ad

Thursday, September 2, 2010

அப்பிடி செய்தால் அது பிழை இல்லையா? ...............

அப்பிடி செய்தால் அது பிழை இல்லையா? ...............
இந்த கேள்வி நெடு நாளாக என் மனசை போட்டு துருவிக்கொண்டிருக்கின்ற ஒரு கேள்வி
அதாவது நாங்கள் செய்கின்ற ஒரு காரியம் எந்த ஒரு வகையிலும்  வேறு ஒருவரையும் பாதிக்க கூடாது இல்லையா?
அப்பிடி பாதித்தால் அந்த காரியத்தை எவ்வளவு நன்றாக செய்தாலும் அதில் பிரயோசனம் இல்லை.

சரி இனி விசயத்துக்கு வருவோம்..
அண்மையில் இந்திய தொலைக்காட்சியில் ஒரு 'குற்ற செயல்' தொடர்பான நிகழ்ச்சியொன்றை பார்த்துகொண்டிருந்தேன் , மனதுக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது...
அந்த நிகழ்ச்சி ஒரு உண்மை சம்பவத்தை இந்த உலகுக்கு வெளிக்காட்டுவது நோக்கமாக இருந்திருக்கலாம். ஆனால் அந்த நிகழ்ச்சி தயாரிப்பில் சில விடயங்களை கவனித்தால் நன்றாக இருக்கும் என எனக்கும் என்னோடு நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டிருந்த நண்பருக்கும் தோன்றியது.


அதாவது ஒரு குடும்பத்தில் நடந்த ஒரு பிரச்சனை பின்னர் ஒரு கொலையில் முடிந்ததுதான் கவலை . தனது மகள் படிப்பில் கவனம் செலுத்தாமல் சில ஆண் நண்பர்களுடன் ஊர் சுற்றி திரிவதை தாங்க முடியாத தந்தை தனது கௌரவம் பாதிக்கப்பட போகுதே என்று  அஞ்சி , ஆட்களை அமர்த்தி தனது மகளை  கொலை செய்கிறார். பின்னர் அவரும் அந்த கொலையாளிகளும் மாட்டி கொள்கிறார்கள்.
இந்த சம்பவத்தை உண்மையில் அந்த சம்பவத்தோடு சம்பந்த பட்ட கொலையாளிகளை தொலைக்காட்சியில் காட்டினார்கள் அதே வேளை உயிரிழந்த அந்த இளம் பெண்ணின் இறந்த உடலின் படமும் காட்டப்பட்ட்டது   , பின்னர் நடந்த அந்த உண்மை சம்பவத்தின் சில காட்சிகள் சித்தரிக்கப்பட்ட காட்சிகளாக  காட்டப்பட்டது.
இதன் மூலமாக இந்த சமுதாயத்துக்கு பல விடயங்களை தெளிவுபடுத்துகின்ற அதே வேளை பாதிக்கப்பட்டவர்களின் எதிர்காலம் என்னவாகும் என்பது மிகப்பெரிய ஒரு கேள்விக்குறியாகிறது....
தனது மகளின் நடவடிக்களிகள் பிழையான வழியில் இருந்தால் அதனை அந்த மகளுக்கு தெளிவு படுத்த தெரியாமல் தனது கௌரவம் பாதிக்க படும் என்பதற்காக கொலை வரை சென்ற அந்த தந்தையின் மன உணர்வுகளை பற்றி பேசுவதென்றால் இங்கே நிறைய பேசலாம்....  அது ஒரு புறம் இருக்க எனது வாதம் என்னவென்றால் ,, நடந்த அந்த சம்பவத்தை முழுமையாகவே ஒரு சித்தரிக்க பட்ட காட்சிகளாகவே காட்டியிருக்கலாம் அதை விடுத்து பாதிக்க பட்ட அந்த குடும்பத்தை முழுமையாக தொலைக்காட்சியில் காட்டுவதென்பது , அந்த நிகழ்ச்சிக்கென்னவோ, இன்னும்  நம்பகத்தன்மையை  இன்னும் அதிகரிப்பதாகவே   இருக்கும் அதேவேளை அந்த சம்பவத்தோடு தொடர்புபட்டு உயிருடன் இருப்பவர்களுக்கு பெரிய மன தாக்கங்களை ஏற்படுத்தும் இல்லையா??? தவறு செய்வது மனித இயல்பு அதற்காக தவறை மன்னித்து விடவேண்டும் என்றில்லை... மாறாக அவர்கள் ஏன் அந்த தவறை செய்கிறார்கள் என்று யோசித்து அந்த தவறை திருத்த ஏதாவது நடவடிக்கைகளை எடுக்கலாம்.. குறிப்பாக மற்றவர்களது அடிப்படை மனித உரிமைகள் பாதிப்படையாமல பார்த்துக்கொள்ளுவது மிக முக்கியம் .


இது போன்ற ஏராளமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் இந்திய தொலைக்காட்சிகளில்  ஒளிபரப்பாகின்றது , அத்தனையும் காத்திரமான உலகுக்கு தேவையான நல்ல நிகழ்சிகள் அதேவேளை மற்றவர்களின் மனித உரிமைகளும் பாதுகாக்கப்படவேண்டும் இல்லையா?
 அவர்களது அடிப்படை உரிமைகள் பாதிக்குமாறு செய்தால் அது பிழை இல்லையா?
" குற்றம் நடந்தது என்ன ?" என்று கேட்கின்ற அதேவேளை "குற்றம் நடக்காமல் இருக்க என்ன  செய்யலாம்?"" என்று சிந்திப்போம்.

7 comments:

Mohamed Faaique said...

nalla pathivu boss....
adi mattam varaikkum poi alasi irukkeenga...

Prapa said...

//Mohamed Faaique said...
nalla pathivu boss....
adi mattam varaikkum poi alasi irukkeenga...//
அடிக்கடி வாங்க நிறைய அலசலாம்.. வருகைக்கும் வாழ்த்துக்கும் ரொம்ப நன்றி நண்பரே....

யோ வொய்ஸ் (யோகா) said...

ivatril pathi real time programm'gal poi boss.

viewers'ai attract panna ippadi seigirargal.

most of them are not real..

யோ வொய்ஸ் (யோகா) said...

ivatril pathi real time programm'gal poi boss.

viewers'ai attract panna ippadi seigirargal.

most of them are not real..

Prapa said...

//யோ வொய்ஸ் (யோகா) said...
ivatril pathi real time programm'gal poi boss.
viewers'ai attract panna ippadi seigirargal.
most of them are not real..//

அதுதான் யோகா , அவற்றின் பின் விளைவுகள் தெரியாமல் செய்து கொண்டிருக்கிறார்கள்... அதற்காகத்தான் சொல்கிறேன், உணர்ந்து செயற்படட்டும்.

Riyas said...

நண்பர் பிரபா..

உங்கள் பதிவுகளை இப்போதுதான் பார்க்கிறேன் எல்லாம் நல்லாயிருக்கு..

உங்களை பின் தொடர்ந்தும்விட்டேன்.

நேரம் கிடைத்தால் எனது பிளாக் பக்கமும் வாங்க..

acca said...

உண்மைதான். பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் மன உளைச்சல்களை மீடியாக்கள் கட்டாயம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆனால் குற்றவாளிகளை வெளி உலகத்திற்கு காட்டக்கூடாது என்பது எந்த விதத்தில் நியாயம். தவறை மன்னித்து திருத்துவதற்கு இது ஒன்றும் திருட்டு அல்ல கொலை. என்னைப் பொறுத்தவரை இவர்களை எல்லாம் நடுச்சந்தியில் நிற்க வைத்து டப்.. டப்.......................என்று நியாயம்!!!!!!!!!!!!!!!! கேட்க வேண்டும்.