பதிவுலகில் ஏராளமான சீரியசான பதிவர்களும், சில நகைச்சுவையான பதிவர்களும், இவர்களின் பதிவுகள் இல்லை என்றால் பதிவுலகமே சோபை இழந்து போகின்ற அளவுக்கு திறமையாக எழுதுகின்ற பதிவர்கள் , மொக்கையான பதிவிடுகின்ற பதிவர்கள் ( நம்மை போல ஹீ ஹீ).. என்று பல வகையினர் இருக்கிறார்கள்..
பதிவுலகில் காலடி எடுத்து வைத்து நீண்ட நாட்களில் எனது பதிவுகள் நிறைய நண்பர்களிடம் பொய் சேரவில்லை என்று நினைக்கிறேன் இதற்க்கு என்ன காரணம் என்று யோசித்து பார்த்த போது , சில முக்கியமான விடயங்களை நான் செய்ய மறந்திருக்கிறேன்
அதனையே இங்கு நான் செய்ய மறந்தவையாக பதிவிடுகிறேன்.
முக்கியமாக அதிக நண்பர்களுக்கு தெரியும் வகையில் எனது வலைபதிவுகளை தெரியப்படுத்த தவறி இருந்தேன், ( ஆரம்பத்தில் உண்மையில் எனக்கு தெரியவில்லை).
அடிக்கடி நண்பர்களின் பதிவுகளை வாசித்து கருத்துக்களை இட வில்லை இதனால் அவர்களின் பதிவுகளை வாசிக்கின்ற ஏராளமான நண்பர்களுக்கு எனது வலைப்பதிவு பற்றி தெரியாமல் போயிருந்தது,,
தேவேளை சில தொழிநுட்ப பிரச்சனைகளை உடனடியாக சரி செய்யாமல் நீண்ட நாடகளாக அப்படியே விட்டிருந்தமை,
அத்தோடு பதிவர்கள் சந்திப்புகளில் ஒரு போதும் நான் கலந்து கொள்ள வில்லை ( அதற்கு வேறு சில காரணங்களும் உண்டு).
அது மட்டுமில்லாமல் ஏனைய பதிவர்களோடு குறை நிறைகளை பேசாமல் விட்டிருக்கிறேன்,
இது போன்ற சில முக்கியமான விடயங்களை நான் செய்ய தவறியிருக்கிறேன் , ஆனால் இவற்ற்றை எல்லாம் மிக விரைவில் சரி செய்து கொள்ள தயாராக இருக்கிறேன் உங்கள் ஒத்துழைப்போடு.
2 comments:
engey aalai kaanom naal achi parthu unga pathivugalai...
// தமிழரசி said...
engey aalai kaanom naal achi parthu unga pathivugalai...//
ஆமாம் நேரத்தை சிறப்பாக பயன்படுத்தி ,வலைப்பதிவுக்கு நேரத்தை ஒதுக்க முடியாமல் போய்விட்டது. இனிமேல் தொடர்ச்சியாக எழுத வாய்ப்பிருக்கும் என்று நினைக்கிறேன், உங்கள் வருகை தொடர்ந்தும் இருக்கட்டும், நன்றி .
Post a Comment