ad

Thursday, August 6, 2009

என்னங்க பண்ண......


இப்பவெல்லாம் அடிக்கடி பதிவிட முடிவதில்லை ,காரணம் கணினியின் முன் இருந்தால் ஒரே தலையிடி ....கொஞ்ச நேரத்துக்குள் போதும் போதும் என்றாகிவிடுகிறது,,,,,,, கண்ணுக்கு வேற கஷ்டமாயிருக்கு. பிறந்ததிலிருந்து தொடர்ச்சியாக 12 வருடங்களாக கணினியோடு இடை விடாது இணை பிரியாமல் இருந்தாலோ என்னவோ தெரியல .....


இப்ப நான் என்னங்க பண்ணலாம், பதிவுலகில் இருக்கும் வைத்திய நண்பர்கள் ஆலோசனைகளை தாருங்கள்.

12 comments:

சிநேகிதன் அக்பர் said...

நல்ல டாக்டரிடம் காட்டுங்கள்.

நலம் பெற வாழ்த்துக்கள்.

குடந்தை அன்புமணி said...

அக்பர் சொன்னதையே நானும் வழிமொழிகிறேன்.

Kala said...

பிரபா தலைவலி வரப்பல காரணங்கள்
முதல், அனுபவம் உள்ள ஒரு மருத்துவரை
அணுகி பரிசோதனை செய்து ,ஆலோசனை
கேளுங்கள் மூக்குக் கண்ணாடி அணிந்தால்
சரிவர வாய்ப்புண்டு.
தலை{ hard massage}வாரத்தில் இரண்டு
தடவைகள் செய்யலாம்.தலைக்குஇரத்தோட்டம்
போக்ககூடிய யோகப் பயிற்சி செய்யலாம்,

தியானம் செய்யலாம். பழங்கள்,காய்கறிகள்
அதிகமாகச் சேர்த்துக்கொள்ளுங்கள் அன்றாடம்
தொடர்ந்து வெறும்வயிற்றில் திராட்சை மட்டும்
சாப்பிடுங்கள்.
வாரத்தில் இரண்டுதடவை கண்{மாஸ்க்} போடலாம்
ஓரு துணியில் இரண்டு ஐஸ் கட்டிகளை வைத்து
சுற்றி ஓத்தடம் கொடுக்கலாம் தலைவலிக்கு
முதல் எதிரி ரென்ஷன் இதை இல்லாமல்
செய்தால் பாதி குறைந்து விடும்.
அன்றாடம் எவ்வளவோ இருக்கின்றன
ஆரோக்கிய வாழ்வுக்கு சிலர் செய்யத்
தவறிவிடுவார்கள் உ+ம் உடற் பயிற்சி
ஆரோகிய உணவு ,அளவான தூக்கம்,
{உங்களுக்கு மிக,மிக முக்கியம்}
வேண்டிய அளவு தண்ணீர் இன்னும்
எவ்வளவோ......இதைப் படித்தாலே
தலைவலி வந்துவிடும் என நினைக்
கின்றேன்...ம்மம்ம்ம் முயற்சி....முயற்சி
முக்கிய குறிப்பு,,,,அரை மணித்தியாலத்துக்கோ,
ஒரு மணித்தியாலத்துக்கோ ஒருதடவை
உங்கள் கண்களை கணனியில் இருந்து
ஓய்வெடுத்துத் {யன்னல் வழியாகப் பார்த்து}

மரம்,செடி,கொடிகளை{வேறு எதையும் பார்த்து
அடி வாங்க வேண்டாம்.}பார்த்து குளிர்சி ஊட்டுங்கள்
கண்ணுக்கு பின் தொடருங்கள்.

வால்பையன் said...

கண்களுக்கு ஓய்வு தாருங்கள் அடிக்கடி!
பச்சையான இலைகள் உள்ள மரத்தை அடிக்கடி பார்ப்பது நல்லது!

Prapa said...

//நல்ல டாக்டரிடம் காட்டுங்கள்//
நன்றி அக்பர் சார்,,,,

Prapa said...

//அக்பர் சொன்னதையே நானும் வழிமொழிகிறேன்.//


அன்புமணி சார் உங்கள் அன்புக்கு ரொம்ப நன்றி.....

Prapa said...

//பிரபா தலைவலி வரப்பல காரணங்கள்
முதல், அனுபவம் உள்ள ஒரு மருத்துவரை
அணுகி பரிசோதனை செய்து ,ஆலோசனை
கேளுங்கள் மூக்குக் கண்ணாடி அணிந்தால்
சரிவர வாய்ப்புண்டு///....

ஐயோ கலா இதுல இவ்வளவு இருக்கா thaaaank uuuuuuuuu .

Prapa said...

///பச்சையான இலைகள் உள்ள மரத்தை அடிக்கடி... ////

பச்சை மரத்த எங்க தல தேடுற எல்லாமே காஞ்சு பொய் கிடக்குது.....

Admin said...

இதுக்கெல்லாம் போய் யோசிக்கிறதா பிரபா. அது பெரிய பிரட்சனயாக இருக்காது. ஒரு வைத்தியரை பார்த்தால் போச்சு. நம்மதான் நல்லவங்களாச்சே அது எல்லாம் தானாக சரியாகிவிடும். விரைவில் எதோ விசேசம் என்று கேள்விப் பட்டோம் உண்மையா...

Prapa said...

உன்மைதானையா....

சப்ராஸ் அபூ பக்கர் said...

ஐயோ நான் வைத்தியரில்லையே நண்பா.... லொள்.....

நல்ல பதில் கிட்டும் பிரபா....

//விரைவில் எதோ விசேசம் என்று கேள்விப் பட்டோம் உண்மையா...///

வீட்டுக்கு ஒரு புது மருமகளோ??.... (எதுவாக இருந்தாலும் வலையில ஒருக்கா எழுதி விடுங்க.....)

Admin said...

//சப்ராஸ் அபூ பக்கர் said...
ஐயோ நான் வைத்தியரில்லையே நண்பா.... லொள்.....

நல்ல பதில் கிட்டும் பிரபா....

//விரைவில் எதோ விசேசம் என்று கேள்விப் பட்டோம் உண்மையா...///

வீட்டுக்கு ஒரு புது மருமகளோ??.... (எதுவாக இருந்தாலும் வலையில ஒருக்கா எழுதி விடுங்க.....)//


ஆஹா.... விசேசம் எண்டா இது மட்டும்தானா இருக்கு எப்பவுமே இதுதான் நினைப்போ....

யாருக்கோ பிறந்த நாள் எல்லாம் வருதாம் அதுதான் விசேசம் சப்ராஸ்..