலுவலகத்துக்கு முன்னால் நின்று கொண்டு (பௌத்தாலோக மாவத்தை) தும்முல்ல சந்தி வழியாக ஒரு வாகனம் வாராதா என்ற எதிர்பார்போடு மூன்று மணித்தியாலங்கள்  அந்த இடத்திலேயே கழிந்தது..

நம்பிக்கை இழக்காமல் இருவரும் காத்திருந்தோம்.(அந்த நேரத்துக்கு நடந்து சென்றிருந்தாலும் மருதனைக்கு சென்றடைந்திருக்கலாம் எண்ண செய்றது தூக்க கலக்கம் வேறு முடியல ) .
எங்கள் எதிர்பார்ப்பு வீண் போகவில்லை ,,,, நெஞ்சில பால் வார்த்தது போல் இருந்தது... ஆமாம் தொலைவில் ஒரு பஸ் வண்டி வந்து கொண்டிருந்தது, எப்படியும் அந்த பஸ்ஸில் ஏறிடலாம் என்ற நம்பிக்கையில் காத்துகொண்டிருந்து பஸ் ஓரளவுக்கு எங்களை நெருங்கும் போது நண்பர் மரூஸ் அந்த பஸ் வண்டியை நெருங்கி நிறுத்துவதற்காக கை அசைத்தார் .......
பஸ் வந்தது ... எங்களை நெருங்கியதும் எங்களை தூக்கி வாரி போட்டது !!! ஆமாங்க வந்தது போது போக்குவரத்து பஸ் இல்லங்க.அது ""சிறைக்கைதிகளை ஏற்றி செல்லுகின்ற பஸ் வண்டி""..
அந்த பஸ் ஓட்டுனர் பஸ்ஸை  கொஞ்சம் மெதுவாக செலுத்தி எங்களை பார்த்து ஒரு புன்முறுவல் செய்தார்... அந்த புண் முறுவல்.. '' தம்பிகளா என்னடா உள்ள போக ஆசையா இருக்கா என்னு கேட்டது போலவே இருந்தது" ..
  அம்மாடியோவ் ...வந்த தூக்கம் எங்க போனது என்றே தெரியல ..பிறகும் தொடர்ந்தும் காந்திருந்தோம் பலனில்லை, எண்ண செய்றது நம்ம நடை ராஜ சர்வீஸ் மூலமாக சிரித்துக்கொண்டே வீடு போய் சேர்ந்தோம்.

இப்ப நினைச்சாலும் சிரிப்பு பிச்சுகுதுங்க................( இந்த விடயம் இதுவரைக்கும் எங்கள் அறிவிப்பாளர்கள் யாருக்கும் தெரியாது) .  

Wednesday, November 3, 2010

உங்களுக்கொரு வேலை வச்சிருக்கன்......

பதிவிடாமல் பைத்தியம் பிடிக்கிறது, அதே நேரம் எதை பதிவிடுவதென்று  யோசித்தால் தலை வெடிக்கிறது. எப்படித்தான் இந்த பதிவர்கள் எல்லோரும் ஒவ்வொரு  நாளும் பதிவிடுரான்களோ  தெரியல!!
எனக்கொரு வேலை தாறீங்களா அதாவது .,, எந்த விஷயத்தை பற்றி பதிவிடலாம் என்று சொல்லுங்களன் ப்ளீஸ்.

இதுதான் இன்றைய என் பதிவு...
இதன் மூலமாக ''மிக குறைந்த வசனங்களை  கொண்ட பதிவு'' என்ற பெருமையும் எனக்கு கிடைக்கலாம். என்று எதிர்பார்கிறேன்.
அத்தோட எதை பற்றி பதிவிடலாம் என்று வருபவர்கள் எல்லோரும் சொல்லிட்டுத்தான் போகணும் சொல்லி போட்டன்.

இந்த பதிவுக்கு வாக்களித்து விட்டு போங்க என்று கேட்டால்... பக்கத்துல  ஏதாவது கிடந்தால் அதை தூக்கி என் மூஞ்சி மேலையே வீசுவீங்க என்றும் எனக்கு தெரியும் , ஆகவே நானாக கேட்க வில்லை , (உங்க பெரிய மனசும் எனக்கு தெரியும்.  நீங்க ஒட்டு குத்திட்டுதான் அடுத்த வேலையைப் பார்பீங்க.... )

Wednesday, October 6, 2010

தமிழர்களே.......!!! தமிழுக்கு ஏதாச்சும் நடக்க விடலாமா?

தமிழுக்கு அமுதென்று பேர் - இன்பத் தமிழ் 
எங்கள் உயிருக்கு நேர்
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த இலக்கிய மரபைக் கொண்டுள்ள தமிழ் மொழி, தமிழர்களின் தாய்மொழி.
தற்போது வழக்கில் இருக்கும் ஒருசில செம்மொழிகளில் ஒன்றாகும் 
தென்னிந்தியாவில் தமிழ் நாட்டிலும் இலங்கையிலும், சிங்கப்பூரிலும் அதிக அளவில் பேசப்படும் இம்மொழி, துபாய், மலேசியா, தென்னாபிரிக்கா, மொரீசியஸ், பிஜி, ரீயுனியன், டிரினிடாட் போன்ற பல நாடுகளிலும் சிறிய அளவில் பேசப்படுகிறது. ஒரு மொழியை, தாய்மொழியாகக் கொண்டு பேசும் மக்களின் எண்ணிக்கை அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்ட மொழிகளின் பட்டியலில், தமிழ், பதினெட்டாவது  இடம் தமிழுக்குத்தான். 


இதெல்லாம் எல்லோரும் அறிந்த விடயம்தான் ஆனால் தமிழ் மொழிக்கு எதிர்காலத்தில் என்ன நடக்கப்போகிறது என்ற கவலையும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது, காரணம் உலகெங்கிலும் அதிகமான தமிழர்கள் இருந்தாலும் அநேகமானவர்கள் இப்போது தமிழிலே உரையாடுவதைக் குறைத்துக்கொண்டு  வருகிறார்கள் இதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும் அதில் ஒரு சிலவற்றை தவிர்த்துக்கொள்ளலாம். இருந்தும் நாகரிக மோகம் காரணமாக சில வெளிநாடுகளில் உள்ளவர்கள் தமிழை பேச வெட்கப்படுகிறார்கள். 
இந்த போக்கானது தமிழுக்கும் தமிழர்களுக்கும் அவ்வளவு ஆரோக்கியமானதல்ல . இது ஒரு புறமிருக்க எதிர்காலத்தில் தமிழ் மொழி சந்திக்கவிருக்கின்ற இன்னுமொரு முக்கிய பிரச்சனை பற்றியும் இந்த இடத்தில் நாங்கள் பேசித்தான் ஆக வேண்டும் , அதாவது தற்போதைய ஒரு சில  எழுத்தாளர்கள் கையில் எடுத்திருக்கும் ''வட்டாரத்தமிழ்'' வழக்கு..
அதாவது ஒரு மொழியின் வளர்ச்சியானது அந்த மொழியை நேசிக்கின்ற ,சுவாசிக்கின்ற படைப்பாளிகள் அல்லது எழுத்தாளர்களது கையிலே அதிகம் தங்கி  இருக்கிறது. அப்படிப்பட்ட பொறுப்பு வாய்ந்த இடத்தில் இருக்கும் எழுத்தாளர்கள் அண்மைக்காலமாக கையாண்டு வருகின்ற இந்த ''வட்டார வழக்கு'' அவ்வளவு காத்திரமானது என்று சொல்வதற்கில்லை .
அதாவது தமிழை வட்டார வழக்கின் அடிப்படையில் பிரிக்ககூடாது ,அதேவேளை இந்த எழுத்தாளர்கள் தங்களது படைப்புக்களை வட்டார சொற்களை  வைத்துக்கொண்டு தங்களது எண்ணங்களையும் நூல்களையும் வெளியிடக்கூடாது. 
இங்கே மண்வாசனையுடன் வெளிவருகின்ற நூல்களையும் படைப்புக்களையும் பற்றி குறைகூறவில்லை என்பதை கவனித்திருப்பீர்கள் என நம்புகின்றேன். 
  
இந்த போக்கு தொடர்ந்து சென்றால் பல்வேறு சிறப்புக்களை கொண்ட நமது தமிழ் மொழியானது பல் வேறு கூறுகளாக பிரிந்து செல்லக்கூடிய வாய்ப்பு இருக்கிறது அதன் பின்னர் எந்த வட்டாரத்தின் தமிழ் சிறந்த தமிழ் என்ற தேவையில்லாத விவாதங்களும் சண்டைகளும் தலைதூக்கக்கூடிய சாத்தியம் இருக்கிறது. காலப்போக்கில் தமிழ் மொழி பிழையான மொழி வழக்கை பின்பற்றக்கூடிய அபாயமும் இருக்கிறது.
எனவே தமிழ் சிறக்க பாடுபடும் அன்பான படைப்பாளர் பெருமக்களே உங்கள் படைப்புக்களில் இந்த வட்டார தமிழ் வழக்கை பயன்படுத்துவது தொடர்பாக கொஞ்சம் சிந்தியுங்கள் , தமிழை பிழையில்லாமல் எதிகால சந்ததியினருக்கு விட்டு செல்வோம். 


எனக்கும் தமிழ்தான் மூச்சு
ஆனால் அதைப் பிறர்மேல் விட மாட்டேன்.  
 
''தேமதுரத் தமிழோசை 
உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்.'' 

 

Monday, October 4, 2010

பதிவர்கள் அனைவரும் கட்டாயம் பாருங்கள்.

எனக்கு பிடித்த  சில வரவேற்பு பதாதைகள்... 
பதிவர்கள் தங்களின் வலைப்பூக்களுக்கு சூட்டி யுருக்கின்ற சில நாம காரணக்ளும் வரவேற்பு வாசகங்களும்  இங்கே  பதிவாகிறது .
 கண்டிப்பின்றி கனிவோடு பாடம் நடத்தும் வாத்தியாரின் வகுப்புக்கு நீங்களும் ஒரு முறை வந்து பாருங்கள்.... 

---------------------------------------------------------------------------------------------------------------



------------------------------------------------------------------------------------------------------------------------------
 
ஹலோ பிரதர், வந்தமா, படிச்சமா ''கமென்ட் அடிச்சமான்னு இருக்கனும், அதவிட்டுப்புட்டு ஏதாவது எடக்கு பண்ணா, ங்கொக்காமக்கா அப்புறம் கெஜட்ல இருந்து பேர எடுத்துடுவேன் ஆமா! நான் மட்டும் அப்பப்போ ஏதாவது ஏடாகூடம் பண்ணுவேன் முடிஞ்சா பாத்து எஞ்சாய் பண்ணுங்க!
தொழிலதிபர்கள், கூடை வெச்சிருக்கவன், பஞ்சுமுட்டாய் விக்கிறவன், பாலிடிக்ஸ் பண்றவன், கடஞ்சொல்லி பீடி குடிச்சவன் எல்லாம் அப்படியே ஒன் ஸ்டெப் பேக் மேன்!
ஓக்கே...ஆல் யங் கேர்ள்ஸ், ரெடியா? வாங்க பூ மிதிக்கப் போவோம், ஸ்டார்ட் மியூசிக்!''

இப்பிடிதாங்க  மியூசிக் ஸ்டார்ட் பண்ணுது ...  
-=======================================================================
''சாதி, மதம் பார்க்காமல், வரதட்சணை கொடுக்க மாட்டேன்/வாங்க மாட்டேன் என்று திருமணம் செய்து கொள்ள ஆசைப்படும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் எனது தளத்தில் இலவச விளம்பரம் தருகிறேன்!, உங்கள் புரோபைலை எனது மெயிலுக்கு அனுப்பலாம் arunero@gmail.கம எவ்ளோ காசு கொடுத்தாலும் சாதிவிளம்பரம் முடியாது!''

எவ்வளவு பரந்த மனசுங்க இவருக்கு,, அது சரி வால் பையன் வால் பையன் என்னு சொல்றாங்களே இவருக்கு வால் இருக்கிறத நான் பாக்கவே இல்லையே நீங்க பார்த்தீங்களா? 
=======================================

இப்படி உங்களை கவர்ந்த விடயங்களையும் சொல்லிட்டு போங்க . இப்பதான் ஆரம்பிச்சிருக்கு ,, இன்னும் தொடரும். 

பதிவர்கள் அனைவரும் கட்டாயம் பாருங்கள்.