ad

Monday, October 26, 2009

"அது " போல வருமா?...

நவீன உலகத்தில் இருந்து கொண்டு இப்பவும் இதை பற்றி பேசினால் "சும்மா போங்க சார் " உங்களுக்கு வேற வேலை இல்ல , இப்ப இருக்கிற பிசிக்கு அதையெல்லாமா தேடிக்கிட்டிருக்க..."எங்களுக்கு எங்க நேரமிருக்கு? என்று என்னை நம்ம தாய்க்குலங்கள் கொஞ்சம் காட்டமாமாக கேட்கலாம்,,,,,

என்ன பண்றது மனசு கேட்குதில்லையே...! மன்னிக்கவும் "நா" கேட்குதில்லையே...!
எத பற்றி பேச வாறம் என்று ஓரளவுக்கு புரிந்திருக்கும்.....
ஆமாங்க இக்காலத்து "நவீன சமையல்" பற்றித்தான் எங்க கவலையெல்லாம்.

இந்த அவசர உலகத்தில் பாஸ்ட் பூட் கலாச்சாரத்தில் இதெல்லாம் நினைக்க எங்க நேரம்.... ஏதோகிடக்கும் நேரத்தில் சட்டு புட்டுன்னு ஏதாவது தயாரித்து விட்டு அதற்கு வாயினுள் நுழையாத மாதிரி ஒரு பேரு வைத்து தந்தால் , அதன் பெயர் போலவே உணவுகளும் வாயினுள் நுழைய மறுக்கிறது....இதனால்தான் இப்பொழுதெல்லாம் சிலர் உண்டும் உண்ணாவிரதம் இருக்கிறார்கள் போல.....
ஆனால் அந்த காலத்தில் இருந்த கைப்பக்குவம் இப்போதைக்கு இல்ல என்றுதான் நிறைய பெரிசுகள் பேச கேட்டிருக்கிறேன்,,,,, இதற்கு காரணம் அந்த காலத்து சமையல் நிபுணர்களான நம்ம வீட்டுதலைவிகள் பாவித்த உபகரணங்களாகவும் இருக்கலாம்,,,,,,,
உரல் உலக்கையால் குற்றிய நெல்லரிசி சோறு ......
அம்மியில் அரைத்தெடுத்த மலிகைச்சரக்குகள்
மணக்க மணக்க.....சமைக்கும் பக்குவம் இன்னும் நாவுகளில் நயகராவை வரவழைக்கிறது.






அந்த காலத்து இந்த சமையல் உபகரணங்களை இப்பொழுது காண கூட கிடைப்பதில்லை.....
இருந்தாலும் உரலும் உலக்கையும்,,,
அம்மியும் குழவியும்,
சுளகு
போன்ற பொருட்கள் இன்னும் பாதுகாக்கப்பட வேண்டியவைகளே.....
ஏதோ ஒரு ஆதங்கத்தில் சொல்லி புட்டன் மன்னிச்சுடுங்க தாய்க்குலங்களே.....உங்கள் சமையல்கள் பிரமாதம்........பிரமாதம்....பிரமாதம்.....( மதிய உணவை உறுதிப்படுத்த எடுத்த முன்னெடுப்பு என்று யாரு நினைக்க கூடாது) ....