ad

Thursday, May 28, 2009

ஐயோ அப்பிடியா ?????


உலகத்தில் ஒவ்வொரு நாளும் என்ன நடக்கிறது? என்றால் அதற்கு எவ்வளவோ பதிலா நம்மிடையே இருக்கிறது ,இதில் சில விசயங்களை எங்களால் நம்ப முடியாமல் இருக்கும் . அப்படியான விஷயமொன்றை இன்று பதிவினூடாக பகிர்ந்துகொள்ளலாம் என நினைக்கிறேன்.


உலகில் ஆயிரக்கணக்கான "மொழிகள் ' இருந்தாலும் ,பெருமளவில் 13 மொழிகளே பேசப்படுகின்றன , இதில் குறிப்பாக சீன மொழி,ஆங்கில மொழி,ரஷ்ய மொழி,ஸ்பானிய மொழி,இந்தி மொழி போன்றவை முன்னிலை வகிப்பது தெரிந்த விடயம்.

ஆனால் , உலகிலுள்ள மொழிகளில் 14 நாட்களுக்கு ஒருமுறை ஒரு மொழி அழிந்து வருகிறதாம் !!!!. தற்போது 7 ஆயிரம் மொழிகள் இப்படி அழியும் நிலையில் உள்ளதாக சொல்லப்படுகிறது.

பாருங்கள் மொழிக்கு வந்த சோதனையை !

இதற்கான அடிப்படை காரணங்கள் என்ன என சிந்தித்த போது பல்வேறு காரணங்கள் புலப்பட்டிருக்கின்றன அதில் குறிப்பாக ,

# குறிப்பிட்ட மொழியை பேசுபவர்கள் இறந்து போவதும் ஏனைய மொழிகள் அம மொழிகள் மீது ஆதிக்கம் செலுத்துவதுமே பிரதான காரணங்களாக கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

இதில் அநேகமான மொழிகள் ,பூர்வ குடிகளான மலைவாழ் மக்களின் மொழிகளாக இருப்பது குறிப்பிடத்தக்கது .


இதைவிடவும் இன்னுமொரு முக்கியமான விடயத்தையும் சொல்லவேண்டும் ,உலகில் இருந்த மொத்த மொழிகளில் அரைவாசிக்கு மேல் கடந்த ௫00 ஆண்டுகளில் அழிந்து போய்விட்டதாம் . அத்தோடு மீதமிருக்கும் பெரும்பாலான மொழிகளும் இந்த நூற்றண்டில் அழிந்து போக கூடிய சத்தியம் இருப்பதாகவும் மிகச் சொற்பமான மொழிகளே எஞ்சும் என்று ஆராச்சியாளர்கள் சொல்லியிருக்கின்றார்கள்.


இதில், அமெரிக்க பழங்குடியினர் பேசிய 40 மொழிகள், அவுஸ்திரேலியா பழங்குடியினர் பேசிய 153 மொழிகளும் அழிந்து வரும் மொழிகளின் பட்டியலில் இருப்பதாக சொல்ல படுகின்றது.

இத்தோடு இன்னுமொரு சுவாரஸ்யமும் இருக்கிறது அவுஸ்திரேலியா பழங்குடி மொழி ஒன்றை பேசும் நபர்கள் இருவர் மட்டுமே இப்போது உயிரோடு இருக்கிறார்களாம் இவர்களும் இறந்து போனால் அவர்களின் மொழியும் மறைந்துவிடும்.

எனவே குறைந்த பட்சம் அழிந்து வரும் மொழிகளை பதிவு செய்து பாதுகாக்கும் பணியில் ஆராச்சியாளர்கள் ஈடுபட்டிருக்கிறார்களாம் .எனவே இந்த பணியில் நமது வலையுலக நண்பர்கள் யாராவது ஈடுபட்டாலும் மிக சிறப்பாக இருக்கும் . வாழ்த்துக்கள்.

4 comments:

Admin said...

மொழிகள் மட்டுமல்ல பிரபா இன்று எமது தமிழ் மொழியில் இருக்கும் பல கிராமிய சொறகள்கூட மருவி வருகின்றன அவற்றைக்கூட பாதுகாக்கவேண்டியது எமது கடமை இல்லையா... மருவிவரும் கிராமிய சொற்கள் பற்றி எல்லாம் ஒரு பதிவு போடா எண்ணி இருக்கிறேன் பதிவுலக நண்பர்களும் மருவிவரும் கிராமிய சொற்கள் தொடர்பான பதிவுகளை போடலாமே...

வால்பையன் said...

உங்கள் வருத்தம் புரிகிறது!

உலகில் பழையன அழிதலும், புதியன புகுதலும் ஆண்டாண்டு காலமாய் நடந்து வருகிறது!

இப்பொழுது தான் யாழ்பான தமிழ் என்ற ஒரு சீரிய தமிழ் மொழியின் கிளை அழிந்திருக்கிறது!

இன்னும் கொஞ்சம் நாளில் கேரளாகாரனும், கர்நாடகாகாரனும் தண்ணீர் தராமல் தமிழ்நாடு என்பதையே வாழ தகுதியில்லாத நாடாக மாற்றிவிடுவான்!

புலம் பெயர்ந்து நாடு நாடாக திரிவோம்!

அங்க போய் தமிழ வளர்க்க போறேன்னு சொன்னா என்ன பண்ணுவான் தெரியுமுல்ல!

நமது கேடு கெட்ட அரசியல் இருக்கும் வரை தமிழ்நாட்டோடு சேர்ந்து தமிழையும் மறக்க வேண்டியது தான்!,

siyah said...

Old is gold!

இரசிகை said...

ithellam yenakku puthusunga!!