ad

Thursday, July 9, 2009

ஆண்டு நிறைவுகளை கொண்டாடுவோமா?


ஆண்டொன்று போனால் வயதொன்று போகும் என்பார்கள்.....போகட்டுமே வயதுதானே !என்பவர்களும் இருக்கிறார்கள் , " ஐயோ இன்னுமொரு வருடம் ஓடி போயிடுச்சா " இந்த வருடத்திலாவது ஏதாவது சாதிக்க வேண்டும் "என்று உறுதி மொழி எடுத்துகொள்பவர்களும் இருக்கிறார்கள்.
மேல சும்மா நிகழ்ச்சி முன்னோட்டம்.......

இனி விசயத்துக்கு வருவோம்.
வழமையாக நாங்கள் ஒவ்வொரு வருட நிறைவையும் ஒவ்வோர் பெயர் கொண்டு அழைப்பது வழக்கம். அதில அனேகமானது எல்லோருக்கும் தெரிந்த...

1 -ஆண்டு விழா
25 -வெள்ளி விழா
50- பொன் விழா
100-நூற்றாண்டு விழா .
அனால் ஒவ்வொரு ஆண்டு நிறைவிற்கும் ஒவ்வோர் பெயருண்டு அதைத்தான் இங்கே நாங்கள் அறிந்து கொள்ள போகிறோம்.

இடையிடையே இடைவெளி இருக்கும் தெரிந்தவர்கள் அதனை கண்டு பிடித்து சொல்லுங்கள் இல்லையென்றால் பின்னூட்டத்தில் பார்க்கலாம்.

1வது ஆண்டு நிறைவில் நிறைவில் -காகித விழா
2-பருத்தி விழா
3-தோல் விழா
4-மலர் மற்றும் பழ விழா
5-மர விழா
6-சர்க்கரை /கற்கண்டு/இரும்பு விழா
7-கம்பளி/செம்பு விழா
8-மண் கலச விழா
10-.....................?
11-எக்கு விழா
12-லினன் விழா
13-பின்னால் விழா
14-தந்த விழா
15-.............?
20-பீங்கான் விழா
30-முத்து விழா
40-மாணிக்க விழா
இன்னும் ஏதாவது இருந்தால் சொல்லுங்க.....


11 comments:

Admin said...

அப்படிங்களா....

இப்போ நீங்க எந்த விழாவில????????.....

Prapa said...

சந்தேகமே இல்லாம ,விட்டிருக்கும் இடைவெளிய நிரப்புங்க விடை கிடைக்கும். சந்ரு, இங்க தேடுறாங்க எப்ப வாறீங்க....

Admin said...

//பிரபா said...
சந்தேகமே இல்லாம ,விட்டிருக்கும் இடைவெளிய நிரப்புங்க விடை கிடைக்கும். சந்ரு, இங்க தேடுறாங்க எப்ப வாறீங்க....//


நான் பரிட்சையிலே கூட இடைவெளி நிரப்புவதில்லை பிரபா....

விரைவில் வர வேண்டும் என்று ஆசைதான் இருந்தும் சில......... அப்புறம் சொல்றன் நமக்குள் இருக்கட்டுமே.... விரைவில் வரலாம்.

வால்பையன் said...

கொண்டாடுவோம்!
சரக்கோடு!

பேர் என்னவாயிருந்தா நமக்கென்ன!

ஹேமா said...

பிரபா,உங்கட பக்கம் வந்தேன்.உங்கட கேள்விக்கு பதில் தேடிக்கொண்டிருக்கிறன்.வருவேன்.

Admin said...

என்ன பிரபா நம்ம வாலு சரக்கொடுதான் அலையிறார் போல....

Muruganandan M.K. said...

உங்கள் பரீட்சையில் நான் பெயில்

இரசிகை said...

vaira vizhannu onnu undunga!!!

athu yepponnu theriyaathu.:)

இரசிகை said...

unga b'day vai yezhuthiyullen...
sariyaanu poi paarthu sollinga!!

Prapa said...

//கொண்டாடுவோம்!
சரக்கோடு!//
வாலு,விரைவில் அங்கு வரவிருக்கிறேன் , சரக்கு விடயத்தில் எந்தவிதமான குறைபாடுகளும் இருக்கக்கூடாது.
--------------------
ஹேமா வருகைக்கு நன்றி , தேடலுக்கு வாழ்த்துக்கள்.
-----------------------
டாக்டர் ஐயா,
வெற்றி என்பது பெற்று கொள்வது ,
தோல்வி என்பது கற்றுக்கொள்வது (எங்கோ
படித்தது)
இல்லையா??/ / முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
--------------------
அன்பான ரசிகை அவர்களே !வைர விழா 60 வது ஆண்டு நிறைவில் கொண்டாடப்படுவது. முதல் வருகையிலேயே அசத்திட்டீங்க போங்க....

Prapa said...

first entri யிலேயே 15 கருத்துரைகள் ரசிகைக்கு நன்றி கலந்த வாழ்த்துக்கள்.