ad

Wednesday, February 24, 2010

இதுவல்லவோ தீர்ப்பு................


மந்திரியான பிறகு -

சொந்த ஊருக்கு வந்தேன்;
பழைய தமிழாசிரியரைப்
பார்க்க நேர்ந்தது.
 
  'ஐயா ! என்னை

உருப்படாதவன்;
உதவாக்கரை;
ஊர்சுத்தி-
என்றெல்லாம்
அப்போது சொன்னீர்களே!
இப்போது
என்ன சொல்கிறீர்கள்
என்றேன்.
 
 
  தமிழாசிரியர்

தயங்காமல் பேசினார்;


'இப்போதும்
அதையேதான் சொல்கிறேன்'
என்று.
  நன்றி '(நிஜகோவிந்தம்)- கவிஞர் வாலி .

12 comments:

Anonymous said...

ஹ்ஹாஹா.....அசிங்கப்பட்டான் ஆட்டோக்காரன் என்ற திரைப்பட நகைச்சுவை தான் நினைவுக்கு வருகிறது...

Prapa said...

//தமிழரசி said...
ஹ்ஹாஹா.....அசிங்கப்பட்டான் ஆட்டோக்காரன் என்ற திரைப்பட நகைச்சுவை தான் நினைவுக்கு வருகிறது...//

எழுத்தோசையின் அரசியாரே வருகைக்கு ரொம்ப நன்றி,,,, அந்த நகைச்சுவையை எங்களுக்கும் சொல்லுங்களேன் எல்லோரும் சிரிப்போம்.

கலா said...

“மந்திரி” இப் பதவியை இப்போதெல்லாம்
அப்படித்தான் செயல்படுத்துகிறார்கள்

அவர்களுக்குள் தவிர...மற்றவர்களுக்கு
ஒரு பிரயோசனமும் இல்லை
நகைச்சுவையுடன் எடுத்துக் காட்டும்
விதம் அருமை.


எம்மொழிக்குமில்லா,,அழகு
இதுதான் பைந்தமிழின் பாங்கு பிரபா!!

அன்புடன் நான் said...

இததான் எங்க ஊருல...தவள தான் வாயால கெடும்முன்னு சொல்லுவாங்க.

Prapa said...

//கலா said...
“மந்திரி” இப் பதவியை இப்போதெல்லாம்
அப்படித்தான் செயல்படுத்துகிறார்கள்

அவர்களுக்குள் தவிர...மற்றவர்களுக்கு
ஒரு பிரயோசனமும் இல்லை
நகைச்சுவையுடன் எடுத்துக் காட்டும்
விதம் அருமை.


எம்மொழிக்குமில்லா,,அழகு
இதுதான் பைந்தமிழின் பாங்கு பிரபா!!
//

இந்த விடயம் அவர்களுக்கும் தெரியும் ஆனால் கண்டுகொள்ளமாட்டார்கள் கலா.

Prapa said...

//சி. கருணாகரசு said...
இததான் எங்க ஊருல...தவள தான் வாயால கெடும்முன்னு சொல்லுவாங்க.
//

சரியான விளக்கம்,,,, கருணா.
வருகைக்கு ரொம்ப நன்றி.

சீமான்கனி said...

சரியாதான் சொல்லிருகாரு....
:)))....

தர்ஷன் said...

உண்மைதான்
மந்திரிகளாய் இருப்பவர்கள் அப்படிப்பட்டவர்கள்தானே

Prapa said...

// seemangani said...

சரியாதான் சொல்லிருகாரு....
:)))....//

ஆமாம் நண்பரே...

Prapa said...

//தர்ஷன் said...

உண்மைதான்
மந்திரிகளாய் இருப்பவர்கள் அப்படிப்பட்டவர்கள்தானே//

ஆம் தர்சன் , இது அவர்களுக்கும் தெரியும்,, இருந்தாலும் கண்டுக்க மாட்டாங்க.

பித்தனின் வாக்கு said...

நீங்க சொல்றது உண்மைதான். ஆனா இது 2000 வரைக்கும் இருந்த மந்திரிக்களுக்த்தான் பொருந்து. இப்ப எல்லாம் முகமூடி இல்லாத கொள்ளைக்காரர்கள் ஜோக்தான் பொருந்தும். நன்றி.

தீபிகா சரவணன் said...

www.tamilarkalblogs.com தமது இணையதளத்தினை அனைவருக்கும் அறிமுகப்படுத்தும் விதமாகவும் வலைப்பதிவாளர்களை ஊக்குவிக்கும் முகமாகவும் போட்டியொன்று நடாத்த திட்டமிட்டு உள்ளது. போட்டியில் வெற்றிபெறும் 10 பதிவர்களுக்கு 25 GB's of Space மற்றும் 1 Domain Name இலவசமாக வழங்கப்படும். மேலதிக விபரங்களுக்கு http://www.tamilarkalblogs.com/page.php?page=announcement இந்த இணைப்பினை பார்க்கவும்.