ad

Monday, February 22, 2010

வெற்றி பெற்றேன்

கடந்த சனிக்கிழமை நாள் முழுவதும் அடியேனுக்கு ஒரு பயனுள்ள பொழுதாகவே அமைந்திருந்தது ,


பொழுது போக்கு சாதனங்கள் சிலவேளைகளில் வெறுமனே பொழுதை 'போக்கும்' சாதனங்களாக  அமைந்துவிடுவதுமுண்டு அனால் சில சாதனங்கள்  அரிதாக நல்ல பல நிகழ்சிகளை நேயர்களுக்கு தருவதுண்டு அந்த வகையில் அன்றைய தினம் நான் ரசித்த இரண்டு நிகழ்ச்சிகள் பற்றி இந்த பதிவில் மனம்விட்டு பேச போகிறேன்......
 
முதலாவது ......


காலைவேளையில் தேசிய தொலைக்காட்சி (நேத்ரா T.V.) இல் ஒளிபரப்பான "புன்னகை" நிகழ்ச்சி................

இடையிடையே இந்த நிகழ்ச்சியை ரசிக்க சந்தர்ப்பம் கிடைப்பதுண்டு அந்தவகையில் அன்றைய தினம் நிகழ்ச்சியில் பேசப்பட்ட 'சொல் புதிது பொருள் புதிது ' என்ற அம்சத்தினூடாக தாய்மொழி பற்றியும் மொழிகளின் பயன்பாடு பற்றியும் துறைசார்ந்தவர்கள் கலந்து கொண்டு அறிய கிடைக்காத பல அறிய வேண்டிய விடயங்களை பகிர்ந்திருந்தார்கள் அவர்களுக்கு நன்றி கலந்த பாராட்டுக்கள்  ,அதேவேளை திருகோண மலையிலிருந்து  தொலைபேசி மூலமாக தனது கருத்துக்களை தெரிவித்த பெரியவர் ஒருவர் தொட்டு சென்ற விடயங்களில் என்ன மிகவும் சிந்திக்க வைத்த விடயம், இப்பொழுது ஊடகங்களில் பயன்படுத்தப்படும் மொழி! குறிப்பாக உச்சரிப்பு.

நிச்சயமாக அவர் சொன்ன விடயங்கள் அனைத்தும் மறுக்காமல் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டிய உண்மைகள்.
 
இப்பொழுது ஒலி , ஒளி ஊடகங்களில் பணி  புரிபவர்கள் ஒரு சிலரது உச்சரிப்பை பற்றி நாட்டில் சச்சரவுகள் உண்டு..... ஆனால் இதை பற்றி கவலைப்படுவதற்கு சிலருக்கு நேரம் இருப்பதில்லையோ தெரியவில்லை . திருத்துவதை சிலர் தங்களை வருத்துவதாக நினைக்கிறார்கள் என்று மூத்த ஊடகவியலார்கள் சொல்ல கேட்டிருக்கிறோம். அவ்வாறு இல்லாமல் சரியான உச்சரிப்புக்களை கற்றுக்கொள்ள முயற்சிக்கலாம் , "பயிற்சியும் முயற்சியும் இருந்தால் இந்த வானத்தின் கீழ் எதுவும் சாத்தியம்"...................................
 

அடுத்த நிகழ்ச்சி சனிக்கிழமை இரவு நேரத்தை இதமாக்கிய

வெற்றி வானொலியின் "வெற்றி பெற்றவர்கள் ".
ஊடகத்துறையில் சாதித்த சாதனையாளர்களை அழைத்து வந்து அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் ஒரு அருமையான நிகழ்ச்சி .


உண்மையில் தனது இரண்டு ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவேற்றி தனது மூன்றாவது ஆண்டிலும் வெற்றி நடைபோட ஆரம்பித்திருக்கும் வெற்றி வானொலிக்கு மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.

வெற்றி FM வானொலியை ஆரம்பம் முதலே நான் தூரத்திலிருந்து துப்பறிந்து வருகிறேன்,,,,,, அதன் ஒவ்வொரு நகர்வுகளும் சிறப்பானதாக இருக்கிறது அதுமட்டுமல்லாது
" எதை சொல்வது என்பது அறிவு ,
எப்படி சொல்வது என்பது உத்தி"

அந்த உத்தியை நன்றாகவே கற்று வைத்திருக்கிறார் வானொலியின் முகாமையாளர் சகோதரர் லோஷன். அவருக்கும் இந்த இடத்தில் உளங்கனிந்த வாழ்த்துக்கள்.
 
இனி நிகழ்ச்சியின் ஒரு சில பக்கங்கள்...

ஆரம்ப நிகழ்ச்சியே அபாரமாக அருமையாக அமைந்திருந்தது ...

காரணம் அன்றைய தினம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மூத்த              ஒலி
ஒளி பரப்பாளர் செல்வி சற்சொரூபவதி நாதன் (மிஸ் நாதன்).

செய்தி சொல்வதை  இவரிடம் நிறைய பேர் கற்றுக்கொள்ள வேண்டும் சற்சொரூபவதிக்கு பதிலாக இவருக்கு "சொற்"சொரூபவதி என்று வைத்திருக்க வேண்டும் .அந்த அளவுக்கு அழுத்தம் திருத்தமாக செய்திகளை சொல்வார்.(இவரிடமும் அடியேன் பயிற்சி பெற்றது அடியேனின் பாக்கியம்).



செல்வி சற்சொரூபவதி நாதன் (மிஸ் நாதன்). தனது ஏராளமான அனுபவங்களை பகிர்ந்திருந்தார்... ஒரு சில கசப்பான அனுபவங்களையும் இனிப்பாக சொல்லி முடித்தார். அதுமட்டுமல்லாமல் நிறைய தடைகளை தாண்டி அவர் பல சாதனைகளை புரிந்து விருதுகள் பலவற்றையும் பெற்றிருக்கிறார் ,அதுமட்டுமல்லாமல் ஏராளமான சவால்களுக்கு மத்தியில்
1989 தொடக்கம் 1991 வரை ஆங்கில சேவையின் பதில் இயல்நாடக கட்டுப்பாட்டாளராகவும்,பின்னர் செய்தி ஆசிரியராக 1991தொடக்கம் 1993 வரை முறைசாரா கல்விப்பிரிவின் வான் பல்கலைக்கழக பொறுப்பாளராகவும் கடமையாற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இறந்த கால பக்கங்களின் ஈரத்திலிருந்துதான் நிகழ்காலத்துக்கு நீர் கிடைக்கிறது.


எனவே புகழின் உச்சிக்கு போன ஒவ்வொருவரும் நிஜங்களின் நிர்வாண ஊர்வலத்தில் கைகளால் மறைத்து கொள்ளாமல் கலந்து கொள்ள வேண்டும் என்பதே எல்லோரது எதிர்பார்ப்புமாகும்.

எனவே இது போன்ற நிகழ்ச்சிகள் எதிர்காலத்திலும் வரவேற்கப்படும் ,மட்டுமல்லாமல் இந்த நிகழ்ச்சிகளின் உருவாக்கத்தில் பங்கு பற்றிய அனைவரது உழைப்பும் வெற்றி பெற்றுள்ளது என்பது உண்மை. .



   " தன்னம்பிக்கை உள்ளவனே உண்மை சொல்வான்"

                                                                                                                                               கே.பிரபா
இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம்

19 comments:

சப்ராஸ் அபூ பக்கர் said...

செல்வி சற்சொரூபவதி நாதன் அவர்களிடம் பயிற்சி பெற்றவர்களில் நானும் ஒருவன். குறிப்பாக செய்தி வாசிப்பு. அதே போல நான் அறிவிப்பாளனாக ஆசை கொண்ட நாள் முதல் ஆர்வம் கொண்டது அந்நாள் சூரியன் வானொலி அறிவிப்பாளர்களின் நிகழ்ச்சிகளை ரசிப்பதற்கு. அந்த வகையில் லோஷன் அண்ணாவின் குரலையும், நிகழ்ச்சிகளையும் ஆரம்பம் தொட்டே ரசித்து வருகிறேன். பொருத்தமான ஒரு நபரின் கையில் தான் வெற்றி வானொலியின் முகாமைத்துவம் கிடைத்திருக்கிறது என்பதில் மட்டற்ற மகிழ்ச்சி. நிகழ்வினைப் பகிர்ந்து கொண்ட அறிவிப்பாளர் உங்களுக்கு நன்றிகளும், வாழ்த்துக்களும் பிரபா......

Prapa said...

நிச்சயமாக சப்ராஸ் ,, உங்கள் ஞாபங்களையும் மீட்டியதற்கு நன்றி.

ARV Loshan said...

நன்றிகள் பிரபா..
நீங்கள் தந்த பாராட்டுக்கள் எங்கள் இந்த நிகழ்ச்சிக்குக் கிடைத்த வெற்றி எனவே கருதுகிறேன். நல்ல வரவேற்பு இந்த நிகழ்ச்சிக்குக் கிடைத்துள்ளது.

ஒரு வானொலியானது சகலருக்கும் எதோ ஒரு பயனையாவது கொடுக்க வேண்டும். மக்களுக்காக நிகழ்ச்சிகள் வழங்குவது அவர்களை செம்மைப் படுத்த என்பதில் எனக்கும் என் குழுவினருக்கும் நம்பிக்கை இருக்கிறது.

இந்த சிரேஷ்ட ஒலிபரப்பாளர்கள், ஊடகவியலாளர்கள் எமக்கு வழங்கவேண்டியவை இன்னும் பல இருக்கின்றன. அதற்காகவே இந்நிகழ்ச்சியை ஆரம்பித்தோம்.
கிடைத்துள்ள வரவேற்பு இன்னும் உற்சாகம் தந்துள்ளது.

சப்ராஸ் உங்கள் பாராட்டுக்கும் நன்றிகள்..

Prapa said...

// LOSHAN said...
நன்றிகள் பிரபா..
நீங்கள் தந்த பாராட்டுக்கள் எங்கள் இந்த நிகழ்ச்சிக்குக் கிடைத்த வெற்றி எனவே கருதுகிறேன். நல்ல வரவேற்பு இந்த நிகழ்ச்சிக்குக் கிடைத்துள்ளது.//

நல்லவை என்றுமே வரவேற்பை பெறும் தொடரட்டும் உங்கள் பணி

அண்ணாமலையான் said...

வாழ்த்துக்கள்.. பிரபா

Prapa said...

/அண்ணாமலையான் said...
வாழ்த்துக்கள்.. பிரபா
//

varavukku nandringo....

Subankan said...

//இறந்த கால பக்கங்களின் ஈரத்திலிருந்துதான் நிகழ்காலத்துக்கு நீர் கிடைக்கிறது. //

ரசித்த வரிகள். அடிக்கடி எழுதுங்களேன் :)

SShathiesh-சதீஷ். said...
This comment has been removed by the author.
SShathiesh-சதீஷ். said...
This comment has been removed by the author.
SShathiesh-சதீஷ். said...
This comment has been removed by the author.
SShathiesh-சதீஷ். said...

சந்தோசம் அண்ணா. இன்னொரு ஊடகத்தில் இருந்து எங்கள் நிகழ்ச்சிக்கு பாராட்டியமைக்கு நன்றிகள். நீங்கள் சொன்னது போல வெற்றியின் வெற்றிக்கு காரணம் எங்களை சரியாக வழி நடத்தும் லோஷன் அண்ணா தான்.

சீமான்கனி said...

நல்ல பகிர்வு வாழ்த்துகள் பிரபா .....

Prapa said...

//Subankan said...
//இறந்த கால பக்கங்களின் ஈரத்திலிருந்துதான் நிகழ்காலத்துக்கு நீர் கிடைக்கிறது. //

ரசித்த வரிகள். அடிக்கடி எழுதுங்களேன் :)
//

நிச்சயமாக சுபாங்கன்
உங்களை போன்றவர்களின் அன்போடு தொடரலாம்...
வருகைக்கு நன்றி . அடிக்கடி வாங்க.

Prapa said...

//SShathiesh said...
சந்தோசம் அண்ணா. இன்னொரு ஊடகத்தில் இருந்து எங்கள் நிகழ்ச்சிக்கு பாராட்டியமைக்கு நன்றிகள். நீங்கள் சொன்னது போல வெற்றியின் வெற்றிக்கு காரணம் எங்களை சரியாக வழி நடத்தும் லோஷன் அண்ணா தான்.
//

திறமையை வரவேற்பதில் எந்த விதமான சங்கடமும் அடியேனுக்கு இலை தம்பி சதீஷ்.....
உங்கள் அனைவரது திறைமைகளையும் அடியேன் அறிவேன் ,,வாழ்த்துக்கள்.
தொடர்ந்தும் துப்பறிவேன்... ஹா ஹா..

Prapa said...

//seemangani said...
நல்ல பகிர்வு வாழ்த்துகள் பிரபா .....//



வருகைக்கும் வாழ்த்துக்கும் ரொம்ப நன்றி நண்பரே....

கலா said...

பிரபா! உங்கள் வானொலிகள் நான் கேட்பதில்லை!
இருந்தாலும்.... உங்கள் பெருந்தன்மைக்கு
{மற்றவர்களைப் பற்றி பெருமிதமாய்..}
மிக்க நன்றி.

வயதோ,படிப்போ,அறிவோ சில நேரங்களில்
உதவ மறுத்தாலும்{சரியான வழியில்}
ஆனால்....அனுபவம் !!
தவறாமல் பிசகாமல் வழி நடத்திச் செல்லும்
அப்படியானவர்களின் உறவு உங்களைப் போல்
வளர்ந்து வருபவர்களுக்கு கட்டாயம் தேவை.
லோஷனுக்கும் என் நன்றி.
நல்ல பகிர்வு நன்றி பிரபா!!

Anonymous said...

சிறந்த பகிர்வு பிரபா..

Prapa said...

//கலா said...
பிரபா! உங்கள் வானொலிகள் நான் கேட்பதில்லை!
இருந்தாலும்.... உங்கள் பெருந்தன்மைக்கு
{மற்றவர்களைப் பற்றி பெருமிதமாய்..}
மிக்க நன்றி.

வயதோ,படிப்போ,அறிவோ சில நேரங்களில்
உதவ மறுத்தாலும்{சரியான வழியில்}
ஆனால்....அனுபவம் !!
தவறாமல் பிசகாமல் வழி நடத்திச் செல்லும்
அப்படியானவர்களின் உறவு உங்களைப் போல்
வளர்ந்து வருபவர்களுக்கு கட்டாயம் தேவை.
லோஷனுக்கும் என் நன்றி.
நல்ல பகிர்வு நன்றி பிரபா!!
///

சரியாக சொன்னீங்க கலா....
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் பல கோடி...

Prapa said...

// தமிழரசி said...
சிறந்த பகிர்வு பிரபா..
//
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள்
அரசியாரே..