ad

Wednesday, March 17, 2010

குழந்தைகளின் கை கால்களை முறிப்பாங்களா...? கடவுளே!நாங்கெல்லாம் அடுத்தவங்களை நக்கல் , நையாண்டி பண்ணி பேசியே பழக்கப்பட்டவங்க அதில்தான் எங்களுக்கு ஆத்மா திருப்பதி.....

ஆனால் சிலவேளைகளில் எங்களைவிட அத்துறையில் பாண்டித்தியம் பெற்றவங்க கிட்ட போய் பேசி எங்கட மூக்குகளை பல நூறு துண்டுகளாக உடைத்தும் இருக்கிறோம் , அதில் எங்களுக்கெல்லாம் பெரிய கவலையே வாறதில்ல... எல்லாம் பழகி போனதுதானே, பிறகு எதுக்கு வெட்கப்படுவான்.
 
இப்பிடித்தான் இந்த கதைய ஆரம்பிக்க வேணும்......................

பெர்னாட்சவ் வீட்டுக்கு ஒருநாள் ஒரு நகைகள் நையாண்டி கலைகளை சிறப்பாக பயின்ற பெண்மணி வந்திருக்கிறார், வந்தவர் பெர்னட்ஸ்வவின் அறையை பார்த்துவிட்டு ,


" செடி கொடிகள் மீதும் மிருகங்கள் மீதும் நீங்கள் கருணை கொண்டவர் எண்டு பேசுறாங்களே ஆனால் உங்கள் வீட்டில் ஒரு செடி கொடியையோ வளர்ப்பு மிருகங்களையோ காண வில்லையே.... "

என்று நக்கலாக கேட்டிருக்கிறார்.

அதற்கு பெர்னட்சவ் சிரித்துக்கொண்டே ...........

"எனக்கு குழந்தைகளை மிகவும் பிடிக்கும் அதற்காக குழந்தைகளின் கை கால்களை முறித்து தொட்டிகளில் வைக்க முடியுமா? "

என்று கேட்டாராம்.

அதற்கு பிறகு அந்த பெண்மணி தனது மூக்கின் துண்டுகளை நிலத்தில் தேடியதை உங்களுக்கு நான் சொல்ல தேவையில்லை.

15 comments:

Anonymous said...

சரியாத்தான் பெர்னட்சவ் கேட்டிருக்காரு.

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

அப்படியா விசயம் ,பகிர்வுக்கு நன்றி . வாழ்த்துக்கள் .

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

அய்யோ என்னை காப்பாற்ற யாருமே இல்லையா ?????????????????

ஜெய்லானி said...

உண்மைதானே!!!

பிரபா said...

//சின்ன அம்மிணி said...
சரியாத்தான் பெர்னட்சவ் கேட்டிருக்காரு.//


அதுதானே.... யாருகிட்ட ???

பிரபா said...

//♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
அய்யோ என்னை காப்பாற்ற யாருமே இல்லையா ?????????????????
//

நான் இருக்கிறேன் குழந்தை. யு டோன்ட் வொறி.................

பிரபா said...
This comment has been removed by the author.
பிரபா said...

//ஜெய்லானி said...
உண்மைதானே!!!
//

ம்ம்ம் அதுதானே..

பிரபா said...

//ஜெய்லானி said...
உண்மைதானே!!!
//

ம்ம்ம் அதுதானே..

SShathiesh said...

ஆனால் இப்போ நீங்க என்ன சொல்ல வாரிங்க. நீங்க சாமியாரானதா கேள்வி.

பிரபா said...

//SShathiesh said...
ஆனால் இப்போ நீங்க என்ன சொல்ல வாரிங்க. நீங்க சாமியாரானதா கேள்வி.
//
உண்மைதான்,,, ஆனால் கேமரா உள்ளே அனுமதிக்கப்படாது............ ஹா ஹா ஹா..

seemangani said...

நெத்தியடிதான் பிரபா...

Madurai Saravanan said...

அருமை. நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள். நம்ம பக்கம் வாங்க..

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

இது வீட்டுக்குள் அலங்காரத்துக்கு பூக்களை வெட்டிச் சாடியில் வைக்கவில்லையேனக் கேட்டபோதே.
குழந்தையைப் பிடிக்கும் அதற்காக கையை வெட்டி வைக்க முடியுமா? எனக் கேட்டாராம். பூவின் அழகைச் செடியோடு அனுபவிக்க வேண்டுமெனக் கூறினாராம்.
அதுபோல் பல பிரமுகர்கள் சந்தித்த விருந்து வைபவத்தில் ஒரு அழகிய பெண், கேலியாக பெர்னாட் -ஷா விடம் (இவர் அழகிய தோற்றமில்லையென்பதைச் சுட்ட)நானும் நீங்களும் திருமணம்
செய்தால் உங்கள் அறிவும்,என் அழகும் சேர்ந்து ஒரு குழந்தை பிறந்தால் உலகிலே அது தான் பெருமை
மிக்கது எனக் கூற, அவரோ எல்லாம் சரி மாறி உன் அறிவும், என் அழகும் சேர்ந்து ஒன்று பிறந்தால்
அது போல் மோசமானது, இந்த உலகிலே இராது.
வேண்டாம் விசப் பரீட்சை ஆளை விடு எனக் கூறி, அப்பெண்ணை அறிவில்லாதவர் என கூறாமல் கூறி வாயடைக்க வைத்தாராம்.

தீபிகா சரவணன் said...

www.tamilarkalblogs.com தமது இணையதளத்தினை அனைவருக்கும் அறிமுகப்படுத்தும் விதமாகவும் வலைப்பதிவாளர்களை ஊக்குவிக்கும் முகமாகவும் போட்டியொன்று நடாத்த திட்டமிட்டு உள்ளது. போட்டியில் வெற்றிபெறும் 10 பதிவர்களுக்கு 25 GB's of Space மற்றும் 1 Domain Name இலவசமாக வழங்கப்படும். மேலதிக விபரங்களுக்கு http://www.tamilarkalblogs.com/page.php?page=announcement இந்த இணைப்பினை பார்க்கவும்.