ad

Wednesday, August 26, 2009

உங்களால் முடியும் !!!!! எழுந்து கொள்ளுங்கள்.

இது ஒரு சீரியஸ் மேட்டர் .................
"இளைய பாரதியின்" பட்டின பாலையில் கண்டெடுத்த தத்துவம்.

அனாதையாகும் புகழ்

உங்களின் பிரிய உயிரை
பிரிய மனமின்றி பிரிந்து
சடமாய் சரியும் கணங்கள்.

இதுவரை நீங்கள் காவல்காத்த
உங்களின் புகழ் அனாதையாகும் .
சூதாட்ட விடுதியில் போதையின் உச்சத்தில்
சிவப்பேறிய கண்களுடன் சூதாடும்
முரடர்களிடையே விடப்பட்ட
உங்கள் காதலியை போல .

நீங்கள் நிதமும்
மெருகேற்றி...
பிரகாசிக்க செய்த பெயரை
உங்கள் மரணத்திற்கு பின்
எங்கே ஒளித்து வைப்பீர்கள் ?

நோவாவின் பேழைக்குள்ள ?
கல்வெட்டு மொழிகளிலா ?
பல்கலைக்கழக நூலகங்களின்
தடித்த தத்துவ புத்தகங்களிலா ?
ராஜ கோபுரங்களின் கலச மின்னலிலா?
எங்கே?
எங்கே?

ஒரு ஓவியனின் தூரிகையோ
ஒரு சிற்பியின் உளியோ
ஒரு கவிஞனின் பேனாவோ
ஒரு சங்கீத காரனின் பாடலோ
உங்களை நிறுவி விடாது.

மரண பெருங்கடலுக்கு
அப்பால் விரியும்
சரித்திர மணல் வெளியில்
உங்கள் பெயரை எழுத
உங்கள் சுட்டுவிரலால் மட்டுமே முடியும்.
காற்று கலைக்க முடியாத
சத்தியத்தின்
ஈரப்பதம் உடையது அது.