ad

Saturday, May 23, 2009

கள்ள நோட்டும் நல்ல நோட்டும் .....



கண்ணில் படுகின்ற சில சம்பவங்கள் சிலவேளைகளில் நம்ம மூளையை போட்டு பிசைந்தெடுக்கும் , அதேவேளை ஆஹா இப்படியும் நடந்திருக்கா! என்று நம்மை வாயில் விரலைவைக்கும் அளவுக்கு இருக்கும் அப்படியான விசயமொன்று அண்மையில் அறிந்துகொள்ள கூடியதாக இருந்தது அதனை உங்களுடன் பகிர்ந்துகொள்ளலாமென நினைக்கிறேன் .

இருவருக்கிடையில் இடம்பெற்ற சுவாரசியமான சம்பாசனை ....

காருக்கு பெட்ரோல் நிரப்புவதற்காக பெரியவர் ஒருவர் பெட்ரோல் நிரப்பு(பெட்ரோல் பங்க் ) நிலையத்திற்கு சென்று ,500 ரூபாய் நோட்டை கொடுத்து அங்கேயிருந்த பையனிடம் பெட்ரோல் நிரப்பும்படி சொல்லியிருக்கிறார் அதற்கு அந்த பையன் ,
"ஐயா இப்பொழுதெல்லாம் கள்ள நோட்டுக்கள் புழக்கத்தில் இருப்பதால் 500 ரூபா நோட்டுக்களில் கையெழுத்து வாங்கிகொள்கிறோம் எனவே உங்கள் கையெழுத்தையும் போட்டு கொடுங்கள் " என்று சொல்லியிருக்கிறான் .

வந்தவரும் கொஞ்சம் கூட தயங்காமல் தனது கையெழுத்தை போட்டு கொடுத்திருக்கிறார் கையெழுத்தை பார்த்த பையன்
"ஐயா நான் , உங்கள் கையெழுத்தை போட சொன்னால் நீங்கள் நோட்டிலுள்ள கையெழுத்து மாதிரி போட்டிருக்கீங்களே !" என்றிருக்கிறான் .

அதற்கு அந்த பெரியவர் சிரித்தபடியே ....
" தம்பி அந்த நோட்டில் இருக்கும் கையெழுத்தும் என்னுடையதுதான்,
ஏன்னா நான் இப்போ ரிசேர்வ் பேங்க் கவர்னராக இருப்பதால் நோட்டுகளில் என்னுடைய கையெழுத்து இடம்பிடித்திருக்கிறது " என்றபடியே பொறுப்பாக பதில் சொன்ன படி நகர்ந்திருக்கிறார் அந்த பெரியவர் .

இந்த அனுபவத்திற்கு சொந்தகாரர் வேறு யாருமல்ல இந்தியா ரிசேர்வ் பேங்க் கவர்னர் H.V.R.ஐயங்கார் .

பாத்தீங்களா எவ்வளவு பொறுப்பு வாய்ந்தவர்களேல்லாம் இந்த உலகில் இருக்கிறார்கள்.

இது தவிர நண்பர் parthy தனது பதிவில் "கள்ள நோட்டுகளை எப்படி கண்டு பிடிப்பது சம்பந்தமாக எழுதியிருக்கிறார் , பார்க்க கிளிக்.

3 comments:

யூர்கன் க்ருகியர் said...

நம்ம நாட்டுல தலைமை தேர்தல் அதிகாரியின் பெயரே வோட்டர் லிஸ்ட் ல இல்லையாம்.அப்படியிருக்க ரிசர்வ் பேங்க் கவர்னர் கிட்ட கள்ள நோட்டு இருந்தாலும் ஆச்சரியபடுவதற்கு இல்லை.

Prapa said...

ஒஹோ,இப்படியெல்லாம் நடக்குதா ! அப்படியே ஷாக் ஆயிட்டேன்.

Prapa said...

ஓகே ஓகே , நம் குரலும் ஓங்கி ஒலிக்கட்டும் ,வாழ்த்துக்களும் நன்றிகளும் .