ad

Monday, August 23, 2010

ஏன் இப்படி இருக்கிறாங்களோ தெரியல..!!

ஆமாங்க இவங்கள பார்த்தால் எனக்கு கவலையாதான் இருக்கு, என்ன பன்றது அவங்களும் என்ன செய்வாங்க? அவங்க இயல்பு அப்பிடி.
என்னங்க ரொம்ப குழப்பிட்டனோ?. ஓகே விசயத்துக்கு வரலாம்...

சிலரை பார்த்தால் எப்பவுமே முகத்தை 'உம்' என்றே வைத்து கொண்டிருப்பார்கள் , மருந்துக்கு கூட சிரிக்க  மாட்டார்கள். ஏன் இப்படி  இருக்கிறாங்களோ தெரியல..!!
ஆரோக்கியமான மனிதனிடமிருந்து பல்வேறு சந்தர்ப்பங்களில்  இயல்பாக வெளிப்படக்கூடிய இந்த சிரிப்பானது எங்கள் மனதையும் உடலையும் வலிமைப்படுத்த கூடியது என்று மருத்துவ உலகம் சொல்கிறது.
வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் என்று சொல்வார்கள், இப்படி அடிக்கடி சிரிப்பவர்களுக்கு ஏராளமான பலன்கள் கிடைக்கிறது , ஆனால் இந்த பலன்களும் தேவையில்ல, ஒரு மண்ணும் தேவையில்ல என்று சிலர் எப்போதுமே சோகத்தில் இருப்பது போன்று காட்சி தருவார்கள்.
இதற்கு அவர்கள் வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சனைகள் மட்டும் காரணமல்ல அவர்களின் மரபுப்பன்புகளும் தான் காரணம் என்று இப்பொழுது விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளார்கள் , ஒருவரின் வாழ்வில் மகிழ்ச்சியை தீர்மானிப்பதில் மரபுப்பன்புகள் ௯௦ சதவீத இடத்தை பிடித்துள்ளதாம்..... ஆகவே சிரிக்காதவர்கள் பற்றி நாங்கள் கோவப்பட நியாயமில்லை போலவே தோன்றுகிறது....

சிரிப்பு எங்களுக்காக கொண்டு வரும் சில நன்மைகள்....
  • சமூகத்துடன் ஒன்றி வாழ இந்த சிரிப்பு எங்களுக்கு உறுதுணை புரிகிறது, பாருங்கள் நகைச்சுவைகளை அள்ளி விடுபவர்களைச்சுற்றி எந்த நேரமும் ஒரு கூட்டம் இருந்து கொண்டே இருக்கும்.
  • சிரிக்கும் போது உடலில் 300 தசைகள் அசைகின்றன.இதன் மூலமாக  உடலிலும், மனதிலும் உள்ள அழுத்தங்களும், கவலைகளும் இல்லாமல் செய்யப்படுகிறது . குறிப்பாக முகத்திலுள்ள தசைகளும், நெஞ்சுத் தசைகளும் பலம் பெற்று ஆரோக்கியத்தைத் தருகின்றன.

  • சிரிக்கும் போது ஆழமாக மூச்சை இழுக்க முடிவதால் உடல் கூடிய ஓட்சிசனை  உள்வாங்கிக் கொள்கிறது இதனால் இரத்த ஓட்டம் சீராகி இருதயம் சம்பந்தமான நோய்கள் வருவதை இந்த சிரிப்பு தடுக்கிறது. 
  • சிரிப்பு மனதை வலிமைப்படுத்தி புத்துணர்வுடன் வைத்திருக்கும். எவ்வளவு கடினமான பணிகளை செய்தாலும் புதிய உத்வேகம் கிடைக்கும் வகையில் உடலுக்குள் தூண்டுதலை சிரிப்பு ஏற்படுத்துகிறது.... 

  • தினமும் அரை மணி நேரம் மனம் விட்டுச் சிரித்தால் மாரடைப்பை வருவிக்கும் மன அழுத்த ஓர்மோன்களும், அதன் மூலக்கூறுகளும் பெருமளவு குறைந்து உடல் ஆரோக்கியமடையும். குறிப்பாக சிரிப்பது என்றால் வெறும் உதடுகள் மட்டும் சிரித்தால் போதாது , வாய் விட்டு வயிறு குலுங்க சிரிக்க வேண்டும், .
  (அரைமணி நேரம் சிரிப்பது எப்படி என யோசிப்பவர்களுக்கு, அரைமணி நேரம் சிரிப்பது ஒன்றும் கடினமான காரியம் அல்ல. ஏதேனும் ஒரு நகைச்சுவைப் படத்தை பார்க்கலாம், அல்லது நகைச்சுவை நிகழ்சிகளை பார்கலாம்...  )


சிரிக்க சில...............

மீண்டும் வடிவேலு, பார்த்திபன்..

“பார்த்தி.. இது என்ன ரோடுப்பா?”
“தார் ரோடு”

“ம்க்க்ஹும்.. இந்த ரோடு எங்க போகுதுன்னு கேட்டேன்?”
“எங்கேயும் போகலை.. இங்க தான் இருக்கு”

“ம்ம்… சரி.. நான் தெளிவா கேக்கிறேன். இந்த ரோடு எந்த ஊர்களுக்கு நடுவுல இருக்கு?”
“உள்ளூருக்கும் வெளியூருக்கும் நடுவுல இருக்கு.”

“ப்ப்ச்ச்… இந்த தார் ரோட்டுக்குன்னு ஒரு பேரு வச்சிருப்பாய்ங்கல்ல.. அதச் சொல்லுயா..”
“அப்படித் தெளிவா கேளு.. அப்போதானே கரெக்டாச் சொல்ல முடியும்…”

“அதத் தானே தெளிவா மொதல்லருந்து கேட்டுக்கிட்டு இருக்கேன்.”
“என்ன கேட்டே?”

“இது என்ன ரோடு?”
"இது தார் ரோடு."