ad

Sunday, July 19, 2009

எழுத மறந்த கவிதைகள் -(பாகம்-2௦)

எந்த மொழி பேசினாலும்
புரிந்துகொள்ள முடிகிறது...
உன் மௌன மொழியைத்தவிர ....
-----
என் கவிதைகள்உனக்குபிடிக்கும் என்றாய்.
எழுதுவதை
நான் நிறுத்திய பிறகு,,,,,!
--------
என் இதயத்தின்வானொலி நீ....
என் செய்திகளுக்குத்தான்
இடமில்லை என்கிறாய்!
-------
மௌனமாய்-நீஎன்னை
கடந்துசென்ற போதும்-உன் இதயம்
என்னுடன்பேசிக்கொண்டுதான் சென்றது....
-------
காலங்கள்கடந்துசந்தித்தாய்......
உன்னில்எத்தனையோமாற்றங்கள் -
உன்மௌனத்தை தவிர!
------
ஒரு காலத்தில்
என் கவிதைகளை கூடநான்எழுதி வைத்ததில்லை.
நினைவுபடுத்தநீ இருக்கிறாய்என்பதால்....
இன்று-என்
பெயரையேஉனக்கு
ஞாபகபடுத்தவேண்டிஇருக்கிறது!---

13 comments:

Admin said...

என்ன பிரபா எப்படியும் அவசரப் படுவதா. எழுத மறந்த கவிதைகள் -(பாகம்-2) என்று
வரவேண்டியதை 20 என்று போட்டு இருக்கிங்க நாங்கள் அடிக்கடி விரும்பி ரசிக்கும் கவிதைகள் அல்லவா. அருமையான கவிதைகள்...

பிரேம்ஜி said...

பிரபா,

மிக சிறப்பான கவிதை.மேலும் சிறக்க வாழ்த்துகள்

Admin said...
This comment has been removed by the author.
சுசி said...

நல்ல கவிதை பிரபா.

இரசிகை said...

en seithikalukkuththaan idamillai...

nallaayirukku:)

குடந்தை அன்புமணி said...

கவிதைகள் நல்லாருக்கு பிரபா. சில கவிதைகளை குறிப்பாக ஒன்றும், நான்கும் சற்று மாற்றியமைத்தால் மிகவும் நன்றாக இருக்கும் என்பது என் கருத்து.

குடந்தை அன்புமணி said...

அப்புறம் அந்த சிகரெட் படம் நன்றாக இருக்கிறது. ஒரு படத்தை என் வலையில் பயன்படுத்திக் கொள்ளலாமா?

Muruganandan M.K. said...

"ஒரு காலத்தில்
என் கவிதைகளை கூடநான்எழுதி வைத்ததில்லை.
நினைவுபடுத்தநீ இருக்கிறாய்என்பதால்...."
அருமையான வரிகள். ரசித்தேன்.

Anonymous said...

அழகான கவிதை
தொடரட்டும்.......
உங்களுக்கு ஒன்று தெரியுமா?
பெண்களின் விழிமொழிக்கும்,மௌனமொழிக்கும்
யாராலும் விடைகாண முடியாது

ரி.கே

Prapa said...

//20 என்று போட்டு.... //
இலையே சந்ரு எனக்கு ௨ என்று தானே தெரிகிறது.
--------------
ஜி சார் வருகைக்கு ரொம்ப நன்றிங்கோ....
-----------------
வைத்தியரையா வணக்கம் !வருகைக்கு நன்றி .
-------------
அப்படியா tk சொல்லவே இல்ல........
முதன்முறையாக வந்திருக்கிறீங்க .......
----------------

வலைபூவுக்குள் வந்து கவிதைகள் ரசித்த அன்பானவர்கள் அனைவருக்கும் நன்றிங்கோ, ஆனால் 'எழுத மறந்த கவிதைகளை" எழுதியவர் அடியேன் அல்ல , இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன அறிவிப்பாளரும் கவிஞருமான என் நெருங்கிய நண்பர் எஸ்.rafeek.... அவருக்கு இந்த இடத்தில் நன்றிகள்.

Prapa said...

சுசி, ரசிகை எல்லோருக்கும் நன்றிங்கோ,,,,,

Prapa said...

அன்புமணி சார் வருகைக்கு ரொம்ப நன்றி , என்ன மாற்றம் செய்யலாம் என்றும் சொன்னால் நல்லாயிருக்கும்,

ஆமா படங்களை தாராளமாக பயன்படுத்தலாம்.

Muruganandan M.K. said...

சரி. அப்படியானால் எழுதிய எஸ்.rafeek ற்கும், பதிவிட்ட உங்களுக்கும் வாழ்த்துக்கள்.