ad

Thursday, July 2, 2009

கண்ணில் பட்டதில் சுட்டது.....


கண்ணில் பட்டதில் ,மனசை தொட்டதை சுட்டுவிட்டேன் ...........
சுட்டது கவிஞர் பார்வதி விஜயின் "18 வயசுல..." கவிதை தொகுப்பிலிருந்து....
இப்ப புரிஞ்சிருக்குமே என்னத்த சுட்டோமின்னு.

கடிதத்தில் எச்சில் தொட்டு நீ
ஒட்டிய தபால் தலை
கடிதத்தில் ஒட்டாது
தேன் எப்படி பசையாகும்!

பாகற்காய் கொடியில்-நீ
காய போட்டிருந்த
பாவாடை தாவணியால்
பலகார பட்டியலில் -நான்
பாகட்காயையும் சேர்த்து கொண்டேன்.
தூக்கனான் குருவிகூட்டை
ஆச்சர்யமாய் பார்த்தாய்
உள்ளிருந்த குருவிகள்
உன்னை ஆச்சரியமாய் பார்த்தன ....
அதிசயங்கள் ஒன்றை யொன்று பார்த்து
அதிசயித்துக்கொள்வது
அதிசயமில்லைதானே !
கொலைகருவிகளின் பட்டியலில்
நீ கால்களில் அணிந்திருக்கும்
கொலுசையும் சேர்த்துக்கொள்ளலாம் .

ரொம்ப நேரம்
கண்ணாடி பார்த்துகொண்டிருப்பாய்
உன்னை அடிக்கடி பார்க்கும் உனக்கே
உன்னை பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும் போல்
உள்ளதென்றால்
எப்போதாவது பார்க்கும் எனக்கு
எப்படியிருக்கும்.

சின்ன வயசில் நிறைய
சிலேட்டு குச்சிகளை முழுங்குவேனாம்!
இருபது வயதுகளில்
இப்படியெல்லாம் உன்னைப்பற்றி
எழுதத்தானோ ?

உங்களுக்கும் புடிச்சிருக்கா ?????????