சொர்கத்தின்
விலாசத்தை போய்
விசாரித்தேன் ,
அவள்தான் சொர்க்கம்
என்பதை
அறிந்துகொள்ளாமல்.!
உன்னுடைய உதடுகள்
உச்சரிக்கும் வரை
நான்
உணர்ந்ததில்லை ...
என்னுடைய பெயர்
இத்தனை அழகாய்
இருக்கிறதென்று!
வீணாக ஏன்
திறந்து வைத்திருக்கிறாய்....
உன் விழி வாசலை...
இதய வீட்டை
பூட்டி
சாவியை
இடுப்பில்
முடிந்து கொண்ட பிறகு.
ஒரு ஜோடி
சிறகுகள்
வேண்டும் என்றேன்
உல்லாசமாக
உன்னோடு
பறப்பதற்கு அல்ல-
தொலைதூரம் போய்
தொலைதூரம் போய்
உன்னை
மறப்பதற்கு....
தேச வரலாற்றில்
இடம்பெறாமல் போன
தியாகிகளைபோல...
ஆயிரக்கணக்கான
இளைஞர்களின் பெயர்கள்
விடுபட்டு விட்டன
உன்- திருமண அழைப்பிதழில்.
நன்றி- கவிவேந்தர்
18 comments:
அழகான கவிதை
//கவிக்கிழவன் said...
அழகான கவிதை//
நீங்களே சொல்லிடீங்க தாத்தா ,,, பிறகென்ன. ஒரே சந்தோசம் தான்
அது யாருங்க கவிவேந்தர்!?
வேற யாரு ...மு. மேத்தா..
//வீணாக ஏன்
திறந்து வைத்திருக்கிறாய்....
உன் விழி வாசலை...
இதய வீட்டை
பூட்டி
சாவியை
இடுப்பில்
முடிந்து கொண்ட பிறகு.//
மிகவும் ரசித்த வரிகள்.
// கல்யாணி சுரேஷ் said...
//வீணாக ஏன்
திறந்து வைத்திருக்கிறாய்....
உன் விழி வாசலை...
இதய வீட்டை
பூட்டி
சாவியை
இடுப்பில்
முடிந்து கொண்ட பிறகு.//
மிகவும் ரசித்த வரிகள்.//
அருமையான வரிகள்
எல்லா பக்கமும் காதல் கவிதை என கலக்குறாங்களே, நீங்களும் அவ்வாறே..
நல்ல கவிதை
ம்ம்க்கு,,,,,இவங்க ளுக்கு சுட்டாத்தான்
பிடிக்குமோ! ஏற்கனவே இதைப் படித்திருக்
கின்றேன். சுடாமல் சொந்தமாய் கவி
புனையுங்கள் அப்போது பாராட்டலாமா?
என யோசிக்கிறேன் அண்ணாஆணாண.
ஆமா சந்ருவுக்கு என்ன ஆச்சு?
ஆளையே காணோம்
நல்லா இருக்கு ப்ரபா.
கவிதை அழகானதாக இருக்குது
கடைசி வரிகள் அருமையிலும் அருமை.
வாழ்த்துகள் நண்பா .
//தேச வரலாற்றில்
இடம்பெறாமல் போன
தியாகிகளைபோல...
ஆயிரக்கணக்கான
இளைஞர்களின் பெயர்கள்
விடுபட்டு விட்டன
உன்- திருமண அழைப்பிதழில்.
//
அதுசரி இந்த வரிகள் நீங்கள் எப்போது எழுதினீர்கள்
முன்னர் ஏதாவது கவிதையில் எழுதினீர்களா?
நான் ஐந்து வருடத்துக்கு முன்னர் எங்கோ படித்ததாக ஞாபகம்.
(நான் நினைக்கிறன் தமிழ்கேசரி - இடி பத்திரிக்கையில் என்று )
ஓ அந்த பிரபாதான் நீங்களா?
//
ஒரு ஜோடி
சிறகுகள்
வேண்டும் என்றேன்
உல்லாசமாக
உன்னோடு
பறப்பதற்கு அல்ல-
தொலைதூரம் போய்
உன்னை
மறப்பதற்கு....
//
//சொர்கத்தின்
விலாசத்தை போய்
விசாரித்தேன் ,
அவள்தான் சொர்க்கம்
என்பதை
அறிந்துகொள்ளாமல்.!//
அடப்பாவி மக்கா சொர்க்கமில்லப்பா நரகம்ன்னு அப்பறமேட்டிக்குத்தான் தெரியும்.....
// யோ வாய்ஸ் (யோகா) said...
எல்லா பக்கமும் காதல் கவிதை என கலக்குறாங்களே, நீங்களும் அவ்வாறே..
நல்ல கவிதை//
என்ன செய்றது யோகா.... ஏதோ நம்மால் முடிஞ்ச அளவுக்கு பாரபட்சமின்றி சுடுவோம்.... ஹ.... ஹா..
//Kala said...
ம்ம்க்கு,,,,,இவங்க ளுக்கு சுட்டாத்தான்
பிடிக்குமோ! ஏற்கனவே இதைப் படித்திருக்
கின்றேன். சுடாமல் சொந்தமாய் கவி
புனையுங்கள் அப்போது பாராட்டலாமா?
என யோசிக்கிறேன் அண்ணாஆணாண.
ஆமா சந்ருவுக்கு என்ன ஆச்சு?
ஆளையே காணோம்//
சுட்டதுதான்,,,, ஆனால் சுடுறது எவ்வளவு கஷ்டம் கலா. சந்ரு வருவார்....
// பா.ராஜாராம் said...
நல்லா இருக்கு ப்ரபா.//
வருகைக்கும், வாழ்த்துக்கும் ரொம்ப நன்றி ஐயா...
// தியாவின் பேனா said...
அதுசரி இந்த வரிகள் நீங்கள் எப்போது எழுதினீர்கள்
முன்னர் ஏதாவது கவிதையில் எழுதினீர்களா?
நான் ஐந்து வருடத்துக்கு முன்னர் எங்கோ படித்ததாக ஞாபகம்.
(நான் நினைக்கிறன் தமிழ்கேசரி - இடி பத்திரிக்கையில் என்று )
ஓ அந்த பிரபாதான் நீங்களா?
ஐயோ இல்ல தியா,, இது கவி வேந்தர் மு. மேத்தாவின் கவிதைகள்.
பதிவில் சேர்த்தது மட்டும் தான் அடியேன்...
// பிரியமுடன்...வசந்த் said...
//சொர்கத்தின்
விலாசத்தை போய்
விசாரித்தேன் ,
அவள்தான் சொர்க்கம்
என்பதை
அறிந்துகொள்ளாமல்.!//
அடப்பாவி மக்கா சொர்க்கமில்லப்பா நரகம்ன்னு அப்பறமேட்டிக்குத்தான் தெரியும்.....///
அட ஆமா அதுதான் உண்மை... என்ன செய்றது சும்மா சொல்லிட்டு போவமே...
//
ஐயோ இல்ல தியா,, இது கவி வேந்தர் மு. மேத்தாவின் கவிதைகள்.//
ஓ அப்படியா
சொர்கம் சூப்பர்
இரண்டாவது படித்த மாதிரி இருக்கிறது என எழுத நினைத்து, மற்ற பின்னூட்டங்களை பார்த்து தெளிந்தேன் :)
Post a Comment