ad

Wednesday, May 18, 2011

எங்களுக்கு பிடிச்ச லோஷன் அண்ணா, மனம் திறக்கிறார் தம்பி பிரபா .

தலைப்பினை பார்த்துவிட்டு பெரிய மனுஷன் என்னாத்த பற்றி மனம் திறக்க போறான் என்று அறிந்து கொள்ள ஆவலாக வந்திருக்கும் அனைவருக்கும் அன்பான வணக்கம்....
 நீண்ட நாட்களுக்கு பிறகு இந்த பக்கம் வந்திருக்கிறேன்,(காலையில் பதிவெழுத இந்த பக்கத்தை திறக்கும் போது தான் எனக்கு விளங்கியது பதிவுலகத்தை விட்டு நான் எவ்வளவு விலகியிருந்தேன் என்று காரணம்  கடவுச்சொல்லை  கூட மறந்துட்டேன் என்றால் பார்த்து கொள்ளுங்களேன்.:)

இடைபட்ட காலத்தில் ஏராளமான மாற்றங்கள் , குறிப்பாக  பதிவுலகத்தில் ஏராளமான புது முகங்களை காணக்கூடியதாக இருக்குறது ,சில பதிவர்கள் முன்னை விட வேகமாக வளர்ச்சி கண்டு பிரமிக்க வைக்கிறார்கள், சில மூத்த பதிவர்கள் , வழக்கம் போல தங்களது இளைய நண்பர்களை ஊக்கப்படுத்தி ஆக்கப்படுத்தும்  முயற்சியில் முன்முரமாக செயட்பட்டிருக்கிறார்கள், எல்லாவற்றையும் பார்க்கும் போது சந்தோசமாக இருக்குறது. 
சரி விசயத்துக்கு வருவோம்.....
இந்த காலத்தில் ஊடகத்துறையில் நீண்ட காலத்துக்கு  நின்று நிலைப்பது எனபது அவ்வளவு இலகுவான காரியமா?? நிச்சயமாக இல்லை மிகச்சவாலான விஷயம், ஆனால் இங்க ஒருவர் அந்த சவாலை  இலகுவாக சமாளித்துகொண்டிருக்குறார் அவர் தான் அன்புக்குரிய  ரகுபதி பால ஸ்ரீதரன் வாமலோஷனன்(வெற்றி வானொலியின் பணிப்பாளர் ); சிம்பிளாக லோஷன்  என்றால் எல்லோருக்கும் கண் முன்னே வந்து அழகாக் சிரித்துகொண்டு காட்சி தருவார்,
ஒரு துடிப்பான இளைஞன்,
இலங்கை திருநாட்டிற்கு கிடைத்த திறமையான அறிவிப்பாளர்,
பக்குவப்பட்ட பதிவர் ,
அவரை பற்றிதான் இன்று எனது பதிவு அமைய போகிறது, .

தனி மனிதன் லோஷனை பற்றி அதிகம் வீணாக்க புகழ் பாடுவதாக தயவு செய்து என்ன வேண்டாம் , அண்மையில் நான் அவதானித்த ஒரு சில விஷயங்கள் என் மனதை தொட்டது அதுதான் அத்தனையையும் இங்கே கொட்ட வந்திருக்கிறேன்,


லோஷன் அண்ணாவை பொறுத்த மட்டில் கிட்டதட்ட வானொலியோடு நீண்ட கால தொடர்பினை கொண்டவர் (அவரது தாத்தா,அம்மா போன்றவர்களும்  வானொலி கலைஞர்கள்  )அனைவருக்கும் இது தெரிந்த  விடயம் தான் சிறு வயது கலைஞாக வளம் வந்தது மட்டுமல்லாமல்   ஒரு அறிவிப்பாளராக அவர் காலடி எடுத்து வைத்து கிட்டதட்ட 13 வருடங்கள் இருக்கும் என்று நினைக்கிறேன் ( சரியாய் சொன்னேனா அண்ணா? கால அளவு மாறுபட்டால் திருத்தி கொள்வோம்). லோஷன் அண்ணாவை விட நான் வானொலி துறைக்கு  6 வயது சின்னவன் .
இருந்தாலும் வானொலியையும் ஊடகத்தையும் ஓரளவுக்கு அறிந்துகொண்ட வரையில் இங்கு நிலைத்து நிற்பது என்பது மிகவும் கடுமையான விடயம் குறிப்பாக சாதாரணமான தமிழிலே சொன்னால் இங்கே  'வெட்டு குத்துக்கள் அதிகம்' எல்லா இடங்களில் இருப்பது போலவும் ஊடகத்துறையிலும் 'பனிப்போர்' மூழ்வது சகஜமான  விடயம் . ஆகவே இந்த ஊடகத்துறையில் இருப்பவர்கள் சம்பந்தமாக அடிக்கடி பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்படுவது சாதரணமான விடயம் ( வேண்டும் என்றே கட்டு கதைகளை கிளப்பி விடுவது உண்டு) .
அண்மையிலே இலங்கையில் இருக்கின்ற பிரபலமான ஒரு தொலைக்காட்சி ஊடகத்தில் தான் சந்தித்த பிரச்சனைகள் சம்பந்தமாக ஒரு தொலைக்காட்சி தொகுப்பாளினி ஒரு பத்திரிக்கைக்கு நொந்து போய் மனம் திறந்திருந்தார், இத்தனைக்கும் அவர் அங்கே நீண்ட காலமா பணியாற்றியவர் என்பது குறிப்பிட தக்கது .( பின்னர் அந்த பத்திரிகை பேட்டிக்கும அந்த பேட்டி வெளியான பக்கத்துக்கும் என்ன நடந்தது என்று உங்களுக்கும் தெரியும்) .


இப்படிபட்ட ஊடகத்துறைக்குள் அத்தனை சவால்களையும் சந்தித்து ''திறமையானவர்களை தட்டி கொடுக்கும் லோஷனின் பண்பு மிகவும் பிடித்திருக்கிறது, குறிப்பாக நிறைய இளைவர்கள் இவரால் அறிமுகபடுத்த பட்டிருக்கிறார்கள் ) இதில் சிலர் முதுகில் குத்தி விட்டு சென்ற  கதைகளையும் அறிந்தேன்.(நன்றியை பற்றி அறியாதவர்கள் ).

இது தவிர இப்பொழுது இருக்கின்ற இளம் தலை முறை வானொலி தொகுப்பாளர்கள் பலரிடம் இல்லாத தனித்திறமைகள் பல லோஷனிடம் உண்டு,அதை நான் பட்டியலிட்டுத்தான் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்ற தேவை இருக்காது என்று நினைக்கிறன் . ( நான் வேறு ஊடகத்தில் தான் இருக்குறேன் ஆனால் உண்மைகளை சொல்ல தயங்க மாட்டேன்) . , தமிழை ''தமிலாக'' வாசிக்கும் இந்த காலத்தில் தமிழை தமிழாகவே சுவாசிக்கும் அதை நேசிக்கும் லோஷனின் திறமை பலரை இந்த துறைக்குள் ஈர்த்திருக்கிறது.

உதரணத்துக்கு  என்னையே எடுத்துகொள்கிறேன் ( இப்பதான் மனம் திறக்கிறேன் என்று சிரிக்காதீங்க..)
அடிக்கடி நான் நிகழ்சிகளை செய்கின்ற போது ' லோஷனின் சாயல்' லேசாக உங்களிடம் வருகிறதே என்று சிலர் சொல்லுவார்கள், உண்மைதான்,  அறிவிப்பாளராக வரும் அனைவரும் யாரையாவது பின் பற்றிதான் வருவார்கள் அதனை தவிர்க்க முடியாது,( யாரையாவது நேசித்தால் கட்டாயம் வரும்).
ஆனால் அடியேன் கொஞ்சம் வித்தியாசமானவனா எனக்கு பட்டது காரணம்( இந்த துறைக்குள் காலடி எடுத்து வைக்கும் பொழுது நான் பெரிதாக வானொலிகளை கேட்பதில்லை ,ஆனால வந்த பிறகு கொஞ்சம் கூட கேட்க தயங்குவதில்லை  அது எந்த மொழி வானொலியாக இருந்தாலும் பரவாயில்லை ,கேட்பேன், ஏனென்றால் நல்ல நேயரினால் தான் ஒரு நல்ல அறிவிப்பாளரா இருக்க முடியும் என்ற கருத்தில் மாற்று கருத்துகளுக்கு இடம் கொடுக்காதவர்களில் அடியேனும் ஒருவன்.)
வானொலி துறைக்குள் வந்த பிறகு லோஷன் எனக்குள் பல மாற்றங்களை ஏற்படுத்தினார், காரணம் அவரது அறிவிப்பு பாணி எனக்கு பிடித்திருந்தது அதனால் அவரின் அனுமதி இல்லமே அவரின் சில அறிவிப்பு பாணியின்   பகுதிகளை களவாடிருக்கிறேன், அது எனக்கே தெரியாமல் நடந்த ஒருவிடயம் . ஆனால் எங்களுக்கு என்று ஒரு சுயம் இருக்க வேண்டும் இல்லையென்றால் எங்களால் இந்த துறைக்குள் பிரகாசிக்க முடியாது என்பதற்காக எனக்கு ஒரு புதிய பாணியை உருவாக்க முயற்சித்து கொஞ்சம் வெற்றியும் கண்டிருக்கிறேன், ....( என்ன லோஷன் அண்ணா இவ்வளவு நடந்திருக்க என்று யோசிக்கிறீங்களா? ஹி ஹி ))). 

  நாங்கள் இருவரும் நீண்ட நாட்களாக நல்ல நண்பர்கள் காரணம் அவர் இளையவர்கள் தானே என்று தள்ளி நிற்பதில்லை ( இப்பொழுது இருக்கின்ற இலங்கை அபதிவர்கள் அனைவரும் சாட்சி கூறுவார்கள் கேட்டு பாருங்கள் ) நெருங்கி வந்து பேசுவார். இத்தனைக்கும் ithuvraikkum நாங்கள் இருவரும் சந்தித்ததே இல்லை,அது  மட்டுமல்ல தொலைபேசியில் கூட ஒரு தடவையேனும் பேசியதில்லை ,எங்கள் தொடர்பு எல்லாமே ஈ மெயில் ,எஸ் .எம்.எஸ்.,டுவிட்டேர்,முக புத்தகம் .இந்த அளவோடு நிற்கிறது. ஆனாலும் லோஷனை நான் ''தூரத்தில் இருந்து துப்பறிந்திருக்கிறேன்'' .

இது தவிர பதிவுலகத்தில் மிக பிரபலமான முன்னணி இலங்கை பதிவர்களில் அவரும் ஒருவர் ( இலங்கை பதிவர் என்ற வகையில் அடியேனும் பெருமை படுகிறேன்) . தனது வானொலி நிகழ்ச்சிகளில் தைரியமாக கருத்துக்களை சொல்வது போல தனது பதிவுகளிலும் காத்திரமான கருத்துக்களை சொல்லி வருகிறார் , அடியேன் பதிவுகல்துக்கு வர காரணமாக இருந்ததும் அண்ணாவே.... பின்னர நிறைய விடையங்களை கற்றுக்கொண்டேன்.

இடையிடையே கிரிக்கெட் போட்டிகளின் போது நாங்கள் கருத்துக்களால் மோதிகொள்வதும் உண்டு .அவ்வேளையில் உண்மையான கருத்துக்களை முன் வைப்பார், ரசித்துகொண்டே ஏற்றுகொள்வேன்.  

அத்தோடு வானொலியில் அனைத்து நண்பர்களையும் வாழ்த்தி தட்டி கொடுத்து அவர்கள் அனைவரையும் அணைத்து செல்லும் பக்குவம் தெரிந்த லோஷன் அண்ணாவை பற்றி கொஞ்சம் சொல்லி இருக்கிறேன்...... இன்னும் இருக்கு அதனை அவரின் பிறந்த தினத்தில் (ஜூன் 5 ) பதிவிடலாம் என நினைக்கிறன்.

என்னாங்க நான் சொல்றது , சரிதானே ?????