ad

Sunday, October 4, 2009

கறுப்பு மஞ்சள் போர்.........

மீண்டும் ஒரு கள போர் ....


ஆம் இது கிரிக்கெட்டில்.

உலகின் தலைசிறந்த முதல் 8 அணிகள் மோதிய (ஐ.சி.சி.,) மினி உலக கிண்ணத்தை கைப்பற்றும் நம்பிக்கையுடனும் கனவுடனும் களமிறங்குகிறது இரண்டு கிரிகெட் சிங்கங்கள் .


ஆனால் இதன் முடிவு 1988 ஜனவரி 22 இல்

M.C.G. இல் கிடைத்தது போல் முடிவுகள் தான் இம் முறையும் கிடைக்குமா என்பதில் சந்தேகமே..... ஆஸ்திரேலியா இறுதியாக இந்த மைதானத்தில் விளையாடிய 10 போட்டிகளில் 6(ஆறு) போட்டிகளில் வெற்றி பெற்றிருப்பது அணிக்கு இன்னும் வலு சேர்க்கும் என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை. அதே நேரம் நியூஸிலாந்து அணியானது கடைசியாக விளையாடிய 5 ஒருநாள் போட்டிகளில் எந்தவொரு போட்டியிலும் வெற்றி ஈட்ட வில்லை என்பது நியூஸிலாந்து ரசிகர்களுக்கு கொஞ்சம் கஷ்டமாக இருக்கின்ற விடயமாக இருக்கும், இந்த சுற்று போட்டியில் கூட நியூஸிலாந்து அணி இதே மைதானத்தில் வைத்து தென்னாபிரிக்க அணியிடம் தோல்வி கண்டதும் குறிப்பிட தக்கது.


இது தவிர போட்டியின் முடிவுகளை தீர்மானிக்கின்ற மிகப்பெரிய சக்தியாக மாறி வருகின்ற "மழை" இந்த போட்டியில் எந்தளவுக்கு தாக்கம் செலுத்த போகிறதோ தெரியவில்லை.

இவை ஒரு புறமிருக்க இரண்டு அணிகளினதும் பலம்களையும் ஒரு முறை நாங்கள் கட்டாயம் உற்று நோக்க வேண்டி இருக்கிறது.....


அவுஸ்திரேலியா அணி.....


RT Ponting*, DE Bollinger, CJ Ferguson, NM Hauritz, BW Hilfenhaus, JR Hopes, DJ Hussey, MEK Hussey, MG Johnson, B Lee, TD Paine†, PM Siddle, AC Voges, SR Watson, CL White


இதில் சில வீரர்களை எதிரணி எவ்வாறு குறி வைக்கிறதோ இல்லையோ ரசிகர்கள் குறி வைத்திருப்பார்கள் என்பது வெளிப்படை உண்மை ...அதில் இருவர் கடந்த அறை இறுதி போட்டியில் இங்கிலாந்து அணியை துவம்சம் செய்த இருவர் ... ரிக்கி பாண்டிங் மற்றும் ஷேன் வாட்சன் .





இவர்களோடு , தென் ஆப்ரிக்காவின் ஜோகனஸ்பர்க்கில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) விருதுகள் வழங்கும் விழாவில் கடந்த ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருதை அள்ளி சென்ற வேகப்பந்து வீச்சாளர் மிச்சல் ஜான்சன். ( மனுஷன் பயங்கர குசியாக இருக்கிறார்).


இனி நியூஸிலாந்து ....


D Vettori*, S Bond, N Broom, I Butler, B Diamanti, G Elliott, J Franklin, M Guptill, G Hopkins†, B McCullum†, K Mills, I O'Brien, JPatel, AJ Redmond, R Taylor


இந்த அணியில் யார் எந்த நேரத்தில் என்ன செய்வாங்க என்று சொல்லவே முடியாது.... அந்தளவுக்கு எல்லா வீரர்களும் தங்கள் அணிக்கு ஏதாவது பங்களிப்பை செய்ய துடிப்பவர்கள். அதிலும் குறிப்பாக அணித்தலைவர் டேனியல் வெட்டோரி, ஷேன் பாண்டு, ரோஸ் டேய்லோர்...... போன்றோரை குறிப்பிட்டு சொல்லலாம் ...


எனவே சிறந்த இறுதி போட்டி ஒன்றை கிரிக்கெட் ரசிகர்கள் திங்கட்கிழமை மாலை 6 மணிக்கும், GMT 12.30 க்கும் கண்டு ரசிக்ககூடியதாக இருக்கும்....


இருந்தாலும் வெற்றி வாய்ப்புக்கள் ஆஸ்திரேலியாவுக்கே அதிகம் இருப்பது போல தெரிந்தாலும்... "தெரிந்த கிரிக்கெட்டில் தெரியாதது எதுவும் நடக்கலாம்..". பொறுத்திருந்து பாப்போம்.

4 comments:

யோ வொய்ஸ் (யோகா) said...

இருந்தாலும் வெற்றி வாய்ப்புக்கள் ஆஸ்திரேலியாவுக்கே அதிகம் இருப்பது போல தெரிந்தாலும் நியுசிலாந்து வெற்றி பெற நினைப்போம்.

எனக்கு தனிப்பட்ட ஆஸதிரேலிய வீரர்களின் ஆட்டம் பிடிக்கும் ஆனால் அணியாக அவர்களை பிடிக்காது..

Prapa said...

//
யோ வாய்ஸ் (யோகா) said...
இருந்தாலும் வெற்றி வாய்ப்புக்கள் ஆஸ்திரேலியாவுக்கே அதிகம் இருப்பது போல தெரிந்தாலும் நியுசிலாந்து வெற்றி பெற நினைப்போம்.

எனக்கு தனிப்பட்ட ஆஸதிரேலிய வீரர்களின் ஆட்டம் பிடிக்கும் ஆனால் அணியாக அவர்களை பிடிக்காது..
//

பொறுத்திருப்போம் என்ன நடக்குது என அறிந்து கொள்ள....

Unknown said...

நான் அவுஸ்ரேலியா பக்கம்...

எனக்கத் தெரிந்தவரை போட்டு மொங்கப் போகிறார்கள் நியூசிலாந்தை...
ஷேன் பொன்ட் தான் கொஞ்சம் பிரச்சினை குடுப்பார் எண்டு நினைக்கிறன்...

Prapa said...

// கனககோபி said...
நான் அவுஸ்ரேலியா பக்கம்...

எனக்கத் தெரிந்தவரை போட்டு மொங்கப் போகிறார்கள் நியூசிலாந்தை...
ஷேன் பொன்ட் தான் கொஞ்சம் பிரச்சினை குடுப்பார் எண்டு நினைக்கிறன்...//

நடந்தாலும் நடக்கலாம் கோபி....