ad

Thursday, September 30, 2010

அவமானம் திருவள்ளுவருக்குத்தான், உனக்கல்ல.

நீ
நினைப்பதெல்லாம்
நடக்கவில்லையா?
அதற்காக-
நினைப்பதை
நிறுத்தி விடாதே.

நீ
கேட்பதெல்லாம்
கிடைக்கவில்லையா?
அதற்காக கேட்பதையே
நிறுத்தி விடாதே .

நீ
விதைப்பதெல்லாம் முழைக்கவில்லையா ?
அதற்காக -
விதைப்பதையே நிறுத்தி விடாதே .

உன்-
உழைப்பு உன்னை
உயர்த்தவில்லையா ?
அதற்காக
உழைப்பதை நிறுத்தி விடாதே .

நம்பிக்கைதான்-
வாழ்க்கையை 
நகர்த்திக்கொண்டு போகிறது.

கனி விழாவிடினும்
கல்லெறிவதை நிறுத்தாதே.

''முயற்சி 
மெய் வருத்தக் கூலி தரும்''  

தராவிட்டால்
அவமானம் -
திருவள்ளுவருக்குத்தான்
உனக்கல்ல.  

நன்றி:- 'நிஜ கோவிந்தம்'

Wednesday, September 29, 2010

ஈழமா அல்லது இலங்கையா?

காலையில் ஒரு இணையதளத்தில் செய்தி ஒன்றை வாசித்தேன் ., 
இதுதான் செய்தியின் தலைப்பு .
'' தா'' திரைப்படம் மூலம் அறிமுகமாகும் ஈழத்து இசையமைப்பாளர்.'
கிளிக் பண்ணி வாசித்து பாருங்கள் .


இவர்தான் இசையமைப்பாளர் ஸ்ரீ விஜய், 'தா ' திரைப்படத்தின் 
மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவிப்பதில் மகிழ்ச்சி ., அதே நேரம் இவரின் திறமைக்கு தொடர்ந்தும் களம் அமைத்துக்க் கொடுக்காமல் போயிடுவாங்களோ என்று பயமா இருக்கு. 


காரணம் அண்மையிலே 'தா'  திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் இரண்டு பெரிய மனுசங்க ஒண்ணுமில்லாத விஷயத்தை பெரிசு படுத்தி விழாவையே குழப்பியிருக்கிறார்கள். அதாவது , 
 விழாவில் முதலில் பேச வந்த ஆர்.கே.செல்வமணி ஸ்ரீ லங்காவிலிருந்து இங்கு வந்திருக்கும் ஸ்ரீவிஜயின் குரல் உலகமெங்மும் உள்ளவர்களை ஒருங்கினைக்கும் ஒரு குரலாக இருக்கும் என்பது மட்டும் சத்தியம்” என்றார்.


பின்னர் பேசிய  அவரைத் தொடர்ந்து பேசிய பெப்சி தலைவர் வி.சி.குநாதன், “ஆர்.கே.செல்வமணி சொன்னதில் ஒரு சிறு பிழை. ஸ்ரீவிஜய் ஸ்ரீ லங்காவிலிருந்து வரவில்லை. ஈழத்திலிருந்து வந்திருக்கிறார். 


இந்த வாக்குவாதம் தேவையா /? இல்லை தேவையா என்று கேட்கிறேன் .
இவர்கள் இருவருக்கும் அடிப்படை பிரச்சனை என்ன என்று தெரியவில்லை என்று நினைக்கிறேன் என்று இந்த செய்தியை பார்த்த பெரியவர் ஒருவர் பேசியது எனது காதுகளிலும் விழுந்தது. 
அதாவது இந்த இலங்கை, ஈழம் என்பது எல்லாமே இந்த நாட்டின் பெயர்கள் தான் , ஆனால் பிரச்சனை நடந்தது 'தனி தமிழீழத்துக்கு '' தான். ,என்று அந்த மனுஷன் புலம்பிக்கொண்டே போனார். இது தெரியாமல் ஏதோ தங்கள் அக்கறையுள்ளவர்கள் போல் காட்டி நடிக்க இப்போது என்ன அவசியம் வந்தது ? 


அந்த இரண்டு பெயர்கள் மட்டுமல்ல இன்னும் எத்தனையோ பெயர்கள் இலங்கைக்கு இருக்குறது உதாரணமாக ,  இலங்கை, இலங்காபுரி, லங்கா, நாகதீபம், தர்மதீபம், லங்காதுவீபம் (வழங்கிய வடமொழியில்), சின்மோன்டு, சேலான், தப்ரபேன் (கிரேக்கர்களால்), செரெண்டிப் (அராபியர்களால்) உட்பட மற்றும் பல பெயர்களால் அழைக்கப்பட்ட இத்தீவு, பின்னர் குடியேற்றவாத காலம் தொடக்கம் 1972 ஆம் ஆண்டில் இலங்கை ஒரு குடியரசாக அறிவிக்கப்படும் வரை சிலோன் என்று அழைக்கப்பட்டது. (தற்காலத்திலும் சிலசமயங்களில் சிலோன் என்பது பயன்படுத்த படுகிறது).
என்பவற்றைச் சொல்லலாம்.


ஆகவே வெறும் வாய் வீச்சு வல்லவர்களே உண்மையான பிரச்னையை புரிந்து கொண்டு பேசுங்கையா....பேசி பேசியே காலத்தை போக்காமல் பொழப்ப போய் பாருங்க என்று அந்த பெரியவர் சொல்ல சொன்னார். 


ஒரு திறமை படைத்தவர் எந்த நாட்டில் இருந்து வந்தால் என்ன? உங்களுக்கு அவரின் திறமை மீது நம்பிக்கை இருந்தால் சந்தர்ப்பம் வழங்கலாம் இல்லாவிட்டால் உங்க பாட்டுல இருந்துட்டு போங்க... 
 நீங்கள் இப்போது ஆரம்பித்திருக்கின்ற இந்த பிரச்சனையானது இந்த நேரத்தில் தேவை இல்லாத ஒன்று என்றே அநேகமானவர்கள் நம்புவார்கள். 
  உங்கள் ஒன்றுக்கும் உதவாத வாய்த்தர்கத்தினால் அந்த கலைஞனின் திறமைகள் மழுங்கடிக்கப்பட கூடாது. 


எதுவாக இருந்தாலும் புரிஞ்சுகிட்டு போராடுங்கப்பா.. போராடுங்க..!
  நன்றி :-tamilnewscinema.com

Monday, September 27, 2010

பார்க்காதீங்க பார்க்காதீங்க........... ஐயோ சொன்னால் கேட்கமாட்டீங்களே ?


நல்லா கொழுத்து மச்சி , இப்பிடி யாராவது கொழுத்தி விட்டு ரொம்ப நாளாச்சுடா...!
நீ என் 'நண்பேண்டா..'.

இவ்வளவு உயராமா வச்சா போல நாங்க எண்ண பயந்திடுவோமா? சிங்கமுல்ல எந்த லெவலுக்கும்  உயர அடிப்போம்.


டேய் எண்டா இந்த பெல்ட்ட கொஞ்சம் சின்னதா செஞ்சா குறஞ்சாடா போயிடுவீங்க... பய புள்ளையளுக்கு  இன்னும் புத்தி வரமாட்டேங்குது... இப்ப பாரு எவ்வளவு கஷ்டம்.

டேய் மட்டையாகிட்டேன் ஏன்னு நினைகாதீங்கடா , இப்ப ரெஸ்ட் எடுக்கிறன், எந்திருச்சன் என்னு வச்சுக்கோ, என் பேச்ச நானே கேட்கமாட்டான்.
நிம்மதியாக எங்கயாவது தம் அடிக்க விடுரானுகளா? இங்கதான் கொஞ்சம் நிம்மதியா இருக்கு...
மச்சி நேரம் என்குறது ரொம்ப முக்கியம் , அதுதான் இப்பிடியெல்லாம்! நீங்க யோசிக்கப்படாது  தலைக்கனதுல ஆடுறான் என்னு. சும்மா நாட்டு நடப்புகளையும் அறிஞ்சுக்கணும் பாருங்க.

இரவுல  யாரு நிம்மதியா தூங்க விடுறா...  அதுதான் இங்க கொஞ்ச நேரம் தூங்கலாம் என்னு... ...
.
ஏன்தான் இதுக்கு இப்பிடி பயப்படுறானுகள் என்னே தெரியல... அப்பிடி என்னதான் உள்ள இருக்கு , பார்த்துடுவோம்..
கொஞ்சம் ஓவர் மச்சி............. நாளை முதல் குடிக்க மாட்டேன் சத்தியமடி தங்கம்.
முடிஞ்சா வாங்கடா அடிச்சு பாப்போம்.
இப்பவே ஆரம்பிச்சுடணும் மச்சி... அதுதான் நாட்டுக்கு நல்லது.அப்போதான் சிறந்த   'குடி'மகன் எண்ட பெயரும்  கிடைக்கும்

அட பாவிகளா !!! முன்னுக்கு சரக்கையும் வச்சுட்டு , வாய்க்கு பூட்டும் போட்டு தீங்கலேடா நீங்க நல்லா  இருப்பீங்களா. நாசமா போக...........

Friday, September 24, 2010

இனியும் இது தொடராமல் பார்த்துக்கொள்வோம்............

நீண்ட நாள் ஆதங்கமொன்று  இன்றைய தினம் பதிவாகிறது.
ஊடகத்துறையில் இருப்பவன் என்ற வகையில் இது பற்றி அடிக்கடி சிந்தித்து கவலைப்பட்டிருக்கிறேன், சில சமயங்களில் தாங்க முடியாத கவலையும் வந்திருக்கிறது.
சரி விடயத்துக்கு வருகிறேன்,
வானொலி, தொலைக்காட்சி போன்ற  இலத்திரனியல் ஊடகங்களில் இப்போது  இருக்கின்ற சில அறிவிப்பாளர்களது 'உச்சரிப்பு' காதுகளில் நச்சரிப்பாக இருக்கிறது காரணம் அந்த அளவுக்கு இப்பொழுது அதிகமான உச்சரிப்புப் பிழைகள் எங்கள் காதுகளை பதம் பார்கின்றன இதற்கு என்ன காரணம் என்று யோசிப்பதற்கே கஷ்டமாக இருக்கிறது,

ஊடகங்களில் இந்த உச்சரிப்பு பிழைகள் வருவதற்கும் அது தொடர்ச்சியாக அனுமதிக்கப்படுவதற்கும் என்ன காரணங்கள்?
  • சிறந்த உச்சரிப்பு திறமைகொண்ட அறிவிப்பாளர்களை தேர்ந்தெடுக்க உயர் அதிகாரிகள் தவறி விடுகிறார்களா? 
  • அல்லது அது பிழையான உச்சரிப்புக்கள் என்று அவர்களால் கண்டு கொள்ள முடிவதில்லையா? 
  • அல்லது அவர்களுக்கு சரியான பயிற்சிகள் கொடுக்க திறமை வாய்ந்தவர்கள் கிடைக்க வில்லையா?
இந்த கேள்விகள் என் மனதுள்ளே அடிக்கடி எழுவதுண்டு.
அதேவேளை இந்த உச்சரிப்பு பிழைகளை இப்பொழுது இருக்கின்ற இளம் ஒலி ஒளி பரப்பாளர்கள் நிச்சயம் கவனிக்க வேண்டும், ஏனென்றால் ஊடகங்கள், மக்கள் மத்தியில் பாரிய தாக்கத்தை செலுத்த வல்லன குறிப்பாக கல்வி கற்கும் மாணவர்கள் சில வேளைகளில் அறிவிப்பாளர்களின் உச்சரிப்புகளை கேட்டு,உச்சரிப்புகளை கற்றுக்கொண்ட காலமும் இருந்தது , குறிப்பாக இப்பொழுது இருக்கின்ற பிரபலமான தென்னிந்திய கலைஞர்களில்  அநேகமானவர்கள் தாங்கள்'இலங்கை வானொலியை' கேட்டுத்தான் தமிழ் கற்றோம் என்று பல மேடைகளில் சொல்ல கேட்டிருக்கிறேன்.
எனவே அந்த பொன்னான காலம் மீண்டும் வராது போய்விடும்  போலவே தோன்றுகிறது, காரணம் நாளுக்கு நாள் இந்த உச்சரிப்புப்  பிழையானது அதிகரித்துக்கொண்டே செல்கிறது,. இதில் இன்னுமொரு ஆச்சரியம் என்னவென்றால் புதியவர்கள் மட்டுமல்லாது சில அனுபவம் வாய்ந்த ஒலி ஒளிபரப்பாளர்களும் இதே தவறை விடுவதுதான் ஏற்றுக்கொள்ள முடியாத விடயமாக இருக்கிறது.
ஒரு சிறந்த நேயரினாலேயே சிறந்த அறிவிப்பாளனாக இருக்க முடியும் எனவே நண்பர்களே முதலில் காதுக்கு வேலை கொடுங்கள் பிறகு வாய்க்கு வேலை வையுங்கள்.
-------------------------------------------------------------..............................

அத்தோடு சிலரது உச்சரிப்புக்கள் தொடர்ச்சியாக  பிழையாக வருவதற்கு சில  காரணங்கள்  இருக்கின்றன .
அதனையும் நீங்கள் கருத்தில் கொள்ளலாம்.

இங்கே சில மருத்துவ உண்மைகள்
 நண்பர்களே ! நாம் பேசும் செயலானது குரல்வளை உட்பட வாயின் பாகங்கள் நாக்கு ,பல் , மூக்கு ஆகியவற்றின் ஒருமித்த செயலாகும்.
குரலில் ஏதேனும் நோய் ஏற்படுவது போல , வாயின் இந்த உறுப்புகளிலும் மூக்கிலும் பல நோய்கள் ஏற்படும் இத்தகைய நோய்கள் ஏற்பட்டால் குரல் பாதிக்கப்படுவது போலவே உச்சரிப்பும் பாதிக்கப்படும் .
டான்சில்ஸ் , சினுடிஸ்,பல்,ஈறு நோய்கள் ,வாய்புண் முதலான வாய் நோய்கள் மற்றும் ப்ராங்டிஸ் முதலிய வாய் மற்றும் மூக்கு சம்பந்த பட்ட நோய்கள் சிலவாகும் .
கிலேப்ட் பிளேட் எனப்படும் மேலண்ண வெடிப்பு சிலருக்கு மூக்குவரை தொடர்ந்திருக்கும் . அதாவது இவர்களது மேலுதடு இரு பிரிவுகளாக இருக்கும் , இப்படி உள்ளவர்கள் பேசுவதற்கு அதிகம் சிரம படுவார்கள்.
ஆனால் மேலே கடைசியாக கூறிய நோய் உட்பட எல்லா  நோய்களுக்கும் சிகிச்சை முறைகள் இல்லாமலில்லை , ஆகவே நம் உச்சரிப்போ குரலோ பாதிக்கப்பட்டிருந்தால் அது நம் பொறுப்பாகவே இருக்க முடியும்.

நாம் பேசுகின்ற போது உச்சரிப்பு சரியாக இல்லாவிட்டால் முதலில் பேச்சில் தெளிவற்று கவர்ச்சி குறைந்து விடும் ,அதேநேரம் நாம் பேசுவது எதிராளிக்கு சரியாக புரியாது இதனால் மீண்டும் சொல்லவேண்டிய நிலை ஏற்படும் இதனால் நேர விரையம் தவிர்க்க முடியாததாகிவிடும். அத்தோடு சேர்ந்து எரிச்சல் தனது திறமையையும் காட்டிவிடும் கடைசியாக எமது காரியம் தோல்வியிலையே போய் முடிந்து விடும்.

பழகினால் கைவராதது எதுவும் இல்லை . உங்கள் உச்சரிப்பு சரியாக இல்லாவிட்டால், அதைப் பயிற்சியின் மூலமோ சிகிச்சையின் மூலமோ சீர் செய்து விட முடியும் . உங்களுக்குச் சில உச்சரிப்புகள் தெரியாவிட்டாலோ, குழப்பமாக இருந்தாலோ , மற்றவர் பேசுவதை கூர்ந்து கவனியுங்கள் . சந்தேகங்கள் விலகும் . பிறகு அதன் படி பயிற்சி எடுங்கள்.
பேச்சு ஒரு மனிதனை , அவன் வாழ்வினை, கல்வியினை, பண்பாட்டினை எதிரொலிக்கும் ஒரு கண்ணாடி . எனவே அந்த பேச்சில் கவனமாக இருங்கள்.
 "வாழ வைப்பதும் வாரி விடுவதும் வாய்தான் ." 
எனது ஆதங்கம் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன் , உங்களது கருத்துக்களையும் சொல்ல மறக்காதீர்கள்.   
 

Wednesday, September 22, 2010

இஸ்லாம் என்ன சொல்கிறது..?

இஸ்லாம் என்ன சொல்கிறது ?
விளம்பரங்கள் பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது , இந்த கேள்வி கடந்த ரமழான் மாதத்தில் எனக்கு ஏற்பட்ட மிகவும் சிக்கலான கேள்வி, இது சிக்கலாகவும் தெளிவில்லாமலும் இருந்தமைக்கு இஸ்லாம் மதத்தை பற்றி நான் முழுமையாக அறிந்திராததும் ஒரு காரணமாக இருக்கலாம்.
சரி ஏன் இந்த சந்தேகம் வந்தது என்றால் கடந்த ரமழான் மாதத்தில் எமது வானொலி ஏராளமான சிறப்பு நிகழ்சிகளை ஒலிபரப்பியிருந்தது...
அத்தனையும் நேயர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றிருந்தது .
இதில் சில நிகழ்சிகள் விளம்பர அனுசரணையோடு ஒலித்திருந்தது .

இந்த அனுசரணையோடு ஒலித்த சில நிகழ்சிகள் சம்பந்தமாக அந்த நேரத்தில் சில இடங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது , அதாவது நிகழ்ச்சிகள் ஒலிப்பதற்கு முன்பும் பின்பும் அந்த நிகழ்ச்சிக்கு அனுசரணை  வழங்கிய நிறுவனங்களின் விளம்பரங்கள்  ஒலிபரப்பாகும், இது வர்த்தக வானொலிகள் பற்றி அறிந்த எல்லோருக்கும் தெரிந்த உண்மை.


அனால் ஒரு சிலரது வாதம் என்னவென்றால் அவ்வாறு இஸ்லாமிய நிகழ்ச்சிகள் ஒலிக்க விடும்போது   விளம்பரங்கள் ஒலிக்க கூடாதாம்!!
அத்தோடு இந்த விடயம் குறித்து விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலர் எமது வானொலியின் பெயரை குறிப்பிட்டு ஒலிபெருக்கியின் ஊடாக பள்ளிவாசல்களில் கூட தங்களது காட்டமான கருத்துக்களை வெளியிட்டிருந்தார்கள் . கருத்து சுதந்திரம் எல்லோருக்கும் இருக்கிறது அதனால் அது பிழை இல்லை ஆனால் இந்த விளம்பரங்கள் விடயத்தில் இஸ்லாம் என்ன சொல்கிறது என்று அந்த நபர்கள்  அறிந்திருக்கிறார்களா என்பதுதான் எங்கள் கேள்வி .
ஏனெனில் பின்னர் நங்கள ஏராளமான  , இஸ்லாமிய மார்க்கம் பற்றி நன்கு அறிந்தவர்கள் பலரிடம் கேட்டறிந்து கொண்டோம் , அவர்கள் அனைவருமே இந்த வானொலி விளம்பரங்கள பற்றி நடுநிலமையான கருத்துக்களையே சொன்னார்கள் .

எனவே இந்த விடயத்தில் அந்த   குற்ற சாட்டுகளை  கூறியவர்கள்  இஸ்லாம்  மதம் என்ன சொல்கிறது என்று முழுமையாக அறிந்திருக்கவில்லை என்றே  எண்ண தோன்றுகிறது .

எனவே நண்பர்களே இந்த விடயத்தில் உங்கள் ஆக்க பூர்வமான கருத்துகளை எதிர்பார்கிறேன். உங்கள் பார்வையில் விளம்பரங்கள் பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது? என்று உங்கள கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். 
Friday, September 17, 2010

ஆட்கள் தேவை,, உடனடியாக விண்ணப்பியுங்கள்.

ஆட்கள் தேவை................ மக்கள்ஸ் யாரும் ஓடப்படாது....
விளம்பரத்தைப் பார்த்திருப்பீர்கள்... உடனடியாக விண்ணப்பியுங்கள்.
அனைத்திந்திய இளைய தலைவலி ரசிகர் பேரவையின் அன்பு வேண்டுகோளுக்கிணங்க இந்த விளம்பரம் இங்கே பிரசுரிக்கப்படுகிறது. ஆகவே யாரும் ஆக்க்ரோசப்படப்படாது ஓகே.
                 ''இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்'' 

Wednesday, September 15, 2010

'தமிழ்துளி' தேவன் மாயனுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

பதிவுலகில் நான் கண்ட பசுமையான உள்ளங்களில் ஒரு உள்ளம்....
பாராபட்சம் இன்றி பாராட்டுக்கள் தெரிவிக்கும் பரந்த மனமுடையவர் .....
கற்பனை உலகில் இவர் ஒரு சகலகலா வல்லவன் ( இது ரொம்ப ஓவர் இல்லை சார்).
440 பதிவர் பெருமக்கள் இவரை தொடர்ந்தும் தொடர்கிறார்கள் (அடியேனும் தான்) .
இவரின் கருத்துரைகள் கிடைக்காதா என்று ஏங்கும் உள்ளங்களில் அடியேனும் ஒருவன்.
தமிழ் பெருங்கடலில் இவர் ஒரு 'தமிழ்துளி '.  
ஆம்  இன்று பதிவர் டாக்டர்  தேவன் மாயம் அவர்களுக்கு  பிறந்த நாள்..............
பதிவுலகம் சார்பாக எமது சந்தோசமான பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
 பாருங்கள் மனுஷன் இப்பவும் எதோ சிந்திக்கிறார் ஏதாவது பதிவிடலாம என்றுதான் யோசிப்பார்...
ஏதாவது பதிவிட்டால் போதும் என்று இல்லாமல் , பதிவின் மூலமாக ஏதாவது நல்ல விடயங்களை சொல்லலாமா என்று பொறுப்புடன் சிந்திக்கும் பதிவர் டாக்டர் .
இவரின் மருத்துவ குறிப்புகள் அடங்கிய ஏராளமான பதிவுகள் நிறைய வைத்தியர்களுக்கே உதவியாக இருப்பது இன்னும் இன்னும் சிறப்பாக அமைகிறது.

நான் பதிவெழுத வந்த காலங்களில் எனக்கு கிடைத்த அன்பான நண்பர்களில் வைத்தியரும் ஒருவர் . அப்போதெல்லாம் நான் சிந்திப்பதுண்டு , புதியவர்கள், சிறியவர்கள் என்றெல்லாம் பார்க்காமல்  உடனுக்குடன் தனது கருத்துக்களை தந்து என்னை உற்சாக படுத்திய பெருமகனுக்கு இன்று பிறந்த நாள் , மனதார வாழ்த்துகிறேன் ஐயா உங்களை.....

பதிவர் டாக்டர் தேவன்மயனின் ஒரு சில பதிவுகளை இங்கே தரலாம்

சாப்பிட்ட பின் மாரடைப்பு!

இவர்கள் உறவினர்களா?

 ஏன் நீதிபதி விசாரணை?

கெண்டகி வறுகோழி- ஒரு அதிர்ச்சி தகவல்!!

மனைவி/காதலியிடம் அன்பை வளர்க்க (5 )முக்கிய வழிகள்!!-1 

இப்படி எத்தனையோ நல்ல பதிவுகள் என்னால் ரசிக்கப்பட்டவைகள் உண்டு .....

நீங்களும் ஒருமுறை டாக்டர் அவர்களின் பதிவுகளை படித்து பாருங்கள் நிச்சயம் உங்களுக்கும் பிடிக்கும், .

வைத்தியரே உங்கள் எழுத்து வைத்தியம் இன்னும் பல்லாண்டு காலம் தொடர வேண்டும் என்று வாழ்த்து கின்றோம் .

வாழ்க பல்லாண்டு ........... வாழ்க பல்லாண்டு..... !!!

 Thursday, September 2, 2010

அப்பிடி செய்தால் அது பிழை இல்லையா? ...............

அப்பிடி செய்தால் அது பிழை இல்லையா? ...............
இந்த கேள்வி நெடு நாளாக என் மனசை போட்டு துருவிக்கொண்டிருக்கின்ற ஒரு கேள்வி
அதாவது நாங்கள் செய்கின்ற ஒரு காரியம் எந்த ஒரு வகையிலும்  வேறு ஒருவரையும் பாதிக்க கூடாது இல்லையா?
அப்பிடி பாதித்தால் அந்த காரியத்தை எவ்வளவு நன்றாக செய்தாலும் அதில் பிரயோசனம் இல்லை.

சரி இனி விசயத்துக்கு வருவோம்..
அண்மையில் இந்திய தொலைக்காட்சியில் ஒரு 'குற்ற செயல்' தொடர்பான நிகழ்ச்சியொன்றை பார்த்துகொண்டிருந்தேன் , மனதுக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது...
அந்த நிகழ்ச்சி ஒரு உண்மை சம்பவத்தை இந்த உலகுக்கு வெளிக்காட்டுவது நோக்கமாக இருந்திருக்கலாம். ஆனால் அந்த நிகழ்ச்சி தயாரிப்பில் சில விடயங்களை கவனித்தால் நன்றாக இருக்கும் என எனக்கும் என்னோடு நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டிருந்த நண்பருக்கும் தோன்றியது.


அதாவது ஒரு குடும்பத்தில் நடந்த ஒரு பிரச்சனை பின்னர் ஒரு கொலையில் முடிந்ததுதான் கவலை . தனது மகள் படிப்பில் கவனம் செலுத்தாமல் சில ஆண் நண்பர்களுடன் ஊர் சுற்றி திரிவதை தாங்க முடியாத தந்தை தனது கௌரவம் பாதிக்கப்பட போகுதே என்று  அஞ்சி , ஆட்களை அமர்த்தி தனது மகளை  கொலை செய்கிறார். பின்னர் அவரும் அந்த கொலையாளிகளும் மாட்டி கொள்கிறார்கள்.
இந்த சம்பவத்தை உண்மையில் அந்த சம்பவத்தோடு சம்பந்த பட்ட கொலையாளிகளை தொலைக்காட்சியில் காட்டினார்கள் அதே வேளை உயிரிழந்த அந்த இளம் பெண்ணின் இறந்த உடலின் படமும் காட்டப்பட்ட்டது   , பின்னர் நடந்த அந்த உண்மை சம்பவத்தின் சில காட்சிகள் சித்தரிக்கப்பட்ட காட்சிகளாக  காட்டப்பட்டது.
இதன் மூலமாக இந்த சமுதாயத்துக்கு பல விடயங்களை தெளிவுபடுத்துகின்ற அதே வேளை பாதிக்கப்பட்டவர்களின் எதிர்காலம் என்னவாகும் என்பது மிகப்பெரிய ஒரு கேள்விக்குறியாகிறது....
தனது மகளின் நடவடிக்களிகள் பிழையான வழியில் இருந்தால் அதனை அந்த மகளுக்கு தெளிவு படுத்த தெரியாமல் தனது கௌரவம் பாதிக்க படும் என்பதற்காக கொலை வரை சென்ற அந்த தந்தையின் மன உணர்வுகளை பற்றி பேசுவதென்றால் இங்கே நிறைய பேசலாம்....  அது ஒரு புறம் இருக்க எனது வாதம் என்னவென்றால் ,, நடந்த அந்த சம்பவத்தை முழுமையாகவே ஒரு சித்தரிக்க பட்ட காட்சிகளாகவே காட்டியிருக்கலாம் அதை விடுத்து பாதிக்க பட்ட அந்த குடும்பத்தை முழுமையாக தொலைக்காட்சியில் காட்டுவதென்பது , அந்த நிகழ்ச்சிக்கென்னவோ, இன்னும்  நம்பகத்தன்மையை  இன்னும் அதிகரிப்பதாகவே   இருக்கும் அதேவேளை அந்த சம்பவத்தோடு தொடர்புபட்டு உயிருடன் இருப்பவர்களுக்கு பெரிய மன தாக்கங்களை ஏற்படுத்தும் இல்லையா??? தவறு செய்வது மனித இயல்பு அதற்காக தவறை மன்னித்து விடவேண்டும் என்றில்லை... மாறாக அவர்கள் ஏன் அந்த தவறை செய்கிறார்கள் என்று யோசித்து அந்த தவறை திருத்த ஏதாவது நடவடிக்கைகளை எடுக்கலாம்.. குறிப்பாக மற்றவர்களது அடிப்படை மனித உரிமைகள் பாதிப்படையாமல பார்த்துக்கொள்ளுவது மிக முக்கியம் .


இது போன்ற ஏராளமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் இந்திய தொலைக்காட்சிகளில்  ஒளிபரப்பாகின்றது , அத்தனையும் காத்திரமான உலகுக்கு தேவையான நல்ல நிகழ்சிகள் அதேவேளை மற்றவர்களின் மனித உரிமைகளும் பாதுகாக்கப்படவேண்டும் இல்லையா?
 அவர்களது அடிப்படை உரிமைகள் பாதிக்குமாறு செய்தால் அது பிழை இல்லையா?
" குற்றம் நடந்தது என்ன ?" என்று கேட்கின்ற அதேவேளை "குற்றம் நடக்காமல் இருக்க என்ன  செய்யலாம்?"" என்று சிந்திப்போம்.