ad

Friday, December 10, 2010

WikiLeaks ஸும், உங்கள் 'வீட்டு'லீக்ஸ் ஸும்.

இது ஒரு சீரியஸ் பதிவு .
ரகசியமாக அல்லது மறைமுகமாக இருக்கின்ற சில விஷயங்கள்  கசிந்தால்,அவற்றை அறிந்துகொள்ள ஆவலாகத்தான் இருக்கிறது. ஆனால், உரியவர்களுக்குத்தான் அது தூக்கத்தைக்கெடுக்கிறது , அது விக்கி லீக்ஸ்சாக  இருந்தாலும் சரி எங்கள் வீட்டு லீக்ஸ்சாக இருந்தாலும் சரி. ( கூரையில் இருக்கும் லீக்ஸ்(ஒழுக்கு)  யையும் சேர்த்துத்தான் சொல்கிறேன் ஹீ ஹீ. ) .
சரி அது ஒரு புறமிருக்க ,
விக்கி லீக்ஸ் தொடர்ச்சியாக வெளியிட்டு வரும் தகவல்கள் அனைத்தும்  எல்லோரது புருவங்களையும் பல சென்டி மீட்டர்கள் வரை  உயர்த்துகின்றன என்பது மட்டும் உண்மையான விடயமாகத்தான் இருக்கிறது.
இதன் அடிப்படையில் தான் 'விக்கிலீக்ஸ்' ஹீரோவாகிய அதே வேளை  அகப்பட்ட நாடுகள் ' சீரோ(zero)'' வாகி போயுள்ளன .

விக்கி லீக்ஸ் செய்து கொண்டிருப்பது சரியா? தவறா? என்ற வாக்கெடுப்பு ஒருபக்கம் இருக்க , ஊடக சுதந்திரத்துக்கும்  கருத்து வெளியிடும் உரிமைக்கும்    மதிப்பளிக்கும் எந்தவொரு நாடும் அல்லது தனி மனிதனும் விக்கி லீக்ஸ் இன் அணுகுமுறையானது பிழை என்று வாதிடுவதற்கு தயாராக இருக்க மாட்டார்கள் என்றே நினைக்கிறேன்.

ஆனால் விக்கி லீக்ஸ் இன் இந்த நடவடிக்கைகளால் எதிர் காலத்தில் உலக சாமாதானத்து ஏதும் ஆபத்துக்கள் நேருமா என்ற கேள்வியும் இந்த இடத்தில் எழுகிறது , அந்த விடயத்தை இன்னுமொரு சந்தர்ப்பத்தில்  தனியாக ஆராயலாம்.

அதேவேளை விக்கி லீக்ஸ் இன் இந்த அதிரடி நடவடிக்கைக்கு பின்னணியில் இருக்கும் காரணம் தான் எண்ண என்று ஒரு முறை நாங்கள் சிந்தித்தால்,...
பல்வேறு விடைகள் எங்களுக்கு கிடைக்கலாம்.
 இன்னுமொரு முக்கியமான விடயம் விக்கி லீக்ஸ் இன் மூலமாக கசிந்த  இந்த விடயங்கள் பொய்யானவை அல்லது திருத்தி கூறப்பட்டவை என்று பெரிதாக எந்த ஒரு நாடும் எதிர்கருத்துக்களை வெளியிட்டதாக அறியவில்லை ( நான் அறிந்த வரைக்கும்) .மாறாக இவ்வாறான கருத்துக்கள் அல்லது ரகசிய ஆவணங்கள் தொடர்ந்தும் வெளியிட பட்டால் எதிர்காலத்தில்  பல்வேறு சிக்கல்கள் தோன்றும் என்றே அச்ச பட்டார்கள். இதிலிருந்து புலப்படுவது என்னவென்றால் ஆவணங்கள் அனைத்தும் உண்மையானவை என்பதை உலக நடப்புக்களை அறிந்து வைத்திருக்கின்ற அனைவரும் ஊகித்துக்கொள்ள கூடியதாக இருக்கும் .
அதேவேளை அமெரிக்காவின் ராஜாங்க தகவல்கள் கசிந்ததற்கு  முக்கிய காரணம் விக்கி லீக்ஸ் இன் நிறுவனர் ஜூலியன் அசாங்கே தான் காரணம் என்று குற்றம் சாட்டப்படுகின்ற அதேவேளை அந்த முக்கியமான ஆவணங்கள் அமெரிக்காவின் முக்கிய அதிகாரிகளின் ஒத்துழைப்பு இல்லாமல் வெளியே வருவது என்பது அவ்வளவு சாத்தியமில்லாத ஒரு விடயம் என்பது உலக நாடுகளுக்கும் தெரியும். ( இதையே இப்பொழுது அவுஸ்திரேலிய  அரசாங்கமும் வலியுறுத்தி நிற்கிறது) .

ஜூலியன் அசாங்கே
 சரி , ஏன் ஜூலியன் அசாங்கே இந்த தகவல்களை பகிரங்கமாக வெளிப்படுத்தினார் ?
அமெரிக்காவுக்கும் இவருக்கும் என்ன பிரச்சனை ?
இந்த தகவல்களை இவருக்கு வழங்கியது யார் ?
இந்த நடவடிக்கைகளால் இவர் சாதிக்க நினைப்பது என்ன? 

என்ற வெளிப்படையான கேள்விகளும் எங்கள் மனதில் எழுகின்ற கேள்விகள் .

ஒருவேளை அமெரிக்க அரசாங்கத்தில் உயர் பதவியில் இருந்த ஒருவர் அல்லது பலர் அமெரிக்காவின் நடவடிக்கலைகள் பிடிக்காமல் இந்த தகவல்களை வெளியில் கசிய விட்டிருக்கலாம் அல்லது பணத்துக்காக தகவல்களை வெளியிட்டிருக்கலாம் .!!!!!!! அவர்கள் யார் என்பதை அமெரிக்கவே கண்டு பிடிக்க வேண்டும்.

இந்த ரகசிய ஆவணகளை கசிய விட்டதன் மூலம் ஜூலியன் அசாங்கே தனக்கான பிரபலத்தை தேட முற்பட்டாரா  !! , இல்லை இந்த தகவல்கள் அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும் என்று செயட்பட்டாரா??  என்பதும் விடைகாணப்பட வேண்டிய கேள்விகளே..
அது ஒரு புறமிருக்க ,
இப்பொழுது விக்கி லீக்ஸ் நிறுவனர், பெண்களை பாலியல் வன்புணர்ச்சிக்கு உட்படுத்தினார் என்ற குற்ற சாட்டின் பேரில் இப்பொழுது கைது செய்யப்பட்டிருக்கிறார்.
இவரின் கைது தொடர்பாகவும் சில விடயங்கள் புதினமாகவே இருக்கிறது.
2008 இல் இவர் இந்த குற்றங்களை புரிந்தார் என்று சொல்லபட்டாலும் இவர் ஏன் இதுவரைக்கும் கைது செய்யப்படாமல் இருந்தார் ?? அல்லது சர்வதேச பிடியாணை பிறப்பிக்கபட்ட ஒருவராக இருந்தாரா ? அப்படியானால் சர்வதேச ரீதியாக தேடப்படும் ஒருவர் ஏன் வலிந்து கட்டிக்கொண்டு தனது இருப்பை வெளிக்காட்டப்போகிறார் ? சத்தம் போடாமலே இருந்திருப்பாரே !!!!
ஆகவே இந்த இடத்தில் நிதானமாக சிந்தித்தால் ...இந்த ஆவணங்கள்  கசிய விட்டதன் பின்னர் இவரை கைது செய்வதற்காகவே பொய்யான குற்ற  சாட்டுகள் இவர் மீது சுமத்தப்பட்டுள்ளதா    என்றும் எண்ண தோன்றுகிறது. அதேவேளை ரகசியமாக இருக்கும் சில வங்கிகளின் கணக்கு விபரங்கள் வெளிப்படையாக சொல்லபட்டு அவையும் தடை செய்யப்படுவதாக பகிரங்கமாக அறிவித்தமையானது அசாங்கே யையை எப்படியாவது கைது செய்வது என்ற நோக்கத்தின் பின்னணியே என்று அவருக்கு ஆதரவானவர்கள் சொல்லலாம்.
எது எவ்வாறாக இருந்தாலும் இப்பொழுது  ஜூலியன் அசாங்கே கைது செய்யப்பட்டுள்ளார் . இதற்கு பிறகு விக்கி லீக்ஸ் இன் நடவடிக்கைகள் தொடராது என்று நினைத்த அனைவருக்கும் ஏமாற்றமே கிடைத்தது , காரணம் இப்பொழுதும் கசிவுகள் இருக்கின்றன அதேவேளை இணையத்தினூடான மோதல்களும் இப்பொழுது வலுப்பெற்றிருக்கிறது .அதாவது விக்கி லீக்ஸ் க்கு ஆதரவானவர்களால் இப்பொழுது சில முக்கியமான இணையத்தளங்கள் முடக்கப்பட்டு வருவதாகவும் தகவல் கள் வெளியாகிக்கொண்டே இருக்கிறது.
இந்த நடவடிக்கைகள் எதிர்காலத்தில் எவ்வாறான பாதிப்புக்களை ஏற்படுத்த போகின்றன என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

( பதிவிடும் வரைக்கும் நான் அறிந்த கசிந்த விடையங்களை வைத்துகொண்டு கருத்துக்களை சொல்லி இருக்கிறேன், மாற்று கருத்துக்கள் அல்லது புதிய தகவல்கள் கிடைத்தாலும் உங்கள் பின்னூட்டங்களில் சொல்லுங்கள்.

''விக்கி கசிவுகள் கசிய கசிய , எனது கருத்துக்களும் பெருக்கெடுக்கும்'
மீண்டும் சிந்திப்போம்.

22 comments:

ARV Loshan said...

நல்ல முழுமையான தொகுப்பு + எல்லாப் பக்கமுமான பார்வை.

இதுக்காகத் தான் இரவு முழுக்க இணையம் முழுக்க அலைஞ்சு துழாவிநீங்களோ?
பயனுள்ள பதிவு தான்..

அது சரி வீட்டு லீக்ஸ் என்றீங்களே? கடும் மழையாலோ? ;)

Sindhan R said...

நல்ல பதிவு ... தொடர்ன்ஹு எழுதுங்கள் ...

மேலும் சில பதிவுகளுக்கு maattru.blogspot.com படியுங்கள் நண்பரே ... ஜனநாயகத்திற்கான போராட்டத்தில் கைகோர்ப்போம் ...

ஜெய்லானி said...

இதெல்லாம் அமெரிக்கா அடிக்கடி செய்யும் அரசியல் குழப்படி ..சிண்டு முடியும் வேலை...உலகத்தை திசை திருப்பும் செயல்..

Prapa said...

//LOSHAN said...
நல்ல முழுமையான தொகுப்பு + எல்லாப் பக்கமுமான பார்வை.
இதுக்காகத் தான் இரவு முழுக்க இணையம் முழுக்க அலைஞ்சு துழாவிநீங்களோ?
பயனுள்ள பதிவு தான்..
அது சரி வீட்டு லீக்ஸ் என்றீங்களே? கடும் மழையாலோ? ;)

என்னவோ தெரியல இப்ப எல்லாம் நிறைய தேடணும் போல இருக்கு,,ஏதாவது சாதிக்கணும் போலவும் இருக்கு .அத்தோட
விக்கி லீக்ஸ் நமக்கு எதுக்கு என்னு யாரவது பார்க்காமல் போயிடுவாங்களோ என்ற ஒரு பயம் தான்... , அதுதான் ஒரு பிட் போட்டு ஆக்கள அழைகிறது.. ஹீ ஹீ .( மழைய மட்டும் ஞாபக படுத்தாதீங்க ஞாபக படுத்தாதீங்க.ஹீ ஹீ.)

வருகைக்கும் கருத்துக்கும்.தம்பியின் நன்றிகள்.

Prapa said...

//Sindhan R said...
நல்ல பதிவு ... தொடர்ன்ஹு எழுதுங்கள் ...
மேலும் சில பதிவுகளுக்கு maattru.blogspot.com படியுங்கள் நண்பரே ... ஜனநாயகத்திற்கான போராட்டத்தில் கைகோர்ப்போம் ...//

நிச்சயமா, கருத்துக்களுக்கு நன்றிகள்.

Prapa said...

//ஜெய்லானி said...
இதெல்லாம் அமெரிக்கா அடிக்கடி செய்யும் அரசியல் குழப்படி ..சிண்டு முடியும் வேலை...உலகத்தை திசை திருப்பும் செயல்..//

ஒ அப்படியும் இருக்கலாம்.... எப்படி என்றாலும் நம்மையும் சிந்திக்க வைக்கிறாங்க.

ம.தி.சுதா said...

நல்ல ஒரு அலசல் தான்... நன்றிகள்..

அடையாளம் காட்டிய லோசண்ணாவிற்கும் நன்றி..

Prapa said...

//ம.தி.சுதா said...நல்ல ஒரு அலசல் தான்... நன்றிகள்..
அடையாளம் காட்டிய லோசண்ணாவிற்கும் நன்றி.//

நன்றி சுதா,,,,
லோஷன் அண்ணாதான் பதிவையே எனக்கு அடையாளம் காட்டினார் அத்தோடு , தேவை படும் போதெல்லாம் அவரின் உதவியோடுதான் பதிவுலகில் பயணித்து வருகிறேன். அவருக்கு இந்த இடத்திலும் நன்றிகள்.

யோ வொய்ஸ் (யோகா) said...

உங்களுக்கும் விக்கிலீக்சுக்கும் சம்பந்தம் ஏதுமுண்டா பிரபா?

Prapa said...

//யோ வொய்ஸ் (யோகா) said...
உங்களுக்கும் விக்கிலீக்சுக்கும் சம்பந்தம் ஏதுமுண்டா பிரபா?//

ஹா ஹா..அதை விக்கிலீக்ஸ் சொல்லும் வரைக்கும் எனக்கும் தெரியாது , தகவல்கள் கசிந்தால் பார்த்துகொள்ளலாம் யோகா ...

Ahamed Suhail said...

. எந்த லெவலுக்கும் இறங்கி அடிமட்டம் வரைக்கும் போய் அலசுவோமில்ல...



அது இதுதானா பாஸ்... நல்லாவே அலசுறீங்க.....

நிரூஜா said...

//உங்களுக்கும் விக்கிலீக்சுக்கும் சம்பந்தம் ஏதுமுண்டா பிரபா
அவ்வ்...!

Prapa said...

//Ahamed Suhail said...
எந்த லெவலுக்கும் இறங்கி அடிமட்டம் வரைக்கும் போய் அலசுவோமில்ல...
அது இதுதானா பாஸ்... நல்லாவே அலசுறீங்க.....///

ஆஹா இப்பதான் தெரிஞ்சுது அவங்க தகவல் சேகரிப்பு மையமும் நிலத்துக்கு கீழ்தான் இருக்காம்...... *( 100 அடிக்கு கீழே)
எப்பிடி இறங்கி இருக்கோம் பார்த்தீங்களா?

Prapa said...

//நிரூஜா said...
//உங்களுக்கும் விக்கிலீக்சுக்கும் சம்பந்தம் ஏதுமுண்டா பிரபா
அவ்வ்...!//

நிரூஜா...ஆஹா சொந்த செலவில் சூனியம் வச்சுட்டனோ? ஹீ ஹீ

Prapa said...

நண்பர்களே.... எனது பதிவுடன் சேர்த்து இன்னும் பல விடயங்களை நண்பர்கள் சொல்லி கொண்டு இருக்கிறார்கள் அதனையும் உங்கள பார்வைக்கு தருகிறேன்..... ( பிந்தி கிடைத்த தகவல்கள் ) .

நண்பர் நிர்ஷன் ராமானுஜம் அனுப்பிய மின்னஞ்சல் தகவல்கள்....
-----------------------------------

விக்கிலீக்ஸ் இணையத்திற்கு ஒத்துழைப்பு வழங்க மறுத்த வீசா, மாஸ்டர் கார்ட் மற்றும் பேபேல் நிறுவன இணையத்தளங்களை தாக்கிய நெதர்லாந்து சிறுவனொருவன் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளான்.

விக்கிலீக்ஸ் இணையத்தளத்திற்கு மேற்படி நிறுவனங்கள் ஊடாக அதன் ஆதரவாளர்களால் நிதி வழங்கப்பட்டு வந்தது. எனினும் அந் நிறுவனங்கள் விக்கிலீக்கிற்கு ஒத்துழைப்பு வழங்குவதை நிறுத்திக்கொள்வதாக அண்மையில் அறிவித்திருந்தன.
இதனைத்தொடர்ந்து விக்கிலீக்ஸ் இணையத்தளத்தின் ஆதரவாளர்கள் என நம்பப்படும் நபர்களால் மேற்படி இணையத்தளங்களின் நிறுவனங்கள் தாக்கப்பட்டன. இதனால் அதன் பாவனையாளர்களுக்கு பல மணித்தியாளங்களுக்கு அத்தளங்களுக்குள் பிரவேசிக்க முடியாமல் போனது.

இதனைத்தொடர்ந்து குற்றவாளிகளை கண்டறிய சர்வதேச ரீதியில் தேடல்கள் மேற்கொள்ளப்பட்டன.
பின்னர் இத்தாக்குதலுக்கு காரணமென நம்பப்படும் 16 வயதான சிறுவன் ஒறுவனை நெதர்லாந்து பொலிஸார் நேற்று அவனது வீட்டில் வைத்து கைதுசெய்துள்ளனர்.

மேற்படி சிறுவன் தனது தவறை ஒப்புக்கொண்டதுடன் ஒரு குழுவாகவே இந் நடவடிக்கையை மேற்கொண்டதாகவும் தெரிவித்துள்ளான்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த நெதர்லாந்து பொலிஸார் சம்பவத்துடன் தொடர்புடைய மற்றையவர்களும் விரைவில் கைதுசெய்யப்படுவர் எனவும் இதற்காக எப்.பி.ஐ இன் உதவி நாடப்படுமெனவும் தெரிவித்துள்ளனர்.

சிறுவனின் குற்றம் நிரூபிக்கப்படுமாயின் சுமார் 4 முதல் 6 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையை பெறலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது

Prapa said...

இன்னுமொரு கசிவு ......
எனது பிழையான எண்ணக்கருக்களை நண்பர் ஒருவர் மின்னஞ்சல் மூலமாக சுட்டிக்காட்டி இருக்கிறார் . அவர் அனுப்பி வைத்த மின்னஞ்சல் இதோ உங்கள் பார்வைக்காகவும்.
தகவல்களை திருத்தி வாசிக்கவும் தவறுக்கு வருந்துகிறேன்,. நண்பருக்கும் நன்றிகள்.
--------------------------------
கவனியுங்கள்....

ஈரான் விக்கிலீக்ஸை அமெரிக்காவுடன் தொடர்புபட்டது என்று குற்றஞ்சாட்டியிருந்தது.

அமெரிக்காவின் தூதரக ஆவணங்கள் வெளியே கசிந்ததற்கும் அசென்ஞ் இற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது.
தூதரகங்களுடன் சம்பந்தப்பட்ட அந்த கேபிள்கள் எனப்படுகின்றவை வெளியான விதம் இன்னும் வெளிப்படையாக மிகச்சரியாக வெளிப்படுத்தப்படவில்லை என்று நினைக்கிறேன்.


ஏன் பகிரங்கப்படுத்தினார் என்பதற்கு:
விக்கிலீக்ஸ் என்பது 2006ஆம் ஆண்டு தொடக்கம் இயங்கிவரும் இணையத்தளம் ஆகும்.
சோமாலியாவில் இடம்பெற்ற படுகொலைகள் தொடர்பாக 2006ஆம் ஆண்டு வெளியிட்டது.
பின்னர் குவாண்டனாமோ தொடர்பாக வெளியிட்டது, சாரா பாலினின் தனிப்பட்ட பயனர் கணக்கு ஹக் செய்யப்பட்டு தனது தனிப்பட்ட பயனர் கணக்கு மூலம் அலுவலக சம்பந்தமான மின்னஞ்சல்களைப் பரிமாறினார் என்று வெளிப்படுத்தப்பட்டது, கென்யாவில் சட்டத்துக்குப் புறம்பான கொலைகள், பின்னர் பிரிட்டன் தேசியக் கட்சி தொடர்பான விபரங்கள் வெளியாகின, பெருவில் எண்ணெய் தொடர்பாக சில அரசியல்வாதிகளுக்கும் வியாபாரிகளுக்குமிடையில் ஒட்டுக்கேட்கப்பட்ட தொலைபேசி உரையாடல்களை வெளியிட்டது, ஈரானில் அணுசக்திக் கசிவு தொடர்பாக வெளியிட்டது, ஆபிரிக்காவில் கழிவுகள் கொட்டப்படும் அறிக்கை வெளியானது உட்பட ஏராளமான விடயங்கள் 2010 இற்கு முன்னரே வெளியிடப்பட்டன.
ஆகவே அமெரிக்காவை மட்டும் இலக்குவைத்தார் என்பது தவறான புரிதல்.

// ஜூலியன் அசாங்கே தனக்கான பிரபலத்தை தேட முற்பட்டாரா !! // என்பதற்கும் மேற்குறிப்பிட்டதே விடை.
வெளிப்படையான அரசாங்கங்கள் இடம்பெற வேண்டும் என்ற நோக்கமே என்று குறிப்பிடுகிறார்.

// பெண்களை பாலியல் வன்புணர்ச்சிக்கு உட்படுத்தினார் //

அது பாலியல் வன்புணர்ச்சி கிடையாது.
ஆணுறை அணியாமல் உடலுறவு கொண்டதாகவும், நித்திரையிலிருந்து எழுப்பி உறவு கொண்டதாகவுமே இப்போது அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் உள்ளன.
முன்பு பாலியல் குற்றச்சாட்டு என்று தெரிவிக்கப்பட்டபோதும் இப்போது அவர் மீதான வழக்கு மேற்குறிப்பிட்டதே.

வழக்கு இறுக்கப்பட்டதற்கு அமெரிக்காவின் அழுத்தம் இருப்பதாக பரவலான குற்றச்சாட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

அது 2008 அல்ல, 2010 ஓகஸ்ற்.

2010ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 30ம் திகதி இன்ரர்போலால் தேடப்படுவோர் பட்டியலில் அறிவிக்கப்பட்டார்.


// சர்வதேச ரீதியாக தேடப்படும் ஒருவர் ஏன் வலிந்து கட்டிக்கொண்டு தனது இருப்பை வெளிக்காட்டப்போகிறார் ? //

அவர் பிரித்தானிய காவல்துறையிடம் சரணடைய தனது வழக்கறிஞருடன் சென்றபோதே கைதுசெய்யப்பட்டார்.
பிணை வழங்கப்படும் என்ற நம்பிக்கையில் சென்றதாகவும், எனினும் அவருக்கு முகவரிகள் கிடையாது என்பதால் தப்பியோடலாம் என்பதால் பிணை மறுக்கப்பட்டது.
-----------------------------

இரா.வி.விஷ்ணு (ராஜ் ) said...

வந்திருக்கின்ற பின்னூட்டங்களை பார்க்கின்றபோது நீங்கள் தொடர்ந்து சீரியஸ் பதிவுகள் போடலாம் போலிருக்கிறது (நான் ஊரில் இருப்பது உங்களுக்கு பிடிக்கலையா எங்கிரிங்க்களா? ) உண்மையில் நல்ல பார்வை . இதன்னை நாட்களும் எங்க பதுகியிருன்தது இந்த சிங்கம் ..? தொடர்ந்து எழுதுங்கள்.

இரா.வி.விஷ்ணு (ராஜ் ) said...

விக்கிலீக்க்சின் புதியமுகவரி " http://www.wikileaks.ch/ ". தற்போது வீடியோ காட்சிகள் உட்பட அமெரிக்க , இராக்க யுத்தம் தெடர்பான பல விடயங்கள் வெளிவந்துள்ளன . விக்கியின் ட்விட்டர் முகவரி http://twitter.com/#!/wikileaks

Prapa said...

//R.V.Raj said...
வந்திருக்கின்ற பின்னூட்டங்களை பார்க்கின்றபோது நீங்கள் தொடர்ந்து சீரியஸ் பதிவுகள் போடலாம் போலிருக்கிறது (நான் ஊரில் இருப்பது உங்களுக்கு பிடிக்கலையா எங்கிரிங்க்களா? ) உண்மையில் நல்ல பார்வை . இதன்னை நாட்களும் எங்க பதுகியிருன்தது இந்த சிங்கம் ..? தொடர்ந்து எழுதுங்கள்.//
ஹ ஹ ...ஊரில் இருந்து கொண்டு எழுதக்கூடிய சீரியஸ் பதிவுகளை எழுதாலாம் தானே அதில் ஒரு பிரச்சனையும் இல்ல தலைவா. ....தகவல்களுக்கும் நன்றி, நீங்களும் பதுங்கி இருக்காமல் adikkadi வந்து பதிவுகளையும் paarungal மறக்காமல் கருத்துரைகளையும் பதியுங்கள்.
//

Prapa said...

// Jenatha said...
ம்ம் உங்களிடம் இருக்கும் திறமை மென்மேலும் வளர வாழ்த்துக்க்ள் பிரபா. தரமான திறமையான இடுகை//
//
நன்றி அக்கா,நிச்சயமாக என்னால் முடிந்தளவுக்கு எலாவற்றையும் செய்து முடிக்க முயற்சிப்பேன்
....தங்களின் உற்சாக மூட்டலுக்கு நன்றி.

Prapa said...

// Jenatha said...
ம்ம் உங்களிடம் இருக்கும் திறமை மென்மேலும் வளர வாழ்த்துக்க்ள் பிரபா. தரமான திறமையான இடுகை//
//
நன்றி அக்கா,நிச்சயமாக என்னால் முடிந்தளவுக்கு எலாவற்றையும் செய்து முடிக்க முயற்சிப்பேன்
....தங்களின் உற்சாக மூட்டலுக்கு நன்றி.

ம.தி.சுதா said...

யோவ் புளொக்கின் பெயரை மாற்றையா “பிரபாவை தேடுங்கள்“ என்று...