ad

Monday, August 23, 2010

ஏன் இப்படி இருக்கிறாங்களோ தெரியல..!!

ஆமாங்க இவங்கள பார்த்தால் எனக்கு கவலையாதான் இருக்கு, என்ன பன்றது அவங்களும் என்ன செய்வாங்க? அவங்க இயல்பு அப்பிடி.
என்னங்க ரொம்ப குழப்பிட்டனோ?. ஓகே விசயத்துக்கு வரலாம்...

சிலரை பார்த்தால் எப்பவுமே முகத்தை 'உம்' என்றே வைத்து கொண்டிருப்பார்கள் , மருந்துக்கு கூட சிரிக்க  மாட்டார்கள். ஏன் இப்படி  இருக்கிறாங்களோ தெரியல..!!
ஆரோக்கியமான மனிதனிடமிருந்து பல்வேறு சந்தர்ப்பங்களில்  இயல்பாக வெளிப்படக்கூடிய இந்த சிரிப்பானது எங்கள் மனதையும் உடலையும் வலிமைப்படுத்த கூடியது என்று மருத்துவ உலகம் சொல்கிறது.
வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் என்று சொல்வார்கள், இப்படி அடிக்கடி சிரிப்பவர்களுக்கு ஏராளமான பலன்கள் கிடைக்கிறது , ஆனால் இந்த பலன்களும் தேவையில்ல, ஒரு மண்ணும் தேவையில்ல என்று சிலர் எப்போதுமே சோகத்தில் இருப்பது போன்று காட்சி தருவார்கள்.
இதற்கு அவர்கள் வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சனைகள் மட்டும் காரணமல்ல அவர்களின் மரபுப்பன்புகளும் தான் காரணம் என்று இப்பொழுது விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளார்கள் , ஒருவரின் வாழ்வில் மகிழ்ச்சியை தீர்மானிப்பதில் மரபுப்பன்புகள் ௯௦ சதவீத இடத்தை பிடித்துள்ளதாம்..... ஆகவே சிரிக்காதவர்கள் பற்றி நாங்கள் கோவப்பட நியாயமில்லை போலவே தோன்றுகிறது....

சிரிப்பு எங்களுக்காக கொண்டு வரும் சில நன்மைகள்....
  • சமூகத்துடன் ஒன்றி வாழ இந்த சிரிப்பு எங்களுக்கு உறுதுணை புரிகிறது, பாருங்கள் நகைச்சுவைகளை அள்ளி விடுபவர்களைச்சுற்றி எந்த நேரமும் ஒரு கூட்டம் இருந்து கொண்டே இருக்கும்.
  • சிரிக்கும் போது உடலில் 300 தசைகள் அசைகின்றன.இதன் மூலமாக  உடலிலும், மனதிலும் உள்ள அழுத்தங்களும், கவலைகளும் இல்லாமல் செய்யப்படுகிறது . குறிப்பாக முகத்திலுள்ள தசைகளும், நெஞ்சுத் தசைகளும் பலம் பெற்று ஆரோக்கியத்தைத் தருகின்றன.

  • சிரிக்கும் போது ஆழமாக மூச்சை இழுக்க முடிவதால் உடல் கூடிய ஓட்சிசனை  உள்வாங்கிக் கொள்கிறது இதனால் இரத்த ஓட்டம் சீராகி இருதயம் சம்பந்தமான நோய்கள் வருவதை இந்த சிரிப்பு தடுக்கிறது. 
  • சிரிப்பு மனதை வலிமைப்படுத்தி புத்துணர்வுடன் வைத்திருக்கும். எவ்வளவு கடினமான பணிகளை செய்தாலும் புதிய உத்வேகம் கிடைக்கும் வகையில் உடலுக்குள் தூண்டுதலை சிரிப்பு ஏற்படுத்துகிறது.... 

  • தினமும் அரை மணி நேரம் மனம் விட்டுச் சிரித்தால் மாரடைப்பை வருவிக்கும் மன அழுத்த ஓர்மோன்களும், அதன் மூலக்கூறுகளும் பெருமளவு குறைந்து உடல் ஆரோக்கியமடையும். குறிப்பாக சிரிப்பது என்றால் வெறும் உதடுகள் மட்டும் சிரித்தால் போதாது , வாய் விட்டு வயிறு குலுங்க சிரிக்க வேண்டும், .
  (அரைமணி நேரம் சிரிப்பது எப்படி என யோசிப்பவர்களுக்கு, அரைமணி நேரம் சிரிப்பது ஒன்றும் கடினமான காரியம் அல்ல. ஏதேனும் ஒரு நகைச்சுவைப் படத்தை பார்க்கலாம், அல்லது நகைச்சுவை நிகழ்சிகளை பார்கலாம்...  )


சிரிக்க சில...............

மீண்டும் வடிவேலு, பார்த்திபன்..

“பார்த்தி.. இது என்ன ரோடுப்பா?”
“தார் ரோடு”

“ம்க்க்ஹும்.. இந்த ரோடு எங்க போகுதுன்னு கேட்டேன்?”
“எங்கேயும் போகலை.. இங்க தான் இருக்கு”

“ம்ம்… சரி.. நான் தெளிவா கேக்கிறேன். இந்த ரோடு எந்த ஊர்களுக்கு நடுவுல இருக்கு?”
“உள்ளூருக்கும் வெளியூருக்கும் நடுவுல இருக்கு.”

“ப்ப்ச்ச்… இந்த தார் ரோட்டுக்குன்னு ஒரு பேரு வச்சிருப்பாய்ங்கல்ல.. அதச் சொல்லுயா..”
“அப்படித் தெளிவா கேளு.. அப்போதானே கரெக்டாச் சொல்ல முடியும்…”

“அதத் தானே தெளிவா மொதல்லருந்து கேட்டுக்கிட்டு இருக்கேன்.”
“என்ன கேட்டே?”

“இது என்ன ரோடு?”
"இது தார் ரோடு."

Tuesday, August 17, 2010

டெங்கு , டிங்கு, சங்கு, கிங்கு .........................

இலங்கை ரசிகர் :- :- அண்ணேய் நம்ம யுவிக்கு
                                       ( யுவராஜ் சிங்க செல்லமா  அப்பிடிதான்
                                        அழைபோமுல்ல........    டெங்கு காய்ச்சலாமே ....

இந்திய ரசிகர்:-      அட சீ யுவிய்கு  இப்பிடி ஆச்சே
                                    நல்லா விளையாடுற பிள்ளையாச்சே ,
                                    இப்ப காய்ச்சல் வந்து படுத்து கிடக்குறானே...     

இலங்கை ரசிகர் :- விடுங்க அண்ண விடுங்க ,,
                                     மைதானத்துல போய் ரெஸ்ட் எடுக்கிறத விட 
                                      பெட் ல ரெஸ்ட் எடுக்கட்டுமே .. ( ஹீ ஹீ ).
  
இந்திய ரசிகர்:-    இன்னைக்கு எப்பிடியும்  போட்டியில 
                                  ஜெயிச்சாகனும்  இல்லன்ன எங்களுக்கு  முதல்
                                   எங்க மானம் கப்பல் ஏறிடும்.  


இலங்கை ரசிகர் :- நாங்க மட்டும் என்ன??
                                     சும்மாவா விட்டுடுவோமா... பார்க்கலாம்.


இந்திய ரசிகர்:-    எல்லாம் சரி இந்த டாஸ் தானே பயமா இருக்குது, 
                                    யாருக்கு விழ போகுதோ........... 
                                   டோஸ் ல ஜெயிச்சா முதல் ல பட்டிங் செய்யலாம்....... 


                   நேரம் :- பி.ப.2.30 (  தம்புள்ள கிரிக்கெட் மைதானம் ) - Toss
Comm:- Srilanka won the toss and elected to bat first. 

இலங்கை ரசிகர் :- ஹீ ஹீ இப்ப என்ன பன்னுவீவ்க இப்ப என்ன பண்ணுவீங்க 
                                                        Sl won the toss and batting 1st.. Yuvi is down with Dengu.. Now MSD is down  with Dingu after the toss?  ஹீ ஹீ ஹீ.


போட்டி  முடிவடைந்த   பின்னர் ..... 

இந்திய ரசிகர்:-      இப்ப என்னங்க சொல்றீங்க டெங்கு, டிங்கு 
                                      என்றெல்லாம் பேசினீங்களே உங்க சங்காவுக்கு 
                                       இப்ப நாங்க ஊதிட்டமுல்ல  சங்கு ...

இலங்கை ரசிகர் :- அதுதாங்க சரி ஏனென்னா..................
                                     இன்னைக்கு உங்க சேவாக் தாங்க  கிங்கு. 
 
இந்திய ரசிகர்:-   உங்க ரண்டிவ் இன்னம் கொஞ்சம் முன்னாடி 
                                   போய் கடைசி  பந்தை வீசிருக்கலாமே ...
                                   நோ போல் போடுறாங்களாம்   நோ போல்..... 
                                   பார்த்தீங்கல்ல எப்பிடி போட்டாலும் 
                                   விரட்டி விரட்டி  அடிப்போம்.... 


இலங்கை ரசிகர் :-நம்ம பசங்க எதை செய்தாலும் கொஞ்சம் 
                                     பெரிசா செய்துதான் பழக்கம் அதுதான் 
                                     இந்த நோ போலும் கொஞ்சம் 
                                     பெரிசா போய்விட்டது போல இருக்கு .. ஹீ ஹீ

இந்திய ரசிகர்:-    ஹீ ஹீ... இதில மட்டும் தான பெரிசா செய்வாங்களா  
                                     இல்ல துடுப்புகளையும்  பெரிசா அகலமா  செய்வாங்களா... ??

இலங்கை ரசிகர்:-  தேவை பட்ட நாங்க விக்கெட்டுகளையும் 
                                    பெரிசாக்குவம்,  பந்தையும் பெரிசாக்குவம்..
                                     ( நாலு பேருக்கு நல்லது நடந்தால் எதுவும் தப்பில்ல...)) 

இந்திய ரசிகர்:-     அது சரி இப்ப எதுக்குங்க   இந்த மல்லு  கட்டுறீங்க 
                                    நீங்க இறுதி போட்டிக்கு வந்தும் தோற்க தானே போறீங்க..??

 இலங்கை ரசிகர்:-  ஒரு ஆசிய போட்டியின் இறுதி போட்டியின் 
                                       முடிவ வச்சு  சின்ன புள்ள தனமா பேசப்படாது ....
                                       ஓவர் நினைப்பு சரிவராது ... பார்க்கலாம் பார்க்கலாம் 
                                       இறுதி போட்டியில யாரு ஜெயிக்கிறது என்னு.... 


இந்திய ரசிகர்:-     நீங்க நிச்சயமா ஜெயிக்க போறதில்ல ,
                                   ஏனென்னா நீங்க இறுதி போட்டிக்கே வர  போறதில்லையே....


ரிங் ரிங் ரிங்  ரிங் ரிங் ரிங் .....................



அட சீ இந்த நேரத்துலையா இந்த அலாரம் அடிக்குறது!!!!  கடைசி வரைக்கும் என்ன பேசியிருபாங்க என்னு தெரியாமலே   போயிட்டுதே.....  ( நேற்று இரவு இலங்கை இந்திய அணிகளின் போட்டி முடிவடைந்த  பின்னர் தூங்கிய பிறகு  நான் கண்ட கனவு தான் இது...) 

Monday, August 16, 2010

மானம் போச்சு......

வந்த இடத்துல இப்பிடியா..? இதெல்லாம் ஒரு நாடா என்று மட்டும்  தயவு செய்து கேட்டுடாதீங்க யுவராஜ் சிங்......... எங்களால தாங்க முடியாது.!
ஆமாங்க இலங்கை வந்திருக்கின்ற இந்திய கிரிக்கெட் அணி வீரர் யுவராஜ் சிங் இப்பொழுது 'டெங்கு' காய்ச்சலினால் பாதிக்கபட்டிருக்கிறார். காலையில் செய்தி கேட்கவே கவலையாக இருந்தது .


 "இலங்கையில் இப்பொழுது டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
 ஜனவரி மாதம் முதல் இதுவரை 108 பேர் டெங்கு காய்ச்சலுக்கு இறந்துள்ளனர். 7000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்."

டெங்கு காய்ச்சலை பற்றிய தகவலை -மருத்துவர் ப.செல்வராஜன்- சொல்லியிருக்கிறார் கிளிக் பண்ணி பாருங்கள்.

ஏராளமான  மனித  உயிர்களை  காவு  கொள்ளுகின்ற இந்த கொடிய நுளம்பிளிருந்து  அனைவரையும்  பாதுகாக்க  சுகாதார துறை எவ்வளவுதான் முயன்றாலும் அதனை கட்டுபாட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை , இதற்கு முக்கிய காரணம் பொதுமக்களின் கவலையீனமே, காரணம் இந்த கொடிய நுளம்புகள் பரவாமல் தடுக்க அதன் உற்பத்தி இடங்களை அழிப்போம் என்று எத்தனை தடவைகள் சொன்னாலும் அதனை பாராமுகமாக இருப்பது , உங்களில்  ஒருவரை காவு கொண்டதன் பின்னர்தான்  விளங்குமோ  தெரியவில்லை.

இதன் மூலமாக எங்களுக்கு மட்டுமில்லாமல் எங்கள் நாட்டுக்கும் இப்பொழுது கெட்ட பெயர் வந்திருக்கிறது,( இதனால மட்டும்தான் கெட்ட பெயர்  வந்திருக்காக்கும் என்று மொக்கையா யோசிக்கமாடீங்க என்று நம்புறன்)  நம்ம  நாட்டில் கிரிக்கெட் விளையாட வந்தவருக்கும் குத்தி தன வரவேற்பை வெற்றிகரமாக வழங்கியிருக்கும் டெங்கு நுளம்பாரை  என்ன என்று சொல்வது , இனி நம்ம நாட்டுக்கு எப்படி வெளிநாடவர்கள் நம்பி வருவார்கள் ...... ''அடேய் எங்கடா  போகிறாய் இலங்கைக்கா ? அங்க போகாதடா அங்க டெங்கு நுளம்பை ரொம்ப பாசமாக வாழ வச்சிருக்காங்கடா  ...'' என்று சொல்ல வச்சுடாதீங்க .... போச்சு மானம் எல்லாமே போச்சு.

எனவே இந்த கொடிய டெங்கு நோயிலிருந்து எம்மையும் எம்மை நம்பி வருகின்ற விருந்தாளிகளையும் பாதுகாக்க வேண்டியது நம் கடமை.

                                  ஒன்று பட்டு  டெங்கை  விரட்டுவோம்.

Sunday, August 15, 2010

நிச்சயம் வெற்றி உங்கள் பக்கம்.

நங்கள் எங்கள் வாழ்க்கையிலே எங்களை அறியாமலே  எவ்வளவோ தவறுகள் செய்திருப்போம், அதே போல பல்வேறு காரணங்களுக்காக   பல்வேறு சந்தர்பங்களில் துவண்டு போய் மனமுடைந்திருப்போம் அந்த சந்தர்பங்களில் சில மனிதர்கள் மூலமாக நமக்கு ஆறுதல் வார்த்தைகள் அல்லது நம்பிக்கை தரும் வசனங்களை  கேட்டிருப்போம்.இவற்றை  தவிர சில நூல்கள் எங்களை உற்சாக படுத்தி நல்வழி படுத்தி இருக்கும் ,


அந்த வகையில்  எனது  வாழ்க்கையில்  சந்தித்த சில  வைர வரிகள் சிலவற்றை இங்கே பதிவிடுகிறேன், நிச்சயமாக இந்த வரிகள் உங்கள் வாழ்க்கையிலும் ஏதாவது சாதகமான மாற்றங்களை ஏற்ப்படுத்தினால் எனக்கு மட்டில்லா மகிழ்ச்சியாக இருக்கும். படித்து பாருங்கள்.
======================================================
  • வெற்றி உங்கள்  தலைக்குச் செல்ல வேண்டாம், தோல்வி உங்கள் இதயத்துக்குச் செல்ல வேண்டாம்.
  • எவன் ஒருவன்  கடவுளிடமிருந்து காலையில் விலகி ஒடுகிறானோ , அவனால் நாள் பூராகவும் கடவுளை உணர முடிவதில்லை.
  • நாளைக்கு நான் வாழ்வேன் என்று முட்டாள்கள் தான் சொல்லுவார்கள். உண்மையில் இன்று என்பதே தாமதம்மனதாகும் . புத்திசாலிகள் நேற்றே வாழ தொடங்கியிருப்பார்கள்.
  • நற்பண்புகள்  தேனீக்களை  போல  ஒவ்வொரு  மலரிலிருந்தும் தேனைச்க் சேகரிக்கும் , தீய பண்புகள் சிலந்தியைப்போல இனிமையான மலரிலிருந்தும் கூட விசத்தை மட்டுமே உறிஞ்சும். 



  • ஒரு வாலிபன் நேர்மையாக உழைக்காமலேயே பணத்தை அடைவது எப்படி என்று எந்த கணத்தில் உட்கார்ந்து யோசிக்க தொடங்குகிறானோ ,அந்தக் கணத்தில் அவனுடைய இருண்ட வாழ்கை ஆரம்பித்து விட்டது என்று அர்த்தம்.



    • எதுவுமே செய்யாமல் சும்மா இருப்பவன் மட்டும் சோம்பேறியல்ல .தன்னால் முடிந்தும் இன்னமும் நல்ல வேலையைச்ச் செய்யாமல் இருப்பவனும் சோம்பேறிதான்.



    • கோபத்துடன் இருக்கும் போது பேசுங்கள் , அப்போதுதான் நீங்கள் வாழ்நாள் முழுவதும் வருத்தப்படும் படியான பேச்சைப் பேசியிருப்பீர்கள்.



    • ஒரு மனிதன் தவறு செய்துவிட்டு ,அதை ஒப்புக்கொள்ள வேண்டாம் என்று முடிவு  செய்து  விட்டால்  உடனே  கோபப்பட தொடக்கி விடுவான். 



    • சரியான விசயங்களை சரியான சமயத்தில் பேசுவது மட்டுமே சிறந்த பேச்சு ஆகாது , உணர்ச்சிவச படக்கூடிய தருணங்களிலும் கூட பேச கூடாததைப் பேசாமல் விட்டு விடுவதும் சிறந்த பேச்சு ஆகும். 



    • யார் நிறைய பேசுகிறார்களோ அவர்கள் அவர்கள் குறைவாகவே யோசிக்கிறார்கள். 



    • பரிசுப்பொருட்களை  மட்டுமே கொடுத்து  நட்பை  விலைக்கு  வாங்காதே . பரிசு பொருட்கள் தீர்ந்து போனவுடன் அவர்களது அன்பும் காணாமல் போய்விடும். 



    • மகத்தான வாய்ப்புக்கள் எல்லோருக்குமே வருகின்றன , ஆனால் அவற்றைச்க் சாதாரண மனிதர்களால் கண்டு கொள்ள முடிவதில்லை. 



    • உங்களது எதிகள் சொல்வதைக் கவனியுங்கள் அவர்களே உங்களது தவறுகளைச்  சரியாக கவனித்துச் சொல்ல கூடியவர்கள். 



    •  மற்றவர்கள் நம்மைப் பாராட்டுவது நாம் இப்போது எந்த நிலையில் இருக்கிறோம் என்பதை கட்ட்ருக்கொள்ள அல்ல .எதிர்காலத்தில் எந்த நிலைக்கு உயர வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்வதற்காகத்தான். 

    • ஒரு  இளைஞன் தன்னை தான் உருவாக்கி கொள்வதற்கான விதிகள்:

                1.மிக குறைவாக பேச வேண்டும்
                2.அதிகமாக கவனித்து கேட்க வேண்டும்
                3.நிறைய பேர்களின் மத்தியில் இருக்கும் போது  குறைவாகவே           தமது  கருத்துக்களை பிரதி பலிக்க வேண்டும் .
                4.தனது அபிப்பிராயங்களை குறைத்து அடுத்தவர்களுடைய  கருத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.    



    • தனக்கு நல்லவற்றை செய்துகொள்ளும் ஒருவனை யாரும் சுயநலம் பிடித்தவன் என்று யாரும் சொல்வதில் .மற்றவர்களின் நலத்தை புறக்கணிப்பவனையே சுயநலம் பிடித்தவன் என்று சொல்கின்றோம்.  



    • ஒரு மனிதன் விழாமலே வாழ்த்தான் என்பது பெருமையல்ல , விழுந்த போதெல்லாம் எழுந்தான் என்பதுதான் பெருமை. 


    நீ இறக்கும் போது உனக்காக அழக்கூடியவர்களை உன் உயிருள்ளபோதே தேடி வைத்துக்கொள்.



     


Saturday, August 14, 2010

இது உங்களுக்கு தோணலையா?

இன்றைய தினம் எதை பதிவிடுவதேன்று கொஞ்சம் ஆழமாக யோசித்து  பின்னர் நல்லதொரு விடயத்தை சொல்லலாம் போல இருந்துச்சு அதுதான் காலையிலேயே அள்ளிக்கட்டிக்கொண்டு வந்தாச்சு....

அதாவது இதுவரைக்கும் அடியேன் எழுதிய பதிவுகளுக்கு ( மொக்கைகளுக்கு ஹீ ஹீ.. ) நண்பர்களால் வழங்கப்பட்ட பின்னூட்டங்களில் எனக்கு ரொம்ப பிடிச்ச பின்னூட்டங்களை
தர போகிறேன் , பதிவுகள், பின்னூட்டங்கள் அனைத்துக்கும் இணைப்பும் கொடுத்துள்ளேன், முடிந்தால் மீண்டும் ஒருமுறை  பதிவுகளை பார்வை இடுங்கள் மறக்காமல் பின்னூட்டங்களையும் வோட்டுக்களையும் குத்த மறக்காதீங்க....

 "புத்திமான் பலவான் " -  

   டொக்டர்.எம்.கே.முருகானந்தன் said... மொட்டையடித்து   'தலைக்கனத்தை' குறைத்தா

 அடி ஆத்தி அப்படியா சங்கதி....!!!!!




சந்ரு said...
//**ஒவ்வொரு மணி நேரத்திற்கும் உலகம் முழுவதும் உள்ள வங்கிகளில் 22 ஆயிரம் காசோலைகள் தவறான வங்கி கணக்குகளில் "வரவு " வைக்கப் படுகிறதாமுன்கோ.......// நம்ம கணக்கிலும் வரவு வைத்துட்டாங்கன்னா... ???????????       அபிரகாம் லிங்கனும் நானும்..... ( 37 comments)



Ammu Madhu said...
எனக்கும் ரொம்ப கோவம் வரும்..யாரோ ஒருத்தங்க கோவத்தை கட்டுப்படுத்த யோகா பண்ண சொன்னாங்க..எனக்கு யோகா சொல்லி தந்த டீச்சருக்கே கோவம் வர வச்சுடோம்ல!!!:))) கொண்டாட்டமும் , "கொல்லும்"வாட்டமும். 

LOSHAN said... மனிதாபிமானத்தை தட்டியெழுப்பும் வரிகள்..

//இவர்களுக்கான " உணவு " கவசங்களை தயாரிக்க எத்தனை பேர் தயார்?????//
விடையில்லாத கேள்வி..

 

இந்திய நாட்டின் பிரிவினைக்கு நேரு காரணமா ?

 Robin said... முஸ்லிம்களுக்கு எதிராக மத வெறியர்கள் வெறுப்பை தூண்டியதும் அதனால் முஸ்லிம்களிடையே தோன்றிய அச்சமும் அந்த அச்சத்தை சுய லாபத்திற்காக பயன்படுத்திய ஜின்னா அண்ட் கோ-வும் தான் இந்தியா பிளவுபட காரணங்கள்.

"தலைவருக்கான " என் பகிரங்க மடல்....

வந்தியத்தேவன் said... நாட்டில் அதிகம் தலைவர்கள் இருக்கின்றார்கள் எந்த தலைவருக்கு கடிதம் என ஆவலுடன் வாசித்தால் கடைசியில் நம்ம அழுக்கடை நுளம்பாருக்கு கடிதம். அவரைச் சில நாட்கள் அமைதியாக இருக்கச் சொல்லவும்.  

 

புகைக்க போறீங்களா ? அப்ப நான் பொறுப்பில்ல !!!!

தேவன் மாயம் said... இதைவிட சிறப்பா புகையின் கொயுமையை சொல்ல முடியாது!!

 

என்னாத்த சொல்லுறது இத பற்றி.........




தேவன் மாயம் said...
காதல்.- "காதல் ஒரு எளிமையான பாடம்தான் ஆனால் அதில் - பல பேர் தோற்று போகிறார்கள்." இது ஒரு கவிஞனின் பார்வையில் // மிகச்சரிதான் !!

எழுத மறந்த கவிதைகள்......பாகம்-1
அக்பர் said... //நினைவுகள் குழந்தைகள் மாதிரி...
அழுத பின்புதான்உறங்குகின்றன...//

எப்படித்தான் தோணுதோ...
நல்ல வரிகள்.தொடர்ந்து எழுதுங்கள். 

 

எந்த கை உங்கள் நம்பிக்"கை" ?

 வண்ணத்துபூச்சியார் said... சுவாரசியமான தகவல்கள். நானு இரண்டு கையாலே தான் இந்த பின்னூட்டத்தை டைப் பண்ணினேன்.

நன்றி. 

  

இதுவல்லவோ தீர்ப்பு................




சி. கருணாகரசு said...
இததான் எங்க ஊருல...தவள தான் வாயால கெடும்முன்னு சொல்லுவாங்க.    "அது " போல வருமா?... Cable Sankar said... ஆட்டுக்கல்லில் அரைக்கப்பட்ட சட்னியின் சுவை என்ன தான் சூப்பர் மிக்ஸியில் அரைத்தாலும், அந்த அரைபடாத பருப்பும், திப்பி திப்பியான தேங்காயும் தோசையோடோ, இட்லியோடு உள்ளே போகும் போது கிடைக்கும் சுவை.. டிவைன். 

 

கள்ள நோட்டும் நல்ல நோட்டும் .....

ஜுர்கேன் க்ருகேர்..... said... நம்ம நாட்டுல தலைமை தேர்தல் அதிகாரியின் பெயரே வோட்டர் லிஸ்ட் ல இல்லையாம்.அப்படியிருக்க ரிசர்வ் பேங்க் கவர்னர் கிட்ட கள்ள நோட்டு இருந்தாலும் ஆச்சரியபடுவதற்கு இல்லை.

 

"பணம் காய்க்கும் மரம்" !!!!!!

ஆயில்யன் said... //தலைப்பை பார்த்து நிறைய பிடுங்கலாம் என எண்ணி ஓடோடி வந்த நண்பர்கள்// வரவேற்பு பலமா இருக்கேன்னு ஆசை ஆசையா ஓடோடி வந்தேன் ஒண்ண்ணுமில்லையா !   அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.

 

'பல் ஞானம்' பெற்று விட்டீர்களா.......??????

 Sinthu said... எனது நண்பி ஒருத்தி சொன்னால் தனக்கு ஞானப் பல் முளைப்பதாக, ஆனால் நான் நம்பல்ல... அடக் கடவுளே அது உண்மையா...? 

 

ஐயோ அப்பிடியா ?????

வால்பையன் said... உங்கள் வருத்தம் புரிகிறது!

உலகில் பழையன அழிதலும், புதியன புகுதலும் ஆண்டாண்டு காலமாய் நடந்து வருகிறது!இப்பொழுது தான் யாழ்பான தமிழ் என்ற ஒரு சீரிய தமிழ் மொழியின் கிளை அழிந்திருக்கிறது!இன்னும் கொஞ்சம் நாளில் கேரளாகாரனும், கர்நாடகாகாரனும் தண்ணீர் தராமல் தமிழ்நாடு என்பதையே வாழ தகுதியில்லாத நாடாக மாற்றிவிடுவான்!புலம் பெயர்ந்து நாடு நாடாக திரிவோம்!அங்க போய் தமிழ வளர்க்க போறேன்னு சொன்னா என்ன பண்ணுவான் தெரியுமுல்ல! நமது கேடு கெட்ட அரசியல் இருக்கும் வரை தமிழ்நாட்டோடு சேர்ந்து தமிழையும் மறக்க வேண்டியது தான்!,

 

தயவு செய்து இத பார்க்க வேணாம்.

 seemangani said... உங்க படமும் துக்கு போட்டுருக்க Comment 'ஸ் உம் நல்லக்கு...நண்பா....

 

 ====================================================

பார்த்தீங்கள் நண்பர்களே எனக்கு பிடித்த கருத்துரைகளை , இப்போ உங்களுக்கு பிடிச்ச மாதிரி உங்க கருத்துக்களை சொல்லிட்டு போங்க, ஒட்டு குத்துவீங்க அது எனக்கு தெரியும் ஏனென்றால் அது உங்கள் உரிமை , அதனை சரியாக பயன்படுத்துவீகள் எனக்கு நம்பிக்கை இருக்கு. ஹீ ஹீ.

 


 

Friday, August 13, 2010

ரேடியோ சிலோன் ( RADIO CEYLON ).

தொடர்பாடல் என்னும் பதமானது , இலத்தீன் சொல்லான 'கொம்முனி கேயார்'(Communicare)   என்ற சொல்லிலிருந்து வந்த ஒரு பதமாகும்.
'கொம்முனி கேயார்' என்பது, பொதுமைப்படுத்தல், வெளிப்படுத்தல் ,பகிர்ந்து கொள்ளல், ஊடுகடத்தல் போன்ற அர்த்தங்களை தரும்.
வெகுசன தொடர்பாடல் என்பது பொதுமையை ஏற்படுத்த அல்லது சில கருத்துக்களை அநேகமான மக்களிடையே அல்லது கூட்டத்தினரிடையே பகிர்ந்து கொள்ள முனைவதாகும்.

தொடர்பாடல் எனும் தொடர் செயற்பாடு , ஒருவரிடமிருந்து மற்றவருக்கு தகவல்களை கொடுக்க, சமிஞ்சை கொண்டு செல்ல , தெரிவிக்க அல்லது பெற உதவும் சாதனமாகும்.

இவ்வாறான தொடர்பாடல்களை  ஏற்படுத்த இப்பொழுது ஏராளமான நவீன தொடர்பாடல் சாதனைகள் இருக்கின்ற போதிலும் 'வானொலி' க்கென்று இன்றும் தனி இடம் இருப்பதை யாராலும் மறுக்கவும்  மறைக்கவும் முடியாது .

அப்படிப்பட்ட வானொலி இப்பொழுது இணையத்தள  பாவனை அதிகரித்த பின்னர் 'மலிந்து' காணப்படுவதாகவே தோன்றுகிறது காரணம் முன் போல வானொலி நிலையமொன்றை ஆரம்பிக்க அதிக பொருட்செலவுகளோ ஆளணி வளங்களோ இப்பொழுது தேவையில்ல, ஒருவரே இருந்த இடத்திலிருந்தே வானொலியை ஆரம்பிக்க கூடியதாக இருக்கிறது . இது ஒரு 'காத்திரமான போக்கு' என்று சொல்வதற்கு எனக்கு தெரியவில்லை. 

வானொலி வரலாற்றில் உலகில் எத்தனை வானொலிகள் வந்தாலும் இலங்கை வானொலிக்கு என்றுமே ஒரு தனி இடம் இருப்பதை ஏற்றுக்கொள்வீர்கள் என்று நினைக்கிறேன் .

இன்று சர்வேத ரீதியாக கூவிக்கொண்டு இருக்கின்ற அநேகமான  வானொலி குயில்கள்  'இலங்கை வானொலி' என்ற கூட்டிலிருந்து பறந்து சென்றவை என்பதை  யாராலும் மறுக்க முடியாது, அத்தோடு இலங்கையில் இப்போது சிறப்பாக தங்களது பணிகளை நடாத்திக்கொண்டிருக்கின்ற அனைத்து தனியார் வானொலி நிலையத்து நண்பர்களும் எதோ ஒரு வகையில் இலங்கை வானொலியோடு உறவுகளை வைத்திருப்பவர்கள்.

குறிப்பாக, இலங்கை வானொலி என்னும் ஒலிபரப்பு  ஆல  விருட்சத்தில்  விளைந்த எத்தனையோ ஒலிபரப்பாளர்கள் லண்டன் பீ பீ சி , கனடிய கீதவாணி, கனடா தமிழ் ஒலிபரப்பு  கூட்டுத்தாபனம், ஆஸ்திரேலிய இன்ப தமிழ் வானொலி , பிரான்சின் ttr.,  லண்டனில் ஷ்பெக்ரம்  கானக்குயில் என உலகெங்கும் விரியும் இத்தனை ஒலி குயில்களும் கூவ ஆரம்பித்தது இலங்கை வானொலியில்தான்.   

இப்படி இலங்கை வானொலி பற்றி இப்பொழுதான்  கொஞ்சம்  கொஞ்சமாக  அங்கு கூவ ஆரம்பித்திருக்கும் இந்த இளம் குயில் இன்னும் ஏராளமாக சொல்லிவிடுவது அவ்வளவு சுலபமில்லை, இருந்தாலும் இலங்கை வானொலி வரலாற்றில் சில முக்கியமான தருணங்களை ஞாபக படுத்தலாம் என்று நினைக்கிறேன்...
இலங்கையில் ஒலிபரப்பு வரலாறு........... 1923 ஆம் ஆண்டு அதாவது ஐரோப்பாவில் ஒலிபரப்பு அறிமுகப்படுத்தப்பட்டு மூன்று ஆண்டுகளுக்கு பின்பு, இலங்கை தந்தி திணைக்களம் பரீட்சாத்த ஒலிபரப்பை ஆரம்பித்தது.
ஜெர்மன் நீர்மூழ்கி  கப்பல்  ஒன்றிலிருந்து கைப்பற்றபட்ட உதிரி பாகங்களை கொண்டு ஒரு சிறிய ஊடுகடத்தி (Transmeter) அமைக்கப்பட்டது.

பின்னர் குறைந்தளவு உபகரணங்களை  வைத்துக்கொண்டு மத்திய தந்தி அலுவலகத்தின் கட்டத்தில் அமைந்த , ஒரு சிறிய அறையில் வைக்கப்பட்ட இந்த ஊடுகடத்தி(Transmeter) மூலம் பொதுமக்களுக்கான முதலாவது பரீட்சாத்த ஒலிபரப்பு 1924 பெப்ரவரி 22 ஆம் திகதியிலும் பின்னர் இறுதி பரீட்சாத்த ஒலிபரப்பு அதே வருடம் ஜூலை 27 ஆம் திகதியும் இடம்பெற்றது .அதன் பின்பு நிகழ்ச்சிகள் வாரத்துக்கு இரு முறை அல்லது மும்முரைகள் ஒழுங்கற்ற முறையில் ஒலிபரப்பபட்டது. புதிய ஊடுகடத்தியின்(Transmeter) உதவியுடன் , ஒழுங்கமைந்த ஒலிபரப்பு 1925 ஆம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் திகதி உத்தியோக பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. இத்தினத்தை இலங்கை ஒலிபரப்புத்துறையின் அங்குரார்ப்பன தினமாக குறிப்பிடலாம்.

இலங்கை ஒலிபரப்பு துறையில் முக்கிய நிகழ்வுகள்.

1925.12.16 தேசாதிபதி சேர் கியூ கிளிபோட்டினால் ஒலிபரப்பு அங்குரார்ப்பணம்     செய்யப்பட்டது. 
1931.05.31 பாடசாலை ஒலிபரப்பு ஆரம்பமானது
1949.10.01 ஒலிபரப்பு திணைக்களம் 'ரேடியோ சிலோன்' ஆக மாற்றப்பட்டது.

1967.01.05 இலங்கை ஒலிபரப்பு  கூட்டுத்தாபனம் ஆரம்பிக்கப்பட்டது

1979.04.12 முதலாவது  பிராந்திய சேவை அனுராத புரத்தின் ரஜரட்டையில்   ஆரம்பிக்கப்பட்டது.
1981.1015 மகாவலி சனசமூக ரேடியோ சேவை பேராதனையில்   ஆரம்பிக்கப்பட்டது .

 1981.08.26 F.M ஸ்டீரியோ சேவை ஆரம்பிக்கப்பட்டது
                    யாழ்ப்பான பிராந்திய சேவை ஆரம்பிக்கபட்டது ( இப்போது பலாலி).

1983.04.13 கண்டி மஹாநுவர சேவை ஆரம்பிக்கபட்டது.
1986.04.11கிரந்துருகொட்டே சனசமூக சேவை ஆரம்பிக்கபட்டது .
1989.11.03 நகர்புற ஸ்டீரியோ சேவை ஆரம்பிக்கப்பட்டது .(CITY FM)
1992.02.25 ஐரோப்பா , அமெரிக்க ஆகிய தேசங்களுக்கான உலக சேவை            நான்கு மணிக்கு. ஆரம்பிக்கபட்டது
1993.02.01வன்னி ஒலிபரப்பு ஆரம்பிக்கபட்டது .

                                                இலங்கை வானொலி  .

Thursday, August 12, 2010

இறுதி கட்டத்தில் 'தலைவருக்கு' நான் வரைந்த மடல்.

யாழ் தேவியில் பயணம் சிறப்பாக சந்தோசமாக சென்று கொண்டிருக்கிறது, முன் ஆசனத்தில் பயணிப்பது இன்னும் மகிழ்ச்சி , அதிலும் குறிப்பாக நம்மோடு ஏராளமான நண்பர்கள் பயணிப்பது இரட்டிப்பு மகிழ்ச்சி .

இன்றைய தினம் , நான் இதுவரை எழுதியதில் எனக்கும் நிறைய நண்பர்களுக்கு பிடித்த ஒரு பதிவு மீண்டும்   பதிவாகிறது.
 
"தலைவருக்கான் என் பகிரங்க மடல்" , 
.

தலைவரே நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் ? உங்களை நான் உடனடியாக சந்திக்க வேண்டும் ...
சந்தர்ப்பம் கிடைக்குமா?
என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை தலைவரே...!
எவ்வளவு காலத்துக்குத்தான் நான் பொறுத்துக்கொள்வது என்மீது மேட்கொள்ள படும் இந்த கண்மூடித்தனமான தாக்குதல்களை ..
இவ்வாறான தொல்லைகள் தொடர்ந்தால் ஒரு ஊடகவியலாளன் என்ற வகையில்  எவ்வாறு என் பணியை செவ்வனே செய்ய முடியும் சொல்லுங்கள்...? இதற்கு நீங்கள் தான் முடிவெடுக்க வேண்டும்.
குறிப்பாக இந்த தாக்குதல்கள் அதிகமாக இரவு நேரங்களில் தீவிரப்படுத்தப்படுவதனால் என்னால் நிம்மதியான தூக்கத்தை கூட எதிர்பார்க்க முடியவில்லை... இதனை தொடர்ந்தும் என்னால் அனுமதிக்க முடியாது, எனவே உங்களை உடனடியாக சந்திக்க வேண்டும்.... உங்களால் எனக்கு எதுவுமே செய்ய முடியாதா?

இருந்தாலும் பரவாயில்லை....
நான் துணிந்துவிட்டேன்,
எத்தனை பேர் வந்து தாக்கினாலும் பரவாயில்லை ... தனியாக நின்று எதிர்ப்பது என்று முடிவு செய்து விட்டேன் ....

எச்சரிக்கை விடுக்கிறேன் ......

இனி நீங்கள் என்மீது தாக்குதல் மேட்கொள்ள வரும் சந்தர்ப்பங்களில் கவனமாக இருங்கள் எந்த வேளையிலும் உங்கள்
மீது நச்சு திரவங்கள் விசிறப்படலாம்...
உங்களது நரம்பு மண்டலங்களை தாக்க புகை மண்டலங்கள் உருவாக்கப்படலாம்
இதனை தொடர்ந்து உங்கள் மீது , மின்சார வலைகள் மூலம் தாக்குதல்கள் ஏற்படுத்தப்படலாம் ....

இந்த தாக்குதல்களில் இருந்து முடிந்தால் தப்பித்து கொள்ளுங்கள் ...( இவ்வகையான தாக்குதல்கள்தான் இடம்பெறும் என்று சொல்லிவிட்டு தாக்குதல்கள் நடத்துவது துணிகரமான விடயமாகவே சர்வதேச சமூகம் நோக்கும் என்பதில் எனக்கு எந்த விதமான சந்தேகமும் இல்லை ).

எனவே தலைவரே நீங்கள் என்மீது கோபம் கொள்ள கூடாது இவ்வாறான ஆயுதங்களை கையில் எடுத்தமைக்காக....
நான் பலமுறை விலகி விலகி போயிருக்கிறேன் , குறிப்பாக வலைகளுக்குள் என்னை மறைத்துக்கொண்டு பதுங்கி இருக்கிறேன் , அவ்வாறான சன்தரப்பங்களிலுள் என்மீது கண் மூடித்தனமான தாக்குதல்கள் மேட்கொள்ள பட்டதுதான் எனது இந்த முடிவுக்கான காரணம் மன்னித்து விடுங்கள் ...

இவர்களின் தாக்குதல்கள் மூலமாக எனது பெறுமதி வாய்ந்த ஒரு சில குருதி துளிகள் வீணாக்கப்படுவது பற்றி எனக்கு கவலை இல்லை , இவர்களினால் பரப்பப்படும் மிக கொடிய நோய்களான "டெங்கு , மலேரியா .." போன்ற நோய்களுக்குதான் எனக்கு பயமாக இருக்கிறது....


எனவே அன்பின் நுளம்பு ( கொசு) கூட்டத்தின் தலைவரே...!

உங்கள் நுளம்பு சகாக்களிடம் சமாதானமாக பேசி என் மீது கண்மூடித்தனமாக மேட்கொள்ள படும் தாக்குதல்களை நிறுத்த சொல்லுங்கள் .( முடிந்தால் என்னோடு பேச சொல்லுங்கள் , சமாதனம் பேச வருபவர்கள் மீது ஒரு போதும் தாக்குதல்கள் மேட்கொள்ள படமாட்டாது ..)


இல்லை எனின் மேட்சொன்ன அனைத்து தாக்குதல்களும் 'நுளம்பு(௦ கொசு)தீவிரவாதிகள் மீது மேட்கொள்ள படுவதை யாராலும் தடுக்க முடியாது... அது மட்டுமல்ல இந்த நடவடிக்கைகளை எடுக்க தவறும் பட்சத்தில் உங்கள் அத்தனை இருப்பிடங்களையும் தேடிப்பிடித்து அழிக்க நாங்கள் தயாராகவும் உள்ளோம் ,( இதற்கு அமெரிக்க பிரிட்டன் போன்ற நாடுகள் கட்டாயம் நிதி உதவி செய்யும் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை).

நுளம்பு (கொசு) கூட்ட தலைவருக்கான என் மடலை தலைவரின் முகவரி தெரிந்தால் யாராவது தபாலில் சேர்த்து விடுங்கள் ப்ளீஸ்.... ( எவ்வளவு காலத்துக்குத்தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது...)



Wednesday, August 11, 2010

நான் செய்ய மறந்தவை...............

பதிவுலகில் ஏராளமான சீரியசான பதிவர்களும், சில நகைச்சுவையான பதிவர்களும், இவர்களின் பதிவுகள் இல்லை என்றால் பதிவுலகமே சோபை இழந்து போகின்ற அளவுக்கு திறமையாக எழுதுகின்ற பதிவர்கள் , மொக்கையான பதிவிடுகின்ற பதிவர்கள் ( நம்மை போல ஹீ ஹீ).. என்று பல வகையினர் இருக்கிறார்கள்..

பதிவுலகில் காலடி எடுத்து வைத்து நீண்ட நாட்களில் எனது பதிவுகள் நிறைய நண்பர்களிடம் பொய் சேரவில்லை என்று நினைக்கிறேன் இதற்க்கு என்ன காரணம் என்று யோசித்து பார்த்த போது , சில முக்கியமான விடயங்களை நான் செய்ய மறந்திருக்கிறேன்
அதனையே இங்கு நான் செய்ய மறந்தவையாக பதிவிடுகிறேன்.
முக்கியமாக அதிக நண்பர்களுக்கு தெரியும் வகையில் எனது வலைபதிவுகளை தெரியப்படுத்த தவறி இருந்தேன், ( ஆரம்பத்தில் உண்மையில் எனக்கு தெரியவில்லை).

அடிக்கடி நண்பர்களின் பதிவுகளை வாசித்து கருத்துக்களை இட வில்லை இதனால் அவர்களின் பதிவுகளை வாசிக்கின்ற ஏராளமான நண்பர்களுக்கு எனது வலைப்பதிவு பற்றி தெரியாமல் போயிருந்தது,,



தேவேளை சில தொழிநுட்ப பிரச்சனைகளை உடனடியாக சரி செய்யாமல் நீண்ட நாடகளாக அப்படியே விட்டிருந்தமை,

அத்தோடு பதிவர்கள் சந்திப்புகளில்   ஒரு போதும் நான் கலந்து கொள்ள வில்லை ( அதற்கு வேறு சில காரணங்களும் உண்டு).
 
அது  மட்டுமில்லாமல்   ஏனைய பதிவர்களோடு  குறை நிறைகளை பேசாமல் விட்டிருக்கிறேன்,
இது  போன்ற  சில முக்கியமான விடயங்களை நான் செய்ய தவறியிருக்கிறேன் , ஆனால் இவற்ற்றை எல்லாம் மிக விரைவில் சரி செய்து கொள்ள தயாராக இருக்கிறேன் உங்கள் ஒத்துழைப்போடு.


Tuesday, August 10, 2010

யாழ் தேவியின் முன் ஆசனத்தில்.........................

யாழ் தேவியின் முன் ஆசனத்தில்.........................
அமர சந்தர்பம் கிடைத்துள்ளது.. மகிழ்ச்சியாக பயணிக்க போகிறேன். ஆமாங்க இந்த வாரம் யாழ்தேவி இணையதளம் அடியேனை நட்சத்திர பதிவராக அறிவித்து பெருமை படுத்தியுள்ளது, மகிழ்ச்சி ஒரு பக்கம் இருக்க, ஒவ்வொரு நாளும் ஏதாவது எழுத  வேண்டும் என்ற அன்பு கட்டளைதான் அடி வயிற்றை கலக்குகிறது. எப்பவாச்சும் இருந்துட்டு ஏதாவது மொக்கையாத்தான் பதிவிடுவோம், ஆனால் இப்போது பொறுப்பு வந்திருக்கிறது, இதில என்ன சுவாரஸ்யம் என்றால் நடசத்திர பதிவரை வரவேற்று நிறைய நண்பர்கள் ஆதரவாக வாக்களித்திருக்கிறார்கள்.

இனி கேக்கவா வேணும் பிச்சு உதறிடுவமில்ல, இந்த நேரத்தில் நண்பர் சதீசிடம் இருந்து இன்னுமொரு அதிர்ச்சி தகவல், ' உங்க பதிவுகளுக்கு பின்னூட்டங்களை இட முடியவில்லையே !' எண்டு அது வேறு வயிற்றில புளிய  கரைச்சுது, தட்டுக்கெட்டு ஓடி போய் அதையும் சரி செய்தாச்சு, இப்ப ஓகே. 

மீண்டும் ஒரு முறை நண்பர்ளுக்கும் யாழ்தேவிக்கும் நன்றிகள், ஒரு வாரத்திற்கு ஏதாவது எழுதலாம் பிரச்சனை இல்லை என்ன மொக்கையாத்தான் வரும் பரவாயில்லை தானே.. ஹீ ஹீ...  தொடர்ந்தும் இணைந்திருங்கள்,,((( எழுத சொன்னவங்க ஏதாவது அனுப்பி வைக்கமாட்டங்களா copy பண்ணி போடுறதுக்கு.... லொள்ஸ்.)))

Friday, August 6, 2010

வெற்றி பயணத்தில் 80 ஆண்டுகள் .

இலங்கையிலிருந்து வெளியாகி வாசகர்கள் மனதில் அழியாத இடத்தை பிடித்திருகின்ற வீரகேசரி நாளிதழுக்கு இன்று 80 வயது..................(.வெற்றி பயணத்துக்கு எனது வாழ்த்துக்கள். )

இலங்கை நாவல் பிரசுரத்தில் ஒரு திருப்புமுனையை உருவாக்கியது. எழுபதுகளில் நிகழ்ந்த அரசியல் மாற்றத்தினையடுத்து, தேசிய இலக்கிய உணர்வு வலுப்பெற்றபோது ஈழத்துத் தமிழிலக்கியத்திலே ‘சுய தேவைப் பூர்த்தி’ ஒரு முக்கிய பிரச்சினையாயிற்று இத்தகையதொரு சூழ்நிலையிலேதான் வீரகேசரி நிறுவனம் புத்தகப் பிரசுர முயற்சியில் கவனம் செலுத்தியது.

 வீரகேசரி நாளிதழ்  , இலக்கம் 196, கொழும்பு செட்டி வீதியிலிருந்த வீரகேசரி அச்சகத்திலிருந்து  ஜூன் 6, 1930 புதன்கிழமை  அன்று 8 பக்கங்களுடன் முதலில் பிரசுரமாகியது. அன்றிலிருந்து இன்றுவரைக்கும் எந்த இடத்திலும் சளைக்காமல்  வெற்றி நடை போட்டுகொண்டிருக்கிறது. 80 வருடமென்பது அவ்வளவு சாதாரணமான விடயமல்ல ஊடக துறைக்கு  இருக்கின்ற சவால்களுக்கு மத்தியில் இத்தனை காத்திரமான பணியை முன்னெடுத்து சென்ற  அனைவரும்இந்த நேரத்தில் எங்கள் கண்முன்னே வந்து நிற்கிறார்கள்

இங்கேயும் பாருங்கள்.............
இணையத்தில் வீரகேசரி 
தமிழ் பேசும் மக்கள் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்திருக்கின்ற வீரகேசரியானது தமிழுக்கு இன்னும் அதிகமாக பணி செய்யும் என்ற நம்பிக்கையுடன் வாழ்த்துக்களை மீண்டும் மீண்டும் தெரிவித்துகொள்கிறோம்.
.