ad

Wednesday, January 13, 2010

"தலைவருக்கான " என் பகிரங்க மடல்....தலைவரே நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் ? உங்களை நான் உடனடியாக சந்திக்க வேண்டும் ...
சந்தர்ப்பம் கிடைக்குமா?
என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை தலைவரே...!
எவ்வளவு காலத்துக்குத்தான் நான் பொறுத்துக்கொள்வது என்மீது மேட்கொள்ள படும் இந்த கண்மூடித்தனமான தாக்குதல்களை ..
இவ்வாறான தொல்லைகள் தொடர்ந்தால் ஒரு ஊடகவியலாளன் என்ற வகையில்  எவ்வாறு என் பணியை செவ்வனே செய்ய முடியும் சொல்லுங்கள்...? இதற்கு நீங்கள் தான் முடிவெடுக்க வேண்டும்.
குறிப்பாக இந்த தாக்குதல்கள் அதிகமாக இரவு நேரங்களில் தீவிரப்படுத்தப்படுவதனால் என்னால் நிம்மதியான தூக்கத்தை கூட எதிர்பார்க்க முடியவில்லை... இதனை தொடர்ந்தும் என்னால் அனுமதிக்க முடியாது, எனவே உங்களை உடனடியாக சந்திக்க வேண்டும்.... உங்களால் எனக்கு எதுவுமே செய்ய முடியாதா?

இருந்தாலும் பரவாயில்லை....
நான் துணிந்துவிட்டேன்,
எத்தனை பேர் வந்து தாக்கினாலும் பரவாயில்லை ... தனியாக நின்று எதிர்ப்பது என்று முடிவு செய்து விட்டேன் ....

எச்சரிக்கை விடுக்கிறேன் ......

இனி நீங்கள் என்மீது தாக்குதல் மேட்கொள்ள வரும் சந்தர்ப்பங்களில் கவனமாக இருங்கள் எந்த வேளையிலும் உங்கள்
மீது நச்சு திரவங்கள் விசிறப்படலாம்...
உங்களது நரம்பு மண்டலங்களை தாக்க புகை மண்டலங்கள் உருவாக்கப்படலாம்
இதனை தொடர்ந்து உங்கள் மீது , மின்சார வலைகள் மூலம் தாக்குதல்கள் ஏற்படுத்தப்படலாம் ....

இந்த தாக்குதல்களில் இருந்து முடிந்தால் தப்பித்து கொள்ளுங்கள் ...( இவ்வகையான தாக்குதல்கள்தான் இடம்பெறும் என்று சொல்லிவிட்டு தாக்குதல்கள் நடத்துவது துணிகரமான விடயமாகவே சர்வதேச சமூகம் நோக்கும் என்பதில் எனக்கு எந்த விதமான சந்தேகமும் இல்லை ).

எனவே தலைவரே நீங்கள் என்மீது கோபம் கொள்ள கூடாது இவ்வாறான ஆயுதங்களை கையில் எடுத்தமைக்காக....
நான் பலமுறை விலகி விலகி போயிருக்கிறேன் , குறிப்பாக வலைகளுக்குள் என்னை மறைத்துக்கொண்டு பதுங்கி இருக்கிறேன் , அவ்வாறான சன்தரப்பங்களிலுள் என்மீது கண் மூடித்தனமான தாக்குதல்கள் மேட்கொள்ள பட்டதுதான் எனது இந்த முடிவுக்கான காரணம் மன்னித்து விடுங்கள் ...

இவர்களின் தாக்குதல்கள் மூலமாக எனது பெறுமதி வாய்ந்த ஒரு சில குருதி துளிகள் வீணாக்கப்படுவது பற்றி எனக்கு கவலை இல்லை , இவர்களினால் பரப்பப்படும் மிக கொடிய நோய்களான "டெங்கு , மலேரியா .." போன்ற நோய்களுக்குதான் எனக்கு பயமாக இருக்கிறது....


எனவே அன்பின் நுளம்பு ( கொசு) கூட்டத்தின் தலைவரே...!

உங்கள் நுளம்பு சகாக்களிடம் சமாதானமாக பேசி என் மீது கண்மூடித்தனமாக மேட்கொள்ள படும் தாக்குதல்களை நிறுத்த சொல்லுங்கள் .( முடிந்தால் என்னோடு பேச சொல்லுங்கள் , சமாதனம் பேச வருபவர்கள் மீது ஒரு போதும் தாக்குதல்கள் மேட்கொள்ள படமாட்டாது ..)


இல்லை எனின் மேட்சொன்ன அனைத்து தாக்குதல்களும் 'நுளம்பு(௦ கொசு)தீவிரவாதிகள் மீது மேட்கொள்ள படுவதை யாராலும் தடுக்க முடியாது... அது மட்டுமல்ல இந்த நடவடிக்கைகளை எடுக்க தவறும் பட்சத்தில் உங்கள் அத்தனை இருப்பிடங்களையும் தேடிப்பிடித்து அழிக்க நாங்கள் தயாராகவும் உள்ளோம் ,( இதற்கு அமெரிக்க பிரிட்டன் போன்ற நாடுகள் கட்டாயம் நிதி உதவி செய்யும் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை).

நுளம்பு (கொசு) கூட்ட தலைவருக்கான என் மடலை தலைவரின் முகவரி தெரிந்தால் யாராவது தபாலில் சேர்த்து விடுங்கள் ப்ளீஸ்.... ( எவ்வளவு காலத்துக்குத்தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது...)

31 comments:

LOSHAN said...

இந்த வருடத்தின் முதல் கடுப்புப் பதிவும் இதுவே..

ஆரம்பத்திலேயே ஊகித்ததால் சுவாரஸ்யம் குறைந்துவிட்டது..

ஆனாலும் கடைசி வரிகள் நல்லா இருக்கு

Kolipaiyan said...

என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...

Miss free bird said...

பரவாயில்லை... ஏதோ சிரிக்க வைக்க முயற்சி செய்திருக்க! வாழ்த்துக்கள்... கொஞ்சம் சிரித்தேன்.

வால்பையன் said...

இதையும் பாருங்க

பின்னோக்கி said...

யூகிக்க முடியாத அளவுக்கு நல்லாயிருந்துச்சு.

வந்தியத்தேவன் said...

நாட்டில் அதிகம் தலைவர்கள் இருக்கின்றார்கள் எந்த தலைவருக்கு கடிதம் என ஆவலுடன் வாசித்தால் கடைசியில் நம்ம அழுக்கடை நுளம்பாருக்கு கடிதம். அவரைச் சில நாட்கள் அமைதியாக இருக்கச் சொல்லவும்.

சந்ரு said...

அனைத்து நண்பர்களுக்கும்
பொங்கல் வாழ்த்த்துக்கள்

ஷங்கர்.. said...

அத பாலூட்டி சீராட்டி வளர்க்கறது நாமதான்..அதனால நாமதான் அதுக்கு தலைவர்கள்..:))

பித்தனின் வாக்கு said...

நல்ல பதிவு.சுவாரஸ்யமாக இருந்தது. நன்றி.

நிகழ்காலத்தில்... said...

வாழ்த்துகள் நண்பரே:))

பிரபா said...

//LOSHAN said...
இந்த வருடத்தின் முதல் கடுப்புப் பதிவும் இதுவே..

ஆரம்பத்திலேயே ஊகித்ததால் சுவாரஸ்யம் குறைந்துவிட்டது..

ஆனாலும் கடைசி வரிகள் நல்லா இருக்கு
//

எதோ எங்களால முடிஞ்சது ..... நன்றி சகா கருத்துக்கு...

பிரபா said...

//Kolipaiyan said...
என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...
//

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

பிரபா said...

//Miss free bird said...
பரவாயில்லை... ஏதோ சிரிக்க வைக்க முயற்சி செய்திருக்க! வாழ்த்துக்கள்... கொஞ்சம் சிரித்தேன்.//


நல்லா பறக்கிறீங்க...

பிரபா said...

// வால்பையன் said...
இதையும் பாருங்க
//

ஐயோ தல நீங்க யாரு... எங்களுக்கு இப்பதான் ஞானம் வந்திருக்கு...

பிரபா said...

//பின்னோக்கி said...
யூகிக்க முடியாத அளவுக்கு நல்லாயிருந்துச்சு.
//

இருந்தாலும் உங்க அளவுக்கு எங்களால "முன்னோக்கி" சிந்திக்க முடியுமா/ ?

பிரபா said...

//வந்தியத்தேவன் said...
நாட்டில் அதிகம் தலைவர்கள் இருக்கின்றார்கள் எந்த தலைவருக்கு கடிதம் என ஆவலுடன் வாசித்தால் கடைசியில் நம்ம அழுக்கடை நுளம்பாருக்கு கடிதம். அவரைச் சில நாட்கள் அமைதியாக இருக்கச் சொல்லவும்.
//

என்ன நண்பரே அங்கவும் இதே தொல்லை இருக்கா...

பிரபா said...

//சந்ரு said...
அனைத்து நண்பர்களுக்கும்
பொங்கல் வாழ்த்த்துக்கள்
//

பொங்கல் வாழ்த்த்துக்கள்

பிரபா said...

//ஷங்கர்.. said...
அத பாலூட்டி சீராட்டி வளர்க்கறது நாமதான்..அதனால நாமதான் அதுக்கு தலைவர்கள்..:))
//

வருகைக்கு நண்பரே.... வரும்போதே 100 அடிச்சுதான் vanthirukkireenga....

பிரபா said...

//பித்தனின் வாக்கு said...
நல்ல பதிவு.சுவாரஸ்யமாக இருந்தது. நன்றி.
//

உங்க வாழ்த்து பலிக்கட்டும் .... சாரி வாக்கு பலிக்கட்டும்

பிரபா said...

நிகழ்காலத்தில்... said...
வாழ்த்துகள் நண்பரே:))

வருகைக்கு நன்றி ...

ஜெகநாதன் said...

பிரபாவுக்கு ஒரு கட்டு ​கொசுவர்த்தி சுருள் பார்ஸல்ல்ல்ல்..!

பிரபா said...

//ஜெகநாதன் said...
பிரபாவுக்கு ஒரு கட்டு ​கொசுவர்த்தி சுருள் பார்ஸல்ல்ல்ல்..!
//

நன்றிங்கோ.........................

கலா said...

ஓஓஓஓஓ .....நீங்க...வந்து ரொம்ப நாளாச்சா..!
நான் பார்க்கவே இல்ல..
கொசுவுக்கு வலைபோட்டது இருக்கட்டும்!!
நீங்க வலையில மாட்டிக்காம....
வலை பின்னாமப் பாத்துக்கங்கோ!!

பிரபா said...

//ஓஓஓஓஓ .....நீங்க...வந்து ரொம்ப நாளாச்சா..!
நான் பார்க்கவே இல்ல..
கொசுவுக்கு வலைபோட்டது இருக்கட்டும்!!
நீங்க வலையில மாட்டிக்காம....
வலை பின்னாமப் பாத்துக்கங்கோ!!//

அதுசரி.... பார்துக்கிறோமுங்க... நீங்க அடிக்கடி வலையையும் பூவையும் பார்க்க வாங்க.

வாசகனாய் ஒரு கவிஞன் சங்கர் !!! said...

நண்பரே உங்களின் இந்த பதிவு என்னை மிகவும் சிந்திக்கத் தூண்டியது . பகிர்வுக்கு நன்றி !

பிரபா said...

//நண்பரே உங்களின் இந்த பதிவு என்னை மிகவும் சிந்திக்கத் தூண்டியது . பகிர்வுக்கு நன்றி !//

அப்படியா !!!நண்பரே,, ரொம்ப மகிழ்ச்சி... அடிக்கடி வாங்க ....

புதுகைத் தென்றல் said...

ஆஹா கொழும்புவில் கொசுக்களோடு காலம் கடத்திய நாட்களை ஞாபகப்படுத்திட்டீங்க. என்ன இருந்தாலும் இந்தியாவி விட அங்கே கொசு குறைச்சல்தான். அதுக்கே நீங்க லெட்டர் எழுதினா நாங்கல்லாம் தந்தில்ல அடிக்கணும்.

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

பிரபா said...

//இருந்தாலும் இந்தியாவி விட அங்கே கொசு குறைச்சல்தான். அதுக்கே நீங்க லெட்டர் எழுதினா நாங்கல்லாம் தந்தில்ல அடிக்கணும்.

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்//

ஆஹா,,, சந்தோசம் எங்களைவிட நீங்க...

இலங்கன் said...

அடப்பாவிங்களா.... நான் என்னமோ ஏதோ எண்ணு நினைச்சிட்டன்.

பிரபா said...

// இலங்கன் said...
அடப்பாவிங்களா.... நான் என்னமோ ஏதோ எண்ணு நினைச்சிட்டன்.//


ஆஹா நீங்களுமா இலங்கன்,,, வருகைக்கு நன்றி.

Anonymous said...

என்னமோ பெரிய வீராதி வீரன் வந்நிருக்கான்னு பார்த்தா..........
அடச் சீ இதெல்லாம் ஒரு .............