ad

Thursday, August 6, 2009

என்னங்க பண்ண......


இப்பவெல்லாம் அடிக்கடி பதிவிட முடிவதில்லை ,காரணம் கணினியின் முன் இருந்தால் ஒரே தலையிடி ....கொஞ்ச நேரத்துக்குள் போதும் போதும் என்றாகிவிடுகிறது,,,,,,, கண்ணுக்கு வேற கஷ்டமாயிருக்கு. பிறந்ததிலிருந்து தொடர்ச்சியாக 12 வருடங்களாக கணினியோடு இடை விடாது இணை பிரியாமல் இருந்தாலோ என்னவோ தெரியல .....


இப்ப நான் என்னங்க பண்ணலாம், பதிவுலகில் இருக்கும் வைத்திய நண்பர்கள் ஆலோசனைகளை தாருங்கள்.

Wednesday, July 29, 2009

இவர் அவரா ??? உங்களுக்கு ஞாபகம் இருக்கா ??

மாப்பு பாப்ப்மையா உமக்க எனக்கா என்று !
நெஞ்சில தில் இருந்தா வா பாக்கலாம்....
தம்பி வுஷ் உம்மட பிரச்சனை தாங்க முடியல ,விரைவாக எதையாவது சொல்லிட்டு போவியா , எனக்கு தலை வலிக்குது ராசா.....
இந்த மீனையே பிடிக்க முடியல இதற்குள்ள நீங்கெல்லாம் நாட்ட பிடிக்க போறீங்களோ....
ஐயோ ஹீ ஹீ ....

Tuesday, July 28, 2009

பதக்கம் வேணுமா??? வாங்க ஜெயிக்கலாம்.


வாழ்கை விளையாட்டு

வாழ்க்கை ஒரு வழுக்கு மரம்!

சில பேர் ஏறுவார்

பல பேர் சறுக்குவார்.


வாழ்க்கை ஒரு நீச்சல் தடாகம்

சில பேர் நீந்துவார்

பல பேர் மூழ்குவார்.


வாழ்க்கை ஒரு தடைதாண்டி ஓட்டம்

சில பேர் ஓடுவார்

பல பேர் இடறுவார்.


வாழ்க்கை ஒரு மல்யுத்தம்

சில பேர் மோதுவார்

பல பேர் விலகுவார்.


வாழ்க்கை ஒரு மரதன் ஓட்டம்

சில பேர் ஓடி முடிப்பார்

பல பேர் ஓடி ஒழிப்பார் .


நன்றி- ஸல்மாநுல் ஹரீஸ்-வாழைச்சேனை

உயர்ந்த உள்ளங்கள்.

யாரு வந்தது முதலில்...??????/
என்ன விட இந்த உலகத்தில் நின்றது யாருமில்ல .......என்குமில்லா.....

யப்பா இத விட எங்காவது பாதுகாப்பான ஹெல்மெட் கிடைக்குமாப்பா !!!!!????
ரொம்ப கூல் இருக்குதையா<<,,,,
மழைக்கால மேகம் ஒன்று "என் வலையில் மாட்டியதே "!
அதற்காகதானே நான் ஸ்கூல் போகவில்லை>>>>>>..ஹீ ஹீ ,,,,,

யார் இந்த கவிஞன்...????


கவிஞன் என்றால்
யாரென கேட்டு
என் மனச்சாட்சி
மல்லுக்கட்டியது!

நான் எழுத்துக்களை செதுக்கும்
சிற்பி என்றும்
உணர்வுகுக்கு
பிரம்மா என்றும் சொன்னேன் !
பேசும் மொழியை
காப்பாற்றும்
காலகிளியும் என்றேன்.

மனச்சாட்சி மறுத்து,,,,,,,
நேரம் தெரியாமல்
சிந்திக்கும்
சிந்தனைப் பித்தன் என்றும்
கண்டதை
எழுதிதள்ளும்
ஞானக் கிறுக்கன் என்றும்
அது சொன்னது!
நான் நிறுத்தி,
இருளிலுள்ள சமூகத்தை
வெளிச்சத்துக்கு கொண்டுவரும்
மின்சாரம் என்றேன்.
கடைசி வரைக்கும்
என் பெயரைக் காப்பாற்றும்
சம்சாரம் என்றேன்!

மீண்டும் மறுத்து ,
என் கழுத்தை அறுத்தது
மனச்சாட்சி....

இடைவிடாமல்
சொன்னேன் நான் !
கவிஞன்......
தேசத்தை அடையாளப்படுத்தும்
முகவரி என்றேன்!
காலத்தை பிரதிபலிக்கும்
கண்ணாடி என்றேன்!
போதாமைக்கு
இன உறவுப்பாலம் அமைக்கும்
சமாதானத் தூதுவன் என்றேன்!

ஏளனமாகச் சிரித்துவிட்டு
சொன்னது
என் மனச்சாட்சி ......
எதிர்காலத்தை
எங்கோ தொலைத்துவிட்டு
பத்திரிகைக்குள்ளேயே
காலத்தை கடத்தும்
பைத்தியக்காரன் என்றது!

தினமும் நான் மனச்சாட்சியோடு
தோற்றுத்தான் போகிறேன்.


யாரிந்த கவிஞன் உங்கள் கருத்தோவியங்களையும் பின்னூட்டத்தில் சொல்லுங்கள்.

இந்த கவிதையும் வாழைச்சேனை சல்மானுள்ஹரீஸ் இன் "போதுக்காரநிகளுள் பெரியது " கவிதை தொகுதியில் இருந்து ரசிக்கப்பட்டது .

Monday, July 27, 2009

இது நியாயமா ???.......

கோடை
ஆண்டவன் போடும்
அவசர 'ஹர்த்தால்"
இயற்கை ஏற்படுத்திய
ஊரடங்குசட்டம்!

சூரியனே இங்கு
டயராக எரிக்கப்படுகின்றது!

வாயு தேவனுக்கு
வளிமண்டலம் வரமுடியாத
வழிமறிப்பு!

நாட்டில் "pulukka " கலவரம்
ஆக்கிரமிப்பதால்
மக்கள்
புழுங்கி தவிக்கும்
நிலவரம்....

வருண பகவானின்
ஆறு மாத கால
ஆட்சி கவில்ந்ததினால்
நாட்டிலேட்பட்ட
நிலையிது !!

ஆங்காங்கே
பஸ் வண்டிகளிலும்
கல்லூரி வாசல்களிலும்
கொதியுடன் கூடிய ரகளை !

இருந்தும் அக்னி தேவன்
தொடர்ந்தும்
ரோந்து நடவடிக்கைகளில்.


வாழைச்சேனை " சல்மான் ஹரீஸ்" இன்
"பொது காரணிகளில் பெரியது"
என்னும் கவிதை தொகுதியிலிருந்து ரசிக்கப்பட்டவை.

Sunday, July 26, 2009

என்ன லுக்கு ?????

பட பட பட்டாம்பூச்சி பட பட்க்குது.............
சொர்கமே என்றாலும்......!!! ஹா ஹா...

பறக்கும் (வண்டு) பறக்கும்...........



Saturday, July 25, 2009

சோதனை

"தோல்விகள் வேதனைகள் அல்ல -
ஒரு பொக்கிசத்தை
ஒப்படைக்க முன்
நடத்தப்படும்
சோதனைகள்.


கவிஞர் மனுஷ்ய புத்திரன் கவிதைகளில் ஒன்று ரசித்தேன் ,பகிர்ந்தேன் .

Wednesday, July 22, 2009

மற்றுமொரு "ஆஸ்கார்"


நமக்கு மற்றுமொரு "ஆஸ்கார்" விருதுங்கோ......
டண்டானா.............. டர்ணா ...................
என்ன லுக்கு ?????
அதுதான் ....அதான்பா......

அந்த விருதுதான்.
நம்புங்க சார்.அட என்னங்க நீங்க
இதுவரைக்கும் நம்பவே இல்ல,,,,,,,


இல்லையா பின்ன பதிகின்ற நமக்கு பதிவுலகில் கிடைக்கிற எல்லா விருதுகளும் நமக்கு ஆஸ்கார் தானுங்க. இல்லையா!!!!அண்மையில் நண்பர் சந்ரு வழங்கிய "சுவாரஷ்ய பதிவர் " விருது பற்றித்தான் பேசுறன் என்று இதுக்கு பிறகும் நீங்க கண்டு பிடிக்க இல்ல என்று யாராவது சொல்லுவார்களா சொல்லுங்க...சந்ரு நன்றி ராசா..........விருது கிடைத்தது மகிழ்ச்சி,ஆனால் விருது வழங்குவது அவ்வளவு சுலபமான காரியமில்லைதானே !!!!அதுதான் அடியேன் விருது வழங்கும் வைபவத்தை கொஞ்சம் தாமதமாக அரங்கேற்றலாம் என நினைத்திருக்கிறேன் ,

விருதை பெற ஆர்வமுள்ளவர்கள் அடியேனை தொடர்பு கொள்ளலாம் . என்று சொல்லுவேன் என்று பாக்குறீங்களா??அப்பிடியெல்லாம் ,இல்ல இப்பொழுது விருதுகள் தயாராகிறது .........விரைவில் உலக மக்கள் அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் விருதுகள் வழங்கப்படும்.

Sunday, July 19, 2009

எழுத மறந்த கவிதைகள் -(பாகம்-2௦)

எந்த மொழி பேசினாலும்
புரிந்துகொள்ள முடிகிறது...
உன் மௌன மொழியைத்தவிர ....
-----
என் கவிதைகள்உனக்குபிடிக்கும் என்றாய்.
எழுதுவதை
நான் நிறுத்திய பிறகு,,,,,!
--------
என் இதயத்தின்வானொலி நீ....
என் செய்திகளுக்குத்தான்
இடமில்லை என்கிறாய்!
-------
மௌனமாய்-நீஎன்னை
கடந்துசென்ற போதும்-உன் இதயம்
என்னுடன்பேசிக்கொண்டுதான் சென்றது....
-------
காலங்கள்கடந்துசந்தித்தாய்......
உன்னில்எத்தனையோமாற்றங்கள் -
உன்மௌனத்தை தவிர!
------
ஒரு காலத்தில்
என் கவிதைகளை கூடநான்எழுதி வைத்ததில்லை.
நினைவுபடுத்தநீ இருக்கிறாய்என்பதால்....
இன்று-என்
பெயரையேஉனக்கு
ஞாபகபடுத்தவேண்டிஇருக்கிறது!---