
தொலைதூரம் போய்
தேச வரலாற்றில்
இடம்பெறாமல் போன

தேச வரலாற்றில்
இடம்பெறாமல் போன

மீண்டும் ஒரு கள போர் ....இதில் சில வீரர்களை எதிரணி எவ்வாறு குறி வைக்கிறதோ இல்லையோ ரசிகர்கள் குறி வைத்திருப்பார்கள் என்பது வெளிப்படை உண்மை ...அதில் இருவர் கடந்த அறை இறுதி போட்டியில் இங்கிலாந்து அணியை துவம்சம் செய்த இருவர் ... ரிக்கி பாண்டிங் மற்றும் ஷேன் வாட்சன் .

இவர்களோடு , தென் ஆப்ரிக்காவின் ஜோகனஸ்பர்க்கில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) விருதுகள் வழங்கும் விழாவில் கடந்த ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருதை அள்ளி சென்ற வேகப்பந்து வீச்சாளர் மிச்சல் ஜான்சன். ( மனுஷன் பயங்கர குசியாக இருக்கிறார்).
இனி நியூஸிலாந்து ....
D Vettori*, S Bond, N Broom, I Butler, B Diamanti, G Elliott, J Franklin, M Guptill, G Hopkins†, B McCullum†, K Mills, I O'Brien, JPatel, AJ Redmond, R Taylor

இந்த அணியில் யார் எந்த நேரத்தில் என்ன செய்வாங்க என்று சொல்லவே முடியாது.... அந்தளவுக்கு எல்லா வீரர்களும் தங்கள் அணிக்கு ஏதாவது பங்களிப்பை செய்ய துடிப்பவர்கள். அதிலும் குறிப்பாக அணித்தலைவர் டேனியல் வெட்டோரி, ஷேன் பாண்டு, ரோஸ் டேய்லோர்...... போன்றோரை குறிப்பிட்டு சொல்லலாம் ...
எனவே சிறந்த இறுதி போட்டி ஒன்றை கிரிக்கெட் ரசிகர்கள் திங்கட்கிழமை மாலை 6 மணிக்கும், GMT 12.30 க்கும் கண்டு ரசிக்ககூடியதாக இருக்கும்....
இருந்தாலும் வெற்றி வாய்ப்புக்கள் ஆஸ்திரேலியாவுக்கே அதிகம் இருப்பது போல தெரிந்தாலும்... "தெரிந்த கிரிக்கெட்டில் தெரியாதது எதுவும் நடக்கலாம்..". பொறுத்திருந்து பாப்போம்.




கடவுள் .............
கடவுள் "நம்பிக்கை" இருக்குதோ இல்லையோ அடியேன் காலையில் இவரிடமிருந்து விலகியிருப்பதே இல்லை.....ஆனால் இவர் எப்போதும் நேர்மையான தீர்ப்புகளை வழங்குவதில் கெட்டிக்காரர் ஆனால் இப்போதெல்லாம் இவர் ரொம்ப புசியாகி விட்டாரோ என்னவோ தெரியவில்லை , தீர்ப்புகள் வழங்குவதற்கு கால தாமத மாகிறது .சிலவேளைகளில் "நின்று" வழங்குவாரோ தெரியவில்லை....ஒன்றுமட்டும் உண்மை எல்லோரும் இவருக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும் என்பதில் ரொம்ப கவனமாக இருப்பவர்களில் அடியேனும் ஒருவன்.
கடவுளிடத்தில் சிலருக்கு நம்பிக்கை இல்லாமல் போகலாம் ,ஆனால் "கடவுள்" மனிதனிடத்தில் இன்னும் நம்பிக்கை இழக்கவில்லை, என்ற தத்துவத்தை உணர்த்திக்கொண்டே ஒவ்வொரு குழந்தையும் இந்த உலகில் பிறக்கிறது "
பணம்....

காசேதான் கடவுளப்பா ,அந்த கடவுளுக்கும் அது தெரியுமப்பா.....இதுக்கு பிறகு நான் சொல்ல என்ன இருக்கு......
அளவாய் வைத்துக்கொண்டால் அழகாய் இருக்கும் அளவுக்கு மீறினால் அவஸ்தையாய் இருக்கும்.
ஓகே ஓகே.... ஏதோ நம்மால் முடிந்தளவுக்கு தந்திருக்கிறோம் இனி.....நான் மாட்டிக்கொண்டது போல , மாட்டி விடுவது இவர்களை . ( பயப்படாதீங்க இதுதான் தொடர் பதிவு விதி முறை).
வந்து தொடருங்கள்......
ஞாபகம் இருக்கட்டும் காதல்,அழகு, கடவுள் ,.பணம் .
அன்றைய தினம் அடியேனுக்கு வாழ்த்துக்களை சொன்ன அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் நன்றிகளை சொல்வதோடு வானொலிமூலமாக வாழ்த்துக்களை சொன்ன வெற்றி வானொலியின் முகாமையாளர் லோஷன் அண்ணா மற்றும் தேசிய வானொலியின் அனைத்து சக அறிவிப்பாளர் நண்பர்களுக்கும், பதிவுகள் மூலமாக வாழ்த்துக்களை சிறப்பாக சொன்ன நண்பர்களுக்கும் குறிப்பாக சந்த்ருவின் பக்கம் வாழ்த்துக்களை சொன்னது மட்டுமல்லாமல் "ஊக்கபடுத்தல் விருதும்" தந்து சந்தோஷ படுத்தியது , எனவே நண்பர் சந்த்ருவுக்கும் ,நிறைய வானொலி நண்பர்கள் தொலைபேசி மூலமாகவும் SMS மூலமாகவும் நேரடியாகவும் வாழ்த்துக்களை தந்தார்கள் அனைவருக்கும் நன்றிகள்.
FACE BOOK இல வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்ட நண்பர்களுக்கும் HI5சமூக தளங்களினூடாக வாழ்த்துக்களை தந்த நண்பர்களுக்கும் நன்றிகள் பல கோடி .

இது தவிர அன்றையதினம் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள முடியாத நண்பர்கள் கீழே வைத்திருக்கின்ற கேக்கை சாப்பிடலாம் ...... (இது புதுசு.)
அத்தோடு எனக்கு இத்தனை நண்பர்களா? என்று யோசிக்க வைத்து அசத்தி விட்டார்கள் நம்ம நண்பர் கூட்டம்.எனவே மீண்டும் ஒருமுறை எல்லோருக்கும் நன்றிகள் நன்றிகள் நன்றிகள்.



நீ எங்க போனாலும் விட மாட்டேன் என் பார்வை உன்னை எல்லா பக்கமும் துரத்தி வரும்...