ad

Thursday, August 13, 2009

எந்த கை உங்கள் நம்பிக்"கை" ?


இன்று சர்வதேச "இடது கை பழக்கம் கொண்டவர்கள்" தினம் , காலையிலிருந்து வானொலியிலும் நல்ல விளக்கம் எல்லாம் சொல்லி இப்போ உங்களோடு பதிவினூடாகவும் சில விடயங்களை பகிரலாம் என்று வந்திருக்கோம்.

இப்ப பாருங்க இந்த உலகத்தில் உருவாக்கப்படுகின்ற அதிகமான பொருட்கள் "வலது கை பழக்கம் " கொண்ட அன்பர்களுக்காகவே தயாரிக்கப்படுவதாக சில இடது கை பழக்கம் கொண்டவர்கள் குறைப்பட்டு கொள்வதுண்டு ....

குறிப்பாக சில பொருட்களை சொல்லலாம் ., கத்தரிகோல் ,ஹொக்கி போட்டிகளில் பயன்படுத்து மட்டை , கிட்டார் வாத்திய கருவி,பாடசாலைகளை பயன்படுத்தும் கதிரையுடன் கூடிய மேசை போன்ற விடயங்களை சொல்லலாம் .
இது தவிர இன்னும் ஏராளமான விடயங்களை குறிப்பிடலாம்.

எது எவ்வாறாக இருந்தாலும் இடது கை பழக்கம் கொண்டவர்கள் எதோ ஒரு வகையில் சிறந்தவர்களாக இருப்பதை நான் கண்கூடாக கண்டிருக்கிறேன்.

அனால் மற்றுமொரு செய்தி , இடக்கை பழக்கம் உள்ளவர்களை விட வலக்கை பழக்கம் உள்ளவர்கள் ஒன்பது ஆண்டுகள் கூடுதலாக வாழ்கிறார்களாம்.

இந்த விடயம் ஆராய்ச்சிகள் மூலமாக சொல்லப்பட்டாலும் எந்த அளவுக்கு நடைமுறையில் கண்டிருக்கிறோம் ??????

ஆனால் இப்பொழுது அவுஸ்திரேலியா விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கின்ர ஒரு விடயத்தின் மூலம் இடது கை பழக்கம் உள்ளவர்கள் பெருமையடைய கூடியதாக உள்ளது.

அதாவது "இடது கை பழக்கம் உள்ளவர்கள் வலது கை பழக்கம் உள்ளவர்களை விட விரைவாக சிந்திக்கிறார்கள்." என்பதே அந்த முடிவு.

ஏனென்றால் இடது கை பழக்கம் உள்ளவர்களால் மூளையின் இரண்டு பாகங்களையும் பயன் படுத்த முடிவதாகவும் ,விரைவாக தகவல் களை மூளைக்கு அனுப்பி பெற முடிவதாகவும் அவர்களுடைய ஆராய்வின் முடிவுகள் சொல்கிறது.

இதனால் இடது கை பழக்கம் உள்ளவர்களால் நுட்பமான் பணிகளையும்,விளையாட்டு போன்ற துறைகளில் அவர்கள் சிறந்து விளங்குவதையும் நாங்கள் அவதானிக்கலாம்,அது மட்டுமன்றி பார்வை சம்பந்தப்பட்ட அதிகமான போட்டிகளில் இடது கை பழக்கம் உள்ளவர்களே அதிகமாக வெற்றிகளை பெற்று கொள்கிறார்கள்.

இந்த ஆராய்ச்சி தவிர இன்னுமொரு பெருமை தரக்கூடிய விஷயம், "Stewardesses" என்ற வார்த்தை இடது கையாலேயே டைப் பண்ண வேண்டிய மிக நீளமான வார்த்தை.


இதை அறிந்து தானோ ஜப்பானியர்கள் குழந்தைகளுக்கு இரண்டு கைகளாலும் எழுத கற்று கொடுக்கிறார்களோ தெரியல !!!!

இன்றைய நாளுக்கு பொருத்தமான ஒரு பதிவை இரண்டு கைகளையும் பயன் படுத்தி டைப் பண்ணிய திருப்பதி எனக்கு...........


இப்ப சொல்லுங்க எந்த கை உங்கள் நம்பிக்"கை" ?.

23 comments:

Admin said...

எனக்கு இரண்டு கையும்தான் தம்பி. உண்மையாகவே இருகைகளும் பழக்கமுள்ளவன். இரு கைகளாலும் சரி சமனாக வேலை செய்வேன்.

சிறு வயதிலே இடது கை பழக்கமுள்ளவன். என் பெற்றோர் வலது கையினால் வேலைகளை செய்யும்படி பழக்கி இருக்கின்றார்கள். (அவர்களுக்கு இடது கை பழக்கம் பிடிக்கவில்லை ஏனோ தெரியவில்லை) அதன் பயன் இரு கைகளும் பழக்கமாகிவிட்டது வலது கையினால் அதிக வேலைகள் செய்வேன். ஆனாலும் பாரமான வேலைகளுக்கு இடது கையே முன்வர வேண்டும். ( இது நியம்)

இப்ப சொல்லுங்க எனக்கு ஆயுள் எத்தன வயது அதிகம் அல்லது குறைவு...

வால்பையன் said...

காந்தி இரண்டு கையால் எழுதும் பழக்கமுடையவர்!

Prapa said...

ஆயுளா!!!!அது தெரியாது?
அடியேனும் வலது கைதான் ராசா அனால் இரண்டு கைகளாலும் சில வேலைகள் செய்யலாம் கிரிக்கெட் விளையாடுதல்,எழுதுதல்.

Prapa said...

ஆமாம் தல இப்பொழுது அறிந்து கொண்டேன்.

Admin said...

இல்ல தம்பி நான் இடது கை பழக்கமுள்ளவன். இப்போ வலதுகையையும் பயன்படுத்தி சரி சமமா வேலை செய்றன். என்று சொன்னேன்.

//இன்றைய நாளுக்கு பொருத்தமான ஒரு பதிவை இரண்டு கைகளையும் பயன் படுத்தி டைப் பண்ணிய திருப்பதி எனக்கு...........//

இது கொஞ்சம் ஓவரா தெரியல்ல... நாங்க மூன்று கையாலயா டைப் பண்றம்....

Prapa said...

மூன்றாவது கை என்ன உங்க தலையா???? எப்புடி .....

Kala said...

பிரபா நான் எழுதுவதும்,சாப்பிடுவது மட்டுந்தான்
வலது கை. அனைத்து வேலைகளும் செய்வது
இடது கைதான் நான் ஒன்றும் புத்திசாலியென்று
யாரும் கூறவில்லையே !கவலை,கவலையாய் வருது

Prapa said...

நீங்களுமா ? யாரு சொல்லாவிட்டாலும் நீங்க புத்தி சாலிதான் கலா.

RJ Dyena said...

நல்ல பதிவு. உங்கள் நிகழ்ச்சியை தவறவிட்டு விட்டேனே என்று கவலையாக உள்ளது.

வாழ்த்துக்கள் பிரபா

Prapa said...

நன்றி டயானா,வருகைக்கு.

சுப.நற்குணன்,மலேசியா. said...

பிரபா..

என் திருத்தமிழ் வலைப்பதிவில் உங்கள் மறுமொழி கண்டு இங்கு வந்தேன். முதன் முறையாக விழியும் செவியும் பாத்தேன். நன்றாக உள்ளது. சில படைப்புகளும் படங்களும் மனதைக் கவர்ந்தன.

யார் இந்தக் கவிஞன், எழுத மறந்த கவிதைகள் கவர்ந்தன. இனி தொடர்ந்து வருவேன்.

உங்கள் அறிமுகத்தில் மகிழ்கிறேன்.

Prapa said...

/ என் திருத்தமிழ் வலைப்பதிவில் உங்கள் மறுமொழி கண்டு இங்கு வந்தேன். முதன் முறையாக விழியும் செவியும் பாத்தேன். நன்றாக உள்ளது. சில படைப்புகளும் படங்களும் மனதைக் கவர்ந்தன./.......

நன்றி உங்கள் வருகையால் அடியேனின் வலைபூவும் வனப்பாகியுள்ளது.அந்த கவிஞன் என் அருமை நண்பர் ரேடியோ சிலோன் அறிவிப்பாளர் எஸ்.ரபிக்.

butterfly Surya said...

சுவாரசியமான தகவல்கள். நானு இரண்டு கையாலே தான் இந்த பின்னூட்டத்தை டைப் பண்ணினேன்.

நன்றி.

முனைவர் கல்பனாசேக்கிழார் said...

நல்ல தகவல் பிரபா.......உங்கள் பக்கம் வந்துவிட்டேன் ........தொடருவேன்...

Saravanan Trichy said...

நல்ல புதிய தகவல்...
பகிர்வுக்கு நன்றி!

Nathanjagk said...

நல்ல பதிவு! உற்சாகமான நடை! உங்க அப்ரோச் ​ரொம்ப பிடிச்சிருக்கு! வாழ்க - வளர்க!!

Prapa said...

//சுவாரசியமான தகவல்கள். நானு இரண்டு கையாலே ......

வருகைக்கும் வாழ்த்துக்கும் ரொம்ப நன்றி வன்னாது பூச்சியாரே, அடிக்கடி வாங்க ஏதாவது சுவையாக பரிமாறலாம்.

Prapa said...

//நல்ல தகவல் பிரபா.......உங்கள் பக்கம் வந்துவிட்டேன் ........தொடருவேன்...//

நன்றி கல்பனா மேடம் , அடிக்கடி வாங்க.

Prapa said...

//நல்ல புதிய தகவல்...
பகிர்வுக்கு நன்றி!//

ஹாய் குட்டி நாம் இருவரும் ஒன்றாக பட்டாம் பூச்சி விருது பெற்றோம் ஞாபகமிருக்கா ???

Prapa said...

//நல்ல பதிவு! உற்சாகமான நடை! உங்க அப்ரோச் ​ரொம்ப பிடிச்சிருக்கு! வாழ்க - வளர்க!!
//


இப்படி அட்டிக்கடி உற்சாக படுத்த மறக்காதீங்க ஜெகன் அண்ணே !!!
அப்ரோச் எல்லாம் ஒரு ப்ளானிங் தான்.......

Anonymous said...

wonderful blog that has amazing art gallery and many funny pics......

Janny

Cash Online Get Easy cash at your door step

Prapa said...

//wonderful blog that has amazing art gallery and many funny pics......//

thnz janny.

Piraththana said...

இரண்டு கைகளுமே இல்லை நம்பி கை... உங்கள் கருத்து மிகவும் பிரமாதமாக இருக்கிறது...