ரசித்த கவிதைகள் சில மீண்டும் பதிவுக்காக .....
மேத்தவாணனின் "கல்லறைக்கு வாயிருந்தால்"....கவிதை தொகுதியிலிருந்து ,
" தாலிக்குத் தங்கம்
இல்லாததால்....
அவளின் தலை முடி
வெள்ளியானது!"
மனுஷ்ய புத்திரன் கவிதையொன்று....
"உன்னைக்
காணும் போதெல்லாம்
தாவரவியல் பேராசிரியர்களைத்
ஏன் தெரியுமா?
இங்கே ஒரு
நந்தவனமே
நடக்கும் செய்தி தெரியாமல்
தாவரங்கள்
இடம் பெயர்வதில்லைஎன்று
எய்க்க முயல்கிறார்கள்".
8 comments:
நல்ல கவிதைகளை எந்த வேளையிலும் ரசிக்கலாம் ......
//" தாலிக்குத் தங்கம்
இல்லாததால்....
அவளின் தலை முடி
வெள்ளியானது!" //
வாவ்!
வந்துடீங்களா சகா....! ரொம்ப நல்லது அதே போல அதையும் தந்துடுவீங்க இல்ல....
உங்க காதல் தோட்டமும் நடக்க ஆரம்பிச்சாச்சோ!!!... (ஆகட்டும்....ஆகட்டும்.... எல்லாம் நல்லதற்கே....)
அது சரி.... ஏன் அடிக்கடி தொலைந்து போறீங்க பிரபா?.....
உங்கள் கவிதைகளை (சிலவேள அது ?????) தொடர்ந்தும் எதிர் பார்க்கிறேன்....
இந்தக் கவிதைகளும் உங்களது தொலைந்த வலைப்பதிவில் என்னைக்கவர்ந்தவை...
//மாப்பிள்ளைகள்.......
"இவர்கள்
கல்யாணச் சந்தையில்.....
நாங்கள் விலைகொடுத்து
வாங்கிய பேசும்
அக்ரினைகள்
==================================================
" கூவத்தில் குளிக்க் ......
கூலி கொடுக்கும்
இவர்கள் தான்
கங்கையில் குளிக்க
காசு கேட்கிறார்கள்"//
நல்ல கவிதைகள் எப்படி ஐயா உங்களால மட்டும் முடியிது...
என்ன safras இடையில் நிறுத்தம் ! நம்ம மொக்கையாதானே சொல்ல வந்தீங்க .... ஓகே ஓகே அதுவும் இடையிடையே வரும்.
===================================
//இந்தக் கவிதைகளும் உங்களது தொலைந்த வலைப்பதிவில் //
ஆஹா சந்த்ரு எல்லாமே இப்படி திரும்பி வருமா ?
"மனுஷ்ய புத்திரன் கவிதையொன்று....
"உன்னைக்
காணும் போதெல்லாம்
தாவரவியல் பேராசிரியர்களைத்
தண்டிக்க பிரியப்படிகிறேன்
ஏன் தெரியுமா?
இங்கே ஒரு
நந்தவனமே
நடக்கும் செய்தி தெரியாமல்
தாவரங்கள்
இடம் பெயர்வதில்லைஎன்று
எய்க்க முயல்கிறார்கள்"."
இந்தக் கவிதை எழுதியவர் தாவரவியல் ஆசிரியரிடம் மாட்டனும்....
nalla choice:)
Post a Comment