ad

Tuesday, June 8, 2010

ஊடகங்களில் 'விலங்குகள்'.

//'ஜூன் 5  உலக சூழல்  தினம் '.மனித நடவடிக்கைகளால் சூழலில் ஏற்பட்டுவரும் விரும்பத் தகாத மாற்றங்களும், அதனால் ஏற்படுகின்ற பாதகமான விளைவுகளும், இது தொடர்பாக நடவடிக்கைகளை எடுக்கவேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியுள்ளன.// 

சூழலை பாது காப்போம் என்று வாய் கிழிய பேசும் சில நாடுகள் தான் எந்த வித கரிசனையும் இல்லாமல் அதிக கழிவுகளை சூழலிலே சேர்கிறார்கள் , பாதகம் எல்லாம் பாவபட்ட ஏழை மக்களுக்கு... என்ன கொடுமை சார் இது.
இவை எல்லாம் ஒரு பக்கம் இருக்க , சூழலையும் அதன் உறுப்பினர்களையும் தற்கால ஊடகங்கள் எவ்வாறு கையாளுகிறது  என்பதும் இந்த இடத்தில் மிக முக்கியமான விடயமாக இருக்கிறது.
அண்மையில் படித்த கட்டுரை ஒன்றுதான் இந்த விடயத்தை சிந்திக்க தூண்டியது,,,
அந்த கட்டுரையில் இருந்த   சில  விடயங்களோடு  எனது கருத்துக்களையும்  இங்கே முன் வைக்கின்றேன். 


குறிப்பாக இக்கால அச்சு, இலத்திரனியல் ஊடகங்கள் சூழலின் உறுப்பினர்களான மனிதர்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தின் அளவுக்கு , இன்னுமொரு உறுப்பினர்களான காட்டு விலங்குகளுக்கும் தாவரங்களுக்கும் முக்கியத்துவம் வழங்குகிறதா என்பது ,சிந்திக்க வேண்டிய விடயமாகவே இருக்கிறது.!

விலங்குகள் பற்றிய செய்திகளை வெளியிடும் போது  சில ஊடகங்கள் பயன்படுத்தும் ஊடக மொழி அல்லது ஊடக பதமானது தான் இந்த விடயத்தில் அதிக கவனத்தை ஈர்க்கிறது, காரணம்,

விலங்குகளை பற்றிய செய்திகளை வெளியிடும் பொது அவற்றை மிக கடுமையான தொனியிலையே விழிப்பது வழக்கமாகி விட்டது...



சிலவேளைகளில் நாங்கள் செய்திகளை பார்த்திருக்கிறோம்.,
'கொடிய வனவிலங்குகள் விவசாயிகளை தாக்கியது'
'காட்டு யானைகளின் அட்டகாசம்'
'எருமைகளின் அடாவடி'


இப்படியான செய்திகள் , விலங்குகளை மட்டுமே குற்றவாளிகளாக காட்டும் என்பதில் சந்தேகம் இல்லை.

மாறாக இந்த யானைகள் ஏன் ஊருக்குள் புகுந்தது என்று ஆராய்ந்தால் அதன் உண்மையான காரணம் புரியும்,
மனிதர்கள் மட்டும் காட்டுக்குள் அத்து மீறி நுழைந்து வன விலங்குளின் இருப்பிடங்களான காட்டு மரங்களை வெட்டி வீழ்த்தாமல் இருந்திருந்தால்  அவை ஏன்  இருப்பிடம் தேடி மனித வசிப்பிடங்களுக்கு வர போகிறது, மரங்களை வெட்டும் போது அவற்றுக்கான உணவுகள் இல்லாமல் போகிறது அதனால் தான் அவை உங்கள் இருப்பிடங்களுக்கு படை எடுக்கின்றன.


காட்டு விலங்குளை குறை கூறி செய்திகளை வெளியிடும் வழமையான வழக்கை கொஞ்சம் மாற்றி ஒரு சஞ்சிகை மட்டும் ஊருக்குள் யானைகள் வந்தபோது, 'வீடிழந்த யானைகள் ' என்ற தலையங்கத்தின்    மூலம்  விலங்குகள்   மீதான்  தனது  அக்கறையை  வெளிக்காட்டியது,  .

இது போன்ற அக்கறைகள் உருவாகும் போது , சூழலுக்கும் மனிதனுக்கும் இடையிலான பாசம் அதிகரிக்கும் ,மனிதன் சூழலை நேசிக்க தொடங்குவான்,
இது போன்ற காத்திரமான  மன    மாற்றங்கள் இக்காலத்துக்கு.  அத்தியாவசியமாகிறது.

                                          "ஊடக மொழி வடிகட்டப்பட வேண்டும் "                                     
                                                                                                
                                                                                                      ஆதங்கம் தொடரும்...............