ad

Wednesday, September 22, 2010

இஸ்லாம் என்ன சொல்கிறது..?

இஸ்லாம் என்ன சொல்கிறது ?
விளம்பரங்கள் பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது , இந்த கேள்வி கடந்த ரமழான் மாதத்தில் எனக்கு ஏற்பட்ட மிகவும் சிக்கலான கேள்வி, இது சிக்கலாகவும் தெளிவில்லாமலும் இருந்தமைக்கு இஸ்லாம் மதத்தை பற்றி நான் முழுமையாக அறிந்திராததும் ஒரு காரணமாக இருக்கலாம்.
சரி ஏன் இந்த சந்தேகம் வந்தது என்றால் கடந்த ரமழான் மாதத்தில் எமது வானொலி ஏராளமான சிறப்பு நிகழ்சிகளை ஒலிபரப்பியிருந்தது...
அத்தனையும் நேயர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றிருந்தது .
இதில் சில நிகழ்சிகள் விளம்பர அனுசரணையோடு ஒலித்திருந்தது .

இந்த அனுசரணையோடு ஒலித்த சில நிகழ்சிகள் சம்பந்தமாக அந்த நேரத்தில் சில இடங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது , அதாவது நிகழ்ச்சிகள் ஒலிப்பதற்கு முன்பும் பின்பும் அந்த நிகழ்ச்சிக்கு அனுசரணை  வழங்கிய நிறுவனங்களின் விளம்பரங்கள்  ஒலிபரப்பாகும், இது வர்த்தக வானொலிகள் பற்றி அறிந்த எல்லோருக்கும் தெரிந்த உண்மை.


அனால் ஒரு சிலரது வாதம் என்னவென்றால் அவ்வாறு இஸ்லாமிய நிகழ்ச்சிகள் ஒலிக்க விடும்போது   விளம்பரங்கள் ஒலிக்க கூடாதாம்!!
அத்தோடு இந்த விடயம் குறித்து விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலர் எமது வானொலியின் பெயரை குறிப்பிட்டு ஒலிபெருக்கியின் ஊடாக பள்ளிவாசல்களில் கூட தங்களது காட்டமான கருத்துக்களை வெளியிட்டிருந்தார்கள் . கருத்து சுதந்திரம் எல்லோருக்கும் இருக்கிறது அதனால் அது பிழை இல்லை ஆனால் இந்த விளம்பரங்கள் விடயத்தில் இஸ்லாம் என்ன சொல்கிறது என்று அந்த நபர்கள்  அறிந்திருக்கிறார்களா என்பதுதான் எங்கள் கேள்வி .
ஏனெனில் பின்னர் நங்கள ஏராளமான  , இஸ்லாமிய மார்க்கம் பற்றி நன்கு அறிந்தவர்கள் பலரிடம் கேட்டறிந்து கொண்டோம் , அவர்கள் அனைவருமே இந்த வானொலி விளம்பரங்கள பற்றி நடுநிலமையான கருத்துக்களையே சொன்னார்கள் .

எனவே இந்த விடயத்தில் அந்த   குற்ற சாட்டுகளை  கூறியவர்கள்  இஸ்லாம்  மதம் என்ன சொல்கிறது என்று முழுமையாக அறிந்திருக்கவில்லை என்றே  எண்ண தோன்றுகிறது .

எனவே நண்பர்களே இந்த விடயத்தில் உங்கள் ஆக்க பூர்வமான கருத்துகளை எதிர்பார்கிறேன். உங்கள் பார்வையில் விளம்பரங்கள் பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது? என்று உங்கள கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.