ad

Wednesday, October 6, 2010

தமிழர்களே.......!!! தமிழுக்கு ஏதாச்சும் நடக்க விடலாமா?

தமிழுக்கு அமுதென்று பேர் - இன்பத் தமிழ் 
எங்கள் உயிருக்கு நேர்
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த இலக்கிய மரபைக் கொண்டுள்ள தமிழ் மொழி, தமிழர்களின் தாய்மொழி.
தற்போது வழக்கில் இருக்கும் ஒருசில செம்மொழிகளில் ஒன்றாகும் 
தென்னிந்தியாவில் தமிழ் நாட்டிலும் இலங்கையிலும், சிங்கப்பூரிலும் அதிக அளவில் பேசப்படும் இம்மொழி, துபாய், மலேசியா, தென்னாபிரிக்கா, மொரீசியஸ், பிஜி, ரீயுனியன், டிரினிடாட் போன்ற பல நாடுகளிலும் சிறிய அளவில் பேசப்படுகிறது. ஒரு மொழியை, தாய்மொழியாகக் கொண்டு பேசும் மக்களின் எண்ணிக்கை அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்ட மொழிகளின் பட்டியலில், தமிழ், பதினெட்டாவது  இடம் தமிழுக்குத்தான். 


இதெல்லாம் எல்லோரும் அறிந்த விடயம்தான் ஆனால் தமிழ் மொழிக்கு எதிர்காலத்தில் என்ன நடக்கப்போகிறது என்ற கவலையும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது, காரணம் உலகெங்கிலும் அதிகமான தமிழர்கள் இருந்தாலும் அநேகமானவர்கள் இப்போது தமிழிலே உரையாடுவதைக் குறைத்துக்கொண்டு  வருகிறார்கள் இதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும் அதில் ஒரு சிலவற்றை தவிர்த்துக்கொள்ளலாம். இருந்தும் நாகரிக மோகம் காரணமாக சில வெளிநாடுகளில் உள்ளவர்கள் தமிழை பேச வெட்கப்படுகிறார்கள். 
இந்த போக்கானது தமிழுக்கும் தமிழர்களுக்கும் அவ்வளவு ஆரோக்கியமானதல்ல . இது ஒரு புறமிருக்க எதிர்காலத்தில் தமிழ் மொழி சந்திக்கவிருக்கின்ற இன்னுமொரு முக்கிய பிரச்சனை பற்றியும் இந்த இடத்தில் நாங்கள் பேசித்தான் ஆக வேண்டும் , அதாவது தற்போதைய ஒரு சில  எழுத்தாளர்கள் கையில் எடுத்திருக்கும் ''வட்டாரத்தமிழ்'' வழக்கு..
அதாவது ஒரு மொழியின் வளர்ச்சியானது அந்த மொழியை நேசிக்கின்ற ,சுவாசிக்கின்ற படைப்பாளிகள் அல்லது எழுத்தாளர்களது கையிலே அதிகம் தங்கி  இருக்கிறது. அப்படிப்பட்ட பொறுப்பு வாய்ந்த இடத்தில் இருக்கும் எழுத்தாளர்கள் அண்மைக்காலமாக கையாண்டு வருகின்ற இந்த ''வட்டார வழக்கு'' அவ்வளவு காத்திரமானது என்று சொல்வதற்கில்லை .
அதாவது தமிழை வட்டார வழக்கின் அடிப்படையில் பிரிக்ககூடாது ,அதேவேளை இந்த எழுத்தாளர்கள் தங்களது படைப்புக்களை வட்டார சொற்களை  வைத்துக்கொண்டு தங்களது எண்ணங்களையும் நூல்களையும் வெளியிடக்கூடாது. 
இங்கே மண்வாசனையுடன் வெளிவருகின்ற நூல்களையும் படைப்புக்களையும் பற்றி குறைகூறவில்லை என்பதை கவனித்திருப்பீர்கள் என நம்புகின்றேன். 
  
இந்த போக்கு தொடர்ந்து சென்றால் பல்வேறு சிறப்புக்களை கொண்ட நமது தமிழ் மொழியானது பல் வேறு கூறுகளாக பிரிந்து செல்லக்கூடிய வாய்ப்பு இருக்கிறது அதன் பின்னர் எந்த வட்டாரத்தின் தமிழ் சிறந்த தமிழ் என்ற தேவையில்லாத விவாதங்களும் சண்டைகளும் தலைதூக்கக்கூடிய சாத்தியம் இருக்கிறது. காலப்போக்கில் தமிழ் மொழி பிழையான மொழி வழக்கை பின்பற்றக்கூடிய அபாயமும் இருக்கிறது.
எனவே தமிழ் சிறக்க பாடுபடும் அன்பான படைப்பாளர் பெருமக்களே உங்கள் படைப்புக்களில் இந்த வட்டார தமிழ் வழக்கை பயன்படுத்துவது தொடர்பாக கொஞ்சம் சிந்தியுங்கள் , தமிழை பிழையில்லாமல் எதிகால சந்ததியினருக்கு விட்டு செல்வோம். 


எனக்கும் தமிழ்தான் மூச்சு
ஆனால் அதைப் பிறர்மேல் விட மாட்டேன்.  
 
''தேமதுரத் தமிழோசை 
உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்.'' 

 

Monday, October 4, 2010

பதிவர்கள் அனைவரும் கட்டாயம் பாருங்கள்.

எனக்கு பிடித்த  சில வரவேற்பு பதாதைகள்... 
பதிவர்கள் தங்களின் வலைப்பூக்களுக்கு சூட்டி யுருக்கின்ற சில நாம காரணக்ளும் வரவேற்பு வாசகங்களும்  இங்கே  பதிவாகிறது .
 கண்டிப்பின்றி கனிவோடு பாடம் நடத்தும் வாத்தியாரின் வகுப்புக்கு நீங்களும் ஒரு முறை வந்து பாருங்கள்.... 

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
 
ஹலோ பிரதர், வந்தமா, படிச்சமா ''கமென்ட் அடிச்சமான்னு இருக்கனும், அதவிட்டுப்புட்டு ஏதாவது எடக்கு பண்ணா, ங்கொக்காமக்கா அப்புறம் கெஜட்ல இருந்து பேர எடுத்துடுவேன் ஆமா! நான் மட்டும் அப்பப்போ ஏதாவது ஏடாகூடம் பண்ணுவேன் முடிஞ்சா பாத்து எஞ்சாய் பண்ணுங்க!
தொழிலதிபர்கள், கூடை வெச்சிருக்கவன், பஞ்சுமுட்டாய் விக்கிறவன், பாலிடிக்ஸ் பண்றவன், கடஞ்சொல்லி பீடி குடிச்சவன் எல்லாம் அப்படியே ஒன் ஸ்டெப் பேக் மேன்!
ஓக்கே...ஆல் யங் கேர்ள்ஸ், ரெடியா? வாங்க பூ மிதிக்கப் போவோம், ஸ்டார்ட் மியூசிக்!''

இப்பிடிதாங்க  மியூசிக் ஸ்டார்ட் பண்ணுது ...  
-=======================================================================
''சாதி, மதம் பார்க்காமல், வரதட்சணை கொடுக்க மாட்டேன்/வாங்க மாட்டேன் என்று திருமணம் செய்து கொள்ள ஆசைப்படும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் எனது தளத்தில் இலவச விளம்பரம் தருகிறேன்!, உங்கள் புரோபைலை எனது மெயிலுக்கு அனுப்பலாம் arunero@gmail.கம எவ்ளோ காசு கொடுத்தாலும் சாதிவிளம்பரம் முடியாது!''

எவ்வளவு பரந்த மனசுங்க இவருக்கு,, அது சரி வால் பையன் வால் பையன் என்னு சொல்றாங்களே இவருக்கு வால் இருக்கிறத நான் பாக்கவே இல்லையே நீங்க பார்த்தீங்களா? 
=======================================

இப்படி உங்களை கவர்ந்த விடயங்களையும் சொல்லிட்டு போங்க . இப்பதான் ஆரம்பிச்சிருக்கு ,, இன்னும் தொடரும். 

பதிவர்கள் அனைவரும் கட்டாயம் பாருங்கள். 

Saturday, October 2, 2010

Excuseme, எனக்கொரு டவுட் !! எத வச்சுங்க நம்புறது ???


எத வச்சுங்க நம்புறது ???
எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம், அதாவது திரைப்படங்கள் தயாரிக்கின்ற தாயாரிப்பாளர்களும் சரி ,தயாரிப்பு நிறுவனங்களும் சரி  தங்கள் திரைப்படங்களை விளம்பரம் செய்கின்ற போது ,,

'' அதி கூடிய பொருட்செலவில் உருவாகும் பிரமாண்டமான தமிழ் திரை,
200   கோடி இந்திய ரூபா செலவில் உருவான திரைப்படம்.'' உலக திரைப்பட வரலாற்றில் மிக கூடிய செலவில் உருவாகும் பிரமாண்டம்''.
என்றெல்லாம்  விளம்பரம் செய்வார்கள் .. இவ்வாறான விளம்பரங்களை கேட்கும் போது நிச்சயமாக அந்த திரைப்படத்தில் அப்படி என்னதான் செய்திருக்கிறார்கள் என்று திரைப்படத்தை பார்க்க செல்வோம், ஆனால் அந்த திரைப்படத்தில் அவ்வளவு பெய்ய தொகை செலவு செய்தமாதிரி எதுவுமே தெரியாது...( எல்லா திரைப்படங்களையும் சொல்ல வில்லை)
ஆகவே தயாரிப்பளர்களும் தயாரிப்பு நிறுவனங்களும் சொல்வது போல , உண்மையாக ஒரு திரைப்படத்துக்கு எவ்வளவு தொகைப்பணம் செலவு செய்யப்பட்டுள்ளது என்பதை எவ்வாறு அறிந்து கொள்வது, அதற்கு ஏதாவது கணக்கு அறிக்கைகள் காட்டப்படுமா/,அல்லது இதற்கு ஏதாவது சங்களில் பதிவுகள் இருக்கிறதா/? அப்படி எதுவுமே இல்லை என்றால் இவர்கள் சொல்வதை எத வச்சுங்க நம்புறது?

 இந்த சந்தேகமானது சிலவேளைகளில்  எனக்கு சினிமா துறை சம்பந்தமாக போதிய அறிவு  இல்லை என்பதை 
வெளிக்காட்டலாம், சிலவேளை சின்ன புள்ள தனமான வினாவாகவும்  இருக்கலாம்.. எதுவாக இருந்தாலும் , சந்தேகம் என்று வரும் போது அதனை கேட்டு, அறிந்து, தெளிவு பெற்றுக்கொள்ளுவது எனது வழக்கம் , அந்த வகையில் தான் இந்த கேள்வியும் எழுந்தது.
ஏனெனில் தங்களது திரைப்படத்தை பெரிதாக விளம்பர படுத்தி மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுக்கொள்வதற்காக தயாரிப்பு நிறுவனங்கள் இந்த உத்தியை கையாளாலாம் இல்லையோ/?
 அதுதான் ஒரே போடாக போட்டு உடைசுட்டன்.

தயவு செய்து தெரிந்தவர்கள் சொல்லிட்டு போங்க.