"ஜஸ்வந்த் சிங் " ...................................................................
ஒரு மூத்த அரசியல் வாதி ,முன்னாள் மத்திய அமைச்சர் ,இந்தியாவின் மிக பெரும் பொறுப்பு வாய்ந்த ஒரு குடிமகன் , கட்சியிலிருந்து நீக்கபட்டுள்ளது என்பது உலக அரங்கில் எவ்வாறு பார்க்கப்படுகிறதோ இல்லையோ ஆனால் இந்தியாவையும் அதன் நேச நாடுகளையும் பொறுத்தவரை முக்கியமான விடயமொன்றாக இருக்குமா என எண்ண தோன்றுகிறது .
எழுபத்தொரு வயதான ஜஸ்வந்த் சிங் எழுதி சமீபத்தில் வெளியிட்ட புத்தகத்தில் (“Jinnah, India-Partition Independence” - written by a senior Bhartia Janta Party (BJP) , முகமது அலி ஜின்னாவைப் பாராட்டியிருப்பதுடன், நாட்டின் பிரிவினைக்கு நேருவும், சர்தார் படேலும்தான் காரணம் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இதில் முதலாவது விடயம் எவ்வாறாயினும் இரண்டாவது விடயம் சம்பந்தமாகத்தான் அதிகமான சர்ச்சைகள் கிளம்பியிருக்கும் என்று எண்ண தோன்றுகிறது .
"எனவே தான் 'காட்டி கொடுக்கிறாரா?' என்று நண்பர் ஒருவர் கேட்டார்......
இந்த இடத்தில் வரலாறுகளை புரட்டி உண்மையில் என்ன நடந்தது என்பதையும்
இந்த இடத்தில் மிக அவதானமாக சிந்திக்க வேண்டியிருக்கிறது .
எது எவ்வாறாக இருந்தாலும் கட்சிலிருந்து ஜஸ்வந்த் சிங் நீக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து அவர் சொல்லும் போது "இந்த முடிவு தனக்கு மிகுந்த அதிர்ச்சியளிப்பதாகவும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டாலும், தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினராக நீடிக்கப் போவதாக ஜஸ்வந்த் சிங் தெரிவித்துள்ளார்.
-அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சியில் ஒரு தலைவராக இருந்த ஜின்னா பாகிஸ்தானை தொடங்கப்பட்ட பின் இந்த நாட்டின் தந்தையார் என்றழைக்கப்படுகிறார். இவரின் பிறந்த நாள் பாகிஸ்தானில் ஒரு தேசியத் திருவிழா ஆகும். பாகிஸ்தானின் முதலாம் ஆளுனர் (Governor-General) ஆவார்.
16 comments:
:-)
வாங்க ஸப்ராஸ் .
வாய்மையே வெல்லும்
ஜெய் ஹிந்த்
///வாய்மையே வெல்லும்
ஜெய் ஹிந்த்//
உண்மை என்றுமே தோற்பதில்லை, நன்றி இஸ்மாயில் வருகைக்கு.
இதெல்லாம் பழைய கதையாகிவிட்டது!
இதற்கு பாகிஸ்தானின் ரியாக்ஸன் என்ன? அதை சொல்லுங்கள்!
////இதற்கு பாகிஸ்தானின் ரியாக்ஸன் என்ன? அதை சொல்லுங்கள்!//
wai and see !!!
Nehru and his evil family are the only ones for responsible for all problems of india.
//Nehru and his evil family are the only ones for responsible for all problems of india.//
அப்பிடியா ?
முஸ்லிம்களுக்கு எதிராக மத வெறியர்கள் வெறுப்பை தூண்டியதும் அதனால் முஸ்லிம்களிடையே தோன்றிய அச்சமும் அந்த அச்சத்தை சுய லாபத்திற்காக பயன்படுத்திய ஜின்னா அண்ட் கோ-வும் தான் இந்தியா பிளவுபட காரணங்கள்.
//முஸ்லிம்களுக்கு எதிராக மத வெறியர்கள் வெறுப்பை தூண்டியதும் அதனால் முஸ்லிம்களிடையே தோன்றிய அச்சமும் அந்த அச்சத்தை சுய லாபத்திற்காக பயன்படுத்திய ஜின்னா அண்ட் கோ-வும் தான் இந்தியா பிளவுபட காரணங்கள்//
ரொபின் எனக்கு புதிய தகவல்.
சந்தேகமிருந்தால் ஆர்.எஸ்.எஸ் காரர்கள் கொண்டாடும் தலைவர்களின் புத்தகங்களை படித்து பாருங்கள்.
யோவ் ராசாராம் ...
நேருவை நீங்கள் எதை வைத்து குறை சொல்லுகிறிர்கள்? ஜஸ்வந்த் சிங் எழுதியது அவருடைய கருத்து தானே தவிர. அது தான் தெய்வ வாக்கு என்று எடுத்து கொள்ள முடியாது.. இந்தியாவின் சுதந்திரதிற்காக ஜின்னா என்றுமே பெரிதாக போராடியது இல்லை.. அவருடைய நோக்கம் எப்பொழுதுமே முஸ்லிம்களின் நலனாக மட்டுமே இருந்தது.. இன்று சர்தார் வல்லபாய் பட்டேலை குறை கூறுகிறார் ஜஸ்வந்த்சிங்.. ஒரு வேலை அவர் நம்மை ஒன்று சேர்க்க வில்லை என்றால் பாகிஸ்தான் எப்படி பங்களாதேஷ் பாகிஸ்தான் என்று இரண்டாக உடந்ததோ அப்படி நாமும் சுக்கு நூறாக போயிருப்போம் என்பதை மறவாதீர்கள்..
நேருவோ காந்தியோ இந்தியா பிளவுபடுவதை விரும்பவில்லை. மதகலவரங்களால் ஏராளமான உயிர்கள் பலியானதால் நேருவுக்கு பிரிவினையை ஒப்புகொள்வதை தவிர வேறு வழியில்லை. நேருவின் செயல்பாடுகளில் எனக்கு சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அவர் அடித்தளமிட்ட செகுலரிசத்தால் இந்தியா இந்த அளவு முன்னேறியுள்ளது என்பதையும் மதத்தையும் அரசியலையும் கலந்ததால் பாகிஸ்தான் சீரழிந்து கொண்டிருக்கிறது என்பதையும் மறுக்க இயலாது.
//ஜின்னா பாகிஸ்தானை தொடங்கப்பட்ட பின் இந்த நாட்டின் தந்தையார் என்றழைக்கப்படுகிறார். இவரின் பிறந்த நாள் பாகிஸ்தானில் ஒரு தேசியத் திருவிழா ஆகும். பாகிஸ்தானின் முதலாம் ஆளுனர் (Governor-General) ஆவார். //
இந்த தகவலைதான் காலையிலிருந்து தேடிக்கொண்டிருந்தேன். தங்களின் மூலம் தெரிந்துகொண்டேன். நன்றி தங்களின் சிந்தனை பகிர்தலுக்கு அன்பரே.
நல்ல தகவல்கள் நண்பரே!! அவரவர் உணர்வுகளை மதிக்கத்தான் வேண்டும்.
//நல்ல தகவல்கள் நண்பரே!! அவரவர் உணர்வுகளை மதிக்கத்தான் வேண்டும்.//
உணர்வுகளுக்கு மதிப்பளிக்க கற்றுக்கொள்வது ஒரு வித அறிவு.... இல்லையா சார்.
Post a Comment