ad

Saturday, October 17, 2009

கொண்டாட்டமும் , "கொல்லும்"வாட்டமும்.

அக்டோபர் 17 ,
தீமைகள் நீங்கி வாழ்வில் விளக்கேற்றும் இனிய தீபத்திருநாள்,,,,,,
அனைவருக்கும் இனிய வாழ்த்துக்கள்.
அதே போல இன்று இன்னுமொரு முக்கியமான நாள் .....
ஆம், "சர்வதேச வறுமை ஒழிப்பு நாள்".
வசந்தங்களை வரவேற்ற வண்ணம் சந்தோசத்தில் மக்கள் ஒரு பக்கம், "வசந்தம்" என்ற சொல்லை மட்டுமே கேட்டிருக்கும், வறுமையில் வாடும் மக்கள் இன்னுமொரு பக்கம். என்ன செய்வது எல்லா விடயங்களுக்கும் இரு பக்கங்கள் இருக்கும் என்பது உண்மை போலதான் இருக்கிறது...

உலகளாவிய ரீதியில் வறுமை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி, பசிப்பிணியில் இருந்து மக்களை விடுவிக்கும் நோக்குடன், ஐக்கிய நாடுகள் சபையானது 1992 ம் ஆண்டு முதல் அக்டோபர் 17 சர்வதேச வறுமைஒழிப்பு தினமாக உத்தியோக பூர்வமாக அறிவித்தது.
ஆனால் பரிதாப கரமாக இன்னும் எம்மால் இந்த அகோர வறுமையை வெல்ல முடியவில்லை....
பொருளாதார மந்தம், குறைந்த உற்பத்தி திறன் போன்றவையே இந்த "வறுமை " குழந்தையை பெற்றேடுக்கின்ற பெற்றோர் ....

இந்த கொடிய வறுமை காரணமாக உலகில், ஒவ்வொரு 3 1/2 நிமிடங்களுக்கு ஒருமுறை , ஒருவர் வறுமை சம்பந்தமான காரணிகளால் உயிரிழக்கிறார்.
அதே நேரம் உலக உணவு திட்டத்தின் (WFP) இன் தரவின் படி , ஒவ்வொரு நாளும் 25,000 பேர் பட்டணி மற்றும் அதனோடு தொடர்பான காரணிகளால் மரணிக்கிறார்கள். என்பது எத்தனை பேருக்கு ஆச்சர்யமான செய்தியாக இருக்குமோ தெரியாது ஆனால், 'காதுக்குள் கோடி நாகங்கள் கொத்துவதுபோல் ' வலிதருகின்ற உண்மையாகும்.

இது தவிர , அண்மைக்கால தரவுகளின் படி , உலக சனத்திஒகையில் 3 பில்லியன் மக்கள் நாளொன்றுக்கு 2.50 அமெரிக்க டாலருக்கும் குறைவான வருமானத்தை பெறுவதோடு 80% க்கும் அதிகமான மக்கள் வருமானம் குறைந்த நாடுகளிலே வாழ்கிறார்கள்.

இதை விட கொடுமை எதிர்கால உலகத்தை கட்டி எழுப்ப வேண்டிய 'சிறுவர்கள்' ஒவ்வொரு வருடமும் இந்த கொடிய வறுமை காரணமாக 25,000 பேர் வரையில் இறக்கிறார்கள்.

இந்த உண்மைகள் எல்லாமே கேட்பதற்கு கூட கஷ்டமாயிருக்கிறது, ஆனால் இதை அனுபவித்தல் எவ்வளவு கொடுமை.

"தங்களை உதைத்து தள்ளும் வாழ்க்கையோடு ஒட்டி கொள்ள இவர்களுக்கு என்ன வழி,?"

வாழ்க்கை இவர்களை முறிக்கப்பார்க்கிறது, வாழ்கையை வளைத்து கொள்ள ஏதாவது வழி இருக்கிறதா? .

முட்களை நிரந்தரமாகவும், ரோஜாக்களை எப்போதாவதும் வெளியிடுகின்ற ரோஜா செடி போலவே , இவர்களுக்கும் உணவு கிடைக்கிறது,

முட்களை எப்போதாவதும், ரோஜாக்களை நிரந்தரமாகவும் பெற்று கொள்ளும் காலம் எப்போது மலரும்,,,..?

உலக பட்டறையில் இவர்களுக்கெதிரான "பட்டினி" அம்புகள் மட்டுமே தயாரிக்கப்படுகிறது, இவர்களுக்கான " உணவு " கவசங்களை தயாரிக்க எத்தனை பேர் தயார்?????

"இவர்களை கட்டுப்பாட்டுக்குள்

வைத்திருக்கும் ,வறுமையால் ,

இவர்கள் தொட்டு பார்க்காத உணவுகள் ஏராளம்.

எனவே, கெட்டுப்போகும் வரை

விட்டு வைக்காமல்,

தட்டுப்பாடோடு இருக்கும் இவர்கள்

தட்டில் இடுவோமா..?"

15 comments:

இராகவன் நைஜிரியா said...

இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்

வேந்தன் said...

உங்களுக்கு எனது தீப திருநாள் நல் வாழ்த்துக்கள்.

Dr.எம்.கே.முருகானந்தன் said...

உங்களுக்கும் எனது தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

சந்ரு said...

//"இவர்களை கட்டுப்பாட்டுக்குள்
வைத்திருக்கும் ,வறுமையால் ,
இவர்கள் தொட்டு பார்க்காத உணவுகள் ஏராளம்.
எனவே, கெட்டுப்போகும் வரை
விட்டு வைக்காமல்,
தட்டுப்பாடோடு இருக்கும் இவர்கள்
தட்டில் இடுவோமா..?"//

மற்றுமோர் கவிஞன் எங்களுக்குள் ஒழிந்திருப்பது இன்றுதான் தெரிகிறது. வாழ்த்துக்கள்.... கவிதை அருமை கவிதைகளை தொடருங்கள் பிரபா

இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்

பிரபா said...

// இராகவன் நைஜிரியா said...
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்//

// வேந்தன் said...
உங்களுக்கு எனது தீப திருநாள் நல் வாழ்த்துக்கள்.//

// Dr.எம்.கே.முருகானந்தன் said...
உங்களுக்கும் எனது தீபாவளி நல் வாழ்த்துக்கள்.//

உங்கள் அனைவருக்கும் என் அன்பான இனிய தீப திருநாள் வாழ்த்துக்கள்....

பிரபா said...

// சந்ரு said...
மற்றுமோர் கவிஞன் எங்களுக்குள் ஒழிந்திருப்பது இன்றுதான் தெரிகிறது. வாழ்த்துக்கள்.... கவிதை அருமை கவிதைகளை தொடருங்கள் பிரபா//

ஆஹா , நல்லா கேளப்புரங்கையா பீதிய...
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்

Kala said...

ஆஹா..ஆஹா இம்புட்டு,இம்புட்டு
அழகாக வரிகள் வந்து விழுந்திருக்கு

இதைத்தான் ரோஷம் என்கிறதோ!
பாராட்டு பாராட்டு பல முறை பாராட்டு

ஆமா,,,இது ஓன்றும்.........?????
சொந்த முயற்சிதானே?

பிரபா பசி,பட்னி,கொலை,சாவு,
கொள்ளை,கற்பழிப்பு,திருட்டு,கடத்தல்,
இன்னும்.....இன்னும்.....இவையெல்லாம்
இல்லாத உலகம் இது.இதில் போய் நாம்
பழி போடலாமா?
மனதைப் பிழியும் தொகுப்புத்தான்
என்ன செய்யலாம்??????

கிறுக்கல் கிறுக்கன் said...

நல்லாத்தான் இருக்கு இனி அடிக்கடி வரேன்

பிரபா said...

//Kala said...
ஆஹா..ஆஹா இம்புட்டு,இம்புட்டு
அழகாக வரிகள் வந்து விழுந்திருக்கு

இதைத்தான் ரோஷம் என்கிறதோ!
பாராட்டு பாராட்டு பல முறை பாராட்டு

ஆமா,,,இது ஓன்றும்.........?????
சொந்த முயற்சிதானே?

பிரபா பசி,பட்னி,கொலை,சாவு,
கொள்ளை,கற்பழிப்பு,திருட்டு,கடத்தல்,
இன்னும்.....இன்னும்.....இவையெல்லாம்
இல்லாத உலகம் இது.இதில் போய் நாம்
பழி போடலாமா?
மனதைப் பிழியும் தொகுப்புத்தான்
என்ன செய்யலாம்??????
//

ம்ம்.... நன்றிகள்....

பிரபா said...

// கிறுக்கல் கிறுக்கன் said...
நல்லாத்தான் இருக்கு இனி அடிக்கடி வரேன்//


இப்பிடி சட்டு புட்டுன்னு முடிவெடுக்கணும்,,,, அடிக்கடி வாங்க சார்....

கல்யாணி சுரேஷ் said...

வலி மிக தருகிற பதிவு.

பிரபா said...

// கல்யாணி சுரேஷ் said...
வலி மிக தருகிற பதிவு.

நிச்சயமாக,,,,
இருந்தாலும் ஏதாவது பிறக்குமா என்ற ஆவலுடன் பதிந்தது....

LOSHAN said...

மனிதாபிமானத்தை தட்டியெழுப்பும் வரிகள்..

//இவர்களுக்கான " உணவு " கவசங்களை தயாரிக்க எத்தனை பேர் தயார்?????//
விடையில்லாத கேள்வி..


"இவர்களை கட்டுப்பாட்டுக்குள்

வைத்திருக்கும் ,வறுமையால் ,

இவர்கள் தொட்டு பார்க்காத உணவுகள் ஏராளம்.

எனவே, கெட்டுப்போகும் வரை

விட்டு வைக்காமல்,

தட்டுப்பாடோடு இருக்கும் இவர்கள்

தட்டில் இடுவோமா..?"//
மனதை உருக்கும் வரிகள்.

வாய்ப்பாடி குமார் said...

எத்தனை துக்கங்கள் நம் கண்முன்னே தெரிந்தாலும் ,அவையெல்லாம்
இலங்கை வானொலி அறிவிப்பாளர்களின் குரல் கேட்கும் போது ஒரு சில நிமிடங்கள் மறையத்தான் செய்கின்றன.

ஆம் , நேற்றுத்தான் உங்களின் இந்த இடுகையை படித்தேன், ஆனால் இன்று காலை தமிழ் நாட்டின் எங்கள் பகுதியில் (ஈரோட்டில்) இலங்கை எப்.எம் தென்றல் கேட்ட போது இப்படித்தான் நிகழ்ந்தது,ஆனால் ஒரு சில நிமிடங்களில்
துக்கம் தொண்டையை கவ்வ ஆரம்பித்தது.

வேறு வழியில்லை ,எம்மால் ஒன்றும் செய்யமுடியாது.

கோடை எப்.எம்க்கு மாறிவிட்டோம்.

கடவுள் எம் மக்களை காப்பாற்ற இந்த நேரத்தில் வணங்குகிறோம்.

அன்புடன் மலிக்கா said...

ந்ல்லதொரு இடுகை.