ad

Thursday, August 20, 2009

இந்திய நாட்டின் பிரிவினைக்கு நேரு காரணமா ?


"ஜஸ்வந்த் சிங் " ...................................................................

ஒரு மூத்த அரசியல் வாதி ,முன்னாள் மத்திய அமைச்சர் ,இந்தியாவின் மிக பெரும் பொறுப்பு வாய்ந்த ஒரு குடிமகன் , கட்சியிலிருந்து நீக்கபட்டுள்ளது என்பது உலக அரங்கில் எவ்வாறு பார்க்கப்படுகிறதோ இல்லையோ ஆனால் இந்தியாவையும் அதன் நேச நாடுகளையும் பொறுத்தவரை முக்கியமான விடயமொன்றாக இருக்குமா என எண்ண தோன்றுகிறது .


எழுபத்தொரு வயதான ஜஸ்வந்த் சிங் எழுதி சமீபத்தில் வெளியிட்ட புத்தகத்தில் (“Jinnah, India-Partition Independence” - written by a senior Bhartia Janta Party (BJP) , முகமது அலி ஜின்னாவைப் பாராட்டியிருப்பதுடன், நாட்டின் பிரிவினைக்கு நேருவும், சர்தார் படேலும்தான் காரணம் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இதில் முதலாவது விடயம் எவ்வாறாயினும் இரண்டாவது விடயம் சம்பந்தமாகத்தான் அதிகமான சர்ச்சைகள் கிளம்பியிருக்கும் என்று எண்ண தோன்றுகிறது .
"எனவே தான் 'காட்டி கொடுக்கிறாரா?' என்று நண்பர் ஒருவர் கேட்டார்......
இந்த இடத்தில் வரலாறுகளை புரட்டி உண்மையில் என்ன நடந்தது என்பதையும்
இந்த இடத்தில் மிக அவதானமாக சிந்திக்க வேண்டியிருக்கிறது .
எது எவ்வாறாக இருந்தாலும் கட்சிலிருந்து ஜஸ்வந்த் சிங் நீக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து அவர் சொல்லும் போது "இந்த முடிவு தனக்கு மிகுந்த அதிர்ச்சியளிப்பதாகவும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டாலும், தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினராக நீடிக்கப் போவதாக ஜஸ்வந்த் சிங் தெரிவித்துள்ளார்.


-அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சியில் ஒரு தலைவராக இருந்த ஜின்னா பாகிஸ்தானை தொடங்கப்பட்ட பின் இந்த நாட்டின் தந்தையார் என்றழைக்கப்படுகிறார். இவரின் பிறந்த நாள் பாகிஸ்தானில் ஒரு தேசியத் திருவிழா ஆகும். பாகிஸ்தானின் முதலாம் ஆளுனர் (Governor-General) ஆவார்.