ad

Saturday, July 25, 2009

சோதனை

"தோல்விகள் வேதனைகள் அல்ல -
ஒரு பொக்கிசத்தை
ஒப்படைக்க முன்
நடத்தப்படும்
சோதனைகள்.


கவிஞர் மனுஷ்ய புத்திரன் கவிதைகளில் ஒன்று ரசித்தேன் ,பகிர்ந்தேன் .

Wednesday, July 22, 2009

மற்றுமொரு "ஆஸ்கார்"


நமக்கு மற்றுமொரு "ஆஸ்கார்" விருதுங்கோ......
டண்டானா.............. டர்ணா ...................
என்ன லுக்கு ?????
அதுதான் ....அதான்பா......

அந்த விருதுதான்.
நம்புங்க சார்.அட என்னங்க நீங்க
இதுவரைக்கும் நம்பவே இல்ல,,,,,,,


இல்லையா பின்ன பதிகின்ற நமக்கு பதிவுலகில் கிடைக்கிற எல்லா விருதுகளும் நமக்கு ஆஸ்கார் தானுங்க. இல்லையா!!!!அண்மையில் நண்பர் சந்ரு வழங்கிய "சுவாரஷ்ய பதிவர் " விருது பற்றித்தான் பேசுறன் என்று இதுக்கு பிறகும் நீங்க கண்டு பிடிக்க இல்ல என்று யாராவது சொல்லுவார்களா சொல்லுங்க...சந்ரு நன்றி ராசா..........விருது கிடைத்தது மகிழ்ச்சி,ஆனால் விருது வழங்குவது அவ்வளவு சுலபமான காரியமில்லைதானே !!!!அதுதான் அடியேன் விருது வழங்கும் வைபவத்தை கொஞ்சம் தாமதமாக அரங்கேற்றலாம் என நினைத்திருக்கிறேன் ,

விருதை பெற ஆர்வமுள்ளவர்கள் அடியேனை தொடர்பு கொள்ளலாம் . என்று சொல்லுவேன் என்று பாக்குறீங்களா??அப்பிடியெல்லாம் ,இல்ல இப்பொழுது விருதுகள் தயாராகிறது .........விரைவில் உலக மக்கள் அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் விருதுகள் வழங்கப்படும்.

Sunday, July 19, 2009

எழுத மறந்த கவிதைகள் -(பாகம்-2௦)

எந்த மொழி பேசினாலும்
புரிந்துகொள்ள முடிகிறது...
உன் மௌன மொழியைத்தவிர ....
-----
என் கவிதைகள்உனக்குபிடிக்கும் என்றாய்.
எழுதுவதை
நான் நிறுத்திய பிறகு,,,,,!
--------
என் இதயத்தின்வானொலி நீ....
என் செய்திகளுக்குத்தான்
இடமில்லை என்கிறாய்!
-------
மௌனமாய்-நீஎன்னை
கடந்துசென்ற போதும்-உன் இதயம்
என்னுடன்பேசிக்கொண்டுதான் சென்றது....
-------
காலங்கள்கடந்துசந்தித்தாய்......
உன்னில்எத்தனையோமாற்றங்கள் -
உன்மௌனத்தை தவிர!
------
ஒரு காலத்தில்
என் கவிதைகளை கூடநான்எழுதி வைத்ததில்லை.
நினைவுபடுத்தநீ இருக்கிறாய்என்பதால்....
இன்று-என்
பெயரையேஉனக்கு
ஞாபகபடுத்தவேண்டிஇருக்கிறது!---

புகைக்க போறீங்களா ? அப்ப நான் பொறுப்பில்ல !!!!

அண்மையில் நண்பி ஹேமா (ஹேமலதா ) ஈ மெயில் மூலமாக சில தத்துவங்களை படங்களாக தந்திருந்தார் , அனைத்தையும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் .
சொன்னால் கேக்கிறீங்களா புகைக்க வேணாம் என்னு, இப்ப பாருங்க என்ன ஆச்சு.......
















இப்ப சொல்லுங்க இனிமேலும் புகை.........??????
உங்கள் கருத்துக்கள் ....
ஹை கூ கவிதை வடிவில் வரட்டும்.

Thursday, July 16, 2009

என்ன ஒரு அற்புதம்....!!!!!!



இந்த புயல் வேக பதிவாளர்களுக்கு மத்தியில் , ஒருநாளைக்கு ஒரு பதிவாவது இடலாம் என யோசித்தால் நேர பிரச்சனை கணனியில் கைவைக்க விடுகிறதில்லை...அப்படியிருந்து இடையிடையே சந்திப்பதில் மகிழ்ச்சி .
அண்மையில் நண்பர் ரவீந்திரன் மெயில் மூலமாக பகிர்ந்து கொண்ட படமொன்றினை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன் , நீங்கள் உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள்.


Monday, July 13, 2009

எழுத மறந்த கவிதைகள்......பாகம்-1


காதல் - ஒரு
எளிமையான பாடம் தான் -ஆனால்
பலபேர் அதில்
தோற்று போகின்றார்கள்...!



நினைவுகள் குழந்தைகள் மாதிரி...
அழுத பின்புதான்உறங்குகின்றன...


உனக்கு என்னைத் தெரியும்
என்றுவார்த்தைகளுக்கு ஒரு கடிதம் எழுது!
அப்போதாவது அவை என்னுடன்
முரண்டு பிடிக்காமல் இருக்கட்டும் !!!!.



எழுத மறந்தது யாரென்று பிறகு சொல்கிறேன்......

Sunday, July 12, 2009

நாங்க கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கபோறம் !! ப்ளீஸ்.





































இதுக்கப்புறமும் அவங்கள நாங்க disturb பண்ண கூடாது உஷ்...........








எது சுத்தமானது??/


இங்கிலாந்தின் பெரும் தலைவரான செர்சிலும் முன்னாள் இந்திய ஜனாதிபதி டாக்டர் ராதாகிரிஷ்ணனும் ஒரு விருந்துக்கு சென்றார்களாம் ,

வழமைபோல சேர்சில் கரண்டியால் சாப்பிடத்தொடங்கினார் ,

டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களோ தனது கைகளை சுத்தமாக் கழுவிய பின்னர் சாப்பிடதொடங்கியிருக்கிறார்....

இத்தனை அவதானித்த சேர்சில் " என்ன இது???.... இப்படியா சாப்பிடுகிறீர்கள் !!!

கரண்டியால் சாப்பிடுவதுதானே சிறந்தது மட்டுமல்லாது சுகாதாரமானது , கையால் சாப்பிடுவது தவறு " என்றிருக்கிறார்.

இதைகேட்டு சாப்பிட்டு முடித்த ராதாகிருஷ்ணன் அவர்கள் புன்சிரிப்புடன் செர்சிலிடம் " உலகத்திலே கையால் சாப்பிடுவதுதான் சுத்தமானது ,காரணம் ,இதை வேறு யாரும் உபயோகிக்க முடியாதே ".....என்றாராம் .
இதைகேட்ட செர்சிலும் பதிலுக்கு புன்னகை செய்தாராம்.

நீங்க சொல்லுங்க எது சுத்தமானது ???????????


Saturday, July 11, 2009

கிரிக்கெட்டில் புதிய உபகரணங்கள்.....

தலைப்பைபார்த்து அவசர அவசரமாக ஓடி வந்த நண்பர்களே கொஞ்சம் அவசர படாமல் நிதானமாக நின்று வாசிங்க இது நம்ம வழமையான "மொக்க" பதிவுதான்.


அது வேறு ஒன்னுமில்லீங்க .... அடியேன் எப்ப கிரிக்கெட் விளையாட போனாலும் நம்ம விக்கெட் bowled முறையில் தான் அவுட் ஆகிறது வழக்கம் இத்தனை எவ்வாறு தடுப்பது என்ற பல நாள் ஜோசனைக்கு பிறகு உதித்ததுதான் இந்த ஞானம்....!!!!!! அதாவது விக்கெட் விழாத மாதிரி விக்கெட்டை நாட்டினால் சரிதானே !!!!!!! அதுதான் அடியேன் இப்படியான விக்கெட் ஒன்றை தெரிவு செய்தேன் . ( கீழே உள்ள படத்தில் இருப்பது அடியேன் தான் ,இப்ப சொல்லுங்க நம்ம விக்கெட்டை எந்த பந்துவீச்சால்வீழ்த்த முடியும்).



இது தவிர இன்னும் சில நன்மைகளும் உண்டு..........
அதிக பாரமில்லாமல் தயாரிக்கப்பட்ட "மட்டை"இதனால் கஷ்டப்படாமல் அதிக தூரம் தூக்கி ஓடலாம்.
அத்தோடு உடல் குளிர்ச்சியாக இருக்க ஆடைகளும் குறைக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் தூசுகளை தடுப்பதற்காக "பிளாஸ்டிக் முன் பாதுகாப்பு பகுதியை கொண்ட தலைகவசம் .
இப்படியான ஏகப்பட்ட நன்மைகளோடு நம்ம புதிய கண்டு பிடிப்பு !!!!!!!!!!

Thursday, July 9, 2009

ஆண்டு நிறைவுகளை கொண்டாடுவோமா?


ஆண்டொன்று போனால் வயதொன்று போகும் என்பார்கள்.....போகட்டுமே வயதுதானே !என்பவர்களும் இருக்கிறார்கள் , " ஐயோ இன்னுமொரு வருடம் ஓடி போயிடுச்சா " இந்த வருடத்திலாவது ஏதாவது சாதிக்க வேண்டும் "என்று உறுதி மொழி எடுத்துகொள்பவர்களும் இருக்கிறார்கள்.
மேல சும்மா நிகழ்ச்சி முன்னோட்டம்.......

இனி விசயத்துக்கு வருவோம்.
வழமையாக நாங்கள் ஒவ்வொரு வருட நிறைவையும் ஒவ்வோர் பெயர் கொண்டு அழைப்பது வழக்கம். அதில அனேகமானது எல்லோருக்கும் தெரிந்த...

1 -ஆண்டு விழா
25 -வெள்ளி விழா
50- பொன் விழா
100-நூற்றாண்டு விழா .
அனால் ஒவ்வொரு ஆண்டு நிறைவிற்கும் ஒவ்வோர் பெயருண்டு அதைத்தான் இங்கே நாங்கள் அறிந்து கொள்ள போகிறோம்.

இடையிடையே இடைவெளி இருக்கும் தெரிந்தவர்கள் அதனை கண்டு பிடித்து சொல்லுங்கள் இல்லையென்றால் பின்னூட்டத்தில் பார்க்கலாம்.

1வது ஆண்டு நிறைவில் நிறைவில் -காகித விழா
2-பருத்தி விழா
3-தோல் விழா
4-மலர் மற்றும் பழ விழா
5-மர விழா
6-சர்க்கரை /கற்கண்டு/இரும்பு விழா
7-கம்பளி/செம்பு விழா
8-மண் கலச விழா
10-.....................?
11-எக்கு விழா
12-லினன் விழா
13-பின்னால் விழா
14-தந்த விழா
15-.............?
20-பீங்கான் விழா
30-முத்து விழா
40-மாணிக்க விழா
இன்னும் ஏதாவது இருந்தால் சொல்லுங்க.....