ad

Monday, October 26, 2009

"அது " போல வருமா?...

நவீன உலகத்தில் இருந்து கொண்டு இப்பவும் இதை பற்றி பேசினால் "சும்மா போங்க சார் " உங்களுக்கு வேற வேலை இல்ல , இப்ப இருக்கிற பிசிக்கு அதையெல்லாமா தேடிக்கிட்டிருக்க..."எங்களுக்கு எங்க நேரமிருக்கு? என்று என்னை நம்ம தாய்க்குலங்கள் கொஞ்சம் காட்டமாமாக கேட்கலாம்,,,,,

என்ன பண்றது மனசு கேட்குதில்லையே...! மன்னிக்கவும் "நா" கேட்குதில்லையே...!
எத பற்றி பேச வாறம் என்று ஓரளவுக்கு புரிந்திருக்கும்.....
ஆமாங்க இக்காலத்து "நவீன சமையல்" பற்றித்தான் எங்க கவலையெல்லாம்.

இந்த அவசர உலகத்தில் பாஸ்ட் பூட் கலாச்சாரத்தில் இதெல்லாம் நினைக்க எங்க நேரம்.... ஏதோகிடக்கும் நேரத்தில் சட்டு புட்டுன்னு ஏதாவது தயாரித்து விட்டு அதற்கு வாயினுள் நுழையாத மாதிரி ஒரு பேரு வைத்து தந்தால் , அதன் பெயர் போலவே உணவுகளும் வாயினுள் நுழைய மறுக்கிறது....இதனால்தான் இப்பொழுதெல்லாம் சிலர் உண்டும் உண்ணாவிரதம் இருக்கிறார்கள் போல.....
ஆனால் அந்த காலத்தில் இருந்த கைப்பக்குவம் இப்போதைக்கு இல்ல என்றுதான் நிறைய பெரிசுகள் பேச கேட்டிருக்கிறேன்,,,,, இதற்கு காரணம் அந்த காலத்து சமையல் நிபுணர்களான நம்ம வீட்டுதலைவிகள் பாவித்த உபகரணங்களாகவும் இருக்கலாம்,,,,,,,
உரல் உலக்கையால் குற்றிய நெல்லரிசி சோறு ......
அம்மியில் அரைத்தெடுத்த மலிகைச்சரக்குகள்
மணக்க மணக்க.....சமைக்கும் பக்குவம் இன்னும் நாவுகளில் நயகராவை வரவழைக்கிறது.


அந்த காலத்து இந்த சமையல் உபகரணங்களை இப்பொழுது காண கூட கிடைப்பதில்லை.....
இருந்தாலும் உரலும் உலக்கையும்,,,
அம்மியும் குழவியும்,
சுளகு
போன்ற பொருட்கள் இன்னும் பாதுகாக்கப்பட வேண்டியவைகளே.....
ஏதோ ஒரு ஆதங்கத்தில் சொல்லி புட்டன் மன்னிச்சுடுங்க தாய்க்குலங்களே.....உங்கள் சமையல்கள் பிரமாதம்........பிரமாதம்....பிரமாதம்.....( மதிய உணவை உறுதிப்படுத்த எடுத்த முன்னெடுப்பு என்று யாரு நினைக்க கூடாது) ....

Saturday, October 17, 2009

கொண்டாட்டமும் , "கொல்லும்"வாட்டமும்.

அக்டோபர் 17 ,
தீமைகள் நீங்கி வாழ்வில் விளக்கேற்றும் இனிய தீபத்திருநாள்,,,,,,
அனைவருக்கும் இனிய வாழ்த்துக்கள்.
அதே போல இன்று இன்னுமொரு முக்கியமான நாள் .....
ஆம், "சர்வதேச வறுமை ஒழிப்பு நாள்".
வசந்தங்களை வரவேற்ற வண்ணம் சந்தோசத்தில் மக்கள் ஒரு பக்கம், "வசந்தம்" என்ற சொல்லை மட்டுமே கேட்டிருக்கும், வறுமையில் வாடும் மக்கள் இன்னுமொரு பக்கம். என்ன செய்வது எல்லா விடயங்களுக்கும் இரு பக்கங்கள் இருக்கும் என்பது உண்மை போலதான் இருக்கிறது...

உலகளாவிய ரீதியில் வறுமை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி, பசிப்பிணியில் இருந்து மக்களை விடுவிக்கும் நோக்குடன், ஐக்கிய நாடுகள் சபையானது 1992 ம் ஆண்டு முதல் அக்டோபர் 17 சர்வதேச வறுமைஒழிப்பு தினமாக உத்தியோக பூர்வமாக அறிவித்தது.
ஆனால் பரிதாப கரமாக இன்னும் எம்மால் இந்த அகோர வறுமையை வெல்ல முடியவில்லை....
பொருளாதார மந்தம், குறைந்த உற்பத்தி திறன் போன்றவையே இந்த "வறுமை " குழந்தையை பெற்றேடுக்கின்ற பெற்றோர் ....

இந்த கொடிய வறுமை காரணமாக உலகில், ஒவ்வொரு 3 1/2 நிமிடங்களுக்கு ஒருமுறை , ஒருவர் வறுமை சம்பந்தமான காரணிகளால் உயிரிழக்கிறார்.
அதே நேரம் உலக உணவு திட்டத்தின் (WFP) இன் தரவின் படி , ஒவ்வொரு நாளும் 25,000 பேர் பட்டணி மற்றும் அதனோடு தொடர்பான காரணிகளால் மரணிக்கிறார்கள். என்பது எத்தனை பேருக்கு ஆச்சர்யமான செய்தியாக இருக்குமோ தெரியாது ஆனால், 'காதுக்குள் கோடி நாகங்கள் கொத்துவதுபோல் ' வலிதருகின்ற உண்மையாகும்.

இது தவிர , அண்மைக்கால தரவுகளின் படி , உலக சனத்திஒகையில் 3 பில்லியன் மக்கள் நாளொன்றுக்கு 2.50 அமெரிக்க டாலருக்கும் குறைவான வருமானத்தை பெறுவதோடு 80% க்கும் அதிகமான மக்கள் வருமானம் குறைந்த நாடுகளிலே வாழ்கிறார்கள்.

இதை விட கொடுமை எதிர்கால உலகத்தை கட்டி எழுப்ப வேண்டிய 'சிறுவர்கள்' ஒவ்வொரு வருடமும் இந்த கொடிய வறுமை காரணமாக 25,000 பேர் வரையில் இறக்கிறார்கள்.

இந்த உண்மைகள் எல்லாமே கேட்பதற்கு கூட கஷ்டமாயிருக்கிறது, ஆனால் இதை அனுபவித்தல் எவ்வளவு கொடுமை.

"தங்களை உதைத்து தள்ளும் வாழ்க்கையோடு ஒட்டி கொள்ள இவர்களுக்கு என்ன வழி,?"

வாழ்க்கை இவர்களை முறிக்கப்பார்க்கிறது, வாழ்கையை வளைத்து கொள்ள ஏதாவது வழி இருக்கிறதா? .

முட்களை நிரந்தரமாகவும், ரோஜாக்களை எப்போதாவதும் வெளியிடுகின்ற ரோஜா செடி போலவே , இவர்களுக்கும் உணவு கிடைக்கிறது,

முட்களை எப்போதாவதும், ரோஜாக்களை நிரந்தரமாகவும் பெற்று கொள்ளும் காலம் எப்போது மலரும்,,,..?

உலக பட்டறையில் இவர்களுக்கெதிரான "பட்டினி" அம்புகள் மட்டுமே தயாரிக்கப்படுகிறது, இவர்களுக்கான " உணவு " கவசங்களை தயாரிக்க எத்தனை பேர் தயார்?????

"இவர்களை கட்டுப்பாட்டுக்குள்

வைத்திருக்கும் ,வறுமையால் ,

இவர்கள் தொட்டு பார்க்காத உணவுகள் ஏராளம்.

எனவே, கெட்டுப்போகும் வரை

விட்டு வைக்காமல்,

தட்டுப்பாடோடு இருக்கும் இவர்கள்

தட்டில் இடுவோமா..?"

Tuesday, October 13, 2009

"நடந்த நாடகங்கள்..."


சொர்கத்தின்
விலாசத்தை போய்
விசாரித்தேன் ,
அவள்தான் சொர்க்கம்
என்பதை
அறிந்துகொள்ளாமல்.!உன்னுடைய உதடுகள்
உச்சரிக்கும் வரை
நான்
உணர்ந்ததில்லை ...
என்னுடைய பெயர்
இத்தனை அழகாய்
இருக்கிறதென்று!

வீணாக ஏன்
திறந்து வைத்திருக்கிறாய்....
உன் விழி வாசலை...
இதய வீட்டை
பூட்டி
சாவியை
இடுப்பில்
முடிந்து கொண்ட பிறகு.


ஒரு ஜோடி
சிறகுகள்
வேண்டும் என்றேன்
உல்லாசமாக
உன்னோடு
பறப்பதற்கு அல்ல-
தொலைதூரம் போய்
உன்னை
மறப்பதற்கு....


தேச வரலாற்றில்

இடம்பெறாமல் போன

தியாகிகளைபோல...
ஆயிரக்கணக்கான
இளைஞர்களின் பெயர்கள்
விடுபட்டு விட்டன
உன்- திருமண அழைப்பிதழில்.


நன்றி- கவிவேந்தர்

Monday, October 5, 2009

அபிரகாம் லிங்கனும் நானும்.....


அபிரகாம் லங்கன் அமெரிக்க ஜனாதிபதியாக பதவி வகித்த போது, போர் நடந்துகொண்டிருந்த சமயம்.எட்வின் ஸ்டாண்டட் என்ற அவரது காரியதரிசிக்கு, தனக்கு கீழே ஜெனெரலாக பதவி வகிக்கும் ஒருவர் மீது மிகவும் கோபம். அவர் எடுக்கும் முடிவு ஒன்று கூட சரியாக இருக்காது!.

லிங்கனிடம் சென்று புகார் சொன்னார்,

//"நீங்கள் சொல்வது சரிதான்,அவரை நன்றாக திட்டி ஒரு கடிதம் எழுதிக்கொண்டு வாருங்கள்" என்று லிங்கன் சொன்னார்.
அதன் படி தனது கோபத்தையெல்லாம் கொட்டி ஒருகடிதம் எழுதிக்கொண்டுவந்து லிங்கனிடம் கொடுத்தார் ஸ்டாண்ட்.
படித்து பார்த்த லிங்கன் ,
“நல்லது மிக நன்றாக கடிதம் எழுதியிருக்கிறீர்கள் ” என்று கடிதத்தை கொடுத்தவுடன் ஸ்டாண்ட் திரும்பி செல்ல முனைந்தார் , அந்த வேளையில் லிங்கன்
“ இருங்கள் அந்த கடிதத்தை என்ன செய்ய போகிறீர்கள் ?” என்று கேட்டார் , ‘இன்றே தபாலில் சேர்த்து விடுகிறேன் ,என்று பதில் வந்தது ,
“முட்டாள்தனம் ! என்று லிங்கன் சொல்ல ,.”என்ன தபாலில் சேர்க்க வேண்டாம் என்கிறீர்களா ”!? என்ற ஸ்டாண்ட் இடம் ,
“நான் கூட கோபமாக இருக்கும் பொது இது போலதான் கடிதம் எழுதுவேன் , நம் கோபத்தையெல்லாம் கொட்டியாகி விட்டது .ஆனால் அதை அனுப்ப மாட்டேன் .
அதை தனியாக ஒரு கோப்பில் வைத்து விட்டு ,மறுபடியும் வேறு கடிதம் எழுதுவேன் நீங்களும் அதே போல செய்யுங்கள் ” என்று லிங்கன் சொன்னாராம் .//
இதே போலதான் நானும் இப்பொழுது கோபத்தை கொட்டி தீர்க்கும் வழி முறையாக இதே முறையைத்தான் கையாளுகிறேன் …..

எனவே "லிங்கனும் நானும் " ஒகே தானே ..!
எனவே கோபமானது ஒரு மனிதனை மிக மோசவனாக காட்டும் மிக பெரிய எதிரி ..
இந்த எதிரியை பற்றி அறிஞர்கள் சிலர் ,,,,,
*“ஒரு மனிதன் தவறும் செய்து விட்டு அதை ஒப்புக்கொள்ள தேவையில்லை endru முடிவும் செய்து விட்டால் உடனே கோப பட தொடக்கி விடுகிறான .”
* “ கோபத்துடன் இருக்கும் பொது பேசுங்கள் , அப்போது தான் நீங்கள் வாழ் நாள் முழுவதும் வருத்தப்படும் படியாக ஒரு பேச்சை பேசியிருப்பீர்கள் .”
*“கோபத்தை வெற்றி கொள்வதற்கு ஒரே வழி , அதை தாமதப்படுத்துவதுதான் ”.
யார் வேண்டுமானாலும் கோபக்காரனாக மாறலாம் , அது மிக மிக சுலபம் , ஆனால் சரியான நபரிடம் , சரியான முறையில் சரியான அளவுக்கு ,சரியான நேரத்தில் , சரியான காரணத்துக்காக கோபத்தை வெளிப்படுத்த முடிகிறதா ? என்பதை யோசித்த பின்னர் கோப படுங்கள் , அது சுலபமான காரியமல்ல ……………

Sunday, October 4, 2009

கறுப்பு மஞ்சள் போர்.........

மீண்டும் ஒரு கள போர் ....


ஆம் இது கிரிக்கெட்டில்.

உலகின் தலைசிறந்த முதல் 8 அணிகள் மோதிய (ஐ.சி.சி.,) மினி உலக கிண்ணத்தை கைப்பற்றும் நம்பிக்கையுடனும் கனவுடனும் களமிறங்குகிறது இரண்டு கிரிகெட் சிங்கங்கள் .


ஆனால் இதன் முடிவு 1988 ஜனவரி 22 இல்

M.C.G. இல் கிடைத்தது போல் முடிவுகள் தான் இம் முறையும் கிடைக்குமா என்பதில் சந்தேகமே..... ஆஸ்திரேலியா இறுதியாக இந்த மைதானத்தில் விளையாடிய 10 போட்டிகளில் 6(ஆறு) போட்டிகளில் வெற்றி பெற்றிருப்பது அணிக்கு இன்னும் வலு சேர்க்கும் என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை. அதே நேரம் நியூஸிலாந்து அணியானது கடைசியாக விளையாடிய 5 ஒருநாள் போட்டிகளில் எந்தவொரு போட்டியிலும் வெற்றி ஈட்ட வில்லை என்பது நியூஸிலாந்து ரசிகர்களுக்கு கொஞ்சம் கஷ்டமாக இருக்கின்ற விடயமாக இருக்கும், இந்த சுற்று போட்டியில் கூட நியூஸிலாந்து அணி இதே மைதானத்தில் வைத்து தென்னாபிரிக்க அணியிடம் தோல்வி கண்டதும் குறிப்பிட தக்கது.


இது தவிர போட்டியின் முடிவுகளை தீர்மானிக்கின்ற மிகப்பெரிய சக்தியாக மாறி வருகின்ற "மழை" இந்த போட்டியில் எந்தளவுக்கு தாக்கம் செலுத்த போகிறதோ தெரியவில்லை.

இவை ஒரு புறமிருக்க இரண்டு அணிகளினதும் பலம்களையும் ஒரு முறை நாங்கள் கட்டாயம் உற்று நோக்க வேண்டி இருக்கிறது.....


அவுஸ்திரேலியா அணி.....


RT Ponting*, DE Bollinger, CJ Ferguson, NM Hauritz, BW Hilfenhaus, JR Hopes, DJ Hussey, MEK Hussey, MG Johnson, B Lee, TD Paine†, PM Siddle, AC Voges, SR Watson, CL White


இதில் சில வீரர்களை எதிரணி எவ்வாறு குறி வைக்கிறதோ இல்லையோ ரசிகர்கள் குறி வைத்திருப்பார்கள் என்பது வெளிப்படை உண்மை ...அதில் இருவர் கடந்த அறை இறுதி போட்டியில் இங்கிலாந்து அணியை துவம்சம் செய்த இருவர் ... ரிக்கி பாண்டிங் மற்றும் ஷேன் வாட்சன் .

இவர்களோடு , தென் ஆப்ரிக்காவின் ஜோகனஸ்பர்க்கில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) விருதுகள் வழங்கும் விழாவில் கடந்த ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருதை அள்ளி சென்ற வேகப்பந்து வீச்சாளர் மிச்சல் ஜான்சன். ( மனுஷன் பயங்கர குசியாக இருக்கிறார்).


இனி நியூஸிலாந்து ....


D Vettori*, S Bond, N Broom, I Butler, B Diamanti, G Elliott, J Franklin, M Guptill, G Hopkins†, B McCullum†, K Mills, I O'Brien, JPatel, AJ Redmond, R Taylor


இந்த அணியில் யார் எந்த நேரத்தில் என்ன செய்வாங்க என்று சொல்லவே முடியாது.... அந்தளவுக்கு எல்லா வீரர்களும் தங்கள் அணிக்கு ஏதாவது பங்களிப்பை செய்ய துடிப்பவர்கள். அதிலும் குறிப்பாக அணித்தலைவர் டேனியல் வெட்டோரி, ஷேன் பாண்டு, ரோஸ் டேய்லோர்...... போன்றோரை குறிப்பிட்டு சொல்லலாம் ...


எனவே சிறந்த இறுதி போட்டி ஒன்றை கிரிக்கெட் ரசிகர்கள் திங்கட்கிழமை மாலை 6 மணிக்கும், GMT 12.30 க்கும் கண்டு ரசிக்ககூடியதாக இருக்கும்....


இருந்தாலும் வெற்றி வாய்ப்புக்கள் ஆஸ்திரேலியாவுக்கே அதிகம் இருப்பது போல தெரிந்தாலும்... "தெரிந்த கிரிக்கெட்டில் தெரியாதது எதுவும் நடக்கலாம்..". பொறுத்திருந்து பாப்போம்.

Wednesday, September 30, 2009

சுடச் சுட........


நீண்ட நாட்களாக நம்ம கவிதைகளை (சுட்டதுதான்) காணவில்லையே என்றவர்களுக்கு இப்பதான் சுடச் சுட சுட்டு சில கவிதைகள் இதோ............
சுடுவதற்கு ஏற்கனவே சுட்டு வைத்தவர்களுக்கு ரொம்ப நன்றிகள்.
===================

காதல் என்பது
நம் வசத்தில் இல்லை
அது ஒரு வினோதமான நெருப்பு !
பற்ற வைத்தால் பற்றாது
அணைத்தால் அணையாது !
=======================
அவளை ஒரு கண நேரம்
மறந்து விட்டேன்
இறைவா! இந்த பாவத்தை
மன்னித்து விடு.
=============
என் காதலி
பிரிய வேண்டும என்று
பிரார்த்திக்க போகிறேன்
ஏனென்றால்
என் பிரார்த்தனை
எப்போதுமே நிறைவேறுவதில்லை.

======================
காதலில்,
வாழ்வுக்கும் சாவுக்கும்
வித்தியாசமில்லை,
யாரால்
என் உயிர் போகிறதோ
அவளை பார்த்துதான்
உயிர் வாழ்கிறேன்.
=======================
மலர்வனம் பற்றியோ
மதுவை பற்றியோ
பேச்சு வந்தால்
காதலியின் பெயர்
உதட்டில் வந்து விடுகிறது .
========================
இருண்டு போவதுதான்
என் விதி என்றால் !
அவள் கூந்தலாகவோ மச்சமாகவோ
நான் ஆகியிருக்க கூடாதா?!.
====================
அழைப்பதுமில்லை
கதவை தட்டுவதுமில்லை
அவள் நினைவு பெரிய கர்வத்தோடு
இதயத்தில் நுழைகிறது.....!

======================
கவிதைகளை செதுக்கிய சிற்பிகளுக்கு மறக்காமல் நன்றிகளை சொல்லிடுவோமா?.

Thursday, September 24, 2009

எதிரிக்கும் இப்படி நடக்ககூடாது ...!


பிறகு என்னங்க சொல்றது கடைசியாக ஒரு பதிவிட்டது செப்டம்பர் மாதம் 11 இல்....

அதற்கு பின் நிறைய விடயங்கள் பதிவிட தாயாராக இருக்கிறது ,அது மட்டுமில்லாமல் நிறைய நண்பர்கள் தொடர்பதிவுக்கு அழைத்திருக்கிறார்கள் , அவர்களின் அழைப்பை ஏற்று பதிவிடவில்லை ,அதே போல நண்பர்களின் பதிவுகளுக்கு கருத்துரைகள் தெரிவிக்க முடியவில்லை...

இப்படி ஏகப்பட்ட சிக்கல்கள்....

ஏன் ?..ஏன்...ஏன்...? ......

என்று கேட்டால் உங்களுக்கு சிரிப்பு வரும்!

அது ஒன்டுமில்லீங்க கொஞ்ச நாளாக எனது "கி போர்டு " காணாமல் போய் விட்டது !!!!! இதனால் பதிவுகளை டைப் பண்ண முடியவில்லை....

கணனியில் அதிக நேரம் செலவழிப்பதை தடுக்க என் நண்பர்களால் எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கைதான் இது !


இப்ப சொல்லுங்க என்மேலே ஏதாவது பிழை இருக்கா? இல்லைதானே !

இப்பதான் கண்டுபிடித்தேன் ( யாருக்கிட்ட...)

இனிமேல் வழமைபோல நம்ம மொக்கைகள் தொடர்ந்து துரத்தும் உங்களை.

Saturday, September 19, 2009

என்னாத்த சொல்லுறது இத பற்றி.........

காதல்,அழகு,கடவுள்,பணம் ........................

"SShathiesh said...
உங்கள் ஒரு தொடர் விளையாட்டுக்கு அழைத்துள்ளேன். வந்து விளையாடுங்கள்."..............


பிரபா-பிறந்தநாளுக்கு பிறகு மனிதர் சந்தோசமாக இருக்கின்றார். விடலாமா. இதோ அஞ்சல் கோலை கொடுத்துவிட்டேன். எப்புடி?""

இதெல்லாம் நண்பர் சதீஷிடமிருந்து வந்த ஆப்புக்கள் மன்னிக்கவும் அழைப்புக்கள்.
மூன்று மூணுக்கும் ஒரு நான்குக்கும் இனி நம்ம விளக்கங்களை பார்க்கலாமா?
என்ன தெளிவாக
குழப்புறேனா.....

இப்பிடி சூடுங்க
காதல்- 3 எழுத்து அழகு- 3 எழுத்து பணம் - 3 எழுத்து கடவுள்- 4 .
ஓகே இனி விசயத்துக்கு வருவோம் வாங்க....

காதல்.-
"காதல் ஒரு
எளிமையான பாடம்தான்
ஆனால் அதில் - பல பேர்
தோற்று போகிறார்கள்."
இது ஒரு கவிஞனின் பார்வையில் காதல் .

ஆனால் நமக்கு இன்னமும் உத்தியோக பூர்வமாக பூர்வமாக காதல் வரவில்லை என்றால் ,,,, (அடி உதை பின்னிடுவீங்க எனக்கு தெரியும் ...)
அது வேற கதை அதவிடுங்க...
இப்போதைய "காதலர்கள்"... சிலர்
இந்த காதலை சகிக்க முடியாத அளவுக்கு கொண்டு வந்து சேர்த்திருப்பது தான் இப்போது பெரியவங்களுக்கு இருக்கின்ற மிகப்பெரிய கவலை..


என்னசெய்றது காதலை காதலிப்போம். அத்தோடு கொஞ்சம் ......
Before & After Marriage (Love Humor & Jokes? )
Before Marriage


He: Yes. At last. It was so hard to wait.
She: Do you want me to leave?
He: NO! Don't even think about it.She: Do you love me?
He: Of course! Over and over!
She: Have you ever cheated on me?
He: NO! Why are you even asking?
She: Will you kiss me?
He: Every chance I get!
She: Will you hit me?
He: Are you crazy! I'm not that kind of person!
She: Can I trust you?
He: Yes.
She: Darling!
After marriage...
Simply read from bottom to top.==============================அழகு...
இதுவரைக்கும் இந்த அழகு ஆண்பாலா ? பெண் பாலா ?என்று எனக்கு ஒரு சந்தேகம் இருக்கிறது. இருந்தாலும் அழகு என்றால் என்ன ? என்றால் எல்லோரிடமும் ஒவ்வொரு வித்தியாசமான பதில்கள் இருக்கும் என நம்புகிறேன்.
எமது கண்ணுக்கும் மனதுக்கும் இதம் சேர்கின்ற விசயங்களை அழகானவை என்று சொல்லலாமா? இருக்கலாம். சின்ன வயசிலிருந்து எனக்கு இயற்கையின் மேல் ஓர் அலாதி பிரியம் எனவே தான் கீழே உள்ளவைகளையும் நான் அழகானவை பட்டியலில் சேர்த்துள்ளேன்....

கடவுள் .............
கடவுள் "நம்பிக்கை" இருக்குதோ இல்லையோ அடியேன் காலையில் இவரிடமிருந்து விலகியிருப்பதே இல்லை.....ஆனால் இவர் எப்போதும் நேர்மையான தீர்ப்புகளை வழங்குவதில் கெட்டிக்காரர் ஆனால் இப்போதெல்லாம் இவர் ரொம்ப புசியாகி விட்டாரோ என்னவோ தெரியவில்லை , தீர்ப்புகள் வழங்குவதற்கு கால தாமத மாகிறது .சிலவேளைகளில் "நின்று" வழங்குவாரோ தெரியவில்லை....ஒன்றுமட்டும் உண்மை எல்லோரும் இவருக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும் என்பதில் ரொம்ப கவனமாக இருப்பவர்களில் அடியேனும் ஒருவன்.
கடவுளிடத்தில் சிலருக்கு நம்பிக்கை இல்லாமல் போகலாம் ,ஆனால் "கடவுள்" மனிதனிடத்தில் இன்னும் நம்பிக்கை இழக்கவில்லை, என்ற தத்துவத்தை உணர்த்திக்கொண்டே ஒவ்வொரு குழந்தையும் இந்த உலகில் பிறக்கிறது "
பணம்....காசேதான் கடவுளப்பா ,அந்த கடவுளுக்கும் அது தெரியுமப்பா.....இதுக்கு பிறகு நான் சொல்ல என்ன இருக்கு......
அளவாய் வைத்துக்கொண்டால் அழகாய் இருக்கும் அளவுக்கு மீறினால் அவஸ்தையாய் இருக்கும்.


ஓகே ஓகே.... ஏதோ நம்மால் முடிந்தளவுக்கு தந்திருக்கிறோம் இனி.....நான் மாட்டிக்கொண்டது போல , மாட்டி விடுவது இவர்களை . ( பயப்படாதீங்க இதுதான் தொடர் பதிவு விதி முறை).
வந்து தொடருங்கள்......

லோஷன்

தமிழ்த்துளி (தேவன் மாயம்)

டொன்லி (பதுங்குகுழி )

கலை ராகல

ஞாபகம் இருக்கட்டும் காதல்,அழகு, கடவுள் ,.பணம் .

Saturday, September 12, 2009

சந்தோசமாய் சொல்கிறேன்...............

"september 8" இல் ...................................................
உலகத்தில் விடயங்கள் நடந்திருந்தாலும் ஓரிரு தசாப்தங்களுக்கு முன் எனது குடும்பத்திலும் ஒரு மகிழ்ச்சி கரமான நிகழ்வு இடம்பெற்றிருக்கிறது ,

அது வேற ஒன்று மில்லங்க.. அடியேன் இப் பூவுலகில் காலடி பதித்த நாளும் அதுதான் ,இதற்கு முன் அடியேனின் பிறந்தநாள் எப்படியோ போனது அனால் இம்முறை கொஞ்சம் விசேசமாக இருந்தது காரணம் இந்த இணையத்தினூடாக கிடைத்த நண்பர்களின் வாழ்த்துக்கள் ஏராளமாக கிடைத்ததுதான் இன்னும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த வேளையில் ஏராளமான நண்பர்களுக்கு நன்றிகளை சொல்ல வேண்டும் அத்தோடு ஒரு சில நண்பர்களின் வாழ்த்துக்களை சொல்லி மகிழ்ந்த எல்லா நண்பர்களுக்கும் பொதுவான வாழ்த்துக்களை சொன்னாலும் குறிப்பாக .

அன்றைய தினம் அடியேனுக்கு வாழ்த்துக்களை சொன்ன அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் நன்றிகளை சொல்வதோடு வானொலிமூலமாக வாழ்த்துக்களை சொன்ன வெற்றி வானொலியின் முகாமையாளர் லோஷன் அண்ணா மற்றும் தேசிய வானொலியின் அனைத்து சக அறிவிப்பாளர் நண்பர்களுக்கும், பதிவுகள் மூலமாக வாழ்த்துக்களை சிறப்பாக சொன்ன நண்பர்களுக்கும் குறிப்பாக சந்த்ருவின் பக்கம் வாழ்த்துக்களை சொன்னது மட்டுமல்லாமல் "ஊக்கபடுத்தல் விருதும்" தந்து சந்தோஷ படுத்தியது , எனவே நண்பர் சந்த்ருவுக்கும் ,


வாழ்த்துக்களை சொன்ன ஸப்ராஸ், மற்றும் நண்பர் லோகநாதன் ஆகியோருக்கும் , இவர்களது பதிவினூடாகவும் பின்னூட்டத்தில் வாழ்த்துக்களை சொன்ன அனைத்து பதிவுலக பின்னூட்ட எஜமானர்களுக்கும் நன்றிகளை சொல்வதோடு ( தனித்தனியாக பெயர் குறிப்பிட வில்லை கோபிக்க மாட்டீர்கள்...என நம்புகிறேன்).

நிறைய வானொலி நண்பர்கள் தொலைபேசி மூலமாகவும் SMS மூலமாகவும் நேரடியாகவும் வாழ்த்துக்களை தந்தார்கள் அனைவருக்கும் நன்றிகள்.
FACE BOOK இல வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்ட நண்பர்களுக்கும் HI5சமூக தளங்களினூடாக வாழ்த்துக்களை தந்த நண்பர்களுக்கும் நன்றிகள் பல கோடி .
இது தவிர அன்றையதினம் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள முடியாத நண்பர்கள் கீழே வைத்திருக்கின்ற கேக்கை சாப்பிடலாம் ...... (இது புதுசு.)
அத்தோடு எனக்கு இத்தனை நண்பர்களா? என்று யோசிக்க வைத்து அசத்தி விட்டார்கள் நம்ம நண்பர் கூட்டம்.எனவே மீண்டும் ஒருமுறை எல்லோருக்கும் நன்றிகள் நன்றிகள் நன்றிகள்.


Friday, September 4, 2009

இன்னும் மூன்றே மூன்று தினங்கள்...!


இன்னும் இருப்பது மூன்றே மூன்று தினங்கள் ஞாபக இருக்கா????
எதிர் பார்த்து காத்திருங்கள்.....................................

Monday, August 31, 2009

"பணம் காய்க்கும் மரம்" !!!!!!தலைப்பை பார்த்து நிறைய பிடுங்கலாம் என எண்ணி ஓடோடி வந்த நண்பர்கள் எல்லோருக்கும் ஒரு கூலான வணக்கம்.

அதாவது , உண்மையில் இப்படி மரம் உலகத்தில் இருந்தால் உலகத்தில் இப்போது இருக்கின்ற பொருளாதார சிக்கல்களுக்கு ஒரு முற்று புள்ளி வைக்கலாம்.

அது மட்டுமல்லாமல், கட்டாயம் வீட்டுக்கு நாலு மரத்த நாங்க நட்டு நீர் ஊற்றாமலா போயிருவோம்!


அந்த ஏக்கங்கள் எல்லாம் ஒரு புற மிருக்க இப்படியான மரம் உலகத்தில எங்காவது இருக்கா என்று கேட்டு மொக்கை கேள்வி கேட்டவன் என்ற பெருமைக்கு சொந்தக்காரன் ஆக நான் விரும்ப வில்லை .

அப்ப இந்த விஷயம் இப்ப எதுக்கு என்று கேட்டால்தான் முக்கியமான எனது சந்தேகம் முடிவுக்கு வரும் ,,,,,,,

நீங்கள் எல்லோருமே எனக்கு நல்லதொரு தீர்வை பெற்று தருவீர்கள் என்ற நம்பிக்கையில் தான் இரவெல்லாம் தூங்காமல் விழித்திருந்து யோசித்த எனக்கு பலன் கிடைக்கும்.

இப்ப என்னுடைய பிரச்சனைக்கு வருகிறேன்... அதாவது ,


"பணம் மரத்தில் காய்ப்பதில்லை என்று சொல்வது உண்மையானால்,பணம் இருக்கும் வங்கிகளுக்கு மட்டும் ஏன் 'கிளைகள்" இருக்கிறது?!!!!!!!!!!!!"


இந்த கேள்விக்கு மட்டும் விடை சொன்னால் உங்களை கொஞ்சம் கீழே பாருங்க இப்படி பறக்க வைப்பேன்.

Thursday, August 27, 2009

தயவு செய்து இத பார்க்க வேணாம்.

ஒரு தலை காதல் ,இருதலை காதல் கேள்விபட்டிருக்கோம், ஆனால் இது "இரு முக காதல்"........ நீ எங்க போனாலும் விட மாட்டேன் என் பார்வை உன்னை எல்லா பக்கமும் துரத்தி வரும்...
யாருகிட்ட உன் வேலைய காட்டுற ! சும்மா விட்டுருவோமா !

சீ சீ ...போதுண்டா ..... என்ன இது ! பன்றி காய்ச்சலின் உச்ச கட்டமோ?
...................................!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


காதலில் கண்கள் பேசி கொள்வது சகஜம் தானே ! அதுதான் வெளிய வந்து பேச போறாங்க ...
இந்தா உரிய இடத்துக்கு போய் சேரு....


காதலை கண்டு கொண்டோம்...

இவர்தான் "லிபோடிக்" டாக்டர்.என்னவளை கண்டு கொண்டேன் அவள் இவ்வளவு இனிப்பானவளா!


Wednesday, August 26, 2009

உங்களால் முடியும் !!!!! எழுந்து கொள்ளுங்கள்.

இது ஒரு சீரியஸ் மேட்டர் .................
"இளைய பாரதியின்" பட்டின பாலையில் கண்டெடுத்த தத்துவம்.

அனாதையாகும் புகழ்

உங்களின் பிரிய உயிரை
பிரிய மனமின்றி பிரிந்து
சடமாய் சரியும் கணங்கள்.

இதுவரை நீங்கள் காவல்காத்த
உங்களின் புகழ் அனாதையாகும் .
சூதாட்ட விடுதியில் போதையின் உச்சத்தில்
சிவப்பேறிய கண்களுடன் சூதாடும்
முரடர்களிடையே விடப்பட்ட
உங்கள் காதலியை போல .

நீங்கள் நிதமும்
மெருகேற்றி...
பிரகாசிக்க செய்த பெயரை
உங்கள் மரணத்திற்கு பின்
எங்கே ஒளித்து வைப்பீர்கள் ?

நோவாவின் பேழைக்குள்ள ?
கல்வெட்டு மொழிகளிலா ?
பல்கலைக்கழக நூலகங்களின்
தடித்த தத்துவ புத்தகங்களிலா ?
ராஜ கோபுரங்களின் கலச மின்னலிலா?
எங்கே?
எங்கே?

ஒரு ஓவியனின் தூரிகையோ
ஒரு சிற்பியின் உளியோ
ஒரு கவிஞனின் பேனாவோ
ஒரு சங்கீத காரனின் பாடலோ
உங்களை நிறுவி விடாது.

மரண பெருங்கடலுக்கு
அப்பால் விரியும்
சரித்திர மணல் வெளியில்
உங்கள் பெயரை எழுத
உங்கள் சுட்டுவிரலால் மட்டுமே முடியும்.
காற்று கலைக்க முடியாத
சத்தியத்தின்
ஈரப்பதம் உடையது அது.

Monday, August 24, 2009

புல்லரிக்குதையா......உங்க பாசம் .

"எங்கேயும் எப்போதும் எல்லாராலும் போற்றப்படுகின்ற நட்பு "..............
உண்மயான நட்பென்றால் என்ன??? அறிவோம் வாங்க....
======================================
நாட்டை காப்பது போல் உன்னையும் காப்பேன் ,ஆனால் தயவு செய்து பாக்கெட் இனுள் "சூ" போயிடாத!!!!!!!!
இந்த உலகத்தில எவ்வளவோ பார்த்த தாங்கிட்டன் , இப்ப நீயும் ,,,, கடைசிவரைக்கும் வருவாய் என்ற நம்பிக்கையில் நான், ஆனால் தயவு செய்து இடையில் இறங்கி ஓடாத , போலீஸ் காரன் பிடிசிருவான்.
முத்துக்கு பின்னால் குத்தும் நண்பர்களை ,அவர்ளுக்கு தெரியாமல் குத்த வைக்க தான் உன்னை இங்கே வைத்திருக்கிறேன். கவனம், என் காதை கடிக்காதே!!

இந்த பயணத்தில் இனி என்ன நடந்திடுமோ ? எதிகாலம் தெரிந்திடுமோ!
மறக்காமல் ஹெல்மெட் போட்டுக்கோ ராஜா , ஏன்னா உனக்கு தெரியாதே இந்த பைக் ல சரியா brake பிடிக்காது!!!!

உச்சி உச்சி உச்சி...... நான் ஏறப்போரன் உச்சி , 'நேரத்துக்கு சரியா குதிச்சுக்கோ ராஜா .... இல்லன்ன நான் பொறுப்பில்ல.


உனெக்கென்ன நீ பொய் சேந்துட்டாய் இவனுகிட்ட அகப்பட்டது நானல்லவோ !!!!! (நீ ஈராக்கில், நான் எங்கேயோ தெரியாது)

உங்கள நாங்க தனியா விட்டுருவோமா ? நாங்க படுரதேல்லாம் நீங்களும் படவேணும் வாங்க....... போய் வருவோம்.புத்தம் புதியதடா கொடுத்த முத்தம்....