ad

Sunday, July 19, 2009

எழுத மறந்த கவிதைகள் -(பாகம்-2௦)

எந்த மொழி பேசினாலும்
புரிந்துகொள்ள முடிகிறது...
உன் மௌன மொழியைத்தவிர ....
-----
என் கவிதைகள்உனக்குபிடிக்கும் என்றாய்.
எழுதுவதை
நான் நிறுத்திய பிறகு,,,,,!
--------
என் இதயத்தின்வானொலி நீ....
என் செய்திகளுக்குத்தான்
இடமில்லை என்கிறாய்!
-------
மௌனமாய்-நீஎன்னை
கடந்துசென்ற போதும்-உன் இதயம்
என்னுடன்பேசிக்கொண்டுதான் சென்றது....
-------
காலங்கள்கடந்துசந்தித்தாய்......
உன்னில்எத்தனையோமாற்றங்கள் -
உன்மௌனத்தை தவிர!
------
ஒரு காலத்தில்
என் கவிதைகளை கூடநான்எழுதி வைத்ததில்லை.
நினைவுபடுத்தநீ இருக்கிறாய்என்பதால்....
இன்று-என்
பெயரையேஉனக்கு
ஞாபகபடுத்தவேண்டிஇருக்கிறது!---

புகைக்க போறீங்களா ? அப்ப நான் பொறுப்பில்ல !!!!

அண்மையில் நண்பி ஹேமா (ஹேமலதா ) ஈ மெயில் மூலமாக சில தத்துவங்களை படங்களாக தந்திருந்தார் , அனைத்தையும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் .
சொன்னால் கேக்கிறீங்களா புகைக்க வேணாம் என்னு, இப்ப பாருங்க என்ன ஆச்சு.......
















இப்ப சொல்லுங்க இனிமேலும் புகை.........??????
உங்கள் கருத்துக்கள் ....
ஹை கூ கவிதை வடிவில் வரட்டும்.