ad

Thursday, August 13, 2009

எந்த கை உங்கள் நம்பிக்"கை" ?


இன்று சர்வதேச "இடது கை பழக்கம் கொண்டவர்கள்" தினம் , காலையிலிருந்து வானொலியிலும் நல்ல விளக்கம் எல்லாம் சொல்லி இப்போ உங்களோடு பதிவினூடாகவும் சில விடயங்களை பகிரலாம் என்று வந்திருக்கோம்.

இப்ப பாருங்க இந்த உலகத்தில் உருவாக்கப்படுகின்ற அதிகமான பொருட்கள் "வலது கை பழக்கம் " கொண்ட அன்பர்களுக்காகவே தயாரிக்கப்படுவதாக சில இடது கை பழக்கம் கொண்டவர்கள் குறைப்பட்டு கொள்வதுண்டு ....

குறிப்பாக சில பொருட்களை சொல்லலாம் ., கத்தரிகோல் ,ஹொக்கி போட்டிகளில் பயன்படுத்து மட்டை , கிட்டார் வாத்திய கருவி,பாடசாலைகளை பயன்படுத்தும் கதிரையுடன் கூடிய மேசை போன்ற விடயங்களை சொல்லலாம் .
இது தவிர இன்னும் ஏராளமான விடயங்களை குறிப்பிடலாம்.

எது எவ்வாறாக இருந்தாலும் இடது கை பழக்கம் கொண்டவர்கள் எதோ ஒரு வகையில் சிறந்தவர்களாக இருப்பதை நான் கண்கூடாக கண்டிருக்கிறேன்.

அனால் மற்றுமொரு செய்தி , இடக்கை பழக்கம் உள்ளவர்களை விட வலக்கை பழக்கம் உள்ளவர்கள் ஒன்பது ஆண்டுகள் கூடுதலாக வாழ்கிறார்களாம்.

இந்த விடயம் ஆராய்ச்சிகள் மூலமாக சொல்லப்பட்டாலும் எந்த அளவுக்கு நடைமுறையில் கண்டிருக்கிறோம் ??????

ஆனால் இப்பொழுது அவுஸ்திரேலியா விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கின்ர ஒரு விடயத்தின் மூலம் இடது கை பழக்கம் உள்ளவர்கள் பெருமையடைய கூடியதாக உள்ளது.

அதாவது "இடது கை பழக்கம் உள்ளவர்கள் வலது கை பழக்கம் உள்ளவர்களை விட விரைவாக சிந்திக்கிறார்கள்." என்பதே அந்த முடிவு.

ஏனென்றால் இடது கை பழக்கம் உள்ளவர்களால் மூளையின் இரண்டு பாகங்களையும் பயன் படுத்த முடிவதாகவும் ,விரைவாக தகவல் களை மூளைக்கு அனுப்பி பெற முடிவதாகவும் அவர்களுடைய ஆராய்வின் முடிவுகள் சொல்கிறது.

இதனால் இடது கை பழக்கம் உள்ளவர்களால் நுட்பமான் பணிகளையும்,விளையாட்டு போன்ற துறைகளில் அவர்கள் சிறந்து விளங்குவதையும் நாங்கள் அவதானிக்கலாம்,அது மட்டுமன்றி பார்வை சம்பந்தப்பட்ட அதிகமான போட்டிகளில் இடது கை பழக்கம் உள்ளவர்களே அதிகமாக வெற்றிகளை பெற்று கொள்கிறார்கள்.

இந்த ஆராய்ச்சி தவிர இன்னுமொரு பெருமை தரக்கூடிய விஷயம், "Stewardesses" என்ற வார்த்தை இடது கையாலேயே டைப் பண்ண வேண்டிய மிக நீளமான வார்த்தை.


இதை அறிந்து தானோ ஜப்பானியர்கள் குழந்தைகளுக்கு இரண்டு கைகளாலும் எழுத கற்று கொடுக்கிறார்களோ தெரியல !!!!

இன்றைய நாளுக்கு பொருத்தமான ஒரு பதிவை இரண்டு கைகளையும் பயன் படுத்தி டைப் பண்ணிய திருப்பதி எனக்கு...........


இப்ப சொல்லுங்க எந்த கை உங்கள் நம்பிக்"கை" ?.