ad

Friday, August 13, 2010

ரேடியோ சிலோன் ( RADIO CEYLON ).

தொடர்பாடல் என்னும் பதமானது , இலத்தீன் சொல்லான 'கொம்முனி கேயார்'(Communicare)   என்ற சொல்லிலிருந்து வந்த ஒரு பதமாகும்.
'கொம்முனி கேயார்' என்பது, பொதுமைப்படுத்தல், வெளிப்படுத்தல் ,பகிர்ந்து கொள்ளல், ஊடுகடத்தல் போன்ற அர்த்தங்களை தரும்.
வெகுசன தொடர்பாடல் என்பது பொதுமையை ஏற்படுத்த அல்லது சில கருத்துக்களை அநேகமான மக்களிடையே அல்லது கூட்டத்தினரிடையே பகிர்ந்து கொள்ள முனைவதாகும்.

தொடர்பாடல் எனும் தொடர் செயற்பாடு , ஒருவரிடமிருந்து மற்றவருக்கு தகவல்களை கொடுக்க, சமிஞ்சை கொண்டு செல்ல , தெரிவிக்க அல்லது பெற உதவும் சாதனமாகும்.

இவ்வாறான தொடர்பாடல்களை  ஏற்படுத்த இப்பொழுது ஏராளமான நவீன தொடர்பாடல் சாதனைகள் இருக்கின்ற போதிலும் 'வானொலி' க்கென்று இன்றும் தனி இடம் இருப்பதை யாராலும் மறுக்கவும்  மறைக்கவும் முடியாது .

அப்படிப்பட்ட வானொலி இப்பொழுது இணையத்தள  பாவனை அதிகரித்த பின்னர் 'மலிந்து' காணப்படுவதாகவே தோன்றுகிறது காரணம் முன் போல வானொலி நிலையமொன்றை ஆரம்பிக்க அதிக பொருட்செலவுகளோ ஆளணி வளங்களோ இப்பொழுது தேவையில்ல, ஒருவரே இருந்த இடத்திலிருந்தே வானொலியை ஆரம்பிக்க கூடியதாக இருக்கிறது . இது ஒரு 'காத்திரமான போக்கு' என்று சொல்வதற்கு எனக்கு தெரியவில்லை. 

வானொலி வரலாற்றில் உலகில் எத்தனை வானொலிகள் வந்தாலும் இலங்கை வானொலிக்கு என்றுமே ஒரு தனி இடம் இருப்பதை ஏற்றுக்கொள்வீர்கள் என்று நினைக்கிறேன் .

இன்று சர்வேத ரீதியாக கூவிக்கொண்டு இருக்கின்ற அநேகமான  வானொலி குயில்கள்  'இலங்கை வானொலி' என்ற கூட்டிலிருந்து பறந்து சென்றவை என்பதை  யாராலும் மறுக்க முடியாது, அத்தோடு இலங்கையில் இப்போது சிறப்பாக தங்களது பணிகளை நடாத்திக்கொண்டிருக்கின்ற அனைத்து தனியார் வானொலி நிலையத்து நண்பர்களும் எதோ ஒரு வகையில் இலங்கை வானொலியோடு உறவுகளை வைத்திருப்பவர்கள்.

குறிப்பாக, இலங்கை வானொலி என்னும் ஒலிபரப்பு  ஆல  விருட்சத்தில்  விளைந்த எத்தனையோ ஒலிபரப்பாளர்கள் லண்டன் பீ பீ சி , கனடிய கீதவாணி, கனடா தமிழ் ஒலிபரப்பு  கூட்டுத்தாபனம், ஆஸ்திரேலிய இன்ப தமிழ் வானொலி , பிரான்சின் ttr.,  லண்டனில் ஷ்பெக்ரம்  கானக்குயில் என உலகெங்கும் விரியும் இத்தனை ஒலி குயில்களும் கூவ ஆரம்பித்தது இலங்கை வானொலியில்தான்.   

இப்படி இலங்கை வானொலி பற்றி இப்பொழுதான்  கொஞ்சம்  கொஞ்சமாக  அங்கு கூவ ஆரம்பித்திருக்கும் இந்த இளம் குயில் இன்னும் ஏராளமாக சொல்லிவிடுவது அவ்வளவு சுலபமில்லை, இருந்தாலும் இலங்கை வானொலி வரலாற்றில் சில முக்கியமான தருணங்களை ஞாபக படுத்தலாம் என்று நினைக்கிறேன்...
இலங்கையில் ஒலிபரப்பு வரலாறு........... 1923 ஆம் ஆண்டு அதாவது ஐரோப்பாவில் ஒலிபரப்பு அறிமுகப்படுத்தப்பட்டு மூன்று ஆண்டுகளுக்கு பின்பு, இலங்கை தந்தி திணைக்களம் பரீட்சாத்த ஒலிபரப்பை ஆரம்பித்தது.
ஜெர்மன் நீர்மூழ்கி  கப்பல்  ஒன்றிலிருந்து கைப்பற்றபட்ட உதிரி பாகங்களை கொண்டு ஒரு சிறிய ஊடுகடத்தி (Transmeter) அமைக்கப்பட்டது.

பின்னர் குறைந்தளவு உபகரணங்களை  வைத்துக்கொண்டு மத்திய தந்தி அலுவலகத்தின் கட்டத்தில் அமைந்த , ஒரு சிறிய அறையில் வைக்கப்பட்ட இந்த ஊடுகடத்தி(Transmeter) மூலம் பொதுமக்களுக்கான முதலாவது பரீட்சாத்த ஒலிபரப்பு 1924 பெப்ரவரி 22 ஆம் திகதியிலும் பின்னர் இறுதி பரீட்சாத்த ஒலிபரப்பு அதே வருடம் ஜூலை 27 ஆம் திகதியும் இடம்பெற்றது .அதன் பின்பு நிகழ்ச்சிகள் வாரத்துக்கு இரு முறை அல்லது மும்முரைகள் ஒழுங்கற்ற முறையில் ஒலிபரப்பபட்டது. புதிய ஊடுகடத்தியின்(Transmeter) உதவியுடன் , ஒழுங்கமைந்த ஒலிபரப்பு 1925 ஆம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் திகதி உத்தியோக பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. இத்தினத்தை இலங்கை ஒலிபரப்புத்துறையின் அங்குரார்ப்பன தினமாக குறிப்பிடலாம்.

இலங்கை ஒலிபரப்பு துறையில் முக்கிய நிகழ்வுகள்.

1925.12.16 தேசாதிபதி சேர் கியூ கிளிபோட்டினால் ஒலிபரப்பு அங்குரார்ப்பணம்     செய்யப்பட்டது. 
1931.05.31 பாடசாலை ஒலிபரப்பு ஆரம்பமானது
1949.10.01 ஒலிபரப்பு திணைக்களம் 'ரேடியோ சிலோன்' ஆக மாற்றப்பட்டது.

1967.01.05 இலங்கை ஒலிபரப்பு  கூட்டுத்தாபனம் ஆரம்பிக்கப்பட்டது

1979.04.12 முதலாவது  பிராந்திய சேவை அனுராத புரத்தின் ரஜரட்டையில்   ஆரம்பிக்கப்பட்டது.
1981.1015 மகாவலி சனசமூக ரேடியோ சேவை பேராதனையில்   ஆரம்பிக்கப்பட்டது .

 1981.08.26 F.M ஸ்டீரியோ சேவை ஆரம்பிக்கப்பட்டது
                    யாழ்ப்பான பிராந்திய சேவை ஆரம்பிக்கபட்டது ( இப்போது பலாலி).

1983.04.13 கண்டி மஹாநுவர சேவை ஆரம்பிக்கபட்டது.
1986.04.11கிரந்துருகொட்டே சனசமூக சேவை ஆரம்பிக்கபட்டது .
1989.11.03 நகர்புற ஸ்டீரியோ சேவை ஆரம்பிக்கப்பட்டது .(CITY FM)
1992.02.25 ஐரோப்பா , அமெரிக்க ஆகிய தேசங்களுக்கான உலக சேவை            நான்கு மணிக்கு. ஆரம்பிக்கபட்டது
1993.02.01வன்னி ஒலிபரப்பு ஆரம்பிக்கபட்டது .

                                                இலங்கை வானொலி  .

14 comments:

Jana said...

தமிழ் வானொலி வரலாற்றில் என்றும் அழிக்கமுடியாத முத்திரையினை இலங்கை வானொலி பதித்துவிட்டது என்பதக்கு மாற்றுக்கருத்து எவரிடமும் இல்லை. குறிப்பாக உலகத்தமிழர்களில் பெரும்பான்மையான தமிழர்கள் வாழும் தமிழ்நாட்டு மக்களே என்றும் இலங்கை வானொலியின் நிகழ்ச்சிகளை மறந்துவிடமாட்டார்கள். அருமையான ஒரு பதிவு. வாழ்த்துக்கள்.

Prapa said...

Jana said...
பெரும்பான்மையான தமிழர்கள் வாழும் தமிழ்நாட்டு மக்களே என்றும் இலங்கை வானொலியின் நிகழ்ச்சிகளை மறந்துவிடமாட்டார்கள்./////

நிச்சயமாக ஜனா, தமிழ் சினிமாவிலும் படி மன்றங்களிலும் இலங்கை வானொலியை பற்றி அவர்கள் பேசும் போதே புரிகிறது ,இலங்கை வானொலியை எவ்வளவு நேசிக்கிறாங்க என்பது.
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி ஜனா.

Unknown said...

நல்ல பதிவு நன்றிகள்
தங்களைக் கண்டதில் மிக்க மகிழ்ச்சி....

Prapa said...

//மகாதேவன்-V.K said...நல்ல பதிவு நன்றிகள்தங்களைக் கண்டதில் மிக்க மகிழ்ச்சி....//

நன்றி நண்பரே..வருகைக்கு.. விமானம் பறப்பதை அறிந்து கொண்டேன்.

Prapa said...

// Anonymous said..."க்ளிக்" செய்து படியுங்கள் ம‌த‌ம்மாற்ற‌ம் செய்ய தில்லுமுல்லு மொள்ள‌மாரித்த‌ன‌ம்.//

ம்ம் படித்து பார்க்கலாமே........

Sivatharisan said...

தமிழ் வானொலி பறிறி நல்ல தரமான பதிவு நண்பா உண்மையில் உலகில் எத்தனை வானொலிகள் வந்தாலும் இலங்கை வானொலிக்கு என்றுமே ஒரு தனி இடம் இது காலத்தின் அழியாத சொத்து

யோ வொய்ஸ் (யோகா) said...

நல்ல பதிவு பிரபா.

இலங்கை வானொலி விட்டு சென்ற அழியாத தடங்கள் ஏராளம் ஏராளம். உலக தமிழ் வானொலி வரலாற்றலில் இலங்கை வானொலி ஒரு ராஜ கிரீடம்.

நான் சிறிய வயதில் இலங்கை வானொலி கேட்டு வளர்ந்தேன் என்பதில் பெருமையடைகிறேன்

பனித்துளி சங்கர் said...

அறியாத பல தகவல்கள் அறிந்துகொண்டேன் . பகிர்வுக்கு நன்றி .

Prapa said...

// sivatharisan said...
தமிழ் வானொலி பறிறி நல்ல தரமான பதிவு நண்பா உண்மையில் உலகில் எத்தனை வானொலிகள் வந்தாலும் இலங்கை வானொலிக்கு என்றுமே ஒரு தனி இடம் இது காலத்தின் அழியாத சொத்து..////

ஆமாம் நண்பா, நிறைய கற்றுத்தந்திருக்கிறது நமது அன்னை வானொலி.

Prapa said...

// யோ வொய்ஸ் (யோகா) said...நல்ல பதிவு பிரபா.
நான் சிறிய வயதில் இலங்கை வானொலி கேட்டு வளர்ந்தேன் என்பதில் பெருமையடைகிறேன்..///

சின்ன வயதில் நிறைய நண்பர்கள் அன்னை வானொலி கேட்டுத்தான் தமிழ் படித்தார்கள்...

Prapa said...

//!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...அறியாத பல தகவல்கள் அறிந்துகொண்டேன் . பகிர்வுக்கு நன்றி .//

வருகைக்கு ரொம்ப நன்றி நண்பரே............

அஹமட் சுஹைல் said...

நம்ம வானொலியப்பத்தி ஒரு பதிவா அப்படின்னு உள்ள வந்து பாத்தா நல்லாதான் இருக்கு பாஸ்.

//இப்படி இலங்கை வானொலி பற்றி இப்பொழுதான் கொஞ்சம் கொஞ்சமாக அங்கு கூவ ஆரம்பித்திருக்கும் இந்த இளம் குயில் //
இதப்பாத்த உடனே அட யாருடா அது நமக்குத் தெரியாம அப்படின்னு உங்க ஃபோட்டோவ பாத்தனா அப்படி ஒராள கண்டதே இல்ல.
அப்புறம்தான் ரிலா நானாகிட்ட விசாரிச்சன். உங்களப்பத்தி சொன்னாரு.
பிறைக்குப் போயிட்டீங்களாமாம்.

நான் யாருன்னு நீங்க கேக்கலாம். நானும்
//இப்பொழுதான் கொஞ்சம் கொஞ்சமாக அங்கு கூவ ஆரம்பித்திருக்கும் இளம் குயில்//

ஆயிரம்தான் உறவுகள் இருந்தாலும்
அன்னையவள் பாசத்துக்கீடாகுமா?
அலைவரிசை எத்தனை இருந்தாலும்
நம் அன்னைவானொலி போலாகுமா?
தென்றல்.. தென்றல்..
தென்றல் தென்றல்..

எங்க ஏரியாவுக்கும் வாங்க பாஸ்
http://aiasuhail.blogspot.com

Prapa said...

அஹமட் சுஹைல் said...
அட யாருடா அது நமக்குத் தெரியாம அப்படின்னு உங்க ஃபோட்டோவ பாத்தனா அப்படி ஒராள கண்டதே இல்ல. //

ஆமாம் சுஹைல் கூவ ஆரம்பித்து இப்பொழுது 6 வருடங்களுக்கு மேலாகிவிட்டது, இருந்தாலும் இன்னும் நிறைய கற்க வேண்டி இருக்கிறது அதனால் தான் மெல்ல மெல்ல கூவ ஆரம்பித்திருக்கிறேன் என்று சொன்னேன், உண்மைதான் தலைமையகத்தில் அடியேனை நீங்கள் கண்டிருக்க வாய்ப்பில்லை காரணம் நீங்கள் வரும்போது நாங்கள் அங்கிருக்கவில்லை ...... சரி அடிக்கடி பதிவுகளூடாக சந்திக்கலாம். வருகஈகு நன்றி சுஹைல்.

Nagapooshani said...

ஆயிரம்தான் உறவுகள் இருந்தாலும் அன்னையவள் பாசத்துக்கீடாகுமா? அலைவரிசை எத்தனை இருந்தாலும் நம் அன்னைவானொலி போலாகுமா?