ad

Tuesday, May 26, 2009

நம்பினால் நம்புங்கள்....


"நம்பிக்கைதான் வாழ்க்கைஎன்பது போல நாங்கள் ஒவ்வொருவரும் எவ்வளவோ நம்பிக்கைகளோடு நமது வாழ்க்கையை ஓட்டி செல்கின்றோம் ,

ஆனால் சிலவேளைகளில் நமது நம்பிக்கைகள் ,


# சிலருக்கு விந்தையாகவும் ஆச்சர்யமாகவும் ...

# சிலருக்கு நகைச்சுவையாகவும் ......

# சிலருக்கு மூடத்தனமாகவும் இருக்கும் .


யார் எவ்வாறு நினைத்தாலும் நம்மில் பலர் தங்கள் நம்பிக்கைகளில் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள்.

இப்படியான சில சுவாரஸ்யமான நம்பிக்கைகள் அதுவும் அணிகின்ற ஆடைகள் சம்பந்தமாக உலக நாடுகள் சிலவற்றில் காணப்படுகின்ற நம்பிக்கைகள் சிலவற்றை பார்க்கலாம்.


ஐரோப்பிய மக்கள் ,

கீழே ஒரு சட்டை பொத்தானை கண்டெடுத்தால் ,புதிய நண்பர்கள் கிடைப்பார்கள் என நம்புகிறார்களாம் , அதேபோல தங்கள் ஆடைகளில் சிறிது பஞ்சு ஒட்டிகொண்டிருந்தால் , ஒரு முக்கியமான் கடிதம் வரும் என நம்புகிறார்களாம்.

இதேபோல ,

ஆடையை அணிந்தபடி ஒருவர் அதை தைத்து கொண்டால், அவருக்கு எப்பொழுதுமே பணப்பற்றாகுறை இருக்குமென்று இங்கிலாந்து மக்கள் நம்புகிறார்களாம். அது மட்டுமல்லாமல் ,


தங்களது தீர்மானங்களை சரிபார்த்து கொள்ளவும் இந்த ஆடைகள் சம்பந்தபட்ட நம்பிக்கைகளை சிலர் பயன் படுத்துகிறார்களாம் , அதாவது

தாங்கள் ஒரு விசயத்தில் எது சரி? எது பிழை ? என்று யோசிக்கும் போது ,

தமது சட்டை பொத்தான்களை எண்ணுகிறார்கள் அவ்வாறு எண்ணும் போது ,இரட்டைப்படை எண்கள் வந்தால் தாங்கள் நினைப்பது 'சரி' என்றும் ஒற்றைப்படை எண்கள் வந்தால் நினைப்பது 'பிழை ' என்றும் கருதுகிறார்களாம் .
இதேபோல ஆடையின் உட்புறத்தை தவறுதலாக வெளிப்புறம் வைத்து அணிந்து கொள்வது உலகின் பல்வெஉ பகுதிகளிலும் அதிஷ்டமாக கருதப்படுகிறதாம் .

பாத்தீங்களா ! நம்பிக்கை எவ்வாறெல்லாம் வடிவமெடுக்கிறது என்று !!!!
எது எவ்வாறாக இருந்தாலும் அடியேன் முழுமையான நம்பிக்கையோடு இருக்கிறேன் 'பின்னூட்ட எஜமானர்கள் தங்களது காத்திரமான கருத்துக்களை தருவீர்கள் என்று '
எனவே எனது நம்பிக்கை நிச்சயம் ஜெயிக்கும் தானே !!!!!!

8 comments:

Anonymous said...

அடுத்த முறை தமிழர்ஸில் இனைக்கும் போது பிளாகின் முகவரிக்கு பதிலாய் அந்த பதிவு போஸ்டின் முகவிரி கொடுக்கவும்

http://prapaactions.blogspot.com/2009/05/blog-post_25.html

நன்றி
தமிழர்ஸ்

Prapa said...

ok,i'll correct.thanks

கலையரசன் said...

உன் நம்பிக்கை வீண்போகாது சகா!
நம்பிக்கை முயற்சி வெற்றி
தொடர்ந்து எழுதிகொண்டிரு...

Prapa said...

ரொம்ப நன்றி சகா.

Suresh said...

அருமையான பதிவு வித்தியாசமான நம்பிக்கைகள் சொன்னதற்க்கு நன்றி

இந்த நண்பனை காட்டிய தமிழர்ஸ்க்கும் நன்றி

Prapa said...

இனிக்க இனிக்க செய்தி சொல்லும் சுரேஷுக்கு ரொம்ப நன்றி.
உங்கள் வருகையால் நமது வலைபூவும் வனப்பாகியுள்ளது .

Admin said...

நம்பிக்கைதான் வாழ்க்கை .... உங்களிடம் சொல்லவே தேவை இல்லை. நம்பிக்கைமீது நம்பிக்கைவைத்து கல்லையும் பார்த்தால் அதுதான் தெய்வத்தின் காட்சி.....

தொடருங்கள் நம்பிகையுடன்.... .

Prapa said...

ஓகே சந்த்ரு, தொடரட்டும் பணி, இதெல்லாம் நமக்கு சகஜம்தானே!