ad

Saturday, July 11, 2009

கிரிக்கெட்டில் புதிய உபகரணங்கள்.....

தலைப்பைபார்த்து அவசர அவசரமாக ஓடி வந்த நண்பர்களே கொஞ்சம் அவசர படாமல் நிதானமாக நின்று வாசிங்க இது நம்ம வழமையான "மொக்க" பதிவுதான்.


அது வேறு ஒன்னுமில்லீங்க .... அடியேன் எப்ப கிரிக்கெட் விளையாட போனாலும் நம்ம விக்கெட் bowled முறையில் தான் அவுட் ஆகிறது வழக்கம் இத்தனை எவ்வாறு தடுப்பது என்ற பல நாள் ஜோசனைக்கு பிறகு உதித்ததுதான் இந்த ஞானம்....!!!!!! அதாவது விக்கெட் விழாத மாதிரி விக்கெட்டை நாட்டினால் சரிதானே !!!!!!! அதுதான் அடியேன் இப்படியான விக்கெட் ஒன்றை தெரிவு செய்தேன் . ( கீழே உள்ள படத்தில் இருப்பது அடியேன் தான் ,இப்ப சொல்லுங்க நம்ம விக்கெட்டை எந்த பந்துவீச்சால்வீழ்த்த முடியும்).இது தவிர இன்னும் சில நன்மைகளும் உண்டு..........
அதிக பாரமில்லாமல் தயாரிக்கப்பட்ட "மட்டை"இதனால் கஷ்டப்படாமல் அதிக தூரம் தூக்கி ஓடலாம்.
அத்தோடு உடல் குளிர்ச்சியாக இருக்க ஆடைகளும் குறைக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் தூசுகளை தடுப்பதற்காக "பிளாஸ்டிக் முன் பாதுகாப்பு பகுதியை கொண்ட தலைகவசம் .
இப்படியான ஏகப்பட்ட நன்மைகளோடு நம்ம புதிய கண்டு பிடிப்பு !!!!!!!!!!

11 comments:

சந்ரு said...

இப்படி புதிசு புதிசா சிந்திக்கிறீங்களே.... இருந்து யோசிப்பீங்களோ.....

விடுமுறை நாட்களில் நம்ம நண்பர்களோடு ஊர் சுற்றும்போதே நினைத்தேன்... எதோ விபரிதம் இருக்கேன்னு... இன்னும் நிறையவே படங்கள் இருக்குதே. அவையும் வலம் வரட்டுமே... நம்ம குறும்புகள நம்ம பதிவுலக நண்பர்களும் பார்க்கட்டுமே....

சிறந்த கண்டு பிடிப்புக்கான நோபல் பரிசு கிடைக்க வாழ்த்துக்கள்....

பிரபா said...

நன்றி நன்றி ,,,,,,, இன்னும் நிறைய இருக்கு படிப்படியாக வரும் .

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

கிரிக்கெட்டுல நீங்களும் புலியா


சொல்லவே இல்லை

LOSHAN said...

ஏனய்யா இப்டி? நானும் இப்பிடியெல்லாம் செய்து பார்த்தும் ஓட்டங்கள் பெற முடியலையே..

அது சரி பக்கத்து வீட்டு அங்கிள் தன்னுடைய ஹெல்மட்டைக் காணலை என்று தேடுறாராமே..

Ranjitha said...

நல்ல காமெடி பிரபா..

தேவன் மாயம் said...

பேட்டால அடிப்பீங்களா... இல்லை தலையால்தானா!!

சப்ராஸ் அபூ பக்கர் said...

பின்னாடி இருக்கிற மரம் தான் ரொம்பப் பிடிச்சிருந்தது....
(ஏன் தெரியுமா?.... பந்து வந்தாலே விக்கட் விழும் எங்களப் போல வீரர்களுக்கு நல்ல தடுப்பு இல்லையா?/.... உங்களையும் சேர்த்து..... அதனால தான்.... ஹி.... ஹி.....)

வித்தியாசமான கற்பனை....

வாழ்த்துக்கள் பிரபா.....

அஸ்வினி said...

பதிவுகள் நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள்...

பிரபா said...

ஓரளவுக்கு...starjan. வருகைக்கு நன்றி அடிக்கடி வாங்க இப்படி கடிவாங்க...
----------------
//அது சரி பக்கத்து வீட்டு அங்கிள் தன்னுடைய ஹெல்மட்டைக் காணலை என்று தேடுறாராமே//

ஹெல்மெட்ட கொடுத்தாச்சு ..... இன்னுமா தேடுறாங்க. ஓகே லோஸ்.
------------
வருகைக்கு ரொம்ப நன்றி ரஞ்சிதா ,அடிக்கடி வரலாமே இப்படி நிறைய மொக்கை பதிவுகளை பார்க்கலாம்.
----------
ஐயா விக்கெட்டில் பந்து படக்கூடாது !!! அதற்கான முயற்சிகள் அனைத்தும் மேற்கொண்டால் சரிதானே!!
----------
ஸப்ராஸ் நாமெல்லாம் எந்த லெவெலுக்கும் இறங்கி கலக்குவோமில்லையா !!!
--------
அஸ்வினி உங்கள் வருகையாலும் எங்கள் வலைபூ வனப்பாகியுள்ளது ,
நன்றி வாழ்த்துக்களுக்கு.

வால்பையன் said...

மரத்துக்கு பக்கதுல கிடக்குறது சரக்கு பாட்டில் தானே!

பிரபா said...

என்னடா இன்னும் யாரும் கேட்கயில்ல என்று பார்த்தேன் !!!!!
கண்டுபிடிசிட்டீங்க வாலு ஏன்னா கொக்கா ,,,,, யாருடமும் சொல்லவேணாம்.