ad

Wednesday, February 24, 2010

இதுவல்லவோ தீர்ப்பு................


மந்திரியான பிறகு -

சொந்த ஊருக்கு வந்தேன்;
பழைய தமிழாசிரியரைப்
பார்க்க நேர்ந்தது.
 
  'ஐயா ! என்னை

உருப்படாதவன்;
உதவாக்கரை;
ஊர்சுத்தி-
என்றெல்லாம்
அப்போது சொன்னீர்களே!
இப்போது
என்ன சொல்கிறீர்கள்
என்றேன்.
 
 
  தமிழாசிரியர்

தயங்காமல் பேசினார்;


'இப்போதும்
அதையேதான் சொல்கிறேன்'
என்று.
  நன்றி '(நிஜகோவிந்தம்)- கவிஞர் வாலி .

Monday, February 22, 2010

வெற்றி பெற்றேன்

கடந்த சனிக்கிழமை நாள் முழுவதும் அடியேனுக்கு ஒரு பயனுள்ள பொழுதாகவே அமைந்திருந்தது ,


பொழுது போக்கு சாதனங்கள் சிலவேளைகளில் வெறுமனே பொழுதை 'போக்கும்' சாதனங்களாக  அமைந்துவிடுவதுமுண்டு அனால் சில சாதனங்கள்  அரிதாக நல்ல பல நிகழ்சிகளை நேயர்களுக்கு தருவதுண்டு அந்த வகையில் அன்றைய தினம் நான் ரசித்த இரண்டு நிகழ்ச்சிகள் பற்றி இந்த பதிவில் மனம்விட்டு பேச போகிறேன்......
 
முதலாவது ......


காலைவேளையில் தேசிய தொலைக்காட்சி (நேத்ரா T.V.) இல் ஒளிபரப்பான "புன்னகை" நிகழ்ச்சி................

இடையிடையே இந்த நிகழ்ச்சியை ரசிக்க சந்தர்ப்பம் கிடைப்பதுண்டு அந்தவகையில் அன்றைய தினம் நிகழ்ச்சியில் பேசப்பட்ட 'சொல் புதிது பொருள் புதிது ' என்ற அம்சத்தினூடாக தாய்மொழி பற்றியும் மொழிகளின் பயன்பாடு பற்றியும் துறைசார்ந்தவர்கள் கலந்து கொண்டு அறிய கிடைக்காத பல அறிய வேண்டிய விடயங்களை பகிர்ந்திருந்தார்கள் அவர்களுக்கு நன்றி கலந்த பாராட்டுக்கள்  ,அதேவேளை திருகோண மலையிலிருந்து  தொலைபேசி மூலமாக தனது கருத்துக்களை தெரிவித்த பெரியவர் ஒருவர் தொட்டு சென்ற விடயங்களில் என்ன மிகவும் சிந்திக்க வைத்த விடயம், இப்பொழுது ஊடகங்களில் பயன்படுத்தப்படும் மொழி! குறிப்பாக உச்சரிப்பு.

நிச்சயமாக அவர் சொன்ன விடயங்கள் அனைத்தும் மறுக்காமல் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டிய உண்மைகள்.
 
இப்பொழுது ஒலி , ஒளி ஊடகங்களில் பணி  புரிபவர்கள் ஒரு சிலரது உச்சரிப்பை பற்றி நாட்டில் சச்சரவுகள் உண்டு..... ஆனால் இதை பற்றி கவலைப்படுவதற்கு சிலருக்கு நேரம் இருப்பதில்லையோ தெரியவில்லை . திருத்துவதை சிலர் தங்களை வருத்துவதாக நினைக்கிறார்கள் என்று மூத்த ஊடகவியலார்கள் சொல்ல கேட்டிருக்கிறோம். அவ்வாறு இல்லாமல் சரியான உச்சரிப்புக்களை கற்றுக்கொள்ள முயற்சிக்கலாம் , "பயிற்சியும் முயற்சியும் இருந்தால் இந்த வானத்தின் கீழ் எதுவும் சாத்தியம்"...................................
 

அடுத்த நிகழ்ச்சி சனிக்கிழமை இரவு நேரத்தை இதமாக்கிய

வெற்றி வானொலியின் "வெற்றி பெற்றவர்கள் ".
ஊடகத்துறையில் சாதித்த சாதனையாளர்களை அழைத்து வந்து அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் ஒரு அருமையான நிகழ்ச்சி .


உண்மையில் தனது இரண்டு ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவேற்றி தனது மூன்றாவது ஆண்டிலும் வெற்றி நடைபோட ஆரம்பித்திருக்கும் வெற்றி வானொலிக்கு மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.

வெற்றி FM வானொலியை ஆரம்பம் முதலே நான் தூரத்திலிருந்து துப்பறிந்து வருகிறேன்,,,,,, அதன் ஒவ்வொரு நகர்வுகளும் சிறப்பானதாக இருக்கிறது அதுமட்டுமல்லாது
" எதை சொல்வது என்பது அறிவு ,
எப்படி சொல்வது என்பது உத்தி"

அந்த உத்தியை நன்றாகவே கற்று வைத்திருக்கிறார் வானொலியின் முகாமையாளர் சகோதரர் லோஷன். அவருக்கும் இந்த இடத்தில் உளங்கனிந்த வாழ்த்துக்கள்.
 
இனி நிகழ்ச்சியின் ஒரு சில பக்கங்கள்...

ஆரம்ப நிகழ்ச்சியே அபாரமாக அருமையாக அமைந்திருந்தது ...

காரணம் அன்றைய தினம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மூத்த              ஒலி
ஒளி பரப்பாளர் செல்வி சற்சொரூபவதி நாதன் (மிஸ் நாதன்).

செய்தி சொல்வதை  இவரிடம் நிறைய பேர் கற்றுக்கொள்ள வேண்டும் சற்சொரூபவதிக்கு பதிலாக இவருக்கு "சொற்"சொரூபவதி என்று வைத்திருக்க வேண்டும் .அந்த அளவுக்கு அழுத்தம் திருத்தமாக செய்திகளை சொல்வார்.(இவரிடமும் அடியேன் பயிற்சி பெற்றது அடியேனின் பாக்கியம்).



செல்வி சற்சொரூபவதி நாதன் (மிஸ் நாதன்). தனது ஏராளமான அனுபவங்களை பகிர்ந்திருந்தார்... ஒரு சில கசப்பான அனுபவங்களையும் இனிப்பாக சொல்லி முடித்தார். அதுமட்டுமல்லாமல் நிறைய தடைகளை தாண்டி அவர் பல சாதனைகளை புரிந்து விருதுகள் பலவற்றையும் பெற்றிருக்கிறார் ,அதுமட்டுமல்லாமல் ஏராளமான சவால்களுக்கு மத்தியில்
1989 தொடக்கம் 1991 வரை ஆங்கில சேவையின் பதில் இயல்நாடக கட்டுப்பாட்டாளராகவும்,பின்னர் செய்தி ஆசிரியராக 1991தொடக்கம் 1993 வரை முறைசாரா கல்விப்பிரிவின் வான் பல்கலைக்கழக பொறுப்பாளராகவும் கடமையாற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இறந்த கால பக்கங்களின் ஈரத்திலிருந்துதான் நிகழ்காலத்துக்கு நீர் கிடைக்கிறது.


எனவே புகழின் உச்சிக்கு போன ஒவ்வொருவரும் நிஜங்களின் நிர்வாண ஊர்வலத்தில் கைகளால் மறைத்து கொள்ளாமல் கலந்து கொள்ள வேண்டும் என்பதே எல்லோரது எதிர்பார்ப்புமாகும்.

எனவே இது போன்ற நிகழ்ச்சிகள் எதிர்காலத்திலும் வரவேற்கப்படும் ,மட்டுமல்லாமல் இந்த நிகழ்ச்சிகளின் உருவாக்கத்தில் பங்கு பற்றிய அனைவரது உழைப்பும் வெற்றி பெற்றுள்ளது என்பது உண்மை. .



   " தன்னம்பிக்கை உள்ளவனே உண்மை சொல்வான்"

                                                                                                                                               கே.பிரபா
இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம்