ad

Monday, August 16, 2010

மானம் போச்சு......

வந்த இடத்துல இப்பிடியா..? இதெல்லாம் ஒரு நாடா என்று மட்டும்  தயவு செய்து கேட்டுடாதீங்க யுவராஜ் சிங்......... எங்களால தாங்க முடியாது.!
ஆமாங்க இலங்கை வந்திருக்கின்ற இந்திய கிரிக்கெட் அணி வீரர் யுவராஜ் சிங் இப்பொழுது 'டெங்கு' காய்ச்சலினால் பாதிக்கபட்டிருக்கிறார். காலையில் செய்தி கேட்கவே கவலையாக இருந்தது .


 "இலங்கையில் இப்பொழுது டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
 ஜனவரி மாதம் முதல் இதுவரை 108 பேர் டெங்கு காய்ச்சலுக்கு இறந்துள்ளனர். 7000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்."

டெங்கு காய்ச்சலை பற்றிய தகவலை -மருத்துவர் ப.செல்வராஜன்- சொல்லியிருக்கிறார் கிளிக் பண்ணி பாருங்கள்.

ஏராளமான  மனித  உயிர்களை  காவு  கொள்ளுகின்ற இந்த கொடிய நுளம்பிளிருந்து  அனைவரையும்  பாதுகாக்க  சுகாதார துறை எவ்வளவுதான் முயன்றாலும் அதனை கட்டுபாட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை , இதற்கு முக்கிய காரணம் பொதுமக்களின் கவலையீனமே, காரணம் இந்த கொடிய நுளம்புகள் பரவாமல் தடுக்க அதன் உற்பத்தி இடங்களை அழிப்போம் என்று எத்தனை தடவைகள் சொன்னாலும் அதனை பாராமுகமாக இருப்பது , உங்களில்  ஒருவரை காவு கொண்டதன் பின்னர்தான்  விளங்குமோ  தெரியவில்லை.

இதன் மூலமாக எங்களுக்கு மட்டுமில்லாமல் எங்கள் நாட்டுக்கும் இப்பொழுது கெட்ட பெயர் வந்திருக்கிறது,( இதனால மட்டும்தான் கெட்ட பெயர்  வந்திருக்காக்கும் என்று மொக்கையா யோசிக்கமாடீங்க என்று நம்புறன்)  நம்ம  நாட்டில் கிரிக்கெட் விளையாட வந்தவருக்கும் குத்தி தன வரவேற்பை வெற்றிகரமாக வழங்கியிருக்கும் டெங்கு நுளம்பாரை  என்ன என்று சொல்வது , இனி நம்ம நாட்டுக்கு எப்படி வெளிநாடவர்கள் நம்பி வருவார்கள் ...... ''அடேய் எங்கடா  போகிறாய் இலங்கைக்கா ? அங்க போகாதடா அங்க டெங்கு நுளம்பை ரொம்ப பாசமாக வாழ வச்சிருக்காங்கடா  ...'' என்று சொல்ல வச்சுடாதீங்க .... போச்சு மானம் எல்லாமே போச்சு.

எனவே இந்த கொடிய டெங்கு நோயிலிருந்து எம்மையும் எம்மை நம்பி வருகின்ற விருந்தாளிகளையும் பாதுகாக்க வேண்டியது நம் கடமை.

                                  ஒன்று பட்டு  டெங்கை  விரட்டுவோம்.

6 comments:

ARV Loshan said...

டெங்கு பற்றிய விஷயங்கள் பயனுள்ளவை. எம் சூழலை நாமே சுத்தமாக வைத்திருந்தால் பிரச்சினையில்லை.

அது சரி டெங்கு நுளம்பார் குறிவைத்து யுவராஜை மட்டும் கடிக்குதேன்றால் ஏதோ இருக்கு தானே? ;)
அவருக்குத் தான் பட்ட காலிலேயே படுத்து..

பாவம் Water Boy

யுவராஜுக்கு டெங்கு இல்லையென்றும் ஒரு பக்கம் அறிக்கை வருது. எது உண்மை?

jenatha said...

டெங்கு காய்ச்சல் பற்றி பயனுள்ள தகவல்களை ( மருத்துவர் அறிவறுத்தல்களுடன்) தந்தமைக்கு பாராட்டுக்கள். டெங்கு ஒழிப்பிற்கு மக்கள் விழிப்புணர்வுடன் கூடவே அரசாங்க விழிப்புணர்வையும் சேர்த்துக்கொள்ளுங்கள். முறையான ஒழுங்கான நீர் வடிகாலமைப்பு வசதிகள் இருந்தாலே முக்கால்வாசி நோயைக் கட்டுப்படுத்தலாம்.

சீமான்கனி said...

லொங்கு லொங்குன்னு ரன்னு ஓடுனவர டேங்குல படுக்க வச்சுடீன்களே...அப்படின்னு ஒரு நடிகை புலம்புரான்கலாம் இந்தியாவுல...இந்த செய்தி உண்மையா...??பிரபா

Prapa said...

//
அது சரி டெங்கு நுளம்பார் குறிவைத்து யுவராஜை மட்டும் கடிக்குதேன்றால் ஏதோ இருக்கு தானே? ;)
அவருக்குத் தான் பட்ட காலிலேயே படுத்து..
பாவம் Water Boy
யுவராஜுக்கு டெங்கு இல்லையென்றும் ஒரு பக்கம் அறிக்கை வருது. எது உண்மை?


ஹீ ஹீ ஹி.. ஏதாவது அரசியல் உள் நோக்கம் நோக்கம் இருக்கோ தெரியல....
நுளம்புக்கே பிடிக்கல போல இருக்கு அன்னர்ட விளையாட்டு அதுதான்.......... 'ஊசி' போட்டிருக்கு.

Prapa said...

//Anonymous jenatha said...

டெங்கு காய்ச்சல் பற்றி பயனுள்ள தகவல்களை ( மருத்துவர் அறிவறுத்தல்களுடன்) தந்தமைக்கு பாராட்டுக்கள். டெங்கு ஒழிப்பிற்கு மக்கள் விழிப்புணர்வுடன் கூடவே அரசாங்க விழிப்புணர்வையும் சேர்த்துக்கொள்ளுங்கள். முறையான ஒழுங்கான நீர் வடிகாலமைப்பு வசதிகள் இருந்தாலே முக்கால்வாசி நோயைக் கட்டுப்படுத்தலாம்.////

நாட்டுல இல்லை எண்ட நம்பிக்கை.................லொள் !!! கட்டு படுத்துரம் பாருங்க.. ஹீ ஹி.....

Prapa said...

// சீமான்கனி said...லொங்கு லொங்குன்னு ரன்னு ஓடுனவர டேங்குல படுக்க வச்சுடீன்களே...அப்படின்னு ஒரு நடிகை புலம்புரான்கலாம் இந்தியாவுல...இந்த செய்தி உண்மையா...??பிரபா..///

அவங்க இப்ப மட்டுமில்ல ரொம்ப நாளா புலம்புறாங்க.... ஹீ ஹீ .