ad

Wednesday, August 26, 2009

உங்களால் முடியும் !!!!! எழுந்து கொள்ளுங்கள்.

இது ஒரு சீரியஸ் மேட்டர் .................
"இளைய பாரதியின்" பட்டின பாலையில் கண்டெடுத்த தத்துவம்.

அனாதையாகும் புகழ்

உங்களின் பிரிய உயிரை
பிரிய மனமின்றி பிரிந்து
சடமாய் சரியும் கணங்கள்.

இதுவரை நீங்கள் காவல்காத்த
உங்களின் புகழ் அனாதையாகும் .
சூதாட்ட விடுதியில் போதையின் உச்சத்தில்
சிவப்பேறிய கண்களுடன் சூதாடும்
முரடர்களிடையே விடப்பட்ட
உங்கள் காதலியை போல .

நீங்கள் நிதமும்
மெருகேற்றி...
பிரகாசிக்க செய்த பெயரை
உங்கள் மரணத்திற்கு பின்
எங்கே ஒளித்து வைப்பீர்கள் ?

நோவாவின் பேழைக்குள்ள ?
கல்வெட்டு மொழிகளிலா ?
பல்கலைக்கழக நூலகங்களின்
தடித்த தத்துவ புத்தகங்களிலா ?
ராஜ கோபுரங்களின் கலச மின்னலிலா?
எங்கே?
எங்கே?

ஒரு ஓவியனின் தூரிகையோ
ஒரு சிற்பியின் உளியோ
ஒரு கவிஞனின் பேனாவோ
ஒரு சங்கீத காரனின் பாடலோ
உங்களை நிறுவி விடாது.

மரண பெருங்கடலுக்கு
அப்பால் விரியும்
சரித்திர மணல் வெளியில்
உங்கள் பெயரை எழுத
உங்கள் சுட்டுவிரலால் மட்டுமே முடியும்.
காற்று கலைக்க முடியாத
சத்தியத்தின்
ஈரப்பதம் உடையது அது.

25 comments:

SN said...

http://www.kumamechanics.webs.com/

கலையரசன் said...

சூப்பர் தல...

தேவன் மாயம் said...

இறந்தபின்......நல்ல சிந்தனை!! அறியத்தந்ததற்கு நன்றி!!

சப்ராஸ் அபூ பக்கர் said...

////ஒரு ஓவியனின் தூரிகையோ
ஒரு சிற்பியின் உளியோ
ஒரு கவிஞனின் பேனாவோ
ஒரு சங்கீத காரனின் பாடலோ
உங்களை நிறுவி விடாது.////


அருமையாக இருந்தது... வாழ்த்துக்கள்...

தேவன் மாயம் said...

voted in tamilmanam

க. பாலாஜி said...
This comment has been removed by the author.
பிரபா said...

//சூப்பர் தல...//

சொல்லுங்கப்பு ...... இனியும் யோசிக்க வேணாமா ?

க. பாலாஜி said...

//உங்களின் பிரிய உயிரை
பிரிய மனமின்றி பிரிந்து
சடமாய் சரியும் கணங்கள்.//

ஆரம்ப வரிகளே அருமையாக உள்ளது.. நல்ல இடுகை...தாங்கள் இன்னும் என் பாளொயர் லிஸ்டில் இணையவில்லையா...

பிரபா said...

//இறந்தபின்......நல்ல சிந்தனை!! அறியத்தந்ததற்கு நன்றி!!,voted in tamilmanam.

நன்றி தலைவரே!

பிரபா said...

//அருமையாக இருந்தது... வாழ்த்துக்கள்//

வாங்க ஸப்ராஸ் ....

வால்பையன் said...

மெய்யாலுமே சீரியஸ் மேட்டர் தான்!

பிரபா said...

//ஆரம்ப வரிகளே அருமையாக உள்ளது.. நல்ல இடுகை...தாங்கள் இன்னும் என் பாளொயர் லிஸ்டில் இணையவில்லையா...//

ஏற்கனவே தோள் கொடுத்த ஞாபகத்தில் இருந்தேன் , மன்னிக்கவும்,
இப்பொழுது தோள் கொடுத்தாச்சு ....

பிரபா said...

//மெய்யாலுமே சீரியஸ் மேட்டர் தான்!//

அப்பிடி என்கிறீங்க ......

ஹேமா said...

பிரபா,வந்தேன்.நீங்களே கேள்வியும் கேட்டு பதிலும் தந்திட்டீங்க.
உண்மைதான் நாங்கள் செய்யும் நற்செயல்களுக்குள் இறந்தபின்னும் நாம் வாழ்ந்துகொண்டிருப்போம்.

பிரபா said...

//பிரபா,வந்தேன்.நீங்களே கேள்வியும் கேட்டு பதிலும் தந்திட்டீங்க.
உண்மைதான் நாங்கள் செய்யும் நற்செயல்களுக்குள் இறந்தபின்னும் நாம் வாழ்ந்துகொண்டிருப்போம்.//

வந்துட்டீங்களா ! பாருங்க உங்கள் வருகையால் நம்ம வலைப்பூ எவ்வளவு வனப்பாகியிருக்கிறது....

வாய்ப்பாடி குமார் said...

நன்றி பிரபா , அவர்களே.

நாம் அடிக்கடி வாசிப்பது மட்டுமே அதிகம் என்பதாலும் , அதுவும் அல்லாமல்
மார்க்கெட்டிங் தொழில் என்பதாலும் கிடைக்கும் நேரங்களில் பதிலும் , இடுகைகளும் அளித்து வருகிறோம்.

அதுவும் அல்லாமல் வாமுகோமு அவர்களுக்கான வலையையும் நாமே நிர்வகித்துக்கொண்டுள்ளோம்.

கதை,கட்டுரை தவிர்த்து பிற சமாச்சாரங்களுக்காக தனியாக வாய்ப்பாடிகுமார்
என்ற பெயரில் தனியே தரலாம் என்று வலை ஒன்றை ஆரம்பித்துள்ளோம்.

மற்றபடி உலக வானொலிகளையும், தொலைக்காட்சிகளையும் தேடுவது அதுவும் தமிழ் நிலையங்களை தேடுவது என்பது நமது வழக்கம்.

தென்றலை நாங்கள் தமிழ் நாட்டின் ஈரோடு மாவட்டத்தில் சில நேரங்களில்
குறிப்பாக கோடைகாலம் முடிந்து குளிர்காலம் ஆரம்பம் ஆகும் வேலைகளில்
கேட்டுள்ளோம்.

மேலும் நாங்கள் கேள்விப்பட்டது , இலங்கையின் உயரமான மலையின் மீது வானொலி , தொலைக்காட்சி நிலையமும் அமைத்து தமிழ் நாட்டுக்கும்
ஒலி,ஒளிபரப்பை அளிக்க உள்ளனர் என்று , இது உண்மையா என்பதை நமக்கு
அளிக்கவும் .

மற்றுமொரு முறை நன்றி நண்பரே.

seemangani said...

//உங்கள் மரணத்திற்கு பின்
எங்கே ஒளித்து வைப்பீர்கள் ?//

யோசிக்க வேண்டிய விஷயம்....


அருமையா இருக்கு நண்பா....

sakthi said...

ஒரு ஓவியனின் தூரிகையோ
ஒரு சிற்பியின் உளியோ
ஒரு கவிஞனின் பேனாவோ
ஒரு சங்கீத காரனின் பாடலோ
உங்களை நிறுவி விடாது

அருமையான வரிகள் பிரபா

ஹேமா said...

//பிரபா...வந்துட்டீங்களா ! பாருங்க உங்கள் வருகையால் நம்ம வலைப்பூ எவ்வளவு வனப்பாகியிருக்கிறது...//

பிரபா நீங்க மட்டும் வராதீங்க எஙகட பக்கம்.உப்புமடச்சந்திக்கும் வரலாம் கவிதை பிடிக்காட்டி.சரியாக் குளிருது.இருக்கிறதே குளிர் நாட்டில.உதில நீங்களும் வேற...

பிரபா said...

//நன்றி பிரபா , அவர்களே.

நாம் அடிக்கடி வாசிப்பது மட்டுமே அதிகம் என்பதாலும் , அதுவும் அல்லாமல்
மார்க்கெட்டிங் தொழில் என்பதாலும் கிடைக்கும் நேரங்களில் பதிலும் , இடுகைகளும் அளித்து வருகிறோம்.

அதுவும் அல்லாமல் வாமுகோமு அவர்களுக்கான வலையையும் நாமே நிர்வகித்துக்கொண்டுள்ளோம்.

கதை,கட்டுரை தவிர்த்து பிற சமாச்சாரங்களுக்காக தனியாக வாய்ப்பாடிகுமார்
என்ற பெயரில் தனியே தரலாம் என்று வலை ஒன்றை ஆரம்பித்துள்ளோம்.

மற்றபடி உலக வானொலிகளையும், தொலைக்காட்சிகளையும் தேடுவது அதுவும் தமிழ் நிலையங்களை தேடுவது என்பது நமது வழக்கம்.

தென்றலை நாங்கள் தமிழ் நாட்டின் ஈரோடு மாவட்டத்தில் சில நேரங்களில்
குறிப்பாக கோடைகாலம் முடிந்து குளிர்காலம் ஆரம்பம் ஆகும் வேலைகளில்
கேட்டுள்ளோம்.

மேலும் நாங்கள் கேள்விப்பட்டது , இலங்கையின் உயரமான மலையின் மீது வானொலி , தொலைக்காட்சி நிலையமும் அமைத்து தமிழ் நாட்டுக்கும்
ஒலி,ஒளிபரப்பை அளிக்க உள்ளனர் என்று , இது உண்மையா என்பதை நமக்கு
அளிக்கவும் .

மற்றுமொரு முறை நன்றி நண்பரே.//

முதலில் வருகைக்கு நன்றி நண்பா ,
தென்றலை நீங்கள் சொன்ன காலத்தில கேட்பது எமக்கும் மிக மகிழ்ச்சி ...
அதேபோல நீங்கள் சொன்ன கோபுரம் "கொக்காவில் "பகுதியில் அமைக்கப்பட்டுகொண்டிருக்கிறது ...விரைவில் அதன் மூலம் தமிழ்நாட்டிலும் ஒழி ஒழி பறப்புக்களை பெர்டுகொள்ள கூடியாதாக் இருக்கும் என நம்புகிறேன்,,,
அடிக்கடி உங்கள் கருத்துக்களை தெரியப்படுத்துங்கள்.

பிரபா said...

//யோசிக்க வேண்டிய விஷயம்....


அருமையா இருக்கு நண்பா....//


எல்லோரும் யோசிக்க மறுக்கிறார்கள் நண்பா அதுதான் கவலையான விடயம்...

பிரபா said...

//ஒரு ஓவியனின் தூரிகையோ
ஒரு சிற்பியின் உளியோ
ஒரு கவிஞனின் பேனாவோ
ஒரு சங்கீத காரனின் பாடலோ
உங்களை நிறுவி விடாது

அருமையான வரிகள் பிரபா///

நன்றி சக்தி வருகைக்கு.....

பிரபா said...

//பிரபா நீங்க மட்டும் வராதீங்க எஙகட பக்கம்.உப்புமடச்சந்திக்கும் வரலாம் கவிதை பிடிக்காட்டி.சரியாக் குளிருது.இருக்கிறதே குளிர் நாட்டில.உதில நீங்களும் வேற...///


ஆகா புரிஞ்சிடுச்சு....
/

வனம் said...

வணக்கம் பிரபா

வந்துட்டேன், வந்துட்டேன்

\\சரித்திர மணல் வெளியில் \\

அது எப்படி ஐயா ரோம்ப சரியாக கூறியுள்ளீர் சரித்திரம் என்பது மணல் வெளிதான். அவரவருக்கு விருப்பம்போல் கலைத்தும், அழித்தும் தனக்கு தேவையான உருவத்தை செய்துகொள்ளளாம்

இராஜராஜன்

பிரபா said...

// வனம் said...
வணக்கம் பிரபா

வந்துட்டேன், வந்துட்டேன்

\\சரித்திர மணல் வெளியில் \\

அது எப்படி ஐயா ரோம்ப சரியாக கூறியுள்ளீர் சரித்திரம் என்பது மணல் வெளிதான். அவரவருக்கு விருப்பம்போல் கலைத்தும், அழித்தும் தனக்கு தேவையான உருவத்தை செய்துகொள்ளளாம்

இராஜராஜன்//

நன்றி ஐயா வருகைக்கும் கருத்துக்கும்.