ad

Monday, November 22, 2010

ஜெயிலுக்கு போகாமல் தப்பித்தோம்......

என் வாழ்நாளில் இடம்பெற்ற  ஒரு சுவாரஸ்யமான விடயம் இன்றைய தினம் பதிவாகிறது...
2005 ம் ஆண்டு தமிழ் சிங்கள புதுவருடம் எனக்கு சிரிப்போடுதான் ஆரம்பித்தது.
இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தில் ( தென்றல்)  அறிவிப்பாளராக இணைந்து கொண்டதன் பின்னர்  வந்த முதலாவது தமிழ் சிங்கள புதுவருடத்தை சிறப்பாக வரவேற்க சிறப்பு நிகழ்ச்சி ஒன்றை செய்திருந்தோம், ( அந்த வேளையில் தென்றலின் ஒலிபரப்பு 24 மணி நேர சேவையாக இருந்தது) .
இரவு 10 மணியிலிருந்து அதிகாலை  5 மணிவரைக்கும்  நிகழ்ச்சியை படைத்திருந்தோம் . புதுவருடத்திற்கு குடும்பத்தோடு இல்லையென்றாலும் தென்றல் வானொலியில் இணைந்து கொண்ட ஆரம்ப காலத்தில் தொடர்சியாக நிகழ்ச்சிகளை படைப் பதற்கு  கிடைத்த சந்தர்பங்களை சிறப்பாக பயன்படுத்த வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாக இருந்த காரணத்தால் சந்தோசம் அதிகமாகவே இருந்திருந்தது.

அன்று நிகழ்சிகளோடு இணைந்திருந்த அறிவிப்பாளர்கள் அனுசுஜா ஆனந்தரூபன் ( இப்போது வெளிநாட்டில் வசித்து வருகிறார்) ,வைதேகி சர்வானந்தா ( வெற்றி வானொலியில் கடமையாற்றி இப்போது வைதேகி ஸ்ரீபவன் கனடாவில் கால் பதித்திருக்கிறார், இதுக்கு பிறகு கனடா சந்தோசமா இருக்குமா என்னு நீங்க யோசிக்கப்படாது ஹீ ஹீ ), அடுத்தவர் ஷைலானி  மயில்வாகனம் ( தென்றல்) .
அனைவரும் ரொம்ப சிரமபட்டு நிறை விடயங்களை தேடி எடுத்து அன்றைய நாளுக்கு பொருத்தமாக நிகழ்ச்சியை படைத்திருந்தோம்.
திருப்தியோடு காலையில் கலையகத்தை பிரியா ( பிரியதர்ஷினி அம்பிகைபாலன் - இப்போது வசந்தம் தொலைகாட்சியில் கடமையாற்றுகிறார்) மற்றும் கவிதா ( கவிதயாழினி அமலதாஸ்) இருவரிடமும் ஒப்படைத்து விட்டு வெளியேறினோம் .காலை 7 மணி இருக்கும் வீட்டுக்கு செல்வதற்கு  தயாராக இருந்த போது நான் வேற ஒரு வேலை காரணமாக மீண்டும் கலையகத்து செல்ல வேண்டி  இருந்தது...அப்போதுதான் நமக்கு ஆப்பு ஆயத்த மாகியிருக்கிறது...
பொதுவாக எங்களுக்காக அதிகாலை வேளையில் கடமைக்கு வரும்போதும் இரவு நேரங்களில் வீட்டுக்கு செல்லும்போதும்  மட்டுமே கூட்டுத்தபனத்தால் போக்குவரத்து வசதிகள் வழங்கப்படும், மற்ற நேரங்களில் அந்த வசதி இல்லை.   அது மட்டுமல்லாமல் புது வருட தினத்தில் கொழும்பில் ஒரு போக்குவரத்து வாகனத்தை  கண்டு கொள்வதே குதிரைக்கொம்பு.
பாதைக்கு வந்து நீண்ட நேர காத்திருப்புக்கு மத்தியில் ஒரு முச்சக்கர வண்டி வந்து சேர்ந்தது அந்த வண்டியில் நான் ஏறவில்லை என்றால் மற்ற மூன்று பேரும் வீடு போய் சேரலாம்... ( அந்த அளவுக்குத்தான் இட வசதி இருந்தது) அகவே அந்த இடத்தி ஹீரோவாக மாறி அவர்களை வழி அனுப்பி வைத்தேன்....  இன்னுமொரு வாகனம் வாராதா வாராதா என்ற
ஆவலோடு  நீண்ட நேரமாக காத்திருந்தேன் ,
ஹ்ம்ம் பயனில்லை.. அந்த நேரம் நண்பர் மரூஸ் தனது கடமையை முடித்து விட்டு வந்து என்னுடன் சேர்ந்தார் ,, இப்போது கொஞ்சம் நிம்மதி தனியாக இல்லாமல் பேச்சு துணைக்கு இன்னுமொரு நண்பர். இப்பொழுது இருவரும் சேர்ந்து காத்திருக்கிறோம்..சொன்னால் நம்ப மாட்டீர்கள் அந்த நேரத்தில் அந்த வீதியில்
ஒரு வாகனத்தை பார்பதற்கு  எவ்வளவு ஆசையா இருந்தது தெரியுமா?
இரவு முழுவது கண் விழித்ததன் காரணமாக தூக்கம் வேற கண்ணை கட்டியது ,

நாங்கள மருதானைக்கு  செல்ல வேண்டும்  ஆகவே அலுவலகத்துக்கு முன்னால் நின்று கொண்டு (பௌத்தாலோக மாவத்தை) தும்முல்ல சந்தி வழியாக ஒரு வாகனம் வாராதா என்ற எதிர்பார்போடு மூன்று மணித்தியாலங்கள்  அந்த இடத்திலேயே கழிந்தது..

நம்பிக்கை இழக்காமல் இருவரும் காத்திருந்தோம்.(அந்த நேரத்துக்கு நடந்து சென்றிருந்தாலும் மருதனைக்கு சென்றடைந்திருக்கலாம் எண்ண செய்றது தூக்க கலக்கம் வேறு முடியல ) .
எங்கள் எதிர்பார்ப்பு வீண் போகவில்லை ,,,, நெஞ்சில பால் வார்த்தது போல் இருந்தது... ஆமாம் தொலைவில் ஒரு பஸ் வண்டி வந்து கொண்டிருந்தது, எப்படியும் அந்த பஸ்ஸில் ஏறிடலாம் என்ற நம்பிக்கையில் காத்துகொண்டிருந்து பஸ் ஓரளவுக்கு எங்களை நெருங்கும் போது நண்பர் மரூஸ் அந்த பஸ் வண்டியை நெருங்கி நிறுத்துவதற்காக கை அசைத்தார் .......
பஸ் வந்தது ... எங்களை நெருங்கியதும் எங்களை தூக்கி வாரி போட்டது !!! ஆமாங்க வந்தது போது போக்குவரத்து பஸ் இல்லங்க.அது ""சிறைக்கைதிகளை ஏற்றி செல்லுகின்ற பஸ் வண்டி""..
அந்த பஸ் ஓட்டுனர் பஸ்ஸை  கொஞ்சம் மெதுவாக செலுத்தி எங்களை பார்த்து ஒரு புன்முறுவல் செய்தார்... அந்த புண் முறுவல்.. '' தம்பிகளா என்னடா உள்ள போக ஆசையா இருக்கா என்னு கேட்டது போலவே இருந்தது" ..
  அம்மாடியோவ் ...வந்த தூக்கம் எங்க போனது என்றே தெரியல ..பிறகும் தொடர்ந்தும் காந்திருந்தோம் பலனில்லை, எண்ண செய்றது நம்ம நடை ராஜ சர்வீஸ் மூலமாக சிரித்துக்கொண்டே வீடு போய் சேர்ந்தோம்.

இப்ப நினைச்சாலும் சிரிப்பு பிச்சுகுதுங்க................( இந்த விடயம் இதுவரைக்கும் எங்கள் அறிவிப்பாளர்கள் யாருக்கும் தெரியாது) .