ad

Tuesday, June 30, 2009

அடி ஆத்தி அப்படியா சங்கதி....!!!!!


**ஒவ்வொரு மணி நேரத்திற்கும் உலகம் முழுவதும் உள்ள வங்கிகளில் 22 ஆயிரம் காசோலைகள் தவறான வங்கி கணக்குகளில் "வரவு " வைக்கப் படுகிறதாமுன்கோ.......

**புகழ் பெற்ற நயாகரா நீர் வீழ்ச்சியில் ஒரு விநாடி நேரத்தில் விழுகின்ற தண்ணீரை பயன்படுத்தி 4000 குளியல் தொட்டிகளை நிரப்ப முடியுமாம்.

**இங்கிலாந்தில் ஒரு குடும்பம் Tv பார்பதற்காக சராசரியாக ஒரு நாளைக்கு 6 மணிநேரத்தை செலவு செய்கிறார்களாம் .

**அமெரிக்காவில் குற்ற செயல்களுக்காக கைதாபவர்களில் அதிகமான எண்ணிக்கையில் இருப்பவர்கள் "குடித்து விட்டு மது போதையில் வண்டி ஓட்டுபவர்களாம்.

**ஒரு அமெரிக்கர் சராசரியாக ஒரு ஆண்டுக்கு 18 பவுண்ட் எடையுள்ள ஆப்பிள் பழங்களை சாப்பிடுறாங்களாம் .

என்னங்க ஆச்சர்யமாக இருக்கா!! இதுபோல இன்னும் நிறைய இருக்கு ,ஒவ்வொரு நாளும் வந்து இதே போல பிட்டு பிட்டா போடுவேனாம்.....

Sunday, June 28, 2009

நீங்க அங்கே போனால் எவ்வளவு??


பூமியில் எங்களுக்கெல்லாம் ஒரு நிறை உண்டு ,அதே போல நீங்கள் பூமியை விட்டு வேறு கோள்களுக்கு சென்றால் எங்களது நிறை எப்படியிருக்கும் !!! அறிந்து கொள்ளலாமா ? பூமியில் 60 kg கொண்ட ஒரு மனிதனின் நிறை வேறு வேறு கோள்களில் எவ்வளவு இருக்கு என்று பாருங்கள் ,பின்னர் உங்களது எடையை கணித்துகொள்ளுங்கள்...


செவ்வாய்கிரகத்தில் ---- 22.8 kg
புதன்---------- 21.6 kg
வியாழன்------------------159.0 kg
சனி ----------- 68.4 kg
யுரேனஸ் ------- 57.6 kg
நெப்டியுன்------ 60 Kg

Saturday, June 27, 2009

சிந்திப்போமா....????? (மீள் பதிவு )

அண்மையில் நடந்த வலைப்பதிவுகளின் தொலைவிற்கு பின்னர் நம்ம பதிவுகள் சிலவற்றை மீள் பதிவிடலாமென எண்ணி உள்ளேன் அதற்காக அடியேனின் பழைய பதிவுகளை சேமித்து தந்த நம்ம வால்பையனுக்கும் நன்றிகள் பலகோடி......
இனி மீள் பதிவு -1

வேறென்ன நம்ம கவிதைகளின் பிதாமகன்கள் உருவாகிய கவிதைகள் சிலவற்றை இன்றும் கண்டெடுத்திருக்கிறேன் அவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்ளலாம் என்று .........
வழமைபோல கவிதை முத்துக்களை பிரசவித்த "சிப்(ற்)பி "களுக்கு நன்றிகளை சொல்லிக்கொண்டு நமது தேடல்களை ரசிக்கலாம் வாங்க ...
=================================================================
"உழைப்பு உழைப்பு ....
ஓயாத உழைப்பு .....
உழைப்பினால்
மட்டுமேஒவ்வொரு
வந்தவன் நான் "
நட்சத்திர
விடுதியின்நான்காம்
தொழிலதிபர் .
உட்காந்திருந்த"லிப்ட்" கள்ஓசை
எழாமல்சிரித்துக்கொண்டன .
============================
வசதி
படைத்தவர்களின்வீடுகளில்
உள்ளநீச்சல் குளங்களைப்பார்க்கும்
போதெல்லாம்வரும் எனக்கு சந்தேகம் ....
"இந்தகுளங்களை எங்கு போய்குளிப்பாட்டுவது ??."
==========================
பிறவிக்கடன்
இறைவன்
தான் என்னை கேட்பான்"எப்படி வாழ்ந்தாய்? என்று !
இறைவனிடம் நானும் கேட்பேன்"
எப்போது வாழ்ந்தேன் ?" என்று '

Monday, June 22, 2009

வாழ்க்கை சமன்பாடு


A=X+Y+Z

X=வேலை
Y=விளையாட்டு
Z=வாயை மூடிகொள்

A=வெற்றி

-ஐன்ஸ்டீன் சொன்னது -

Tuesday, June 16, 2009

புது விதி ...



ரசித்த கவிதைகள் சில மீண்டும் பதிவுக்காக .....
மேத்தவாணனின் "கல்லறைக்கு வாயிருந்தால்"....கவிதை தொகுதியிலிருந்து ,

" தாலிக்குத் தங்கம்
இல்லாததால்....
அவளின்
தலை முடி
வெள்ளியானது!"



மனுஷ்ய புத்திரன் கவிதையொன்று....

"உன்னைக்

காணும் போதெல்லாம்

தாவரவியல் பேராசிரியர்களைத்

தண்டிக்க பிரியப்படிகிறேன்

ஏன் தெரியுமா?

இங்கே ஒரு

நந்தவனமே

நடக்கும் செய்தி தெரியாமல்

தாவரங்கள்

இடம் பெயர்வதில்லைஎன்று

எய்க்க முயல்கிறார்கள்".



Sunday, June 7, 2009

'பல் ஞானம்' பெற்று விட்டீர்களா.......??????


இதென்னடா புதுவகையான ஞானமாக இருக்கிறதே ! என்று சிந்தனை குதிரைகள் படு வேகமாக ஓடுகின்ற சத்தம் எனக்கு கேட்குதப்பா.....விசயத்துக்கு வருவோம்,வழக்கம் போல மாலைவேளைகளில் நமது நண்பர்களுடன் கூடி ஏதாவது, காத்திரமான விடயங்கள் பற்றி காரசாரமான விவாதங்கள் செய்வதுண்டு,இதில் சில விடயங்கள் முடிவுகள் எட்டப்படாமலேயே கைவிடப்படும் .......(தூர நோக்கு கருதி ).
இதேபோல கடந்தவாரமும் எங்களது விவாத மேடை கூடியது ...அன்று நாங்கள் எடுத்துக்கொண்ட விடயம் கொஞ்சம் வித்தியாசமானது ஆனால் சுவாரஷ்யமானது இது சிலவேளைகளில் சிரிப்பை வரவைக்கலாம் அல்லது 'சின்னபுள்ள தனமா 'இருக்கு என்று சிந்திக்க வைக்கலாம்.
பரவாயில்ல பகிர்ந்து கொள்ளலாம் என்று முடிவு பண்ணியாச்சு.

அது வேற ஒன்றும் இல்ல நமக்கு முளைக்கின்ற "ஞான பற்கள் " பற்றியது.அதாகப்பட்டது அங்கு குழுமியிருந்த எல்லோருக்குமே 25 வயதை தாண்டியிருந்தது அனால் இதில் எல்லோருக்குமே ஞான பற்கள் முளைத்திருக்கிறதா என்றுதான் எங்கள் ஆராய்ச்சி தொடர்ந்தது முடிவில்,


சிலருக்கு முளைத்திருந்தது......
சிலருக்கு முளைக்க வில்லை ........
சிலருக்கு முளைக்க எத்தணிக்கிறது.....


அதாவது சிலருக்கு மொத்தம் 32 , சிலருக்கு அதைவிட குறைவு .இந்த முடிவுகளோடு அன்றைய எமது கூட்டம் கலைந்தது.ஆனாலும் இந்த ஞான பற்கள் பற்றிய தகவல்களை முழுமையாக அறிந்து கொள்ளும் பொருட்டு பல்வேறு புத்தகங்களையும் சஞ்சிகை களையும் புரட்டி பார்க்க முடிந்தது.அப்போதுதான் பல்வேறு உண்மைகள் புலப்பட்டது.


அதாவது 18 வயது முதல் 25 வயதுக்குள் ஞான பற்கள் முளைக்கும். நமக்கு நன்கு விபரம் தெரிந்த பிறகு முளைக்கும் பற்கள் இவை என்பதால் ,இவற்றுக்கு ஞான பற்கள் என்று சொல்லுகிறார்களாம்.
மூன்றாவது கடவாய் பல்லான ஞான பற்கள்,கீழ்தாடையில் இரண்டும் மேல் தாடையில் இரண்டும் வளரும். ஆனால் ஞான பற்கள் எல்லோருக்கும் முளைக்கும் என்று சொல்ல முடியாது, சிலருக்கு முளைக்கும் சிலருக்கு முளைக்காமலேயே போகும் ,சிலருக்கு பாதி முளைத்து மீதி தாடைக்குள்ளேயே தங்கி விடும் .சிலருக்கு பல் வெளியே வர முடியாதபடி எலும்பு தடுத்துவிடகூடிய சாத்தியமும் உண்டு.இதெல்லாம் ஒரு பிரச்சனையே இல்லை .
ஆனால் ஞான பல் வளரும் போது ,கோணலாக வளர்ந்து 'புற்று நோய்க்கு ' ஒரு காரணமாகவும் மாறவும் வாய்ப்புண்டாகலாமாம் .எனவே ஞான பல் வளரும் பட்சத்தில் தாடையில் ஏதாவது வலி ஏற்பட்டால் உடனடியாக ஒரு பல் வைத்தியரை அணுகுவது நல்லது.உங்களுக்கு பிரச்சனைகளை ஏற்படுத்தும் ஞான பற்களை பிடுங்கி விடுவதா ? அல்லது மருத்துவ சிகிச்சை மூலம் சரிசெய்து விடல என்பதை அந்த வைத்தியர் முடிவெடுப்பார்.எனவே இந்த ஞான பற்கள் பற்றி மிக கவனாமாக இருங்கள். பாருங்க இதைதான் சொல்றது "பல் ஞானம்" என்று ....!!!!!!!!!!!!!!(மொக்கையாக இருக்கா !)


(எது எவ்வாறாக இருந்தாலும் நமது நண்பர்கள் தங்களுக்கு எத்தனை பற்கள் இருக்கிறது என்பதை எண்ணி கணக்கிட பட்ட பாடு இருக்கே .... இப்பவும் என் கண்ணிலே நிற்குது.

உங்களுக்கு ஏதாவது வாயில நின்றால் பின்னூட்டத்தில் சொல்லிவிட்டு போங்கோ ...