ad

Monday, October 5, 2009

அபிரகாம் லிங்கனும் நானும்.....


அபிரகாம் லங்கன் அமெரிக்க ஜனாதிபதியாக பதவி வகித்த போது, போர் நடந்துகொண்டிருந்த சமயம்.எட்வின் ஸ்டாண்டட் என்ற அவரது காரியதரிசிக்கு, தனக்கு கீழே ஜெனெரலாக பதவி வகிக்கும் ஒருவர் மீது மிகவும் கோபம். அவர் எடுக்கும் முடிவு ஒன்று கூட சரியாக இருக்காது!.

லிங்கனிடம் சென்று புகார் சொன்னார்,

//"நீங்கள் சொல்வது சரிதான்,அவரை நன்றாக திட்டி ஒரு கடிதம் எழுதிக்கொண்டு வாருங்கள்" என்று லிங்கன் சொன்னார்.
அதன் படி தனது கோபத்தையெல்லாம் கொட்டி ஒருகடிதம் எழுதிக்கொண்டுவந்து லிங்கனிடம் கொடுத்தார் ஸ்டாண்ட்.
படித்து பார்த்த லிங்கன் ,
“நல்லது மிக நன்றாக கடிதம் எழுதியிருக்கிறீர்கள் ” என்று கடிதத்தை கொடுத்தவுடன் ஸ்டாண்ட் திரும்பி செல்ல முனைந்தார் , அந்த வேளையில் லிங்கன்
“ இருங்கள் அந்த கடிதத்தை என்ன செய்ய போகிறீர்கள் ?” என்று கேட்டார் , ‘இன்றே தபாலில் சேர்த்து விடுகிறேன் ,என்று பதில் வந்தது ,
“முட்டாள்தனம் ! என்று லிங்கன் சொல்ல ,.”என்ன தபாலில் சேர்க்க வேண்டாம் என்கிறீர்களா ”!? என்ற ஸ்டாண்ட் இடம் ,
“நான் கூட கோபமாக இருக்கும் பொது இது போலதான் கடிதம் எழுதுவேன் , நம் கோபத்தையெல்லாம் கொட்டியாகி விட்டது .ஆனால் அதை அனுப்ப மாட்டேன் .
அதை தனியாக ஒரு கோப்பில் வைத்து விட்டு ,மறுபடியும் வேறு கடிதம் எழுதுவேன் நீங்களும் அதே போல செய்யுங்கள் ” என்று லிங்கன் சொன்னாராம் .//
இதே போலதான் நானும் இப்பொழுது கோபத்தை கொட்டி தீர்க்கும் வழி முறையாக இதே முறையைத்தான் கையாளுகிறேன் …..

எனவே "லிங்கனும் நானும் " ஒகே தானே ..!
எனவே கோபமானது ஒரு மனிதனை மிக மோசவனாக காட்டும் மிக பெரிய எதிரி ..
இந்த எதிரியை பற்றி அறிஞர்கள் சிலர் ,,,,,
*“ஒரு மனிதன் தவறும் செய்து விட்டு அதை ஒப்புக்கொள்ள தேவையில்லை endru முடிவும் செய்து விட்டால் உடனே கோப பட தொடக்கி விடுகிறான .”
* “ கோபத்துடன் இருக்கும் பொது பேசுங்கள் , அப்போது தான் நீங்கள் வாழ் நாள் முழுவதும் வருத்தப்படும் படியாக ஒரு பேச்சை பேசியிருப்பீர்கள் .”
*“கோபத்தை வெற்றி கொள்வதற்கு ஒரே வழி , அதை தாமதப்படுத்துவதுதான் ”.
யார் வேண்டுமானாலும் கோபக்காரனாக மாறலாம் , அது மிக மிக சுலபம் , ஆனால் சரியான நபரிடம் , சரியான முறையில் சரியான அளவுக்கு ,சரியான நேரத்தில் , சரியான காரணத்துக்காக கோபத்தை வெளிப்படுத்த முடிகிறதா ? என்பதை யோசித்த பின்னர் கோப படுங்கள் , அது சுலபமான காரியமல்ல ……………

37 comments:

வால்பையன் said...

நானும் அப்படித்தான்!

Kala said...

அப்படி!! எத்தன கடிதம் எழுதிருபீக ! இம்புட்டுக் கோவம்
ஆகாதய்யா பாவம் ‘அவக’உங்க கடிதமெல்லாம் அடிக்கி,அடிக்கி
வைத்தே பெரும் பாடு பட்டிருப்பாகல்ல..இப்ப புரியிதுனெக்கு
அப்ப சொன்ன தலைவலி ஏன் வருதென்னு
கோபமே வரபோடாதய்ய னெக்கு பாருங்க...கோபமே வராது
நான் யாரு வழியிலயும் போறதில்ல என் வழி தனி வழிஇஇஇ...

ஆமா...கோபபட்டு கோபபட்டுதான் தலையில...............????
தொப்பியோ!!!

Mrs.Menagasathia said...

கோபம் தான் ஒரு மனிதனின் மிகப் பெரிய எதிரி!!என்ன பண்ரது கோபம் வந்தா என்னாலும் அடக்கமுடியல் அப்புறம் வருத்தப்படுவேன்..

பிரபா said...

// வால்பையன் said...
நானும் அப்படித்தான்!//


ஐயோ ஐயோ....
நம்பிட்டோம்... தல!

பிரபா said...

//
Kala said...

ஆமா...கோபபட்டு கோபபட்டுதான் தலையில...............????
தொப்பியோ!!!//

அட பாருடா,,, அக்காவின் கண்டுபிடிப்ப....

பிரபா said...

// Mrs.Menagasathia said...
கோபம் தான் ஒரு மனிதனின் மிகப் பெரிய எதிரி!!என்ன பண்ரது கோபம் வந்தா என்னாலும் அடக்கமுடியல் அப்புறம் வருத்தப்படுவேன்..
//

என்ன செய்றது எல்லோருக்கும் அதுதான் மிக பெரிய சவாலாக இருக்கிறது...
ஹ்ம்ம்.. சமாளிப்போம்.

Ammu Madhu said...

எனக்கும் ரொம்ப கோவம் வரும்..யாரோ ஒருத்தங்க கோவத்தை கட்டுப்படுத்த யோகா பண்ண சொன்னாங்க..எனக்கு யோகா சொல்லி தந்த டீச்சருக்கே கோவம் வர வச்சுடோம்ல!!!:)))


அன்புடன்,

அம்மு.

பிரபா said...

// Ammu Madhu said...
எனக்கும் ரொம்ப கோவம் வரும்..யாரோ ஒருத்தங்க கோவத்தை கட்டுப்படுத்த யோகா பண்ண சொன்னாங்க..எனக்கு யோகா சொல்லி தந்த டீச்சருக்கே கோவம் வர வச்சுடோம்ல!!!:)))
///

அதுதானே நாங்கெல்லாம் யாரு என ...?

ஊடகன் said...

எந்த ஒரு முடிவையும் கோபத்தில் இருக்கும் பொது எடுக்க கூடாது என்பது பழமொழி......
தொடருங்கள் தோழா........

யாழினி said...

நன்றாக இருக்குறது பிரபா உங்களது பதிவு! கோபம் தான் ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ளே உள்ள மிகப் பெரும் எதிரி என்ன!

பிரபா said...

// ஊடகன் said...

எந்த ஒரு முடிவையும் கோபத்தில் இருக்கும் பொது எடுக்க கூடாது என்பது பழமொழி......
தொடருங்கள் தோழா........//

நிச்சயமாக் நண்பா.... வருகைக்கு ரொம்ப நன்றி...

பிரபா said...

//Blogger யாழினி said...

நன்றாக இருக்குறது பிரபா உங்களது பதிவு! கோபம் தான் ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ளே உள்ள மிகப் பெரும் எதிரி என்ன!//


சரியாக சொன்னீங்க யாழினி....
வருகைக்கு நன்றிங்கோ.... அடிக்கடி வாங்கோ..

கலகலப்ரியா said...

ஹிஹி.. நாமளும் இதத்தான் ப்ளாக்ல பண்ணிக்கிட்டிருக்கோம்.. நல்ல பதிவு சாமியோ... ஓட்டு போட்டுட்டோம்ல.. வர்ட்டா..

பிரபா said...

வாங்கோ அக்கா.........
வந்த உடனே போறீங்களே ஏதாவது காப்பி தண்ணி குடிக்கிற இல்லையா...?

ஜோதிஜி. தேவியர் இல்லம். said...

ரொம்ப சந்தோஷமா இருக்குங்க. முதல் காரணம் "எப்புடீ" இந்த வார்த்தை இன்று வரையிலும் உயிர்ப்புடன் வைத்துக்கொண்டுருக்கிறது. அப்புறம், நீங்கள் பின்னூட்டம் பகுதியில் எழுதி உள்ள வாசகம் மூன்று மாதத்திற்குப் பிறகு அடுத்த வீட்டுக்காரர் வந்து எட்டிப்பார்க்கும் அளவிற்கு சிரிப்பை தந்தது. உண்மை. லிங்கன் பற்றிய செய்தி இது எனக்கு புதுமை. மூலத்தில் இருந்து முகவரி இழந்து முள்கம்பிகளுக்கு பின்னால் வரையிலும் என்று தொடர் சிந்தனை எனக்கு கிட்டத்தட்ட மூலத்தை உருவாக்கி விடும் அளவிற்கு ஆக்ரமித்துக்கொண்டுருப்பதால் அதிக வலைதள பயணம் செய்ய முடியவில்லை. பார்த்திங்களா. இல்லத்திற்கு வந்துட்டீங்க. இனி உள்ளத்தில் உள்ளத அப்டியே கொட்டுவேன்.

Romeoboy said...

பார்த்து பாஸ் ஏற்கனவே உண்மை தமிழன் கோவப்பட்டு எழுதுற பதிவ படிக்க வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு நாங்க இருக்கோம் இதுல நீங்க வேற கோவப்பட்டு எழுதாதிங்க.


உங்க ஏரியா பக்கம் வந்தாச்சு பலோயர் ஆயாச்சு ..

பித்தனின் வாக்கு said...

இது கூட நல்லா இருக்கு, எனக்கு கோபம் வந்தால் தனிமையில் கொஞ்ச தூரம் நடக்க ஆரம்பித்து விடுவேன்,நடந்தால் கோபம் குறைந்துவிடும். அல்லது தனி அறையில் போய் கொஞ்சம் கத்தி விட்டு வருவேன். ரிலாக்ஸ்

முனைவர்.இரா.குணசீலன் said...

இடுகை நன்றாகவுள்ளத நண்பேரே..
உண்மை தான் கோபத்தில் எடுக்கும் முடிவுகள் தவறாகத் தான் இருக்கும்.

ஆறுவது சினம்..

அதை ஆறப்போடுவது நலம்..!

பிரபா said...

// ஜோதிஜி. தேவியர் இல்லம். said...
ரொம்ப சந்தோஷமா இருக்குங்க. முதல் காரணம் "எப்புடீ" இந்த வார்த்தை இன்று வரையிலும் உயிர்ப்புடன் வைத்துக்கொண்டுருக்கிறது. அப்புறம், நீங்கள் பின்னூட்டம் பகுதியில் எழுதி உள்ள வாசகம் மூன்று மாதத்திற்குப் பிறகு அடுத்த வீட்டுக்காரர் வந்து எட்டிப்பார்க்கும் அளவிற்கு சிரிப்பை தந்தது. உண்மை. லிங்கன் பற்றிய செய்தி இது எனக்கு புதுமை. மூலத்தில் இருந்து முகவரி இழந்து முள்கம்பிகளுக்கு பின்னால் வரையிலும் என்று தொடர் சிந்தனை எனக்கு கிட்டத்தட்ட மூலத்தை உருவாக்கி விடும் அளவிற்கு ஆக்ரமித்துக்கொண்டுருப்பதால் அதிக வலைதள பயணம் செய்ய முடியவில்லை. பார்த்திங்களா. இல்லத்திற்கு வந்துட்டீங்க. இனி உள்ளத்தில் உள்ளத அப்டியே கொட்டுவேன்.//

பாத்தீங்களா ... இதுக்குதான் சொல்றது.... நாலு நல்லவங்கள அழையுங்கோ எண்டு.
ரொம்ப நன்றிங்கோ.

பிரபா said...

//Romeoboy said...
பார்த்து பாஸ் ஏற்கனவே உண்மை தமிழன் கோவப்பட்டு எழுதுற பதிவ படிக்க வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு நாங்க இருக்கோம் இதுல நீங்க வேற கோவப்பட்டு எழுதாதிங்க.


உங்க ஏரியா பக்கம் வந்தாச்சு பலோயர் ஆயாச்சு ..//

கோவப்படாதீங்க.... கோவபடாதீங்க....
தல. ஓகே, வருகைக்கும் அதுக்கும் நன்றிங்கோ.

பிரபா said...

// பித்தனின் வாக்கு said...
இது கூட நல்லா இருக்கு, எனக்கு கோபம் வந்தால் தனிமையில் கொஞ்ச தூரம் நடக்க ஆரம்பித்து விடுவேன்,நடந்தால் கோபம் குறைந்துவிடும். அல்லது தனி அறையில் போய் கொஞ்சம் கத்தி விட்டு வருவேன். ரிலாக்ஸ்//

என்ன செய்தோ கோபத்தை குறைத்தால் சரி பாஸ்.

பிரபா said...

//
/

ஆறுவது சினம்..

அதை ஆறப்போடுவது நலம்..!//

முற்றிலும் உண்மையான கருத்து.......... நானும் உங்க பக்கம்.

Eswari said...

கோபம் வருவதை தப்புன்னு சொல்லுறவங்க எல்லாரும் முட்டாள்கள்.

தேச தண்டை காந்திக்கு கோபம் வந்தது. அதை அவர் வெளிப்படுத்திய முறை அஹிம்சை வழி

நேதாஜிக்கு கோபம் வந்தது அவர் வெளிப்படுத்திய முறை போர் வழி

இதையெல்லாம் தப்புன்னு சொல்ல முடியுமா?

கோபம் வருவது தப்பு இல்லை
அதை வெளிப்படுத்தும் முறையில் தான் இருக்கு அதன் தப்புகள் / குற்றங்கள்.

பிரபா said...

// Eswari said...
கோபம் வருவதை தப்புன்னு சொல்லுறவங்க எல்லாரும் முட்டாள்கள்.

தேச தண்டை காந்திக்கு கோபம் வந்தது. அதை அவர் வெளிப்படுத்திய முறை அஹிம்சை வழி

நேதாஜிக்கு கோபம் வந்தது அவர் வெளிப்படுத்திய முறை போர் வழி

இதையெல்லாம் தப்புன்னு சொல்ல முடியுமா?

கோபம் வருவது தப்பு இல்லை
அதை வெளிப்படுத்தும் முறையில் தான் இருக்கு அதன் தப்புகள் / குற்றங்கள்.//

அட இது ரொம்ப புதுசா இருக்கே...!!!
வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றிங்க.

Jana said...

கோபம் இருக்கும் இடத்தில்த்தான் குணம் இருக்கும், ரௌத்திரம் பழகு, கோபப்படவேண்டிய இடங்களில் கோப்படு, என்று கோபத்தை நியாப்படுத்தியும் இருக்காங்க. "கோப்படவேண்டிய இடத்தில் கோப்படவேண்டும்" என்பது எனக்கு பிடித்திருக்கு. நல்லதொரு பதிவு பிரபா. வாழ்த்துக்கள்.

அன்புடன் மலிக்கா said...

கோபத்தை தவிர்க முயற்ச்சி செய்வதே
கோபத்தை வென்றெடுத்ததற்கான முதல் வெற்றி,

உங்கபக்கம் வந்துட்டோமுல்ல,
நல்லாதான் பாக்குது உங்க விழி
நல்லாத்தான் கேட்குது உங்க செவி,

அடிக்கடி வந்து எங்கப்பக்கமும் எட்டிபாருங்க

பிரபா said...

//
Jana said...
கோபம் இருக்கும் இடத்தில்த்தான் குணம் இருக்கும், ரௌத்திரம் பழகு, கோபப்படவேண்டிய இடங்களில் கோப்படு, என்று கோபத்தை நியாப்படுத்தியும் இருக்காங்க. "கோப்படவேண்டிய இடத்தில் கோப்படவேண்டும்" என்பது எனக்கு பிடித்திருக்கு. நல்லதொரு பதிவு பிரபா. வாழ்த்துக்கள்.//

கோப்படவேண்டிய இடத்தில் கோப்படவேண்டும் ,ஆமா இல்ல ... இல்லேன்னா ஏறி மிதுச்சுடுவாங்க... வருகைக்கு நன்றி ஜனா.

பிரபா said...

//
அன்புடன் மலிக்கா said...
கோபத்தை தவிர்க முயற்ச்சி செய்வதே
கோபத்தை வென்றெடுத்ததற்கான முதல் வெற்றி,

உங்கபக்கம் வந்துட்டோமுல்ல,
நல்லாதான் பாக்குது உங்க விழி
நல்லாத்தான் கேட்குது உங்க செவி,

அடிக்கடி வந்து எங்கப்பக்கமும் எட்டிபாருங்க//
நிச்சயமாக... வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்கோ

வாய்ப்பாடி குமார் said...

இலங்கை வானொலி சேட்டிலைட் ட்ரான்ஸ்மிஷன் ஒன்றை ஆரம்பித்துள்ளாதாமே? அதைப்பற்றீ ஏதாவது விளக்கமுடியுமா?

Anonymous said...

அட இது கூட நல்லாயிருக்கே...

வினோத்கெளதம் said...

நல்லா தான் இருக்கு நண்பா இந்த கோபத்தை பற்றிய தகவல்.

மஞ்சூர் ராசா said...

எனக்கு வந்த கோபங்களையும் இப்பொழுதும் வரும் தேவையற்ற கோபங்களையும் நினைத்து பார்க்கிறேன். பொதுவாக எல்லாமே முட்டாள் தனமான அந்த நேரத்து கோபங்கள் என்று தோன்றுகிறது.

நல்லதொரு பதிவு.

மாதவ்ராஜ் பதிவில் நீங்கள் குறிப்பிட்டதை பார்த்து அவருக்கு பதில் நான் வந்தேன்.

வாழ்த்துகள்.

பிரபா said...

// வாய்ப்பாடி குமார் said...
இலங்கை வானொலி சேட்டிலைட் ட்ரான்ஸ்மிஷன் ஒன்றை ஆரம்பித்துள்ளாதாமே? அதைப்பற்றீ ஏதாவது விளக்கமுடியுமா?//


நிச்சயமாக , தெளிவான தகவல்களை பெற்று கொண்டு தெளிவு படுத்துகிறேன்... நன்றி நண்பா. .

பிரபா said...

// தமிழரசி said...
அட இது கூட நல்லாயிருக்கே...//

வாங்க தலைவியே.... நாளா இருந்தால் சந்தோசம்.

பிரபா said...

//வினோத்கெளதம் said...
நல்லா தான் இருக்கு நண்பா இந்த கோபத்தை பற்றிய தகவல்.//


தகவலை பார்த்து, கோபம் வராவிட்டால் சரி நண்பா....
வருகைக்கு நன்றிங்கோ..

பிரபா said...

/'/
மஞ்சூர் ராசா said...
எனக்கு வந்த கோபங்களையும் இப்பொழுதும் வரும் தேவையற்ற கோபங்களையும் நினைத்து பார்க்கிறேன். பொதுவாக எல்லாமே முட்டாள் தனமான அந்த நேரத்து கோபங்கள் என்று தோன்றுகிறது.

நல்லதொரு பதிவு.

மாதவ்ராஜ் பதிவில் நீங்கள் குறிப்பிட்டதை பார்த்து அவருக்கு பதில் நான் வந்தேன்.

வாழ்த்துகள்.//

வாங்க ராசா,,, உங்களுக்கு எவ்வளவு பெரிய மனசு...
ரொம்ப நன்றி.

Ashwinji said...

ஆக, மலரினும் மெல்லிது காமம் மட்டுமல்ல
கோபம் கூடத் தான்.

நல்ல செய்திக்கு இதய நன்றி.
அஷ்வின் ஜி
www.vedantavaibhavam.blogspot.com